உஸ்தாத் மன்சூர் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள அக்குறனை என்ற பெரிய கிராமத்தில் பங்கொள்ளாமடை என்ற சிறிய ஊரில் 1958ம் ஆண்டு ஜூலை 1ம் திகதி பிறந்தார். அக்கிராமத்திலேயே தனது ஆரம்பக் கல்வியைக் கற்று பின்னர் அக்குறனை அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியில் க.பொ.த. சாதாரண தரம் வரை படித்தார். அதன் பின்னர் ஜாமிஆ நளீமியாவில் இஸ்லாமிய அறிவையும் கலைத்துறையில் பட்டப்படிப்பையும் மேற்கொண்டார்.

அல்லாஹ்வின் தனிப்பட்ட பேரருள் ஒன்றே அவரை இன்று இஸ்லாமியத் துறையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவராகவும் ஆய்வு மாணவராகவும் ஆக்கியுள்ளது.

பங்கொள்ளாமடையில் சிரிய பாடசாலையில் படித்த ஐந்து வருடங்களுமே அவருக்கு அறிவு தேடலின் அடித்தளத்தையே கொடுத்தது. இந்த ஆரம்ப பாடசாலையின் ஆசிரியர்கள் ஏற்படுத்திய தாக்கம், அறிவின் மீதான ஒரு மோகத்தையும், பற்றையும், அவரில் ஏற்படுத்தியது. எனவே அந்த ஆசிரியர்களுக்கு அவர் இன்றும் ஆழ்ந்து நன்றி கூறுகிறார். நளீமிய்யாவிற்கான பிரவேசமே இஸ்லாமிய அறிவுக் கண்களை அவரில் திறந்துவிட்டது.

நளீமிய்யாவின் வாசிகசாலையில் இருந்த பெரும் இஸ்லாமிய அறிஞர்களின் நூல்கள் இவரை வளர்த்தன. அத்தோடு ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி, ஷெய்க் யூஸுப் அல் கர்ளாவி, ஷெய்க் அபுல் ஹஸன் அலி நத்வி போன்ற பெரும் அறிஞர்களைச் சந்திக்கவும் அவர்களுக்குச் செவிமடுக்கும் சந்தர்ப்பமும் அவருக்குக் கிடைத்தது. பின்னால் முஹம்மத் அஹமத் ராஷித், நாதிர் அந் நூரி போன்ற அறிஞர்களை சந்திக்கவும் அவர்களோடு நீண்ட கலந்துரையாடல்களை நடாத்தும் சந்தர்ப்பமும் உஸ்தாத் அவர்களுக்குக் கிடைத்தது.

அப் பின்னனியில் இஸ்லாமிய உலகின் மிகப் பெரும் இயக்கமான முஸ்லிம் சகோதரத்துவ சிந்தனையால் ஆழ்ந்து கவரப்பட்ட அவர் இலங்கை மண்ணில் அதனைத் தோற்றுவிக்க அர்ப்பணிப்புடன் பாடுபட்டார். அந்த சிந்தனை ஓரளவு இலங்கையில் பரவியது. அப்பாதையில் மீள்பார்வைப் பத்திரிகையையும் ஆரம்பித்தார். அதேவேளை 1981இல் நளீமிய்யாவில் ஒரு விரிவுரையாளராக இணைந்துகொண்ட உஸ்தாத் அவர்கள் 2002ம் ஆண்டுவரை 20 வருடங்களுக்கும் மேலாக ஆசிரியராக இருந்து கல்விப் பணியில் ஆழ்ந்து ஈடுபட்டார். பின்னர் இஸ்லாமிய சிந்தனையை நிறுவன அமைப்பில் பரவலாக்கும் நிலைக்கு வந்தார். இந்தவகையில் இஸ்லாமிய ஆய்வுகளுக்கான மிஷ்காத் நிறுவனம் அதன் விளைவாக உருவான அல் குர்ஆன் கற்கைகளுக்கான திறந்த கல்லூரி என்பவற்றைத் தோற்றுவித்து இயக்கி வருகிறார்.

நடுநிலை இஸ்லாமிய சிந்தனையை மிகப் பரவலாகக் கொண்டு செல்லல், இஸ்லாமிய புத்திஜீவிகள் வட்டமொன்றை உருவாக்கல் என்பனவே முதல் அடிப்படைப் பணி எனக் கருதும் அவர், அதனை இலக்காகக் கொண்டு இவ்வாறு நிறுவன ரீதியாகப் பாடுபட்டுவருகிறார்.

1980களின் பின்னரான இஸ்லாமிய சிந்தனை இயக்கங்களை விட்டு மிகவும் விரிந்து பரந்துவிட்டது. அந்தவகையில் முனீர் சபீக், அப்துல் வஹ்ஹாப் மிஸைரி, அப்துல் ஹமீத் அபூ ஸுலைமான், மாஜித் அரஸான் கைலானி, உமாரா, தாரிக் அல் பிஷ்ரி போன்ற பலரையும் ஆழ்ந்து வாசித்து தன் சிந்தனைப் பரப்பை விரித்துக் கொண்டார். அப்போதுதான் இஸ்லாமிய‌ சிந்த‌னை என்ப‌து இய‌க்க‌ங்க‌ளைவிட‌ மிக‌ப் பாரிய‌து என்ப‌தை உண‌ர்ந்துகொண்டார்.

எனவே குறிப்பிட்ட‌தொரு சிந்த‌னை வ‌ட்ட‌த்துள் நிற்காது ப‌ர‌ந்து பார்ப்ப‌து சிறுபான்மையின‌ரான‌ எம்மைப் பொறுத்த‌வ‌ரையில் மிக‌வும் அவ‌சிய‌ம் என‌ அவ‌ர் க‌ருதுகிறார்.

இந்த‌வ‌கையில் நிறைய‌ வ‌குப்புக்க‌ள், உரைக‌ள் ந‌டாத்திவ‌ரும் அதேவேளை புத்த‌க‌ங்க‌ள், மொழிபெய‌ர்ப்புக்க‌ள், க‌ட்டுரைக‌ள் என‌ ப‌ல‌ ஆக்க‌ங்க‌ளையும் செய்துள்ளார். செய்துவ‌ருகிறார்.http://www.usthazmansoor.com/

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Usthazmansoor&oldid=1067420" இலிருந்து மீள்விக்கப்பட்டது