வே.சுந்தரேஸ்வரன், ஒரு இயந்திரப்பொறியியல் பேராசிரியர். முப்பத்துநான்கு ஆண்டுகள் ஆசிரியப்பணியில் இருப்பவர். நெல்லையில் பிறந்தவர். பள்ளிப்படிப்பை கோயில் நகரமான திருச்செந்தூர் மேலரதவீதி தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மாணவர் உயர்நிலைப்பள்ளியில் படித்தவர்; பல்கலைக்கழக புகுமுக வகுப்பை திருச்செந்தூர் ஆதித்தனார் கலை, அறிவியல் கல்லூரியில் படித்தவர். இயந்திரப்பொறியியல் இளநிலை (பி.இ) பட்டப்படிப்பையும், பொறியியல் வடிவமைப்பு முதுநிலை(எம்.இ) பட்டப்படிப்பையும் கோவை அரசினர் பொறியியல் கல்லூரியில் படித்தவர். இயங்கமைவு பற்றி ஆராய்ச்சி செய்து சென்னை தொழில்நுட்பக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்பொழுது, தமிழ்வழியில் பொறியியல் பாடங்கள் நடத்துவதில் ஈடுபட்டுள்ளவர். தமிழ் விக்கிப்பீடியாவில் இயங்கமைவு பற்றி தான் அறிந்த்தைப்பதிவு செய்ய ஆரம்பித்துள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:V.Sundareswaran&oldid=891001" இருந்து மீள்விக்கப்பட்டது