பயனர்:Vbtamil/தொகுப்பு 1
ஒரு சமயம் ஒரு கட்டுரை
தொகுஸ்பாஞ்ஜ்பாப் ஸ்கொய்ர்பேண்ட்ஸ் -- தரம் பற்றி சொல்லப்பட்டதால் தற்காலிகமாக அதிலிருந்த வரிகளை பதிவிலிருந்து நீக்கினேன். மீண்டும் முழுமூச்சாக திரும்பும்போது அது செம்மை படுத்தப்படும். ஒரு சமயத்தில் ஒரு கட்டுரை மட்டும் கவனத்தில் இருக்க வேண்டும் என்று அறிந்ததால் ஒரே நேரத்தில் பல கட்டுரைகள் செய்யப்போவதில்லை என்று உறுதி தேவை என்பது புரிந்தது
Vbtamil (பேச்சு) 14:35, 21 மே 2018 (UTC)
- கட்டுரையை வெறுமைப்படுத்த வேண்டாம். அங்குள்ள அறிவிப்புக்களுக்கு ஏற்ற திருத்தித் தொகுத்தால் நல்ல கட்டுரையினை உருவாக்கிவிடலாம். பின்வரும் விடயங்களைக் கவனித்திற் கொண்டு, கட்டுரைகளில் திருத்தம் செய்யதால் தரமான கட்டுரைகளை உருவாக்கலாம்:
- முன்மையானவை
- கட்டுரைகள் கட்டாயம் மேற்கோள் கொண்டிருக்க வேண்டும். வெளியிணைப்பு, மேலதிக வாசிப்பு போன்றவை மேற்கோள் ஆகாது.
- சரியான பகுப்பு(க்கள்) இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும். சிவப்பு இணைப்பு பகுப்பு மாத்திரம் இருப்பது ஏற்புடையதல்ல. காண்க: en:Wikipedia:Categorization
- பிறமொழி விக்கிப்பீடியாக்களில் இருந்து மொழிபெயர்க்கும்போது விக்கித்தரவில் இணைக்கப்பட்டல் வேண்டும்.
- அடுத்தவை
- உரிய தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப்படல் வேண்டும். ஆங்கில ஒலிபெயர்ப்பைக் கொண்ட கட்டுரைகள் தரமுயத்தலுக்கு உள்ளாக வேண்டியவையாகும். காண்க: விக்கிப்பீடியா:எழுத்துப்பெயர்ப்புக் கையேடு, விக்கிப்பீடியா:நடைக் கையேடு
- மிகவும் எளிமையான தமிழ் இலக்கணப் பிழைகளைத் தவிர்க்கலாம். மொழிமுதல் எழுத்துக்கள் என்பதற்கேற்ப, குறைந்தது மெய்யெழுத்துக்களை முதலில் கொண்டு சொற்கள் அமைப்பதைத் தவிர்க்கலாம்.
- முடிந்தவரை வடமொழிச் சொற்களை அல்லது பிறமொழிச் சொற்களைத் தவிர்த்து, நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தலாம்.
- கட்டுரைகள் {{விக்கியாக்கம்}}, {{Cleanup}} என்பவற்றுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதை கருத்திற்கொள்ளுங்கள்.
- மேலதிக உதவி தேவைப்படின், விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம் உங்களுக்குப் பயன்படும். மேலும், பிற பயனர்களிடமும் உதவி கேட்கலாம். நன்றி! --AntanO (பேச்சு) 02:39, 22 மே 2018 (UTC)