Vdrdhinesh
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடுவூர் என்னும் சிற்றூரில் பாரம்பரிய இசைக் குடும்பத்தில் நாகஸ்வர கசைஞர் எஸ்.என்.ஆர் கிருஷ்ணமூர்த்தி ,ஜெயந்தி தம்பதியருக்கு 03.11.1986இல் பிறந்தவர் முனைவர் கி. தினேஷ்குமார். இ்ளம் வயதிலிருந்தே இசையில் ஆர்வம் கொண்டு, இசையினை கற்றுணர்ந்தார். பள்ளிப் படிப்பை முடித்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் இசையில் இ்ளங்கலை மற்றும் முதுகலைப் பட்டத்தினை முதல் வகுப்பில் நிறைவு செய்தார். “மல்லாரி” என்னும் இசை வடிவத்தை ஆராய்ந்து ஆய்வியல் நிறைஞர் பட்டத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக இசைத்துறையில் முதலாவது மாணவனாகத் தேர்ச்சி பெற்றார். “திருவாரூர் மாவட்டம் ஒரு இசை மையம்” எனும் தலைப்பில் பல்வேறு செய்திகளை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றார். இசையில் ஆசிரியர் பயிற்சி, பட்டயம், சான்றிதழ், இந்திய இசையில் முதுநிலை ஆகிய தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். தேசிய அளவிலான பேராசிரியர் தகுதி தேர்வில் (UGC-NET) முதல் நிலையில் தேர்ச்சி அடைந்துள்ளார். பல்கலைக்கழகங்கள் , கல்லூரிகள், இசை விழாக்கள், சபாக்கள் தொலைக்காட்சி மற்றும் வானொலி போன்றவற்றில் இசைச் சொற்பொழிவு , செயல்முறை வி்ளக்க நிகழ்ச்சி, கருத்தரங்க ஆய்வுச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகிறார். கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களிலும், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சி வழங்கியுள்ளார். இவர் இதுவரை இசைத் தொடர்பான 50க்கும் மேற்பட்ட தேசிய, பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு, தனது ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளார். இசை தொடர்பான அரிய நூல்கள் பற்றியும் ஆலயங்களில் இசை மற்றும் நாட்டியம் தொடர்பான செய்திகள் பற்றியும் தற்போது ஆராய்ந்து வருகிறார்.