பயனர்:Venkat271189/மணல்தொட்டி
கூத்தியார்குண்டு (சதுர்வேதமங்கலம்)
கூத்தியார்குண்டு(koothiyarkundu) என்ற ஊரானது இந்திய நாட்டில் தென்மாநிலமான தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் வட்டத்தில் உள்ளது.
வட்டம் திருப்பரங்குன்றம்
மாவட்டத் தலைநகரம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு
பகுதி பாண்டிய நாடு
இவ்ஊரினைச் சுற்றி திருப்பரங்குன்றம், நிலையூர், தோப்பூர், கப்பலூர், கருவேலம்பட்டி போன்ற ஊர்கள் அமைந்துள்ளன.
தொழில்[தொகு]
கூத்தியார்குண்டிற்கு மிக அருகில் கப்பலூர் சிட்கோ தொழிற் பேட்டை அமைந்துள்ளது. அங்கு சிறிய குண்டுசீ தயாரிப்பு முதல் மிக பெரிய கனரக வாகன தொழிற்சாலைகள் வரை சுமார் 300 தொழிற்சாலைகள் அமைந்துள்ளதன . ஆதலால் தொழில் வளர்ச்சியில் வேகமாக வளர்ந்து வருகிறது.
விவசாயம்[தொகு]
கூத்தியார்குண்டு கண்மாய் ஆனது சுமார் 2000 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. சுமார் 1500 ஹெக்டேர்கு மேற்பட்ட அளவு உடைய நன்செய் நிலமும் சுமார்,1000 ஹெக்டேற்கு மேற்பட்ட புஞ்சை நிலங்களும் உள்ளது .ஆனால் இன்று அவற்றின் பாதிக்கு மேற்பட்ட பரப்பு குடி இருப்புகளாக மாறியுள்ளது . இவ்வூரில் நெல் ,வாழை ,தென்னை,கடலை,போன்ற தானியங்களும் ,விலை பொருட்களும் தயாரிக்கபட்டு ஏற்றுமதி செய்யபடுகிறது .
மக்கள் தொகை
இவ்வூரில் சுமார் 5000 மேற்பட்ட ஆண்களும் பெண்களும் உள்ளனர்.இவ்வூரில் பல்வகை மக்கள் வாழ்கின்றனர் அவர்களில் தேவேந்திர குல வேளாளர் (மள்ளர்),கள்ளர்,பிள்ளைகள்,நாடார்,அருந்ததியர் ,போன்ற மக்கள் வாழ்கின்றனர்.
கல்வி நிறுவனங்கள்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் நடுநிலை பள்ளி ஒன்று உள்ளது .வேறு சொல்லி கொள்ளும் அளவு கல்வி நிறுவனங்கள் இல்லாதது இவ்வூரின் கல்வி நிலையை பாதிப்படைய வைத்துள்ளது .இவ்வூரில் இருந்து மேல்நிலை கல்விக்கு திருநகர்,அல்லது திருமங்கலம் செல்ல வேண்டியுள்ளது.(koothiyarkundu wiki)
முக்கிய நபர்கள்
இவ்வூரில் பிறந்த அய்யா அக்கனி ராசு அவர்கள் இந்திய ராஜ்யசபையின் உறுப்பினராக இருந்துள்ளார்,மேலும் தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமைகளில் ஒருவராக வளர்ந்து வரும் இயக்குனர்,ஒளிப்பதிவாளர் வேல்ராஜா அவர்களும் இவ்வூரைச் சேர்ந்தவர்களே.
மேலும் தமிழ் நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் உதவி வேளாண் இயக்னர்களும்,காவல் துறை அதிகாரிகளும்,கிராம நிர்வாக அலுவலர் ,வங்கி ஊழியர்கள் என உயர் பதவிகளில் உள்ளவர்கள் இங்கு வசிக்கின்றனர்.