சீர்காழி சட்டநாதபுரம் கம்பன் நகரைச் சேர்ந்தவர் மு.வெங்கடேசபாரதி (78). ச.மு.இ. மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், தமிழ் இசை மூவரின் வரலாற்றைப் பற்றிய நூல், நலக்குறள், நலவெண்பா உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். மேலும், இரண்டு தமிழ்த் திரைப்படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். மறைந்த கவிஞர் கண்ணதாசன், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் ஆகியோர் இவரது நூல்கள் குறித்து பாராட்டுத் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளனர். மு.வெங்கடேசபாரதியின் தமிழ்ச் சேவையைப் பாராட்டி, முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழ்ச்செம்மல் விருது வழங்கி கௌரவித்தார். காழி கம்பன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Venkat5460&oldid=3910460" இலிருந்து மீள்விக்கப்பட்டது