Vijayakumar Muthu - விஜயகுமார்

தொகு

இந்தியா, தமிழ்நாடு மாநிலம், விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்தவன். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கள்ளக்குறிச்சி நகரில் வசித்து வருகின்றேன். தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றேன். சுமார் பத்து ஆண்டுகளாக ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றேன்.

படித்ததும் ஆங்கில வழியில், தற்போது பாடம் போதிப்பதும் ஆங்கிலம். இருப்பினும் என் தாய்மொழியின் மீதுள்ள பற்று காரணமாக,என்னால் இயன்ற தொண்டாற்றிட ஏதுவாக இவ்வாய்ப்பினை கருதுகின்றேன். தமிழ்நாடு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலமாக தமிழ் இணையக் கல்விக்கழகம் பற்றியும் தமிழ் விக்கிபீடியா பற்றியும் அறிந்துக்கொண்டு தற்போது கட்டுரைகள் எழுத தொடங்கியுள்ளேன்.

  இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 9 ஆண்டுகள், 2 மாதங்கள்,  9 நாட்கள் ஆகின்றன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Vijayakumar_Muthu&oldid=1969628" இலிருந்து மீள்விக்கப்பட்டது