--vkanniapan 12:22, 13 நவம்பர் 2009 (UTC) வடிவேல்கன்னியப்பனாகிய நான் 03-10-1948 ( மூன்று-அக்டோபர்-ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தெட்டு )ஞாயிற்றுக் கிழமை இந்திய நாட்டில், தமிழ்நாடு மாநிலத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர் ஈக்காட்டுப்பகுதி மருத்துவமனையில் பிறந்தேன்.என் தந்தையார் சபாபதி வடிவேல் தமிழகக் காவல்துறையில் முதுநிலைக் காவலராகப் பணியாற்றினார்.எந்தாய் பரிமளரங்கநாயகி வீட்டை நிர்வாகம் செய்து வந்தார். என் பள்ளிப் படிப்பும், ஆசிரியர் பயிற்சியும் செங்கற்பட்டு நகரில் நடைபெற்றது.காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியிலுள்ள தேசுமுகிப்பேட்டைப் பகுதியிலுள்ள அண்ணாமலை நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக ஆகஸ்டு-1970 முதல் திசம்பர்2003 வரையிலும், பின்னர் அதே பள்ளளியின் தலைமையாசிரியராக மே-2007வரையினும் பணியாற்றிப் பின்னர் ஓய்வு பெற்றேன். நான் பணியில் சேர்ந்தபின் தமிழக புலவர்க்குழு உறுப்பினராயிருந்த மதிப்பிற்குறிய பூசை.ஆ. நமச்சிவாய முதலியாரிடம் பாடம் கேட்டு தனிப்படிப்பாக சென்னைப் பல்கைக்கழகத்தில் 1978-ஆம் ஆண்டு புலவர் பட்டம் பெற்றேன்.இதே பல்கலைக்கழகத்தில் 1981-ஆம் ஆண்டு பி.லிட். பட்டமும் பெற்றேன்.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழிக்கல்வி மூலம் 1984-ஆம் ஆண்டு இளங்கலை கல்வியியல் பட்டமும் பெற்றேன்.மீண்டும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1989-ஆம் ஆண்டு தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றேன்.நிறைவாக அண்ணமலைப் பல்கலைக்கழகத்தில் 1993-ஆம் ஆண்டு அஞ்சல்வழிக் கல்வி மூலம் முதுகலை கல்வியியல் பட்டமும் பெற்றேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Vkappan&oldid=447946" இலிருந்து மீள்விக்கப்பட்டது