இசையன்பன்
பிறப்புஅக்டோபர் 2, 1981 (1981-10-02) (அகவை 43)
பிறப்பிடம்தமிழ்நாடு, இந்தியா
தொழில்(கள்)கவிஞர், எழுத்தாளர், இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)பாடகர், கீபோர்ட், ட்ரம்ஸ்
இணையதளம்[1]


சொந்த விபரம்

தொகு

வின்காஜா என்பவரின் இயற்பெயர் காஜா மைதீன் என்பதாகும் இவர் இசையன்பன், நெல்லை இசையன்பன், நெல்லைக்காரன் எனவும் பரவலாக அறியப்படுகிறார். அக்டோபர் 2ம் தேதி 1981 ம் வருடம் திருநெல்வேலி மேலப்பாளையத்தில் பிறந்தவர். இவரின் தந்தையின் பெயர் சிந்தா ராவுத்தர் தாயார் ஆயிஷா பீவி. இவர் மேலப்பாளையம் அத்தியடி தெருவில் இருக்கும் பருப்பானம் பள்ளிக்கூடம் என அறியப்படுகிற ”ஹாமீம் நடு நிலைப்பள்ளி” யில் 8ம் வகுப்பு வரை படித்து பின்பு மேல் படிப்பிற்காக ”ரஹ்மானியா மேல் நிலைப்பள்ளியில்” சேர்ந்து படித்தார், (சரியாக 20வருடங்களுக்கு பிறகு தன்னுடன் பயின்ற நண்பர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 6ம் தேதி ”மறவா நினைவுகள்” என்ற தலைப்பில் ரஹ்மானியா மேல் நிலைப்பள்ளியில் வைத்து முன்னால் மாணவர்கள் சந்திப்பை வெற்றிகரமாக நண்பர்கள் துணையுடன் முன்னின்று நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது) இவருக்கு மைதீன் பாத்திமா என்பவருடன் பிப்ரவரி மாதம் 20ம் தேதி 2003 ம் ஆண்டில் திருமணமாகி முகம்மது ஷமீம் என்ற மகனும் முகம்மது ஷாஹினா என்ற மகளும் இருக்கிறார்.

தொழில்

தொகு

இசைக்கலைஞர், ஓவியர், கணினி வரைகலை ஓவியர், ஸ்டிக்கர் ஆட்டிஸ்ட், கலை இயக்குனர் மற்றும் கலை வடிவமைப்பாளர்.

இவர் அரசன் ஆர்ட்ஸ் மற்றும் வின் ஸ்டிக்கர், வின் டிஜிட்டல்ஸ் என்ற நிறுவனங்களை அமைத்து நிர்வகித்து வந்தவர் தற்போது மார்க்கர் டிஜிட்டல்ஸ் என்ற நிறுவனத்தையும் அதனோடு ராகா ரிதம்ஸ் எனும் பெயரில் இசைக்கச்சேரியும் நடத்தி வருகிறார்.

வெளிநாட்டு வாழ்க்கை

தொகு

தம் மண்ணையும் மனிதர்களையும் மிகவும் நேசித்த வின்காஜா 2009ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள ”அஜ்மன்“ என்ற நாட்டிற்கு சென்று 2013ம் ஆண்டு வரை அங்கே ”நில்கமல் பிளாஸ்டிக்ஸ்” என்ற நிறுவனத்தில் கணினி வரைகலை துறையில் வேலையில் இருந்தார்.

கலைப் பணி

தொகு

ஓவியம் வரைதலும், இசை இயக்கம், மெல்லிசையில் வாய்ப்பாட்டு, கீபோர்ட்டு மற்றும் ட்ரம்ஸ், தபோலா போன்ற ஏனைய தாள வாத்தியக் கருவிகள் வாசித்தலும் மற்றும் கவிதைகள், கட்டுரைகள், பாடல் எழுதுவதுமாகும்., கிட்டத்தட்ட 1997-1998 ல் இருந்து இந்த நடப்பு நாள் வரை பல்வேறு மேடை மெல்லிசை நிகழ்ச்சி குழுக்களில் பணியாற்றி வருகிறார்.

தற்போது மெல்லிசை நிகழ்ச்சிகளில் ரிதம்பேடு மற்றும் கம்போசர் வாசிக்கும் பணியில் இருக்கிறார், மேலும் கரோக்கே மூலமும் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

”ராகா ரிதம்ஸ்” எனும் பெயரில் திருநெல்வேலியில் இசைக்குழு ஒன்றையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

பணியாற்றிய திரைப்படங்கள் மற்றும் ஆல்பங்கள்

தொகு
திரைப்படம் / ஆல்பம் எழுதிய பாடல் வெளியீடு இசையமைப்பு
கண்மலர் குறும்படம் 2 - -
தேடுகிறேன் உன்னை ஆல்பம் 2 - -
சித்திரை வீதி திரைப்படம் 2 - -
இதயக் கதவுகள் ஆல்பம் 8 - இசையன்பன்
நானாக நானில்லை ஆல்பம் 2 - இசையன்பன்
அருள்வாய் அல்லாஹ் 10 - இசையன்பன்
சிலம்பம் டாக்குமெண்டரி குறும்படம் 1 - இசையன்பன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Winkaja&oldid=2801340" இலிருந்து மீள்விக்கப்பட்டது