YArukkuyArsonhthamenpathu
--YArukkuyArsonhthamenpathu (பேச்சு) 13:36, 1 நவம்பர் 2013 (UTC)தீப ஆவளி - தீபாவளி வானமண்டலத்தில் சந்திரன் இல்லாத நாளில் கொண்டாடப்படும் பண்டிகையே தீபாவளி; ஒளியையும் சூரியனையும் கொண்ட காலைநேரத்தில் கொண்டாடப்படுவது. சூரிய இனத்தோரும் சந்திர இனத்தோரும் ஒருவருக்கொருவர் எதிரான இனங்களாக அலெக்சாந்தனின் வரவுக்குப் பின்னர் மாறுபட்டனர். இராமனும் கண்ணனும் அசுரர்கள், கருப்புநிறத்தவர்கள் என வேதங்களிலும் உள்ளது. இராமன் அசுரனாகத்தான் சோழநாடான சீதையை அசுரமுறையில் வென்று கைப்பற்றினான். சுத்தத்தமிழனான கரிகால்சோழனே இராமனாக மாற்றப்பட்டான். அசுரர்கள் என்போர் தமிழரே. தமிழனான கரிகால்சோழனே இராமன். அவனது தங்கை நல்லியற்பாவையைப் பிராமணவேடமிட்டுக் கெடுத்தவனே பரசுராமன் என்னும் பார்கவ பிராமணன். இராவண செழியனின் நண்பன். பாவை கருவுற்றபின்னும் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டான் பரசுராமன். கரிகால்சோழனுடைய தங்கைக்குப் பிறந்தவனே செங்குட்டுவன் என்னும் முருகன். தனது தாயைக் கெடுத்ததுமல்லாமல் தன்னையும் கொலைசெய்ய முயன்ற தனது தந்தை பரசுராமனையே எதிர்த்தவன் செங்குட்டுவன். அதுமட்டுமல்ல தனது தாய்மாமன் கரிகால்சோழனுடன் சேர்ந்து; தந்தையை இமையமலைவரை துரத்திச்சென்று அவனால் கைப்பற்றிச் சிறைவைக்கப்பட்ட தமிழரை- அசுரரை விடுவித்து இமையமலையில் தனது சின்னத்தைப் பொறித்துவிட்டு வந்தவன் செங்குட்டுவன். அவனே இராமாயணத்தில் இலக்குவனாகவும் அனுமனாகவும் உள்ளான்; மாபாரதத்தில் அர்ச்சுனனாகவும் உள்ளான். திராவிட மாயையில் மயங்கி நமது வரலாற்றை வெளிப்படுத்தும் இராமாயணத்தையும் மாபாரதத்தையும் தொலைத்தவர்களே தமிழர்கள். ஆதியில் முருகன் மற்றும் அம்மன் கோயில்களில் பிரமணர் எவரும் அனுமதிக்கப்பட்டதில்லை என்பதையாவது தமிழன் அறிவானா? திருமலை நாயக்கர் காலத்தில்தான் பழனியிலும் அம்மன் கோயில்களிலும் சில மாற்றங்களைப் புகுத்திப் பிராமணார்கள் நுழைக்கப்பட்டனர் என்பதையாவது தமிழன் அறிவானா? சிதம்பரத்தில் முதலில் தமிழ் அந்தணர்கள்தான் இருந்தணர்; அவர்களையும் விரட்டியவன் பரசுராமனே என்பதையும் அறியாதவர்களாகத்தான் தமிழன் உள்ளான். செங்குட்டுவனால் இராவண நரக சுரன் தொலைக்கப்பட்ட நாள் சந்திரன் இல்லாத நாளாகக் கருதப்பட்டது. காரணம் முருகனைப் புதனுக்குப் பிறந்தவன் எனக் கதைகட்டியவர்களும் பிராமணர்களே . இந்தப் புதன் யாருமல்ல. இராவண செழியனின் மகனே. இராவண செழியனும் யார் என்பதை மாபாரதம் தெளிவாகக் குறிப்பிடுகிறது. விதுரனே செழியன் என்பதைப் பிராமணர்கூட அறியமாட்டார்கள். அலெக்சாந்தனுக்கும் ஒரு எகிப்திய அடிமைப்பெண்ணுக்கும் பிறந்த வியாசனால் பிறப்பிக்கப்பட்ட எகிப்திய அடிமைப்பெண்ணுக்குப் பிறந்தவனே செழியன் என்னும் விதுரன். இந்த விதுரனும் ஒரு தமிழ்ப்பெண்ணை மணந்துகொள்ள விரும்பினான். அவனுக்குப் பெண்கொடுக்க எந்தத் தமிழனும் முன்வரவில்லை என்பதை சம்ஸ்கிருத மற்றும் பாலிமொழி இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அக்காரணத்தாலேயே செழியனும் பார்கவ பிராமணனும் சேர்ந்து தமிழினத்தை வேறோடு அழிக்கச் சபதம் பூண்டனர். 21 தலைமுறைக்குச் சத்திரியரை அழிப்பேன் எனச் சபதம் பூண்டு பல தமிழ்ப்பெண்களையும் கரிகால்சோழனின் தந்தை சேத்சென்னியையும் கொலைசெய்தவன் பரசுராமன். தமிழ்ப்பெண்ணைத் தனக்குக் கொடுக்க மறுத்ததால் தொல்தமிழ்ப்பாடல்களில் எவ்வி என இடம்பெற்ற மயனின் பெண்ணைத் தனது மகனைக்கொண்டு கெடுக்கச் செய்து அவளுக்கே உரித்தான இலங்கையையும் கைப்பற்றிக்கொண்டான் என்பதைத் தமிழன் அறிவானா? வரலாற்றைத் தேடுங்கள். 2000 ஆண்டுக்காலமாக நமக்குக் கொடுக்கப்பட்ட தொல்தமிழ்ப்பாடல்களை வைத்துக்கொண்டு என்னதான் செய்கிறான் தமிழன்? சந்திரகுலத்தவனான செழியன் இல்லாமல் போனதால் அன்று அமாவசையாகக் கருதப்பட்டது. ஆயினும் அதன் ஆறாம் நாளில் முருகன் இராவணாசுரனை வதைத்த நாள் என்பதால் அந்நாளில் சூரசம்காரம் கொண்டாடப்படுகிறது. உண்மையில் தீப ஆவளி என்பது முருகன் செங்குட்டுவனால் தொலைக்கப்பட்ட இராவண பாதாள உலக வேதாளமான செழியனைத் தொலைத்த நாளான அமாவசைக்குப்பின் வரும் ஆறாம் நாளே சூர சம்கார நாளாகும். அதுதான் செங்குட்டுவ முருகனின் திருச்சந்தூரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூரில் ஏன் முருகன் தனது தந்தையைச் சேர்த்துக்கொள்ளாமல் தனது தாய்மாமன் கரிகால்சோழனைமட்டும் சேர்த்துக்கொண்டான் என்பதையாவது தமிழர்கள் அறிவார்களா? புறநாநூறு- 65ல் வாலியை பெருஞ்சேரலாதனும் சந்திரகுலச் செழியனுடன் சேர்ந்து கரிகால்சோழ சூரியனை எதிர்த்தனர். இந்தச்சந்திரகுலச் செழியனே இராவணன். சோழநாட்டை ஆள்வதற்கான பொன் ஆரத்தைப் பரசுராம மாறீசனின் துணையுடன் கவர்ந்துசென்று இலங்கையில் மறைந்துகொண்டான். அவனை செங்குட்டுவ இலக்குவ அனுமனும்; கரிகால்சோழ இராமனும் இலங்கைசென்று செங்குட்டுவ முருகனால் மாய்த்தனர். இராவணனே சூரன். செழிய இராவண நரகா சுரன் அழிக்கப்பட்ட நாளே சந்திரன் இல்லாத நாள். அவனை அழித்ததாலேயே சூரியனைப் போற்றும் தீப ஆவளி கொண்டாடப்படுகிறது. சூரிய குலத்தவனே கரிகால்சோழன். அவனைத்தான் நமது தொல்தமிழ்ப்பாடல்களும் சிலப்பதிகாரமும் வெய்யோனாகக் கொண்டாடுகின்றன. நரகம், பாதாளம் என்றெல்லாம் புராணங்களில் குறிக்கப்படுவது இலங்கைத்தீவே ஆகும். புறநாநூறு-65, 66, 289 ஆகியவற்றில் இடம்பெற்ற இராமயாண வாலியே பெருஞ்சேரலாதன் என்பதையும் அவனையும் அழித்தவனே கரிகால்சோழ இராமன் என்பதையும் இப்பாடல்களில் காண்கிறோம். "நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! களியியல் யானைக் கரிகால் வளவ சென்றமர் கடந்தநின் ஆற்றல் தோன்ற வென்றோய் நின்னினும்; நல்லன் அன்றே; கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை மிகப்புகழ் உலகம் எய்தி; புறப்புண் நாணி வடக்கிருந் தோனே" எனப் பெருஞ்சேரலாதனின் நிலையையும்; பரசுராமனையும் பாண்டிய செழியனையும் ஆதரித்த பெருஞ்சேரலாதனைக் கபிலன்; "இருசுடர் தம்முள் நோக்கி ஒருசுடர் புன்கண் மாலை மலைமறைந் தாங்குத் தன்போல் வேந்தன் முன்புகுறித் தெறிந்த புறப்புண் நாணி மறத்தகை மன்னன் வாள்வடக்கு இருந்தனன் ஈங்கு நாள்போல் கழியல ஞாயிற்றுப் பகலே"எனப் பாண்டிய-சந்திரகுலத்தரின் சதிக்கு ஆளான பெருஞ்சேரலாதனை; கரிகால் எய்த அம்பு; நெஞ்சை ஊடுறுவிப் புறம்சென்றதாகப் பாடப்பட்டுள்ளது. வெண்ணி என்னும் தஞ்சாவுரின் நீடாமங்கலம் பகுதியருகில் ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் இப்போர் பாண்டிய செழியனுக்கும் சோழ கரிகாலனுக்கும் நடந்தது. அதில் சேரன் பெருஞ்சேரலாதன் செழியனுக்கு ஆதரவாகப் போரிட்டுப் புறப்புண்பட்டான். ஆனால் இராமாயணத்தில் வாலியாகக் காட்டிப் புகழ்ந்து போற்றப்படக் காரணம் அவன் ஒரு வள்ளலாகப் பிராமண பரசுராமனையும் பார்கவரையும் போற்றிப் பாதுகாத்தான் என்பதே. இதனைச் ஜமதக்கினியின் வரலாற்றில் விஷ்ணுபுராணத்திலும் ஹரிவம்சத்திலும் விரிவாகக் காணலாம். சம்ஸ்கிருத நூல்களை ஒதுக்காதீர்கள்; சம்ஸ்கிருத மொழி நம்மால் உருவாக்கப்பட்டதுதான் என்பதையும் நமது பழந்தமிழ்ப் பாடல்கள் குறிப்பாக மதுரைக்காஞ்சியும் குறிப்பிடுகின்றன. சீதை என்பது பெண்ணல்ல; சோழநாட்ையே குறிக்கும். அதனைக் கைப்பற்ற உதவியனே மாறீசன் என்னும் பரசுராம பார்கவ பிராமணன். சீதை பெண்ணல்ல; சோழநாட்டை ஆட்சிசெய்வதற்கான பொன் ஆரம். அதனைக் கைப்பற்றி இலங்கை சென்று மறைந்து கொண்டவனே செழிய இராவணன்.