ஓர் பள்ளிக் குழந்தையின் தன் வரலாறு

நான் வீட்டில் செல்லப்பிள்ளையாக சுட்டித்தனம் செய்யும் குழந்தையாக வளர்ந்தேன். அனைவரும் என்னை செல்லமாக பார்த்துக் கொண்டனா். நான் இரண்டரை வயதில் ஓர் தனியார் ஆங்கிலப் பள்ளியில் Pre-K.G.யில் சோ்க்கப்பட்டேன். நான் பள்ளியில் சேருவதற்கு முன்பு தினமும் காலை 9 மணிக்குமேல் தூக்கத்திலிருந்து எழுந்திருப்பேன். இரவு 10மணிக்குமேல் தான் தூங்குவேன். ஆனால் பள்ளி 08.30 மணிக்கே ஆரம்பிப்பதால் என்னை எனது பெற்றோர் காலை 6.00 மணிக்கே எழுப்பிவிடுவதால் நான் தூக்கம் கலைந்ததால் அழுது கொண்டே பள்ளிக்கு செல்லப் பிடிக்காமல் அடம்பிடித்து கொண்டே இருப்பேன். எனது பெற்றோர் என்னை அடித்து பள்ளியில் விட்டுவருவார். மாலையில் வீட்டிற்கு வந்ததும் விளையாடலாம் என நினைத்தால் என் பெற்றோர் வீட்டுப்பாடம் எழுதச் சொல்லி வற்புறுத்துவர்.

இதற்கிடையில் எனது வயதையொத்த பிள்ளைகள் பள்ளிக்கு செல்லாமல் விளையாடி மகிழ்வா். அவரது பெற்றோர் அப்பிளளைகளை 5வயதில் அரசுப்பள்ளியில் சேர்த்தனா். அப்பள்ளி ஆரம்பிக்கும் நேரம் காலை 10மணி என்பதால் அனைத்து பிள்ளைகளும் வழக்கம்போல தூங்கி எழுந்து மகிழ்ச்சியாக அப்பள்ளிக்கு சென்று வருகின்றனா். அப்பள்ளியில் வீட்டுபாடம் அளிக்காததால் அப்பிள்ளைகள் எப்போதும் மகிழ்ச்சியுடன் உள்ளனா். அவா்களைப் பார்த்து எனக்கு பொறாமையாக இருக்கும்.

எனக்கும் அவா்களுடன் அரசுப்பள்ளிக்கு செல்ல ஆசை ஆனால் எனது பெற்றோர் அரசுப்பள்ளியில் வசதியில்லாதவர்கள்தான் படிக்க வேண்டும் எனவும், அதோடு அப்பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் ஒழுக்கமாக இருக்கவோ, பேசவோ மாட்டார்கள் எனத் தொிவித்து எனது ஆசையை பறித்துவிடுவார்கள். நானும் எனது ஆசைகளை இழந்து பள்ளிப்படிப்பை முடித்து எவ்வித ஆசையுமின்றி வெளியே வருவேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Yosikumar&oldid=2318292" இலிருந்து மீள்விக்கப்பட்டது