நெடுந்தீவு
நெடுந்தீவு (Neduntheevu) இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தென்மேற்கில் அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்று. ஒல்லாந்தர் இத்தீவை டெல்வ்ற் (Delft) என்று பெயரிட்டு அழைத்தார்கள். இன்றும் ஆங்கிலத்தில் இத்தீவு இப்பெயராலேயே குறிப்பிடப்படுகின்றது.
=== நெடுந்தீவு அன்று (பசுந்தீவு, பால் தீவு,நாகநீள் நகர் )
=
தொகுதொல்லியல் வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட இத் தீவு விவசாயம், கால்நடை, கடல் வளங்களுடன் எண்னை வளமும் கொண்டது என புவியியல் ரீதியாக நன்கு உணரப்படுள்ளது. தமிழ் மக்களின் உரிமைகளை மேற்குலகம் அங்கீகரிக்க தாமதிப்பதின் முக்கிய காரணம் வட கிழக்கின் வளங்களே ஆகும் . 1941ல் இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட பஞ்சத்தில் எம் மக்களை காப்பாற்றியது இங்குள்ள பனை தென்னை வளங்களே 1813ம் ஆண்டு நெடுந்தீவு கடலில் இருந்து புறப்பட்ட ஹீர்த் டீ போலோ ( hearth De Polo) எனும் ஐக்கிய அமெரிக்க இளைஞன் இத் தீவின் அழகையும் வளங்களையும் மனதில் கொண்டு இது தனி ஒரு நாட்டுக்கு சொந்தமானதல்ல இந்த பிரபஞ்சத்திற்கே சொந்தமானது என்கிறான். கி.பி 18 நெடுந்தீவின் வளங்கள் வரலாற்று பெறுமதி மிக்கவை நெல் சிறுதானிய பயிர்களும் கோதுமை வயல்களுடன் சணல்,பெருக்கு, பாலை, பனை ,தென்னை, மூலிகை செடி கொடிகளுடன் கடலும் கடல் சார்த்த இடமுமான இந்த நெய்தல் நிலத்தில் பாலும் மோரும் பாய்ந்தோடிய வரலாறுகள் பல. மருந்து மாமலை வனம் என இத்தீவினை போற்றி பெருமிதம் கொண்டார் மன்னன் செகராசசேகரன் (chegarasasekaran). போத்துக்கேயர் காலம் தொட்டு ஆங்கிலேயர் காலம்வரையான அன்னியர் ஆத்திகத்திற்கு முன்னர் நெடுந்தீவு ஒரு சுதந்திர தனி இராசதானி நாடாகவே விளங்கியது. ( independent kingdom ) இனவதங்கள் தலை எடுபதற்கு முன்னர் this is a peacefull flower garden என பலராலும் போற்றப் பட்டது. இந்த உண்மைகள் கனவாகி தனித்துவம் சுதந்திரம் தன்னாட்சி என்பன பறிபோய் பசுமைகள்,நீர் வளம்,நிலவளம் ,பால் வளம் என்பன அழிவின் விளிம்பில் இருக்கும் இத்தீவு மற்றும் ஒரு கச்சதீவு ஆக மாறிவிட கூடாதென்பது இவ்வூர் பண்டிதர்களின் ஏக்கம்.