சாம்பார்                           
                               1.காய்கறி சாம்பார்

செய்முறை: துவரம் பருப்பை மஞ்சள் சீரகம் சேர்த்து நன்றாக வேக விடவேண்டும். பின்பு தக்காளி, கத்தரிக்காய், மல்லித்தழை,வெங்காயம்,சாம்பார் பொடி,உப்பு சேர்த்து வேக விடவேண்டும்.நன்றாக வெந்த பின்பு கடுகு, உளுத்தம்பருப்பு,பெருகாயம்,வெந்தயம்,கருவேப்பில்லை கொண்டு தாளிக்கவேண்டும்.மல்லித்தழை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவேண்டும்.இதை போல் பலவித காய்கறிகளும் சேர்த்து சாம்பார் செய்யலாம்.

                            2 .வெங்காயச் சாம்பார்

செய்முறை: துவரம் பருப்பை மஞ்சள் சீரகம் சேர்த்து நன்றாக வேக விடவேண்டும்.வெங்காயச் சாம்பாரில் நிறைய சிறியவெங்காயம் போடவேண்டும்.வெங்காயத்தை எண்ணெயில் வாசம் வரும் வரை வதக்கி பருப்புடன் சேர்க்கவேண்டும்.சாம்பார் பொடிக்கு பதிலாக மிளகாய் வற்றல்,மல்லியை வறுத்து அரைத்து போடவேண்டும். கொஞ்சம் தேங்காய் பூவை எண்ணெய் விட்டு வாசம் வரும் வரை வதக்கி பருப்புடன் சேர்க்கவேண்டும். கடுகு, உளுத்தம்பருப்பு,பெருகாயம்,கருவேப்பில்லை கொண்டு தாளிக்கவேண்டும்.மல்லித்தழை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவேண்டும்.

Start a discussion with Amalajeba

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Amalajeba&oldid=482806" இலிருந்து மீள்விக்கப்பட்டது