உலகமயமாதல் ஓர் உன்னத முன்னேற்றம் ஒருங்கிணைந்த பொருளாதார தொழில்நுட்ப அறிவுடன் உலகின் அனைத்து சமூகங்களிலும் வலுவான தாக்கத்தினை உண்டுபண்ணியிருக்கிறது உலகமயமாதல். வரலற்றுக்காலம் முதலே வேறுபட்ட கண்டங்களுக்கு இடையில் வர்த்தகத்தொடர்புகள் பண்டமாற்று அடிப்படைகளில் தொடாந்தது முதல் நாடுகளுக்கிடையிலான அரசியல் திருமண உறவுகளும் பேணப்பட்டதுடன் மதங்கள் பரப்பப்பட்டமையும் உலகமயமாதல் ஒன்றும் புதியதல்ல என்பதை நாம் விளங்கிக்... கொள்வதற்கான உன்னத காரணிகள் எனலாம். வரலாறுதோறும் இருந்துவந்த உலகமயமாதலானது முதலாம் உலக மகாயுத்த காலப்பகுதியில் இருந்து புதிய உத்வேகத்தில் செயற்படத்தொடங்கியது. எனினும் 1950 களின் பின்னர் உலகமயமாதலின் வேகம் என்றுமில்லாதவாறு அதிகரித்தே வந்திருக்கிறது. நாடுகளுக்கிடையிலான எல்லை கடந்த வர்த்தகக்கொள்கைள் மற்றும் அதிகரித்த கொள்கை உடன்படிக்கைகள் என்பனவும் சர்வதேச தலையீடுகள், முதலீடுகள் என்பனவற்றின் மூலம் இன்று உலகமயமாதலை எளிதாக்கிவிட்ட காரணிகளாகின்றன. இன்று உலகில் பல்தேசிய வர்த்தக நிறுவனங்கள், எல்லையற்ற உடன்படிக்கைகள், சர்வதேச நீதிமன்றம் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் என்பன உலகமயமாதலின் தெளிவான வெளிப்பாடுகள் எனலாம். உலக மக்களுக்கிடையிலான ஒன்றிணைந்த, ஒன்றிலொன்று தாக்கத்தினை விளைவிக்கவல்ல வாழ்க்கை முறைமையினை எற்படுத்தியதில் உலகமயமாதலுக்கு பாரிய பங்கு உண்டு. அது வேறுபட்ட மக்கள், நிறுவனங்கள், அரசுகள் என சமூகத்தின் பல்வேறு குழுமங்களுக்கு இடையே நடைபெற்றிருக்கின்றது. உற்பத்தி, தகவல் தொடர்பாடல், அறிவு மற்றும் கலாசார மாற்றம் என்பனவற்றில் இன்று உலகமயமாதல் தெளிவாக அவதானிக்கக்கூடிய ஒன்றாகிவிட்டது. மனிதவரலாற்றில் அதன் தாக்கம் மறுக்கவோ மறைக்கவோ முடியாதவாறு அத்தியாவசியமாக மாறிவிட்டது. கடந்த சில தசாப்த காலமாக உலகில் ஏற்பட்ட அதி உன்னத தொடர்பாடல், போக்குவரத்து மற்றும் விஞ்ஞான முன்னேற்றத்தின் காரணமாக இன்று உலகமயமாதலின் வேகம் கடந்த காலங்களை காட்டிலும் மிகவும் அதிகமாக காணப்படுகின்றது. உலக வர்த்தகம், முதலீடுகள் மற்றும் சர்வதேச கடன் உதவிகள் என உலகமயமாதல் பல்வேறு வடிவங்களில் உலகின் மூலைமுடுக்கெங்கிலும் பரவிவருகின்றது. உலக சுற்றாடல் அமைப்பிலும், கலாசாரத்திலும், அரசியல் பொருளாதாரத்திலும் மனித வாழ்வியலை மாற்றியமைத்த உலகமயமாதலை நேரான கண்ணணோட்டத்திலும் எதிர்மறையான கண்ணோட்டத்திலும் பார்ப்பவாகள் என்று இரு பிரிவினர் உலகில் உண்டு. உலகின் ஒருபகுதி மக்கள் மாத்திரமே பெருமளவான வளங்களை நுகர்கின்ற தன்மையினை விடுத்து அனைத்து மக்களும் விஞ்ஞான தொழில்நுட்ப மேம்பாட்டின் பயனை அனுபவிப்பதற்கு வழிகாட்டடியது உலகமயமாதலே. பல்வேறுபட்ட மக்களின் கலாசார பாரம்பரியங்களை விளங்கிக்கொள்வதற்கும் புரிந்துணவுடைய மக்கள் சமூகத்தை உருவாக்குவதற்கும் உலகமயமாதல் உரிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. அதன் நற்பயன்களை புறந்தள்ளி அதன் பலவீனங்களை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் உலகின் ஒரு சில நபர்களின் நடத்தைகளை வைத்து உலகமயமாதல் கெடுதலை செய்கின்றது என்ற திடமான முடிவினை நாம் பெற்றுவிட முடியாது. நிதமும் மாறும் உலகின் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் நடைபெறும் முன்னேற்றங்கள் உலகின் பெரும்பாலான பகுதிகளை சென்றடைய முடியாதவாறு உலகமயமாதலுக்கான இரும்புத்தடைகள் கொண்ட நாடுகள் உலகில் இன்றும் உண்டு. இறுக்கமான மத, கலாசார, மொழிக் கொள்கைகளின் வழியே நடைபோடும் இந்நாடுகளில் வாழும் மக்களே இன்று பெருமளவில் மனித வாழ்க்கைத்தரத்தில் பின்தங்கியிருக்கின்றனர். அவை தவிர இலங்கை போன்ற பல நாடுகள் உலகமயமாதலின் விளைவுகளை தமது அரசியல் கொள்கைகள், இறுக்கமான வரிநடைமுறைகள் மற்றும் மதப்பிடிமானங்கள் என்பன மூலம் கட்டுப்படுத்தியும் வருகின்றன.

இக்கட்டுரை..,[h]; m`hkl;

Start a discussion with Fasal

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Fasal&oldid=1308709" இலிருந்து மீள்விக்கப்பட்டது