==# தமிழீழ போராட்டம்

  1. தமிழ் ஈழ விடுதலை புலிகள்===


புலிகள் நடாத்தும் ஈழப் போராட்டம் ஒன்றும் பயங்கரவாத யுத்தமில்லை என்றும், தமிழர்கள் சுயநிர்ணய உருமைகளுக்கு உரித்துடையவர்கள் என்று சமீபத்தில் நியூசிலாந்தின் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஈழப்போராட்டத்தை முன்னெடுக்க நியூசிலாந்தின் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே போதும் :

நியூசிலாந்தின் உச்சநீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு தனி ஒரு மனிதனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு என்று சொல்லிவிட்டு இருந்துவிட முடியாது.

சென்ற மாதம் டெல்லி இல் நடந்த தமிழ் ஈழ விடுதலை புலிகளின் மேல் உள்ள தடை நீடிக்கலாமா வேண்டாமா என்ற கூட்டத்திற்கு எந்த தமிழ் தலைவரும் கலந்து கொள்ளவில்லை. தமிழ் நாட்டிலிருந்து பிஜேபி தலைவர் ஒருவர் மட்டுமே கலந்து கொண்டார் என்பதை நான் சென்ற மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருந்தேன்.

தமிழ் ஈழ விடுதலை புலிகள் மீது‍ உள்ள தடையை நீடிக்கும் விவகாரத்தில் தில்லியில் 21-0-2010 அன்று‍ நடந்த விசாரனையில் திரு‍ வைகோ அவர்கள் கலந்து‍ கொண்டார், (நீங்கள் ஏன் கலந்து‍ கொள்ளவில்லை) ஆனால், விடுதலை புலிகளின் பிரதிநிதி மட்டு‍மே விடுதலை புலிகளிகளுக்கு‍ சார்பாக ஆஜராக முடியும் என்று‍ நீதிமன்றம் தெரிவித்து‍ விட்டது‍, முதலில் ஒரு‍ வக்கீல் மூலமாக ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது‍, ஆனால் திரு‍ வைகோ அவர்கள் தானே ஆஜராக அனுமதி கோரினார், அரசு‍ வக்கீல் ஆட்சேபனை தெரிவித்து‍ பிறகு அது‍ மறுக்கப்பட்டது. பின்பு, விசாரனை அக்டோபர் 5 ஆம் தேதி சென்னையில் நடக்கும் என்று‍ ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஐயா, எனக்கு‍ ஒரு‍ சந்தேகம், தமிழ் ஈழ விடுதலை புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம், அவர்களின் உறுப்பினர்கள் எவறேனும் இங்கு‍ வந்தால், உடனே கைது‍ செய்யப்படுவார்கள், அப்படி‍ இருக்கையில், நீதி மன்றம் சொல்வது‍ போல் தமிழ் ஈழ விடுதலை புலிகளின் சார்பாக அவர்களின் பிரதிநிதி/கள் எப்படி‍ ஆஜராக முடியும்.

தமிழீழ போரட்டத்தை ஆதரிக்கும் தமிழ் இயக்கங்கள்/கட்சிகளில்/தமிழ் உணர்வுள்ள சட்ட நிபுணர்கள்/வக்கீல்கள் எவரேனும் உச்ச நீதி மன்றம் சென்று‍ இதற்கு‍ ஒரு‍ தீர்வு கான வேண்டும். அக்டோபர் 5 ஆம் தேதி சென்னையில் நடக்கும் விசாரனைக்கு‍ உச்ச நீதி மன்றத்தில் தடை பெற்ற பின்பு மேலே கூறியவற்றிற்க்கு‍ விளக்கம் அறிவது‍ நல்லது.

மேலும், அக்டோபர் 5 ஆம் தேதி சென்னையில் நடக்கும் விசாரனையில் வக்கீலுடன் ஆஜராகமாறு‍ வேண்டிக் கொள்கிறேன்

Start a discussion with Illamaran

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Illamaran&oldid=604433" இலிருந்து மீள்விக்கப்பட்டது