பயனர் பேச்சு:Kalaiarasy/வேறு கட்டுரைகள்

நோர்வே கட்டுரை தொகு

நோர்வே பற்றிய கட்டுரையில் திருத்தங்கள் செய்யவும், அதை முடிந்தளவில் விரிவாக்கவும் முயற்சி செய்தேன். அதில் சில விதயங்களை திருத்தலாமா, இல்லையா என்று தெரியவில்லை. உதாரணத்துக்கு Scandinavian என்பது தமிழில் எப்படி எழுதலாம் என்பதில் சிறிது குழப்பம். தவிர bokmål என்பது தமிழில் 'பொக்மால்' என்றும், nynorsk என்பது 'நியொநொஃச்க்' என்றும் பதியப்பட்டுள்ளது. அதை சரியாக சொன்னால், ‘பூக்மோல்', ‘நியூநொர்ஸ்க்' என்றுதான் எழுத முடியும் என தோன்றுகின்றது. இவை சில உதாரணங்கள். ஆனால் இப்படி திருத்தங்கள் நானாக செய்யலாமா, அல்லது ஏற்கனவே தொகுத்தவர்களிடம் பேசா வேண்டுமா என்பவைபற்றி தெரியவில்லை.

இதைத் தொகுத்தவர்கள் யாரென்பதை தெரிந்துகொண்டு அவர்களிடம் கேட்கலாமென்றால், அவர்கள் யாரென 'வரலாறு' இல் போய்ப் பார்த்து சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. நான் இங்கு அதிகளவில் பங்களிக்கத் தொடங்கி இருக்காததால், பல விதயங்கள் புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது.

இந்த விடயத்தில் எனக்கு யாராவது உதவினால், அந்தப் பக்கத்தில் பங்களிக்க முடியுமென நினைக்கிறேன்......கலை

வணக்கம் கலை. எந்த தயக்கமும் இல்லாமல் கட்டுரைகளை நீங்கள் மேம்படுத்தலாம். குறிப்பாக குறுங்கட்டுரைகளை. எதாவது பெரிய பகுதிகளை நீக்க வேண்டும் அல்லது மாற்ற வேண்டு என்றால் பேச்சுப் பக்கத்தில் குறிப்புத் தந்து செய்யலாம். இசுகாண்டநேவியன் போன்று கூறலாம். நோர்டிக் நாடுகள் பற்றி ஒரு குறுங்கட்டுரை உண்டு. பூக்மோல் என்று மாற்றலாம். ஸ் பதிலாக தமிழ் எழுத்துக்களை பொருந்தம் போல (இசு, சு, ஃச்) பயன்படுத்துவது விரும்பத்தக்கது. --Natkeeran 01:41, 14 ஜூன் 2009 (UTC)
வணக்கம் கலை. நோர்வே கட்டுரையின் உள்ளடக்கத்தை கனடா ஒத்து விரிவாக்கலாம். எ.கா வரலாறு, அரசமைப்பு, சட்டம், பண்பாடு போன்ற பகுதிகள். --Natkeeran 01:56, 17 ஜூன் 2009 (UTC)

பட்டாம்பூச்சி உரைத் திருத்தம் தொகு

உங்கள் உரைத் திருத்தம் நன்றாக உள்ளது. செதிள் என்பதை செதில் என்று மாற்றியுள்ளீர்கள். ஏதும் காரணம் உள்ளதா என அறிய ஆவல். ஏனெனில் செதிள், செதில், செகிள் ஆகிய மூன்று சொற்களுமே சரியான சொற்கள்தாம். செதிள் என்னும் பயன்பாட்டுக்கு தமிழ் லெக்ஃசிக்கனைப் பார்க்கலாம். செதில் என்று நீங்கள் மாற்றி இருப்பது எனக்கு உடன்பாடே. வேறு ஏதேனும் காரணம் இருந்திருக்குமோ என அறிய ஆவல், அவ்வளவே. --செல்வா 04:43, 15 அக்டோபர் 2009 (UTC)Reply

உண்மையில் எனக்கு 'செதிள்' என்ற சொல் பரிச்சயமில்லை. 'செகிள்' என்பது அறிந்துள்ளேன். நாம் கல்வி கற்றபோது, அதை 'செதில்' என்றே அறிந்திருந்ததால், எழுத்துப் பிழையாக இருக்குமோ என்ற எண்ணத்தில்தான் அதை மாற்றினேன். நான் ஏற்கனவே கூறியபடி, எனக்கு மொழிப்புலமை அவ்வளவாக இல்லை. அதனாலேயே இப்படியான தவறுகள் ஏற்படுகின்றன.
தவிர, புழு என்ற நிலையை குடம்பி என மாற்றியுள்ளேன். புழு (worm) எனும்போது அது எல்லா வகையான புழுக்களையும் குறிக்கும் பொதுப் பெயராகவே கருதுகின்றேன். இங்கே பூச்சியினங்களில் முட்டையிலிருந்து வெளிவரும் நிலைக்கு குடம்பி (larva) என்பதே பொருத்தமாக இருக்குமென நினைத்ததால், அதையும் மாற்றியுள்ளேன்.--கலை 08:21, 15 அக்டோபர் 2009 (UTC)Reply

நோர்வேயில் தமிழர், தமிழ், தமிழ் விக்கிப்பீடியா தொகு

நோர்வேயில் தமிழர், தமிழ், தமிழ் விக்கிப்பீடியா பற்றி ஒரு வலைப்பதிவு எழுதித் தந்தால் சிறப்பாக இருக்கும். தமிழ் விக்கிப்பீடியாவை நோர்வேயில் எப்படி அறிமுகப்படுத்தலாம் என்ற நோக்கில் எழுதலாம். நன்றி. --Natkeeran 16:27, 25 அக்டோபர் 2009 (UTC)Reply

வணக்கம் Natkeeran! நீங்கள் கேட்டுக்கொண்ட இடுகை எழுதுவதற்கு தற்போது எனக்கு முடியவில்லை. மன்னிக்கவும். --கலை 11:35, 27 அக்டோபர் 2009 (UTC)Reply

நன்றி தொகு

அயன் (வேதியியல்) கட்டுரையில் தங்கள் திருத்தங்களுக்கு நன்றிகள். இது போலவே ஏனைய அறிவியல் கட்டுரைகளையும் திருத்துவது பயன்தரும்.--சஞ்சீவி சிவகுமார் 11:41, 31 அக்டோபர் 2010 (UTC)Reply

பழமொழி தொகு

தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல் பார்க்கவும். இத்தோடு பழமொழிகள் பக்கத்தில் உள்ளவற்றைச் சேக்கலாம். நன்றி. --Natkeeran 15:16, 3 திசம்பர் 2010 (UTC)Reply

Return to the user page of "Kalaiarasy/வேறு கட்டுரைகள்".