நோய்கள் ஏற்படக் காரணம்

அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையில் பெருகி வருகிறது எனலாம்.

நோய்கள் பெருகுவதற்குக் காரணமாக உண்ணும் உணவு, சுற்றுச்சூழல், சுகாதாரமின்மை போன்ற பல காரணங்களைக் கூறலாம். இவற்றையெல்லாம் கண்காணித்து, மிகுந்த கவனத்துடன் செயல்பட்ட போதிலும், ஏதாவது ஒரு நோய் தாக்குதலுக்கு அவ்வப்போது ஆளாகி வருகிறோம்.

நோயின் அளவு ஒருபுறம் அதிகரித்துக் கொண்டே போனாலும், அதனைத் தடுக்க மருத்துவ முறைகளும் உருவாகிக் கொண்டுதான் உள்ளன.

நோய்களில் முக்கியமானதாகக் கருதப்படுவது சர்க்கரை நோய் எனலாம். எனவே சர்க்கரை நோயினைப் பற்றியும், அதனை தடுப்பதில் "ஸ்டெம் செல்'லின் முக்கியப் பணிகள் குறித்தும் இதில் அறிந்து கொள்வோம்.

சர்க்கரை நோய் ஏற்பட்டவர்களுக்கு அந்நோயை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.

என்றாலும் `ஸ்டெம் செல்' ஆராய்ச்சி மூலம் ஒரு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

பொதுவாக உடலில் உள்ள உறுப்புகள் சரிவர இயங்கவும், இரத்த ஓட்டம், செரிமானம் சம்பந்தப்பட்ட அனைத்து இயக்கங்களும் சீராக நடைபெறவும் அத்தியாவசியமாக தேவைப்படுவது சர்க்கரை, உப்பு, கொழுப்பு மற்றும் தாதுச் சத்துக்கள் ஆகும்.

இரத்தத்தில் இவை அனைத்தும் குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டும். அப்போதுதான் உடல் இயக்கம் எவ்வித தடையும் இன்றி செயலாற்றும்.

இவற்றில் ஏதாவது ஒன்று, கூடினாலும், குறைந்தாலும் உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம்.

கணையம் என்ற நாளமில்லாச் சுரப்பியில் உள்ள "ஐலெட் செல்'கள்தான், இன்சுலின் ஹார்மோனைச் சுரக்கிறது. இந்த இன்சுலின்தான் இரத்தத்தில் கலந்துள்ள குளுக்கோஸ் என்று சொல்லப்படும் சர்க்கரை சத்தை, உடல் உறுப்புகள் இயங்கத் தேவையான ஆற்றலாக மாற்றுகிறது.

எனவே நோயின்றி வாழ வேண்டுமானால், உடலில் உள்ள மேற்கூறப்பட்ட சத்துகள் அனைத்தும் உரிய அளவுக்கு இருத்தல் வேண்டும். அதற்கேற்ப உடற்பயிற்சி, உணவுப் பழக்க முறை, இருப்பிடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருத்தல் போன்றவற்றைக் கடைபிடிக்க வேண்டும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Karthik_Ramesh&oldid=462009" இலிருந்து மீள்விக்கப்பட்டது