Mavaigajan
புலவர் ம. பார்வதிநாதசிவம்
தொகு1 பெயர் : புலவர் ம. பார்வதிநாதசிவம்
2.முழுப்பெயர் : மகாலிங்கசிவம் பார்வதிநாதசிவம் 3.பிறந்த திகதி : 14.01.1936 இடம் : மாவிட்டபுரம் 4. வயது : 76 5.தற்போதைய முகவரி : நந்தாவில் வீதி, கொக்குவில். 6. கல்வி 1.ஆரம்பக்கல்வி : யா/வீமன்காமம் மகாவித்தியாலயம் 2.இடைநிலைக்கல்வி :யா /தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரி 3. புலவர் பட்டக் கற்கைநெறி : அண்ணாமலை பல்கலைக்கழகம் (1957) 7.ஆசிரியர் தொழில் 1.யா / மருதனார்மடம் இராமநாதன் அக்கடமி 2.கண்டி சென். அன்ரனிஸ் கல்லூரி
02. கவிதைப்பணி ஈழத்து மகாகவி து.உருத்திரமூர்த்தியால் “எமது எதிர்கால எதிர்பார்ப்பு” என்று நம்பிக்கையோடு கூறப்பட்டவர்.
கவிதைத் தொகுப்புக்கள் 5
1. காதலும் கருணையும் (1972) 2. இருவேறு உலகம் (1980) 3. இன்னும் ஒரு திங்கள் (1988) 4. இரண்டு வரம் வேண்டும் (1985) 5. பசிப்பிணி மருத்துவன் (2001)
புலவரின் கவித்துவம் பற்றி
1. பேராசிரியர் க.கைலாசபதி பார்வதிநாதசிவம் போல ஒரு வரம்பிற்குள் நிற்கும் அதே வேளை காலப் போக்கில் நின்று விலகித் தனித்து நிற்காமல் இயன்றளவில் அதை அனுசரித்தும் செய்யுள் இயற்றுவோர் பொதுவாழ்வில் பயன்படுத்தும் யாப்பு அமைதிகளைக் கொண்டு உணர்வு பூர்வமாக எளிமைத் தன்மையுடன் புலவர் பாடுபவர். எவரும் இல்லை.
2. பண்டிதர் வ.நடராஜா புலவர் பார்வதிநாதசிவம் அவர்கள் கவித்துவ பரம்பரையைச் சேர்ந்தவர். கவிதையும் உரையும் அவரது பரம்பரைச் சொத்து. குலவித்தை கல்லாமற் பாகம்படும் என்பதற்கேற்ப புலவர் அவர்களுக்கும் கவித்தவம் அடி பணிகிறது என்கிறார்.
புலவரின் புகழ்பெற்ற கவிதைகளில் ஒன்றான அபூர்வ வைத்தியர் என்பதிலுள்ள ஒரு பாடல்.
நாடியைப் பார்த்தார் இல்லை நயனத்தைப் பார்த்தார் இல்லை மாடியைப் பார்த்த வாறே மருந்தினை எழுதித் தந்தார் நாடியைப் பார்த்துத் தந்தால் நன்றென்றேன் அயலில் நிற்கும் லேடியைப் பார்க்க வேண்டும் லேட் இன்னே செல்செல் என்றார்.
04. புலவரின் கவித்துவத்தை வளர்த்தெடுத்த தமிழக இலக்கிய வாதிகள்
1. பாவேந்தர் பாரதிதாசன் :- அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கற்றமோது புலவர் இவரை அடிக்கடி சென்று சந்திப்பார். தனது கவிதைகள் எளிமையாக அமைய இவரே காரணம் என்பார்.
2. டாக்டர்.மு.வரதராசன்
3. தண்டபாணிதேசிகர்
4. சோமசுந்தர பாரதியார்
இறுதி இருவரும் புலவரின் பேரனார் ம.க வேற்பிள்ளையிடம் கல்வி கற்றவர்கள்.
05. பத்திரிகைத் துறை
1. கலைமகள் - உதவி ஆசிரியர் 2. ஈழநாடு உதவி ஆசிரியர் - (1977) 3. முரசொலி - (1989) 4. உதயன் - (1992 – 2002)
பத்திரிகைப் பணி 1. கட்டுரைகள் மூலம் பழைய இலக்கியங்களை இன்றைய தலை முறைக்கு அறிமுகம் செய்தமை. (இவற்றுள் 22 கட்டுரைகள் தமிழ்ச்செல்வம் என்னும் நூலாக வெளிவந்துள்ளன.) 2. பேட்டிகள் மூலம் ஈழத்து அறிஞர்களின் ஆளுமையை வெளிக் கொணர்ந்தமை. 3. ஆக்கங்களைப் பிரசுரித்து இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்தமை.
06. புலவரின் ஆளுமை உருவாக்கத்திற்குக் காரணமான புலவர் குடும்ப மூத்த அறிஞர்கள்.
1. புலவரின் பேரனார் உரையாசிரியர் ம.க வேற்பிள்ளை ஈழ மண்டல சதகம் கவிதை நூலை எழுதியதுடன் திருவாதவூரடிகள் புராணம், அபிராமி அந்தாதி, புலியூர் அந்தாதி என்பவற்றுக்கும் உரை எழுதியவர். சிதம்பரம் நாவலர் பாடசாலை அதிபராக இருந்தவர். மட்டுவில் சந்திரமௌலீச வித்தியாசாலை ஸ்தாபகர்.
2. புலவரின் தந்தையார் குருகவி ம.வே. மகாலிங்கசிவம் பரீட்சை எடாத பண்டிதர் என்று போற்றப்பட்டவர் பல தனிப் பாடல்களை இயற்றியவர். கோப்பாய் ஆசிரியர் பயிற்சிகலாசாலை விரிவுரையாளர்.
3. பண்டிதர் ம.வே திருஞானசம்பந்தப்பிள்ளை புலவரின் பெரியப்பா
1. ஆரம்ப கால நாவலாசிரியர் (3 நாவல்கள்) 2. இந்து சாதனப் பத்திரிகையாசிரியர் (32 வருடங்கள்) 3. 40 ற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும் உரை எழுதியும் பதிப்பித்தவர். 4. சரஸ்வதி விலாசபை நாடகக் குழுவை உருவாக்கியவர். எட்டு நாடகங்களை எழுதி நடித்தவர்.
4. பண்டிதை இ. பத்மாசினி
புலவரின் பாட்டி ஈழத்தின் முதற் பெண் புலவர் புலோலி பசுபதீசுவரர் பதிற்றுப்பத்து அந்தாதியை (1922) இயற்றியவர். முதற் பெண் மொழி பெயர்ப்பாளர். முதற்பெண் பதிப்பாசிரியர்
5. செல்வி. பிரபாவதி மகாலிங்கசிவம்
புலவரின் சகோதரி அண்ணாமலைப் பல்கலைக்கழக BA பட்டதாரி.