Mazalais
குழந்தைகளுக்காக
முற்றிலும் குழந்தைகளின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு மாதந்தோறும் புதிய விவரங்கள் பதிவேற்றிவரும் தமிழ் - ஆங்கில இரு மொழி இணையதளமான மழலைகள்.காம் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் பல அறிஞர் பெருமக்களின் உதவியும் ஆசிகளும் பெற்றுச் சிறந்த முறையில் நடத்தப்பட்டு வருகிறது.
இத்தளம் குழந்தைகளின் கலைத்திறமைகளை உலகுக்கு எடுத்துக் காட்டுவதற்கு ஒரு முக்கிய இடமளித்துள்ளது. குழந்தைகள் பலர் வரைந்த வனப்பு மிக்க ஓவியங்கள் பல இத்தளத்தில் தனிப்படவும் கட்டுரைகள், கதைகள், கவிதைகள் முதலியவற்றுடன் இணைப்பாகவும் இதழ் தோறும் வெளியிடப்பட்டு வருகின்றன. குழந்தைகளின் ஓவியம் வரைதல் மற்றும் கதை எழுதும் திறமைகளை வளர்க்கும் நோக்கில் இவற்றுக்கான போட்டி ஒன்றும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ் வளர்ப்போம்
கணினித் துறையில் தமிழ் மொழியின் உபயோகத்தை அதிகப்படுத்துவது மழலைகள்.காம் தளத்தின் தலையாய பணிகளுள் ஒன்றாகும். ஒவ்வொரு தமிழ் எழுத்துக்களுக்கும் அவற்றின் உச்சரிப்புக்குத் தக்கவாறு அமைந்துள்ள ஆங்கில எழுத்துக்களை கணினியின் எழுத்துப் பலகையில் (Key board) தட்டுவதன் மூலம் உரிய தமிழ் எழுத்துக்கள் கணினியின் திரையில் அமையும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள ஒலிபெயர்ப்பு மென்பொருள்களுள் (Transliteration software) முன்னணியில் நிற்கும், யாரும் எளிய முறையில் சிரமமில்லாமல் சரளமாக உயபோகிக்கும் விதத்தில் அமைந்துள்ள "அழகி" எனும் மென்பொருளின் துணையுடன் தமிழ் மொழி அறிந்தவர் அதனைக் கணினியில் அனைத்து செயலிகளிலும் (in all applications) வடிப்பதற்கும், தமிழ் மொழி அறியாதவர் தமிழை அறிவதற்கும் உறுதுணை புரியவென்றே தமிழ்ப் பகுதி தலையாய பகுதியாக இத்தளத்தில் அமைந்துள்ளது. முக்கியமாகக் குழந்தைகள் தமிழைப் பயில்வதற்கும் தமிழைக் கணினியில் பயன்படுத்துவதற்கும் வழிவகை செய்கிறது இப்பகுதி.
ஒலிபெயர்ப்பு
தமிழிலுள்ள ஒவ்வொரு எழுத்தையும் கணினியின் திரையில் தோன்றவைக்கத் தேவையான ஆங்கில எழுத்துக்களை அட்டவணையிட்டுக் காட்டி, அழகி மென்பொருளை உபயோகித்து தமிழில் மின்னஞ்சல் அனுப்புதல், கதை, கட்டுரை முதலியவற்றை உருவாக்குதல் மற்றும் பிழை திருத்துதல் ஆகிய பணிகளை கணினியின் முக்கியமான அனைத்துச் செயலிகளிலும் மேற்கொள்ளத் தேவையான விவரங்கள் இங்கு விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. தமிழைக் கையாள்வளதற்கு ஏற்ற வகையில் கணினியை எவ்வாறு தயார் செய்வது எனும் விளக்கமும் இவ்வுப பகுதியில் அடங்கியுள்ளது.
தமிழ் கற்பித்தல்
அகரத்தில் தொடங்கி அனைத்துத் தமிழ் எழுத்துக்களுக்கும் எடுத்துக்காட்டாகப் பல சொற்களை மேற்கோள் காட்டி அச்சொற்களுக்கான ஓவியங்கள் பலவற்றைக் குழந்தைகளைக் கொண்டு வரைந்து விளக்குவதாக அமைந்துள்ளது மழலைகள்.காம் தளத்தின் தமிழ் கற்பிக்கும் உப பகுதி.
இப்பகுதியில் மேலும் விவரங்களைச் சேர்க்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. தமிழ் உச்சரிப்பை ஒலி வடிவிலும் இணைத்து தமிழ் கற்பிக்கும் உப பகுதியை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ் இலக்கியம், இலக்கணம்
பண்டைத் தமிழ் இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள், கதைகள், கவிதைகள், கட்டுரைகள் உள்ளிட்ட விவரங்கள் தமிழில் மாதந்தோறும் இடம் பெறுகின்றன. தமிழ் இலக்கணத்தை தகுந்த ஆசிரியர்களைக் கொண்டு விரிவாகக் கற்பிக்கத் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொது அறிவு
குழந்தைகளின் பொது அறிவு வளரத் தேவையான விவரங்கள் சேகரிக்கப்பட்டு இதழ்தோறும் பதிவேற்றப் படுகின்றன. உலக நாடுகள், அவற்றின் தலைவர்கள், வரலாறு, முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் முதலிய விவரங்கள் இதில் அடங்கும். படங்களுடன் கூடிய கேள்வி பதில் பகுதி (Photo Quiz) ஒன்று வெளியாகிறது. இது தவிர புதிர்களும் விடுகதைகளும் தொகுக்கப்பட்டு வெளியிடப் படுகின்றன. உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள், இலக்கிய மேதைகள், ஞானியர் முதலியவர்களைப் பற்றிய கட்டுரைகள், மற்றும் குறிப்புகள் தொடர்ந்து இடம் பெறுகின்றன.
ஆன்மீகமும் தெய்வீகமும்
குழந்தைகள் மற்றும் அனைவரது மனங்களும் பண்பட்டு, தெளிவு பெற உதவும் இன்றியமையாத விவரங்கள் இப்பகுதிகளில் இத்துறையில் சிறந்த எழுத்தாளர்கள் மூலம் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. பகவத் கீதை, ஆதி சங்கரர் அருளிய பஜ கோவிந்தம் முதலியவற்றில் இடம்பெறும் ஸ்லோகங்களின் பொருளை விளக்கும் விரிவான விவரங்கள் இப்பகுதியில் அடங்கியுள்ளன. இராமாயணம், மஹாபாரதம் உள்ளிட்ட புராணங்கள் மற்றும் ஆலயங்களைப் பற்றிய விவரங்கள் இங்கு வெளியிடப்படுகின்றன. கிரேக்கப் புராண இதிகாசக் கதைகளும் இத்தளத்தில் உள்ளன. மதச் சார்பற்று இயங்கும் நோக்கில் அனைத்து மதத்தவரிடமிருந்தும் தகுந்த விவரங்கள் பிரசுரிப்புக்கு வரவேற்கப் படுகின்றன.
வாழ்க்கை, கேளிக்கை, கல்வி
கணினி வழியே குழந்தைகளும் பிறரும் விளையாடி மகிழ விளையாட்டுக்கள், வீடியோ, இசை போன்றவை மழலைகள்.காம் தளத்தில் உள்ளன. குழந்தைகள் வளர்ப்பு பற்றிய சிறப்புப் பகுதியொன்று இத்தளத்தில் இடம் பெற்றுள்ளது. குழந்தைகளின் கல்வியறிவை மேம்படுத்தத் தேவையான விவரங்கள், கணினியில் பயன்படுத்தும் மென்பொருட்கள் பற்றிய குறிப்புகள் தொடர்ந்து வெளியிடப் படுகின்றன.
Start a discussion with Mazalais
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. Start a new discussion to connect and collaborate with Mazalais. What you say here will be public for others to see.