[[File:
Shopping in Phoenix, Bangalore
||பெங்கலூரு]]
பெங்கலூரு
பெயர்நிகிதா வித்யாலங்கர்
பிறந்த நாள்1, டிசெம்பர், 1997
பிறந்த இடம்கோவை, தமிழ்நாடு
நாடு இந்தியா
தேசியம்இந்தியன்
கல்வி, தொழில்
கல்விBA (Hons) English
பல்கலைக்கழகம்கிரிஸ்து பல்கலைக்கழகம்
பாடசாலைதி கேம்ஃபர்டு சர்வதேச பள்ளி
கொள்கை, நம்பிக்கை
பொழுதுபோக்குகர்நாடக சங்கீதம், பரதநாட்டியம், புத்தகங்கள் படிப்பது
சமயம்ஹிந்து

நிகிதா வித்யாலங்கர் கிரிஸ்து பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு BA English Honors படித்து வருகிறார். இவர் தமிழகத்தில் உள்ள கோவை மாவட்டத்தில், 1997ஆம் ஆண்டு டிசெம்பர் 1ஆம் நாள் பிறந்தார். கோவை வித்யா நிகேதனில் ஆரம்ப கால கல்வியும், மேநிலைக் கல்வி கேம்ஃபர்ட் சர்வதேச பள்ளியிலும் பயின்று வந்தார். நீல் வித்யாலங்கர் மற்றும் ஜெயா நீல் தம்பதியருக்கு பிறந்தார். தந்தை நீல் வித்யாலங்கர் கோவையில் ஓர் சிறிய மென்பொருள் நிறுவனத்தில் மேலாளராக பணியெடுத்து வருகிறார். தாயார் ஜெயா 'ஸன்ஸ்கிருதி' என்ற பெயரில் வீட்டிலேயே நுண்கலை பள்ளி நடத்தி வருகிறார், 2002ஆம் ஆண்டிலிருந்து. சிறிய வயதிலிருந்தே பரதநாட்டியமும் கர்நாடக சங்கீதமும் கற்றவர். பள்ளி அளவில் நூற்றிர்க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை பெற்றுள்ளார். அது மட்டுமின்றி, பேரூர் நாட்டியாஞ்சலி, பவன் நாட்டிய திருவிழா, பிள்ளையார்பட்டி, தியாகராஜர் ஆராதனையிலும் பங்கேற்றுள்ளார். பரதநாட்டியம் திருமதி ஷெரின் ஜோர்ஜ் அவர்களிடம் 8 வருடங்கள் கற்று வந்தார். கலைஞர் ஷீஜித் கிரிஷ்னாவின் 'யதி' மற்றும் 'நந்திச் சொல்' ஆகிய தயாரிப்புகளை நிகிதா, தமது குரு ஷெரின் உடன் ஆடியுள்ளார். கர்நாடக சங்கீதம் திரு நீலகண்டன் அவர்களிடம் பயின்றார். கோவையில் உள்ள கோவில் விழாக்களிலும் கட்சேரிகளிலும் பங்கேற்றுள்ளார். பள்ளியில், கேப்டன் ஆகவும் பத்திரிகை தொகுப்பாளராகவும் இருந்தவர். தமது 10ஆம் வகுப்பு ஆங்கில ஆசிரியர் திருமதி கீதா பரமேஷ்வரன் அவர்களை முன்மாதிரியாக கருதுகிறார். அவரது திறமைக்கும் பேச்சு வாதத்திற்கும் பெரிய ரசிகை. அவரைப்போல பெச்சுத் திறனில் மேம்படுவது நிகிதாவின் ஒரு லட்சியமாகும். ஸன்ஸ்கிருதி நுன்கலை பள்ளி நிகிதாவின் வாழ்வில் பெரிய பகுதி பெற்றுள்ளது. இந்திய கலாசாரத்தில் உள்ள ஆர்வமும், சங்கீதத்திலும் நாட்டியத்திலும் உள்ள ஆர்வம் அனைத்தும் பள்ளியின் ஒப்பம் வளர்ந்ததின் காரணம்தான். ஆசிரியர் ஆகவேண்டும் என்ற இலக்கும் ஸன்ஸ்கிருதியில்தான் முளைத்தது. சென்னை கலாக்ஷேத்ராவை போல, ஸன்ஸ்கிருதியை சர்வதேச அளவில் எடுத்து செல்ல வேண்டும் என்பது நிகிதாவின் பார்வை ஆகும். நிகிதா மிக சிறந்த ஒரு கலைஞர். தமது வாழ்கையில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் உள்ளவர். பெரியளவில் சாதனை படைப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Start a discussion with Nikita neil

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Nikita_neil&oldid=2005254" இலிருந்து மீள்விக்கப்பட்டது