விசயால சோழன் கி.பி.850-871.

தொகு

விசயால சோழன் கி.பி.850-871. Picture விசயாலய சோழன் கி.பி. 850-871

பிற்கால சோழ பேராசிற்கு வித்திட்டு வளர்த்த மாமன்னன் விசயலாய சோழன் ஆவான். இவனது தந்தை பெயர் தெரியவில்லை. முத்தரையரை வென்று தஞ்சையில் சோழர் ஆட்சியை அமைத்தவன் இவனே. விசயாலய சோழன் என்ற மாவீரன் காலத்திலிருந்து சோழர் ஆட்சி மீண்டும் எழுச்சி பெறத் தொடங்கியது.

பண்டைத் தமிழகத்தில் மூவேந்தர்களுள் ஒருவராகப் பெரும் புகழுடன் விளங்கிய சோழர்கள் நிலை தாழ்ந்து சிற்றரசர்களாக நீண்டகாலம் இருந்தனர். இந்த நிலையைப் போக்கி சோழரின் பெருமையை மீண்டும் தமிழகத்தில் நிலை நிறுத்தியவன் விசயாலய சோழன் ஆவான்.

விசயாலய சோழன் கி.பி 850இல் பல்லவருக்குக் கீழ்ப்பட்ட சிற்றரசனாக உறையூரில் பதவி ஏற்றான். விசயாலயசோழன் காலத்தில் பாண்டியர்களும், பல்லவர்களும் வலிமை பெற்று இருந்தனர். இதே கால கட்டத்தில் சோழர்களைப் போன்றே முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள் தஞ்சை மாவட்டத்தில் செழிப்பான பல ஆற்றோரப் பகுதிகளை தம்வசப்படுத்தி ஆண்டு கொண்டிருந்தனர். இவர்களே செந்தலை அல்லது நியமம் என்ற ஊரைத் தம் தலைநகராகக் கொண்டு தஞ்சையை ஆண்டு வந்தனர் என்று செந்தலைக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

இவர்களும் சோழர்களைப் போலவே, தம் சுதந்திர ஆட்சியை நிலைநாட்ட முடியாமல், பாண்டியர்களுடனோ பல்லவர்களுடனோ நட்பு கொள்ளவேண்டியிருந்தது. தங்கள் முன்னேற்றத்தை மட்டும் நோக்கமாகக்கொண்டு அவ்வப்போது தங்கள் ஆதரவை முத்தரையர் மாற்றிக் கொண்டனர் என்பதை இவர்களது கல்வெட்டுக்களும் விருதுகளுமே விளக்குகின்றன.

வரகுண பாண்டிய மன்னன் காலத்தில், முத்தரையர் தாமாகவோ அல்லது வரகுணனின் முயற்சியாலோ தம் முழு ஆதரவைவையும் பாண்டியர்களுக்கு அளித்தனர். இதன் விளைவாக, பல்லவர்களின் உரிமைகளைக் காக்கும் பொருட்டுச் செயல்பட்ட விஜயாலயனிடம் தஞ்சையை இழக்கலாயினர். திருப்புறம்பயம் போர் Picture திருப்புறம்பயம் போர் சோழர்களின் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த திருப்புறம்பயம் போர் இக்காலத்தில் சிறப்புப் பெற்றிருந்த பல்லவ மன்னன் அபராஜிதவர்மருக்கும், பாண்டிய மன்னன் வரகுண வர்மனுக்கும் இடையில் திருப்புறம்பயம் என்னும் இடத்தில் நடைபெற்றது.

இப்போரில் பல்லவர்களுக்கு ஆதரவாக சோழர்களும் பாண்டியர்களுக்கு ஆதரவாக முத்தரையர்களும் போரிட்டனர். அபராஜிதவர்மனுக்குத் துணையாக கங்க நாட்டு மன்னன் பிரிதிவீபதி வந்திருந்தான்.

இப்போரில் விஜயாலயச் சோழனின் மகன் முதலாம் ஆதித்தன் சோழப்படையின் மாதண்ட நாயக்கராக போரிட்டான். அந்த நேரத்தில் விஜயாலயச் சோழன் இரு கால்களும் செயலிழந்த நிலையில் தன் மகனின் வீரத்தை போர்க்களத்தில் காண பல்லக்கில் சென்றிருந்தார்.

அங்கே போர் முகாமில் பல்லவ-சோழப் படைகள் கிட்டத்தட்ட தோல்வியடைந்து பாண்டியர்களிடம் சரணடையும் முடிவுக்கு வந்ததை கேள்விப்பட்டு கோபமடைந்த விஜயாலயர் (அப்போது அவருக்குவயது கிட்டத்தட்ட 90) இரு வீரர்களின் தோளில் ஏறிக் கொண்டு போருடைப் பூண்டு வாளினை சுற்றிக் கொண்டு களமிறங்கினார். இதுகண்ட சோழப்படை மீண்டும் வீறாப்புடன் போராடி வெற்றிபெற்றது. கங்க மன்னன் பிரதிவீபதி அன்றைய போரில் வீர சொர்க்கம் எய்தினான். இப்போரின் மூலம் சோழர்கள் முத்தரையர்களை ஒழித்து தஞ்சையை தன் தலைமையின் கீழ் கொண்டு வந்தனர்.

இப்போரில் பல்லவர்கள் வெற்றி பெற்றாலும் அவர்கள் வலிமை மிக வெகுவாக குறைந்தது தம் அதிகாரத்திற்கு உட்பட்ட சோழ மன்னனை திருப்புறம்பயம் போரில் இறக்கியது, "புலிக்குட்டியை வளர்த்து, இரத்தத்தை சுவைபார்க்க வைத்தது போலாகும்" என்று பல்லவ மன்னன் சிறிதும் சிந்திக்கவில்லை. விஜயாலயனும், இவ்வெற்றியே இந்திய வரலாற்றில் காணப்படும் ஒரு பேரரசை நிறுவுவதற்கான மிகச்சிறப்பான தொடக்கம் என கனவுக்கூடக் காணவில்லை.

பழையாறையில் தங்கி குறுநில மன்னனாக இருந்த சோழ மன்னன் விசயாலயன் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த முத்தரையர்களை தோற்கடித்துத் தஞ்சையைக் கைப்பற்றி அங்கே தனது ஆட்சியை நிறுவினான். பாண்டியர்களையும் போரில் தோற்கடித்துத் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டான். அது முதல் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை துங்கபத்திரை ஆற்றின் தெற்கில் உள்ள நிலப்பகுதி முழுவதிலும் சோழப் பேரரசின் செல்வாக்கு ஓங்கியது.

இவனே பிற்கால சோழப் பேரரசிற்கான வலிமையான அடித்தளத்தை இட்டவன். கி.பி.880ல் நடந்த திருப்புறம்பியப் போரில் அக்காலத்தில் வலிமை பெற்றிருந்த பாண்டியர்களுக்குள் இருந்த உட்பகையைப் பயன்படுத்தி முத்தரையர்களின் கீழிருந்த தஞ்சாவூரைத் தாக்கி, பல்லவ பேரரசிற்கு சார்பாக போரிட்டு தஞ்சையை கைப்பற்றினான்.

விஜயாலயனது வெற்றி, பாண்டிய மன்னன் வரகுணவர்மனின் நண்பர்களான முத்தரையரின் பலவீனத்தையே காட்டியதால், சமநிலையை மீண்டும் நிலைநாட்டும் பொருட்டு, பாண்டியர்கள் சோழ நாட்டின் மீது படையெடுத்து வடகரையிலுள்ள இடவை என்னுமிடத்தை அடைந்தனர்.

இந்த நிகழ்சிக்குச் சற்று முன்பே நிருபதுங்கவர்மனுக்கு (பல்லவ மன்னன்) அடுத்த மன்னனான அபராஜிதன்(பல்லவ மன்னன்) கங்க மன்னன் முதலாம் பிரதிவீபதி உள்ளிட்டுத் தன் நண்பர்களைக் கூட்டி பாண்டியர்களை முறியடிக்க வேண்டிய பெரும் முயற்சியை மேற்கொண்டான். திருப்புறம்பயத்தில் நடந்த பெரும் போரில், விஜயாலயனை அடுத்து ஆட்சிக்கு வந்த ஆதித்த சோழனும் அபராஜித மன்னனுடன் இருந்து போரிட்டான்.

பல்லவர்க்கும் கங்க மன்னர்களுக்கும் இடையில் தொன்றுதொட்டு நட்பு ஏற்பட்டிருந்தாலும், இப்போரில் கங்கமன்னன் உயிர்நீத்ததால், போரில் கிடைத்த வருவாயின் பெரும் பங்கை ஆதித்தனே பெற்றான். ஆதித்தன், போரில் தனக்கு உதவியதற்கான நன்றிப் பெருக்கால், முத்தரையரிடமிருந்து முன்னால் ஆதித்தன் தந்தை விஜயாலயனால் எடுத்துக்கொள்ளப்பட்ட பகுதிகளையும் அபராஜித்தன், ஆதித்தனுக்கு அளித்தான்.

திருப்புறம்பயம் போரில், ஆதித்தன் பெரும்பங்கை ஏற்காவிடினும், தனக்கு அனுகூலமாக அமைந்த சூழ்நிலையை அறிந்து தன் உயர்வுக்காகத் தன் பலத்தை விரைவிலேயே பயன்படுத்தத் தொடங்கினான். முதலாம் பிரதிவீபதியின் கடைசி ஆண்டு, கி.பி. 879 ஆகத்தெரிகிறது. எனவே இதே ஆண்டில்தான் இவன் உயிர்விட வேண்டி நேர்ந்த திருப்புறம்பயம் போரும் நடைபெற்றிருக்க வேண்டும்.

கி.பி. 850 அளவில் தொடங்கிய விஜயாலயனது ஆட்சி, கி.பி. 870-ம் ஆண்டு அளவில் முடிவுற்றது. ஆனால் தொடர்ந்து 400 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற பிற்காலச் சோழர்களின் பொற்கால ஆட்சியைத் தொடக்கி வைத்தவன் விசயலாய சோழன் ஆவான்.

இம்மன்னன் தஞ்சையில் நிதம்பசூதனி ஆலயம் எடுத்தான் என திருவாலங்காட்டுச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. விசயாலன் கி.பி 871 இல் இறந்தான்.

வேங்கையின் வேந்தன் (பொன்னியின் செல்வனில் இருந்து) முதுமையினால் தளர்ந்தவனும், உடம்பில் தொண்ணூற்றாறு காயவடுக்கள் உள்ளவனும், கால்களில் பட்ட கொடிய காயத்தினால் எழுந்து நிற்கும் சக்தியை இழந்தவனுமான அக்கிழவன் எப்படியோ யுத்த அரங்கத்துக்கு வந்து விட்டான்.பல்லவ சைன்யம் பின்வாங்கிக் கொள்ளிடத்துக்கு வடக்கே போய்விட்டால், சோழநாடு மறுபடியும் நெடுங்காலம் தலையெடுக்க முடியாது என்பதை உணர்ந்திருந்த அந்தக் கிழச் சிங்கத்தின் கர்ஜனை, பல்லவர் கட்சியில் எஞ்சியிருந்த வீரர்களுக்குப் புத்துயிர் அளித்தது.

"ஒரு யானை! எனக்கு ஒரு யானை கொடுங்கள்!" என்றான். "நமது யானைப்படை முழுதும் அதமாகிவிட்டது; ஒன்றுகூடத் தப்பவில்லை" என்றார்கள். "ஒரு குதிரை! ஒரு குதிரையாவது கொண்டு வாருங்கள்!"என்று சொன்னான். "உயிருள்ள குதிரை ஒன்று கூட மிஞ்சவில்லை" என்று சொன்னார்கள். "சோழநாட்டுச் சுத்தவீரர்கள் இருவரேனும் மிஞ்சி உயிரோடு இருக்கிறார்களா? இருந்தால் வாருங்கள்!" என்று கிழவன் அலறினான்.

இருவருக்குப் பதிலாக இருநூறுபேர் முன்னால் வந்தார்கள். "இரண்டு பேர் - தோளில் வலிவும் நெஞ்சில் உரமும் உள்ள இரண்டு பேர் - என்னைத் தோள் கொடுத்துத் தூக்கிக் கொள்ளுங்கள். மற்றவர்கள் இரண்டு இரண்டு பேராகப் பின்னால் வந்து கொண்டிருங்கள். என்னைச் சுமக்கும் இருவர் விழுந்தால், பின்னால் வரும் இருவர் என்னைத் தூக்கிக் கொள்ளுங்கள்!" என்றான் அந்த வீராதி வீரன்.

அப்படியே இரண்டு பீமசேனர்கள் முன்னால் வந்து அந்தக் கிழவனைத் தோளில் தூக்கிக் கொண்டார்கள்.

"போங்கள்! போர் முனைக்குப் போங்கள்!" என்று கர்ஜித்தான். போர்க்களத்தில் ஓரிடத்தில் இன்னமும் சண்டை நடந்து கொண்டிருந்தது. தெற்கத்தி மறவர்கள் எஞ்சி நின்ற பல்லவ வீரர்களைத் தாக்கிப் பின்வாங்கச் செய்து கொண்டே வந்தார்கள்.

இருவருடைய தோள்களில் அமர்ந்த கிழவன் அந்தப் போர் முனைக்குப் போனான். இரண்டு கைகளிலும் இரண்டு நீண்ட வாள்களை வைத்துக் கொண்டு திருமாலின் சக்ராயுதத்தைப் போல் சுழற்றிக்கொண்டு, எதிரிகளிடையே புகுந்தான்.அவனைத் தடுக்க யாராலும் முடியவில்லை. அவன் புகுந்து சென்ற வழியெல்லாம் இருபுறமும் பகைவர்களின் உடல்கள் குவிந்து கொண்டேயிருந்தன.

ஆம்; இந்த அதிசயத்தைப் பார்ப்பதற்காகப் பின்வாங்கிய வீரர்கள் பலரும் முன்னால் வந்தார்கள். கிழவனுடைய அமானுஷ்ய வீரத்தைக் கண்டு முதலில் சிறிது திகைத்து நின்றார்கள். பிறகு ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக்கொண்டு தாங்களும் போர் முனையில் புகுந்தார்கள்.

அவ்வளவுதான்; தேவி ஜயலஷ்மியின் கருணாகடாட்சம் இந்தப் பக்கம் திரும்பிவிட்டது. பல்லவர் படைத் தலைவர்கள் பின்வாங்கிக் கொள்ளிடத்துக்கு வடகரை போகும் யோசனையைக் கைவிட்டார்கள்.

மூன்று வேந்தர்களும் தமக்குரிய மூலபல வீரர்கள் புடைசூழப் போர் முனையில் புகுந்தார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம் பாண்டிய வீரர்கள் பின்வாங்கத் தொடங்கினார்கள். பிறகு அவர்கள் பாண்டிய நாட்டின் எல்லைக்குச் சென்றுதான் நின்றார்கள்.

கங்க மன்னன் பிரிதிவீபதி அன்றையப் போரில் செயற்கரும் செயல்கள் பல புரிந்த பிறகு தன் புகழுடம்பை அப்போர்க் களத்தில் நிலைநாட்டி விட்டு வீர சொர்க்கம் சென்றான். இக் கிழவன் தான் விசயாழய சோழன் (நன்றி பொன்னியின் செல்வன்) பழையாறை மாநகரம் Picture பழையாறை மாநகரம் பழமைமிகு பழையாறை மாநகரில் விசயலாய சோழன் தோற்றுவித்த சோழப்பேராசு தான் உலக வரலாற்றில் நீண்டநெடிய காலமான சுமார் 430 ஆண்டுகள் செங்கோல் செலுத்தி கொடிகட்டி ஆண்ட வல்லரசு. வரும் காலங்களில் கூட ஆற்றல் மிக்க சோழவல்லரசு போல் ஒரு பேராசு தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லை.

இவ்வியப்பிற்கும், பெருமைக்கும் தாண்டிய எல்லையுடையது பழையாறை மாநகரம். சோழ மாமன்னர்கள் சிறு வயதினில் தவழ்ந்து விளையாடி, இளவரசுப் பட்டங்களை சுமந்து, ஆயகலை 64 கினையும் கற்று, முடிசூடி பாராண்டு, இறுதிக்காலங்களில் ஓய்வெய்தி, வின்னுலகம் சென்ற அத்துனையும் கண்டது இம்மாநகரமே. கட்டிட கலைநுட்பம், சிற்பக்கலை நுணுக்கம், ஓவியக்கலை வண்ணமும், விஞ்சிய தெய்வத்தன்மையும் சிறப்புடன் அமையப்பெற்று இராசகம்பீர மிடுக்குடன் நிமிர்ந்து நின்ற மாநகரமும் பழையாறை என்பது சான்றோர் சாற்றிய வரலாறு.

"தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்து பாரில் நீடிய பெருமைசேர் பதி பழையாறை" சேக்கிழார்.

இந்த இடத்தை நெருங்கும் போதே மனதிற்குள் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. தஞ்சை கடந்து, தமிழகம் கடந்து, கடல் கடந்து, கடாரம் வரை சென்று புலிக்கொடியை நாட்டிய சோழ வல்லரசின் அன்றைய தலைநகர்! உலக வரலாற்றில் இதுவரை எந்த அரசும் செய்திடாத நீண்ட நெடிய காலமான தொடர்ந்து 430 ஆண்டு கால ஆட்சி! அப்படிப்பட்ட ஊரில் ஒரு கோயிலை கண்டு ஆச்சர்யம் கொண்டேன்.

சோழர்களின் சிற்பக் கலை உச்சத்தை எட்டிய கோயில் என்று சொல்லகூடிய யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான தாராசுரத்தில் உள்ள "ஐராவதேஸ்வரர் கோயில்", பழையாறையில் உள்ள "சோமநாத சுவாமி கோயிலின் மாதிரி தான் என்பதே உள்ளே நுழைந்த பின் தான் தெரியவந்தது, விஜயலாய சோழனின் மகன் " ஆதித்ய சோழனால்" (871-907 CE) கட்டப்பட்டது தான் இந்த "சோமநாத சுவாமி கோயில்".அவருக்கு பின் வந்த அரசர்கள் இந்த கோயிலை திருப்பணி செய்து மிக பிரமாண்டமான கோயிலாக மாற்றியுள்ளனர்.

தன் மூதாதையர்கள் கட்டிய கோயிலை அப்படியே மையமாக வைத்து அதை இன்னும் சிறப்பாக அதில் எங்கு பார்த்தாலும் சிற்பங்களை நிறைத்து கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் கட்டியது தான் இந்த "தாராசுரம்".ராஜ ராஜ சோழன் இங்குள்ள "கைலாசநாதரை" தான் தினமும் வந்து வழிபட்டதாக தெரியவருகின்றது. இப்படிப்பட்ட சிறப்புக்கள் மிக்க இந்த கோயிலைப் பற்றி யாருக்கும் தெரியாமல் இருப்பது வேதனையான விசயம்.

கவனிப்பாரற்று செடி கொடிகள் முளைத்து இடிந்து போய் கிடந்த இந்த கோயிலை தற்போது அரசு திருப்பணி செய்து வருகின்றது.கும்பகோணம் செல்லும் போது இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த கோயிலுக்கு மறவாமல் செல்லுங்கள்.

பழையாறை மாநகரம் பெற்றிருந்த பெயர்கள் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் (மூவர் தேவார காலங்களில்) 1. ஆறை 2. பழையாறை 3. பழையாறு 4. பழைசை

கி.பி.எட்டாம் நூற்றாண்டில் 5. நந்திபுரம் 6. நந்திபுரி

கி.பி. ஒன்பதாம், பத்தாம் நூற்றாண்டில் 7. முடிகொண்ட சோழபுரம் 8. ஆகவமல்லகுலகாலபுரம்

கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில் இராச ராசபுரம்

உலக வரலாற்றில் எந்த ஒரு தலை நகருக்கும் ஒன்பது பெயர்கள் காலந் தோறும் மாறி மாறி வந்துள்ளதாக வரலாறும் இல்லை. முதலாம் ஆதித்த சோழன் கி.பி.871-907 Picture முதலாம் ஆதித்த சோழன் கி.பி.871-907

பரகேசரி விசயாலய சோழனின் மகன். இவனும் தன் தந்தையுடன் திருப்புறப்பிய போரில் பங்குபற்றினான். பல்லவ மன்னன் அபராசித வர்மனை கொன்று தொண்டை நாட்டை கைப்பற்றினான். இவன் காலத்தில் சோழ அரசு சிற்றரசு நிலையில் இருந்து விடுபட எத்தனித்தது.

மேற்கே சகயாத்திரிமலை முதல் கிழக்கே கீழ்க்கடல் வரை காவிரியின் இரு கரைகளிலும் எண்ணற்ற சிவாலயங்களைக் கட்டுவித்தான் ஆதித்தன் என்று சுந்தர சோழன் காலத்து அன்பில் செப்பேடுகள் கூறுகின்றன. ஆதித்தன் காலத்தில் மண்டளிகள் பல கற்றளிகளாக மாற்றியமைக்கப்பட்டன என்றும் இவன் காலத்தில் சுமார் 50 கோயில்கள் வரை கட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருதப்படுகின்றது.

கல்வெட்டு ஆதாரங்கள் பலம் மிக்க பல்லவ மன்னன் அபராஜிதனைத் தோற்கடித்து, அவனது ஆட்சியைக் கைப்பற்றினான் என்று திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன. கோதண்டராமன் என்னும் சிறப்புப் பெயரை இவனுக்கு இடுவதோடு, ஒரு உயர்ந்த யானையின்மீது அமர்ந்திருந்த பல்லவமன்னன் மீது பாய்ந்து அவனைக் கொன்றான் என்றும் கன்னியாக்குமரிக் கல்வெட்டு கூறுகிறது.

தில்லைஸ்தானம் என்னுமிடத்திலுள்ள ஒரு கல்வெட்டு இராஜகேசரி தன் இராஜ்ஜியத்தை, தொண்டைநாடு வரை பரவச்செய்தான் என தெளிவாகக் கூறுகிறது. இதிலிருந்து ஆதித்தன் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றி அதன்மூலம் பல்லவர்களின் ஆட்சியை ஒரு முடிவிற்கு கொண்டுவந்ததோடு, சோழ இராச்சியத்தை இராஷ்டிரகூடர்களின் எல்லைவரை பரப்பினான் என்றே கூற வேண்டும். இதை வைத்து இவன் கி.பி. 890-ல் தான் பல்லவர்களைத் தோல்வியுறச்செய்து, அந்நாட்டைக் கைப்பற்றியிருத்தல் வேண்டும்.

புதிதாகக் கைப்பற்றப்பட்ட தொண்டை மண்டலப் பகுதியில் அமைதியை ஏற்படுத்த சில ஆண்டுகள் தேவைப்பட்டதோடு, பல புதிய படையெடுப்புக்களுக்கும் காரணமாயிற்று. இவ்வெற்றிகளில் கங்க மன்னன் உதவியிருக்கக்கூடும் என்றும் தெரிகிறது, இது எவ்வாறு இருப்பினும் விரைவிலேயே கங்கமன்னன், ஆதித்தன் தலைமையை ஏற்றான். தஞ்சாவூர் பட்டணத்தில் முடி சூட்டிக்கொண்ட பின் ஆதித்தன் கொங்கு தேசத்திற்கு வந்து, இந்நாட்டை வெற்றிகொண்டு, தன்னாட்டுடன் சேர்த்து ஆட்சிசெய்தான் என்று கொங்கு தேச ராஜாக்கள் என்னும் குறிப்பேடு கூறுகிறது. இவன் காலத்தில் வாழ்ந்த சேரமன்னன் தாணுரவி என்பவனுடன் ஆதித்தன் நெருங்கிய உறவு கொண்டிருந்தான் என்று தில்லைத் தானத்திலுள்ள ஆண்டு குறிப்பிடாத ஒரு கல்வெட்டு கூறுகிறது.

அரசியல் ஆற்றலும் போர்த்திறமும் மிக்க இவன் சோழநாட்டு எல்லைகளை விரிவாக்கினான். கி.பி.880-ல் பல்லவர்களிடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டியின் காரணமாக நிருபத்துங்க பல்லவனுக்கும் பல்லவன் அபராசிதனுக்கும் இடையே திருப்புறம்பியம் என்னும் ஊரில் போர் நிகழ்ந்தது. இப்போரில் அபராசிதனுக்கு முதலாம் ஆதித்தன், கங்க மன்னன் பிருதிவிபதி ஆகியோர் துணை நின்றனர்.

நிருபத்துங்க பல்லவனுக்கு பாண்டியன் வரகுணன் துணை நின்றான். இப்போரில் அபராசிதன் வெற்றி பெற்றான். பிருதிவிபதி மரணமடைந்தான். தோல்வியுற்ற பாண்டியன் தன் நாடு திரும்பினான். திருப்புறம்பியப் போர் சோழநாட்டின் எதிர்காலத்திற்குப் பெருந் திருப்பமாக அமைந்தது. இப்போரில் அபராசிதனுக்கு எதிராக நின்ற பாண்டியர்கள் , வடக்குப் பாண்டி நாட்டிலிருந்து துரத்தப்பட்டனர். இவற்றை ஆதித்தன் கைப்பற்றினான்.

அபராசிதனும் சோழர்களுக்கு சில ஊர்களைப் பரிசாக அளித்தான். அக்காலத்தில் சோழ நாட்டின் பெரும்பகுதி பல்லவர் வசம் இருந்தது. மனம் கொதித்து அதை மீட்கும் முயற்சிகளில் ஆதித்தன் ஈடுபட்டான். பல்லவர் மீதும் படையெடுத்த ஆதித்த சோழன் அபராசித பல்லவனைக் கொன்று தொண்டை மண்டலத்தையும் சோழ நாட்டுடன் இணைத்தான். இவனுடைய அதிகாரம் கங்கர் நாட்டிலும், கொங்கு நாட்டிலும் பரவியிருந்தது. சேர நாட்டுடனும், இராட்டிரகூடருடனும், வேறு அயல் நாடுகளுடனும் நட்புறவைப் பேணிவந்த அவன் சோழர்களை மீண்டும் உயர்நிலைக்குக் கொண்டு வந்தான்.

மறைவு சித்தூர் மாவட்டம் காளத்தியின் அருகேயுள்ள தொண்டைமானாடு என்னுமிடத்தில் ஆதித்தன் இறந்தான். இவனது மகன் பராந்தகன், இறந்த இடத்தில் கோதண்ட இராமேசுவரம் என்றும் ஆதித்தீசுவரம் என்றும் அழைக்கப்பட்ட கோயிலை எடுப்பித்தான். பராந்தகனைத்தவிர, ஆதித்தனுக்கு கன்னரதேவர் என்ற மற்றொரு மகனும் இருந்தான்.

இறந்தும் இறந்திலான் ஆதித்த சோழன் கண்ணப்ப நாயனார் வரலாற்றுடன் தொடர்பு கொண்ட புண்ணியத்தலம் காளஹஸ்தி அதன் அருகில் உள்ளது தொண்டைமான் ஆற்றூர் என்ற ஊர். இப்பொழுது ஆந்திர தேசத்தில் இருக்கிறது சோழர்காலத்தில் கட்டிய கோதண்ட ராமேச்வரம் என்னும் ஆதித்தேச்வரர் கோயில் அவ்வூரில் இருக்கிறது. வரலாறு படைத்த ஒரு மிகப்பெரிய சோழப் பேரரசனுடய கோயில் இது. இதன் வரலாறு மிகவும் சுவயானது.

தமிழ்நாட்டின் வடபகுதியை மிகப் பெரும் பேரரசாக 500 ஆண்டுகள் ஆண்டவர்கள் பல்லவர்கள். அந்தப் பல்லவப் பேரரசுக்கு இன்றைக்கு சரியாக 1100 ஆண்டுகளுக்கு முன்னர் முற்றுப்புள்ளி வைத்தவன் அந்த சோழப் பேரரசன். அவனுக்கு ஆதித்த சோழன் என்று பெயர். அவன் ஏறக்குறைய கி.பி. 887ல் பல்லவ அரசன் அபராஜிதன் என்பவனை சண்டையில் வீழ்த்தி தொண்டை நாட்டை அதாவது காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு முதலிய பகுதிகளைக் கைப்பற்றினான். அதனால் அவன் "தொண்டை நாடு பாவிய சோழன்" என்று பட்டம் பூண்டான். அதோடு தமிழ் நாட்டில் பல்லவர் ஆட்சி முடிந்துவிட்டது.

ஆதித்த சோழன் கொங்கு நாட்டையும் வென்று அங்கிருந்து ஏராளமான பொன் கொண்டு வந்து தில்லை நடராஜப் பெருமான் கோயிலுக்கு பொன் வேய்ந்தான். சோழ சாம்ராஜ்யத்தை தோற்றிவித்த விஜயாலய சோழனுடைய அருமை மைந்தன் அவன். சிறந்த சிவபக்தன். காவிரியாறு தொடங்கும் சஹ்யமலையிலிருந்து பூம்புகார் வரையிலும் காவிரியின் இருகரையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கற்கோயிலை சிவபெருமானுக்கு எடுத்தவன். அவன் எடுத்த எழிலே உருவான பல கோயில்கள் இன்றும் சோழ நாட்டில் இருக்கின்றன. அவன் காலத்து சிற்பங்களும் செப்புத் திருமேனிகளும் உன்னதக்கலைச் சிகரங்களாகத் திகழ்கின்றன. இந்தப் புகழ்வாய்ந்த ஆதித்த சோழன் தொண்டைமானாற்றூரில் இறந்து போனான்.

அந்த ஆதித்த சோழனுக்கு எடுக்கப்பட்ட சமாதிக கோயில்தான் இது. அக்காலத்தில் சாமாதிக் கோயிலை "பள்ளிப்படை" என்று கூறுவர். அரசர் இறந்தால் அவரை ஈமத்தீயிலோ அல்லது குழியிலோ இடுதலை பள்ளிப் படுத்தல் என்று கூறுவர். ஆதலின் அங்கு எடுத்த கோயிலை பள்ளிப்படை என்பார்கள். ஆதித்த சோழனுடைய சமாதிலிங்கத்தை இக்கோயில் கருப்ப கிருஹத்தில் இன்றும் காண்கிறோம். ஆதித்த சோழனின் மகன் பராந்தக சோழனுடைய கல்வெட்டு இக்கோயிலின் அடிப்பகுதியில் உள்ளது. அதிலிருந்து இக்கோயிலைப் பற்றி பல செய்திகளை அறிகிறோம்.

ஆதித்த சோழன் புரட்டாசி மாதம் கேட்டையன்று இறந்திருக்கிறான். அதனால் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கேட்டை தொடங்கி ஏழுநாள் உத்ஸவம் நடத்துவதற்கு இக்கோயிலில் ஏற்பாடு செய்யபட்டது. அத்துடன் அவன் பிறந்த சதய நக்ஷத்திரம் அன்று ஒரு நாள் விழா நடத்த வகை செய்யப்பட்டது. கி.பி. 940ல் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பொழுது இந்த கோயில் வாகீஸ்வரபண்டிதர் என்பவரின் பார்வையிலிருந்தது. அவர் ஒரு மகாவிரதி. அவர் தான் இந்த விழா நடத்த 105 கழஞ்சு பொன்னும் 4000 காடி நெல்லும் கொடுத்தார். இதிலிருந்து வரும் வட்டியாக ஆண்டுதோறும் ஆயிரம் காடி நெல் இக்கோயிலுக்கு அளக்கவேண்டும். இதை கொண்டு இந்த ஏழு நாள் விழாவில் ஒவ்வொரு நாளும் ஆயிரம் பேருக்கு உணவு கொடுக்கவேண்டும். இந்த ஆயிரம் பேரில் 500 பேர் எல்லா சமயத்தையும் சேர்ந்த அடியார்களாக இருக்கவேண்டும். "பக்தர்களான பல சமயத்து அந்நூற்றவர்" என்று கல்வெட்டு கூறுகிறது. பிராமணர் 300 பேரும் மற்ற 200 பேர் தபஸ்விகளாகவும் இருக்கவேண்டும். "தபஸ்விகளில் மகாவிரதிகள் உட்பட ஆறுசமயத்து தபஸ்விகள் இருநூற்றவர்" என்று கல்வெட்டு கூறுகிறது. ஆறு சமயத்து தபஸ்விகள் என்பது சைவ சமயத்தில் இருந்த ஆறு உட்பிரிவுகளைக் குறிக்கும். இவற்றை அகச் சமயம் ஆறு என நம் பண்டைய நூல்கள் கூறும். சைவம், பாசுபதம், காளாமுகம், மஹாவிரதம், வாமம், பைரவம் என்று இந்த உட்பிரிவுகளைக் கூறுகிறார்கள். ஆறு சமயம் என்று கல்வெட்டு கூறுவதால் அன்றே இவ்வகைச் சமயங்கள் தமிழகத்தில் இருந்தன என்று அறிகிறோம்.

இக் கல்வெட்டின் மூலம் மேலும் பல செய்திகள் அறியமுடிகிறது. இவ்விழாவுக்காக ஒதுக்கப்பட்ட நெல்லில் இருந்து உண்பதற்கு இலை இடுவான், நீராட்டுவான், கலமிடும் குசவன், பூவிடும் மாலைக்காரன், விறகிடுவான் முதலியோருக்கு நெல் அளந்தனர். இவ்வூரில் இந்திர விழா நடத்தப்பட்டது. இங்கு ஒரு கல்விச்சாலையும் இருந்தது. அதற்கு நெல் ஆண்டுதோறும் அளந்தனர். இக்கோயிலில் நாட்டிய அரங்கம் இருந்தது. அதற்கு உடனுக்குடன் வேண்டும்போது பழுது பார்க்க தச்சனுக்கு நெல் கொடுத்தனர். இந்த அரங்கத்தில் இவ்விழாவை ஒட்டி நாட்டிய நாடகங்கள் கூத்துகள் நடத்தப்பட்டன. இங்கு கூத்தாடினார்க்கும் பாடினார்க்கும் நெல் கொடுக்கப்பட்டது.

இந்த தர்மத்தை இக்கோயிலில் இருந்த மகாவிரதிகளும் பந்மாகேஸ்வரக் கண்காணியும் காவிரிப்பாக்கத்து கோயில் பெருமக்களும் காத்துத் தரவேண்டும் என்று இக்கல்வெட்டு கூறுகிறது. இக்கோயில் மகாவிரதிகள் கீழ் இருந்தது. இது சமாதிக் கோயில் ஆதலால் மகாவிரதிகள் இங்கு இருந்திருக்கிறார்கள்.

சைவ சமயக் கோயில் ஆனாலும் எல்லாச் சமயத்தையும் சேர்ந்த 500 பக்தர்களுக்கு திருவிழா ஏழு நாட்களுக்கும் உணவு கொடுக்கவேண்டும் என்னும் கட்டளை அன்றைய பரந்த சமய நோக்கை குறிக்கிறதல்லவா?

இப்போழுதுள்ள கோயிலின் லிங்கமும் கோயில் அடிப்பகுதியும் மட்டுமே தொன்மையானவை. மேல் பகுதி முன்னர் செங்கல்லால் கட்டப்பட்டிருக்கும். பிற்காலத்தில் அது கருங்கல்லால் மாற்றப்பட்டிருக்கிறது. இறந்து போனவர்களுக்கு கோயில் கட்டும் வழக்கம் நம் நாட்டில் இல்லை என்று சிலர் கருதுகிறார்கள். அது சரியான கருத்து இல்லை என்பதற்கு இக்கோயிலே சான்று. விமானம் கோபுரம் லிங்கம் நந்தி முதலிய எல்லாம் நிறைந்த பெருங்கோயிலாக ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் இது வழிபாட்டில் இருக்கிறது. ஏன் தெரியுமா? நம் முன்னோர் இறந்திடில் தெய்வத்தோடு ஒன்றி தெய்வமாகவே நிற்பர் என்பது நமது தத்துவம். நம்பிக்கையும் கூட. இறந்து ஆயிரத்து நூறு ஆண்டுகளாகியும் என்றும் தெய்வமாக இங்கு நிற்கிறான் தமிழகத்தில் வரலாறு படைத்த பெரும் சோழச் சக்கரவர்த்தி. ஆதித்த சோழன் இறந்தும் இறந்திலான் முதலாம் பராந்தக சோழன் கி.பி.907-955 Picture முதலாம் பராந்தக சோழன் கி.பி.907-955

ஆதித்த சோழனின் மகனாவான். கி.பி 907 இல் முதலாம் ஆதித்த சோழனை அடுத்து அரசனானவன் பராந்தக சோழன். இக்காலத்தில் சோழப் பேரரசு வடக்கே காளத்தி முதல் தெற்கே காவிரி வரை பரவியிருந்தது. இவனும் போர் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டான். பாண்டியர்களுடன் போரிட்டு மதுரையைக் கைப்பற்றிக் கன்னியாகுமரி வரை பரந்த பாண்டி நாட்டை சோழநாட்டுடன் இணைத்துக் கொண்டான்.

இந்திய வரலாற்றில் முதன் முதலில் குடியுரிமை மற்றும் வாக்குச்சீட்டு ஆகியவற்றை அறிமுகம் செய்தவன் இவனே ஆவான். இவன் காலத்தில் குடவோலை முறையில் கிராம சபை உறுப்பினர், கிராம சபைகளைத் தேர்ந்தெடுக்கும் முறை, அமைக்கும் முறை, கிராம ஆட்சிமுறை பற்றிய விவரங்களை உத்திரமேரூரிலும் வேறு சில ஊர்களிலும் உள்ள கல்வெட்டுகள் புலப்படுத்துகின்றன. இவன் காலத்துக்குப் பின்னும் சோழர் ஆட்சி 300 ஆண்டுகள் வரை தொடர்ந்தது.

மதுரையும், ஈளமும் கொண்ட கோப்பரகேசரி என்ற பட்டம் பெற்றவன் சோழ பேரரசக்கு அஸ்திவாரம் அமைத்தவன் . தில்லைச் சிற்றம்பலத்துக்கு பொன் கூறை வேய்ந்தவன், சோழ சிகாமணி, சூரசிகாமணி , வீர நாராயணன் என்னும் சிறப்புப் பெயரைம் பெற்றவன். இவன் பெயரில் தான் வீராணம் ஏறியுள்ளது. இவனுக்கு 11 மனைவியர் 5 மகன்கள் 1. இராஜாதித்தன், 2. கண்டராதித்தன், 3.அரிகுலகேசரி, 4. உத்தமசீலி, 5. அரிந்திகை

களப்பிரரை முறியடித்து கிபி 575 இல் ஏற்படுத்தப்பட்ட பாண்டிய அரசு இவன் காலத்தில் 915 இல் முறியடிக்கப்பட்டது . அச் சமயத்தில் பாண்டி நாட்டை ஆண்டவன் 2ம் இராசசிம்மன் ஆவான்.பல ஆண்டுகள் இடம் பெற்ற இப்போரில் இலங்கை மன்னன் 5ம் காசியப்பன்(913-923) பாண்டியனுக்கு ஆதரவாக போரிட்டான் .முடிவில் பராந்தகன் மதுரையை கைக்கொண்டான்.போர் முடிவில் பாண்டி மன்னன் இலங்கை தப்பினான். பாண்டிய அரசை கைப்பற்றியதே இவன் காலத்தில் நிகழ்த்த முக்கிய சம்பவமாகும்.தன் தந்தை கட்டாது விட்ட பல கோயில்களை கட்டினான்.

தஞ்சையையும் உறையூரையும் கொண்ட சிறு பகுதியைச் சோழர்கள், பல்லவர்களின் தலைமையின் கீழேயே ஆட்சி செய்து வந்தனர். ஆனால் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே சோழர்களின் பலம் பல மடங்கு பெருகிற்று. இந்நிலைக்கு மிக முக்கியமான காரணமாயிருந்தவன் ஒப்பற்ற வீரனும், இராஜதந்திரியுமான முதலாம் ஆதித்தனே ஆவான்.

இவனுக்கு பிறகு அரியணைக்கு வந்த பராந்தகன் என்றழைக்கப்படும் முதலாம் ஆதித்தனின் மகன், சிறிது காலத்திலேயே பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். தனது மூன்றாம் ஆட்சி ஆண்டிலேயே "மதுரை கொண்ட" என்ற விருதை அவன் பெற்றான். இவன் ஆட்சிக்கு வந்தபொழுது, சோழநாடு வடக்கில் மைசூர் பீடபூமி நீங்கலாக, தெற்கே காவிரிவரையிலான பகுதியும், மேற்குத் கடற்கரையோரமாக ஒரு பகுதியும், சென்னை, காளத்தி வரையிலும் பரவியிருந்தது. கங்க மன்னர்கள் சோழரது அதிகாரத்திற்கு உட்பட்ட நண்பராகவும் சேரமன்னன், நெருங்கிய நண்பனாகவும் கருதப்பட்டனர்.

இலங்கையின் வரலாற்றுப் பதிவான மகா வமிசம் கூறும் குறிப்புகளிலிருந்து(மஹாவம்சா சி.வி. பாகம், 52, பக். 70) சோழ-பாண்டியப் போரில் மூன்று கட்டங்களைப்பற்றி அறியலாம். முதல் கட்டத்தில் பராந்தகனிடம் பாண்டிய மன்னன் தோல்வியுற்றான். இரண்டாம் கட்டத்தில் பாண்டிய மன்னன், ஈழ மன்னனது உதவியைக் கோரிப் பெற்று, சோழப்படையைத் தாக்கினான். பாண்டிய ஈழத்துப்படைகள் சோழப்படையிடம் பின்வாங்கின. ஈழப்படைத்தலைவன் சோழரை வெல்ல மீண்டும் முயன்றது மூன்றாம் கட்டமாகும்.

ஈழப்போர் தான் புதியதாக வெற்றி கொண்ட பகுதிகளைத் தன் அதிகாரத்தை ஏற்குமாறு செய்யும் பணியில் பெரும்பாலும் முடிந்துவிட்டது என்று எண்ணிய பராந்தகன், தன் வெற்றியை மதுரையில் கொண்டாடும் பொருட்டு, பாண்டிய மன்னனின் முடியையும், மற்ற சின்னங்களையும் தானே அணிந்து கொள்ள எண்ணினான். ஆனால் இவையனைத்தும் இராஜசிம்மனால்(பாண்டிய மன்னன்) ஈழத்து மன்னனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததால் பராந்தகன் நான்காம் உதயன் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 945 – 53) இவற்றைத் திரும்பிப் பெறமுயன்று இம்முயற்சியில் படுதோல்வியடைந்தான்.

இவை பராந்தகனின் ஆட்சிக் காலத்தின் கடைசி ஆண்டுகளைப்பற்றியதாகவே இருக்க வேண்டும். மறக்கப்படாமலிருந்த இவனது தோல்வி, பல ஆண்டுகளுக்கு பிறகு, இவனது பலம் வாய்ந்த வழித்தோன்றலான முதலாம் இராஜேந்திரனால் மாற்றப்பட்டது(அதாவது பழிவாங்கப்பட்டது).

பராந்தகனின் நண்பர்கள் கேரள மன்னன், கீழப்பழுவூர்த் தலைவர்களான பழுவேட்டரையர் ஆகியோரைத்தவிர, கொடும்பாளூரைச் சேர்ந்த வேளிர் தலைவரும், பாண்டியருக்கான போர்களில் பராந்தகனுக்காக உதவி செய்தனர்.

கொடும்பாளூர் வமிசத்தைச் சேர்ந்த தென்னவன் இளங்கே-வேளிர் என்பவரின் மகள் பூதி ஆதிக்க பிடாரி என்பவளைப் பராந்தகனின் மக்களில் ஒருவனான அரிகுலகேசரி முன்பே திருமணம் செய்திருந்தான்.

ஆட்சிக்காலம் முதலாம் பராந்தகன் 48 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்பதை அவனது 48-ம் ஆண்டின் கல்வெட்டிலிருந்து அறியலாம். இராஷ்டிரகூட மன்னன் இரண்டாம் கிருஷ்ணன், தன் பேரன் கன்னர தேவனைச் சோழ நாட்டின் அரியணையில் அமரச்செய்த முயற்சியை முதலாம் பராந்தகன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே முறியடித்தான். அதுமுதல் பராந்தகன் தன் ஆட்சிக்காலம் முழுவதும் வெற்றிமேல் வெற்றி பெற்று பீடுநடைப்போட்டான் தன் தந்தையின் வெற்றிகளை நிறைவேற்றும் வகையில் இவன் பாண்டியர்களஇன் சுதந்திரத்தைப் பறித்து, தன் நாட்டைத் தெற்கே கன்னியாகுமரிவரை பரவச்செய்தான். ஈழத்தின் மீதும் படையெடுத்தான், ஆனால் இம்முயற்சியில் இவனது குறிக்கோள் வெற்றியடையாததை முன்னர் பார்த்தோம். ஏனைய இடங்களில் இவன் பாணர்களை வெற்றி கொண்டதுடன் கங்க மன்னன் ஹுஸ்தி மல்லனைத் தன் அதிகாரத்திற்கு உட்படுத்தினான.

எஞ்சியிருந்த பல்லவர்களின் அதிகாரம் அடியோடு மறைந்தது, பராந்தகனின் நாடு, வடக்கே நெல்லூர் வரை பரவியது. எனினும் இவனது ஆட்சி முடிவதற்கு முன், வட மேற்கிலிருந்து மிகுந்த படைபலத்துடன் மூன்றாம் கிருஷ்ணன் சோழ நாட்டின் மீது படையெடுத்தான். அதன் விளைவாக நடைபெற்ற போரில் பராந்தகனின் மூத்த மகனான இராஜாதித்தன் உயிரழந்ததோடு, இதற்குப்பின் பராந்தகனும் வெகுகாலம் உயிர் வாழவில்லை. இதுமுதல் புகழ்மிக்க முதலாம் இராஜராஜன் கி.பி. 985ல் அரியணையில் அமர்ந்தது வரையிலான முப்பது ஆண்டுகள் வரையில் சோழ நாடு பெரும் இருளில் ஆழந்திருந்தது.

தக்கோலப்போர் மற்றும் பிரதிவீபதியின் மரணம் சுமார் கி.பி. 940ல் முதற் பராந்தகனின் நம்பிக்கையுடைய நண்பனும் அவன் ஆட்சிக்குட்பட்டவனுமான கங்கமன்னன் இரண்டாம் பிரதிவீபதி மரணம் அடைந்தான். இதுவே கங்க நாட்டிலிருந்து, பராந்தகனுக்கு ஏற்பட்ட தொல்லைகளின் தொடக்கமாக இருந்தது, பிரதிவீபதி தன் வாழ்நாளின் இறுதியில், ஒரே மகன் விக்கியண்ணனை இழந்திருந்தான். இரண்டாம் பூதகன் என்பவன் இராஷ்டிரகூட இளவரசியும் மூன்றாம் கிருஷ்ணனின் சகோதரியுமான ரேவகா என்பவளை மணந்தான். இவன் கங்க நாட்டின் தனிப்பெரும் தலைவனாக இப்போது விளங்கினான். சோழர்களின் வலிமையைக்கண்டு அஞ்சிய வாணர்களும் வைதும்பரர்களும் ஏற்கனவே கிருஷ்ணனுடைய பாதுகாப்பைக் கோரியிருந்ததோடு, சோழருக்கு எதிராகவும் அவனது உதவியைப் பெற விழைந்தனர்.

இச்சூழ்நிலையில், அப்போதுதான் தன் நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்புகள் அனைத்தையும் அழித்துப் புகழேணியில் இருந்த கிருஷ்ணன்(இராஷ்டிரகூட மன்னன்) தெற்கு நோக்கித் தன் நாட்டை மேலும் விரிக்கக்கூடிய அரியவாய்ப்பை நழுவவிட விரும்பாமல் சோழருக்கு எதிராகப் படையெடுத்தான்.

இவ்வரசன் காலத்தில் மாதவர் என்ற வேதியர் ருக்வேத பாஷ்யம் என்னும் நூலை எழுதினார். இந்நூலில் ஜகதேகவீரன் என இவ்வரசனைக் குறிப்பிடுகின்றார் [1]. இச்சுவடி இன்றும் சரசுவதி மகாலில் உள்ளது. மேலும் பல வேத நூல்களும் சரசுவதி மகால் நூலகத்தில் சேர்க்கப்பட்டன. திருவெற்றியூரின் கோயில் கல்வெட்டில் உள்ள குறிப்பின்படி இவ்வரசன் தன் காலத்தில் தேவாரம் திருவெம்பாவை பாடல்களைக் கோயில்களில் பாட அறக்கட்டளைகள் ஏற்படுத்தினான் எனத் தெரிகின்றது.

மேற்கோள். ஆ.குணசேகரன், சரசுவதி மகால் நூலகம், சைவ சித்தாந்த பதிப்புக் கழகம் கண்டராதித்த சோழன் கி.பி.950-957 Picture திருநாகேச்சுரம் கண்டராதித்த சோழன் கி.பி.950-957

கண்டராதித்த சோழன், பராந்தக சோழனின் இரண்டாவது மகன் மழவரையர் குலப்புதல்வி செம்பியன் மாதேவி சிவஞா செல்வரான கண்டராதித்தரின் மனைவி இவள் மகன் தான் மதுராந்தக தேவன் சிறிய பளுவேட்டரையரின் மருகன்


பராந்தக சோழனின் இயலாமையாலோ வேறு காரணங்களினாலோ அவன் உயிருடன் இருந்தபோதே அவனது தம்பியான கண்டராதித்தன் கி.பி 950 -இல் சோழ மன்னனாகப் பட்டம் சூட்டிக்கொண்டான். முதலாம் பராந்தக சோழன் காலத்திலேயே சோழநாட்டின் வடக்கே இராஷ்டிரகூடர்கள் பலமடைந்து இருந்தனர். கண்டராதித்தரின் ஆட்சியின்போது அவர்கள் தஞ்சைக்கு முன்னேறி அதனைத் தாக்கி அழித்தனர். இவனது ஆட்சியும் குறுகிய காலமே நிலைத்தது. இவன் காலத்தில், இராட்டிரகூடர் சோழ நாட்டின் வடபகுதிகளைக் கைப்பற்றிக் கொள்ள, பாண்டியர்களும் சோழர்களின் கட்டுப்பாட்டை ஏற்காது விட்டனர்.

சோழர்கள் பலமிழந்திருந்த இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அதுவரை சோழருக்குக் கீழ்ப்பட்டுத் திறை செலுத்தி வந்த பாண்டிய நாடும் சோழர் மேலாதிக்கத்தை உதறினர். பலமுறை முயன்றும் சோழநாட்டின் எல்லைகள் குறுகுவதைக் கண்டராதித்தரால் தடுக்க முடியவில்லை.

சிவ பக்தனான கண்டராதித்தன் பாடிய பாடல்கள் ஒன்பதாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன. இவன் மனைவி செம்பியன் மாதேவி எடுத்த கோயில்கள் சோழ நாட்டில் இன்னும் பல உள. இவன் காலத்தில் தொண்டை மண்டலம் முழுவதும் இராட்டிரகூடர்கள் ஆட்சிக்குட்பட்டிருந்தது. கண்டராதித்தரின் மறைவுக்குப் பின்னர் அவரது தம்பியான அரிஞ்சய சோழன் பட்டத்துக்கு வந்தான். அரிஞ்சய சோழன் கி.பி.956-957 Picture அரிஞ்சயன் சோழன். கி.பி. 956-957

இராசாதித்தன் மறைவுக்குப் பின் அரிஞ்சயசோழன் பரகேசரி எனும் பட்டம் கொண்டு சோழநாட்டு சக்கரவர்த்தியாக முடி சூட்டப்பட்டான். இவன் ப்ராந்தக சோழனுக்கும் பழுவேட்டரையர் கந்தன் அமுதனின் மகள் அருள்மொழி நங்கைக்கும் பிறந்தவனாவான். சோழர் வரலாற்றில் முதன் முதலாய் ஒரு மன்னனின் மூன்று மகன்களும் இளவரசு பட்டம் கொண்டதையும் மூவரும் அரசர்களானதையும் இதன் மூலம் அறியமுடிகிறது.

இவன் முதலாம் பராந்தக சோழன், கண்டராதித்த சோழன் ஆகியோருடைய தம்பியாவான். வடக்கிலும், தெற்கிலும் சோழ நாடு சுருங்கிப் போன ஒரு கால கட்டத்தில் பட்டத்துக்கு வந்த இவன், சோழ நாட்டின் வடக்குப் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த இராட்டிர கூடர்களை அகற்றுவதற்கு முயன்றான். இம் முயற்சி தோல்வியின் முடிந்து, ஆற்றூர் என்னுமிடத்தில் இறந்தான்.

அரிஞ்சய சோழனுக்கு வீமன் குந்தவை ( கீழச்சாளுக்கிய மன்னன் இரண்டாம் வீமனின் மகள்) ஆதித்தன் கோதைபிராட்டி (சேரமன்னனின் மகள்) கல்யாணி ( வைதும்பராயர் மகள் அன்பிற்செப்பேடுகள் குறிப்பிடுகின்றன) மற்றும் பூதி ஆதித்தபிடாரி ( கொடும்பாளூர் மன்னன் பூதி விக்ரம கேசரியாகிய தென்னவன் இளங்கோவன் மகள்) என்று நான்கு மனைவிகள் இருந்தனர். அரசி கள்யாணியின்பாற் பராந்தகன் சுந்தர சோழன் ன்ற மகனும் அரிஞ்சிகைபிராட்டி ( வாணர்குல வேந்தன் மனைவி) என்ற மகளுமிருந்துள்ளதாக அன்பிற்செப்பேடுகள் மூலம் அறியமுடிகிறது.

அரிஞ்சய சோழன் " படைவீடு" அமைத்து தங்கி இருந்தபோது, இறந்துள்ளார். எனவே அவரை, "ஆற்றூர் துஞ்சின தேவர்" என்றும், "ஆற்றூர் துஞ்சின பெருமாள்" என்றும் வரலாற்றில் குறித்து வருகிறார்கள் !

( பாடி என்றால், படைமுகாம்,படைகள் தங்கியுள்ள வீடு என்று பொருளாகும்.) அரிஞ்சய சோழன் படைவீடு அமைத்து தங்கி இருந்த இடமான மேல்பாடியில் இறந்தார். மேல்படியில் அரிஞ்சய சோழன் அடக்கம் செய்யப்பட்டார். அவர் இறந்த இடத்திலேயே அவரது நினைவாக, அரிஞ்சய சோழனின் பேரனாகிய இராசராச சோழன் தன் பாட்டனை நினைவு கூறும் பொருட்டு வடாஅற்காடு திருவல்லத்தை அடுத்த மேற்பாடி என்ற ஊரில் அரிஞ்சயேசுரம் எனும் கோயில் ("அவனீச்வரம் கோயில்")ஒன்றை கட்டி அதற்கு நிவந்தங்கள் பல்வும் அளித்துள்ளான். இந்நாளில் அக்கோயில் சோழேச்சுரம் என்றும் "அவனீச்வரம் கோயில்" என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

அவனீஷ்வர் கோயிலில் குந்தவை தங்கியிருந்து தியானத்தில் இருந்தார் எனவும் அவரது இத செயலின் விளைவாக கோயிலில் உள்ள இறைவிக்கு, "தபஸ் இருந்த தேவி" என்று பெயர் ஏற்பட்டது என்பதும் விளங்குகிறது!

இப்போது இந்த நிகழ்ச்சியை மறைக்கும் விதமாககோயில் இறைவியின் பெயரை "தபஷ்கிருதா தேவி" என்று மாற்றி எழுதி உள்ளார்கள்!

மேல்பாடி அவனீஷ்வரம் கோயிலில், ராஜராஜன் தனது 21 -ஆவது ஆட்சியாண்டு ( கி.பி.1006 -முதல்) குந்தவையின் பிறந்த நாளான, அவிட்ட நட்சத்திர நாளில் வெகு விமர்சையாக விழா எடுத்து,கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான் என்பதை அவனீஷ்வரம் கோயிலில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது!

அரிஞ்சய சோழனின் நினைவாக கட்டப்பட்ட பள்ளிப்படைகோயிலான அவனீச்வரம் கோயில், தொல்லியல் துறையினரின் நிர்வாகத்தில் கீழ் இன்று இருந்துவருகிறது!

956 ஆன் ஆண்டளவில் அரசனான இவனது ஆட்சி மிகக் குறுகிய காலமான சில மாதங்கள் மட்டுமே நிலைத்திருந்தது. இவனைத் தொடர்ந்து சுந்தர சோழன் அரியணையில் அமர்ந்தான். சுந்தர சோழன் கி.பி.957-973 Picture சுந்தரச் சோழன் 2ம் பராந்தகன். அரிஞ்சய சோழனின் புதல்வன். மூத்தமகன் ஆதித்த கரிகாலன் வடக்கே காஞ்சியில் அரச பிரதிநிதியாக விளங்கியவன். மாதண்ட நாயகன்(பிரதம சேனாதிபதி)

கடைசி புதல்வன் அருள்மொழிவர்மன் (பிற்காலத்தில் ராஜராஜன்) இலங்கைத்தீவில் போர்புரிந்து கொண்டிருந்தான். இருவருக்கும் நடுவில் பிறந்தவர் குந்தவை தேவி.

சோழர்களில் பலம் வாய்ந்த அரசர்களில் ஒருவனாக விளங்கியவன் சுந்தர சோழன். இவன் கி.பி 957 முதல் 973 வரை 16 ஆண்டுகள் சோழ நாட்டை ஆண்டான். இவன் முதலாம் பராந்தகச் சோழனின் பேரனும், அரிஞ்சய சோழனின் புதல்வனும் ஆவான். தனது முன்னோர் காலத்தில் இழந்த நிலப்பகுதிகளை மீட்டுச் சோழ நாட்டை வலிமையுள்ள நாடாக மாற்றியவன் இவன். தெற்கே திறை செலுத்த மறுத்துவந்த பாண்டிநாட்டின் மீது படை நடத்தி வெற்றிகண்டான். வடக்கிலும் இராஷ்டிரகூடர்களிடம் இழந்த பகுதிகளைக் கைப்பற்றும் பொருட்டு அவர்களுடன் போரிட்டு தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றி மீண்டும் சோழ நாட்டின் ஆளுகைக்கு உட்படுத்தினான்.

எனினும்,பகைவர் சூழ்ச்சியால் பட்டத்து இளவரசனான, சுந்தர சோழனின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டான். ஆதித்த கரிகாலனின் பேரிழப்பால், சுந்தரசோழன் தன் இறுதிநாட்களில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். 'பாண்டிய தலைகொண்ட கரிகாலச் சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கும் பணியினை மன்னன் கட்டளைப்படி திருவீர நாராயண சதுர்வேத மங்கலச் சபை மேற்கொண்டதாக, இராசகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டு கூறுகிறது. இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் கொலை செய்யப்பட்டான் என்பது இந்தக் கல்வெட்டால் தெளிவாகிறது. அன்பில் எனும் ஊரைச் சேர்ந்த அநிருத்த பிரமாதிராசன் என்பவன் இவனுக்கு அமைச்சராய் இருந்தான். கருணாகர மங்கலம் என்ற ஊரினை இறையிலியாக அவனுக்கு அளித்த செப்பேடுகளே அன்பில் செப்பேடுகள் ஆகும்.

கி.பி 969 ஆம் ஆண்டில் சுந்தர சோழனின் மூத்த மகனும் வீரனுமான, இரண்டாம் ஆதித்தன் சந்தேகத்துக்கு உரிய முறையில் எதிர்பாராத சூழ்நிலையில் கொல்லப்பட்டான். இதன் காரணமாக இம்மன்னன் வடபகுதியில் தங்கி, தன் நாட்டின் நிலவரங்களை அயராது கவனித்தான் என்றும் அனுமானிக்கலாம்.

ஆதித்த கரிகாலனின் பேரிழப்பால் துயருற்ற மன்னன் பாரிச நோய் தாக்கி நோயுற்று காஞ்சிபுரத்தில் பொன்னாலான தன்னுடைய மாளிகையில் சுந்தரசோழன் கி.பி 973 ல் காலமானான். அதனால் அதன் பிறகு, ‘பொன் மாளிகைத் துஞ்சின தேவன்’ என்றே அழைக்கப்பட்டான்.

மலையமான்களின் வமிசத்து 'வானவன் மாதேவி' என்ற இவன் மனைவி, கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறினாள். இம்மன்னனுடைய சிலை ஒன்று இவள் மகள் 'குந்தவையால்' தஞ்சைக்கோயிலில் வைக்கப்பட்டது.

தலைசிறந்த தமிழ் புதினங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் இவருடைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை தழுவியே எழுதப்பட்டுள்ளது.

சுந்தர சோழனின் மகன் அருள்மொழிவர்மன் பின்னாளில் ராஜராஜ சோழன் என்ற பெயரில் அரசபட்டம் ஏற்று மகத்தான மாமன்னனாகத் திகழ்ந்தான். ஆதித்த கரிகாலன் Picture ஆதித்த கரிகாலன் ஆதித்த கரிகாலன் சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவனான முதலாம் இராஜராஜனின் தமையனும் சுந்தர சோழரின் மகனுமாவான்.

ஆதித்தன் சிறுவனாய் இருந்த பொழுதே சிங்கம் யானையுடம் போரிடுவதைப் போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட செய்த கண்டராதித்தனின் முயற்சிகளைத் தகர்த்து தன்னுரிமையுடன் வாழ்ந்து வந்த [[வீரபாண்டியன்|வீரபாண்டியனுடன்] போரிட்டதாக லெய்டன் பட்டயங்கள் புகழ்கின்றன. புதுக்கோட்டையின் தென் எல்லையில் உள்ள, சேவலி மலைகளுக்குத் தெற்கேயுள்ள, சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்த கரிகாலனது வீரம் வெளிப்பட்டதோடு, வீரபாண்டியன் தலைகொண்ட என்று கூறிக்கொள்ளவும் இவனுக்கு வாய்ப்பைக் கொடுத்தது. வீரபாண்டியன் ஆதித்தனால் கொல்லப்பட்டதாகத் திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன.

இரண்டாம் ஆதித்தன் கொலை குடும்ப வாழ்வில் ஏற்பட்ட பேரிழப்பால், சுந்தரசோழன் தன் இறுதிநாட்களில் மிகவும் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான் என்றும் 'பாண்டிய தலைகொண்ட கரிகாலச்சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கும் பணியினை மன்னன் கட்டளைப்படி திருவீர நாராயண சதுர்வேத மங்கலச் சபை மேற்கொண்டதாகவும், இராஜகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டு கூறுகிறது. இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் கொலை செய்யப்பட்டான் என்பது இந்தக் கல்வெட்டால் தெளிவாகிறது. இந்த இராஜகேசரி கல்வெட்டு, சுந்தர சோழனுக்கும், ஆதித்தனின் தம்பியும் உத்தம சோழனுக்குப் பின் பட்டத்திற்கு வந்தவனான இராஜராஜ சோழனுக்கும் பொருந்தும். இரண்டாம் ஆதித்தனின் கல்வெட்டுகள் 5-ம் ஆண்டு வரை கிடைத்திருப்பதாலும், ஆதித்தன் தன் தந்தைக்கு முன்பே ஆட்சி செய்ததாகக் கூற முடியாததாலும் இக்கல்வெட்டு [[இராஜராஜ சோழன்|இராஜராஜ சோழனுடையது] என்பது தெளிவாகிறது.

உத்தம சோழன் ஆட்சி செலுத்திய பதினாறு ஆண்டுகளில் இரண்டாம் ஆதித்தனைக் கொலை செய்தவர்கள் பழிவாங்கப்படவில்லை என்பது உண்மையே. மகனை இழந்த சுந்தரசோழன், ஒன்று மனம் நொந்து இறந்தான் அல்லது தன் மகனைக் கொன்றவர்களைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைக் கண்டு மனம் வருந்தி இறந்தான்.

சூழ்நிலைகளை உற்று நோக்கும் போது உத்தமசோழனுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இல்லையென்று கூறுவதற்கில்லை. உத்தமசோழனுக்கு, அரியணை ஏற வேண்டும் என்ற ஆசை இருந்தது. மன்னர் பதவி தவிர, அதற்குக் கீழ்ப்பட்ட எப்பதவியையும் அவன் ஏற்க விரும்பவில்லை, அரச குடும்பத்தின் மூத்த கிளை என்று அவன் கருதினான். தன் ஒன்று விட்ட சகோதரனும் அவன் மக்களும் அரியணையைத் தன்னிடமிருந்து பறித்துக் கொண்டதாகக் கருதினான். தனக்கு ஆதரவாக ஆட்களைத்திரட்டி இரண்டாம் ஆதித்தனைக் கொன்று தன்னை இளவரசனாக்குமாறு சுந்தர சோழனை வற்புறுத்தினான். வேறுவழியின்றி சுந்தர சோழன் இதற்கு இசைந்தான். திருவாலங்காட்டுப் பட்டயங்களிலும் உடையார்க்குடிக் கல்வெட்டுகளிலும் காணப்படும் குறிப்புக்களை இணைத்துபார்க்கும் பொழுது இந்த நிகழ்ச்சிகள் உண்மையாக இருக்கக்கூடும் என்பது புலனாகிறது.

திருவாலங்காட்டுச் செப்பேடுகள், விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான்(காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன்] அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான் என்று தெரிவிக்கின்றன. இரண்டாம் ஆதித்தன் பற்றிய வரலாற்று சர்ச்சை இரண்டாம் ஆதித்தனைத் தவிர, மேலும் இருவர், வீரபாண்டியனை வெற்றிகண்டதாகக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவரில் ஒருவன், பார்த்திவேந்திர வர்மன். வட ஆற்காடு தென் ஆற்காடு, செங்கற்பட்டு மாவட்டங்களில் கிடைக்கும் கல்வெட்டுகளில் காணப்படும் பார்த்திவேந்திரவர்மன் என்பவன் யார்? என்று தெளிவாக அறிய முடியவில்லை. இவன் பராந்தகனுக்குக் கட்டுப்பட்டிருந்த கங்க மன்னன் இரண்டாம் பிரதிவீபதியே என்று கருத்து நிலவுகிறது. இக்கருத்து பிரதிவீபதி, பார்த்திவேந்திரவர்மன் என்ற இரு பெயர்களுக்கு இடையே இருப்பதாக நம்பப்படும் ஒற்றுமையின் அடிப்படையில் ஏற்ப்பட்டதாகும். இரண்டாம் ஆதித்தன் மற்றும் பார்த்திவேந்திரவர்மன் ஆகியோரது கல்வெட்டுக்களை ஆராய்ந்த கிருஷ்ணசாஸ்திரி கீழ்கண்ட முடிவுகளுக்கு வந்துள்ளார். "இவ்விரு மன்னருமே, 'பாண்டியன் தலைகொண்ட' அல்லது வீரபாண்டிய தலை கொண்ட பரகேசரிவர்மன் என்ற விருதுகளைப் பெற்றனர். இரண்டாம் பராந்தக சுந்தர சோழ மன்னனுடன் போரிட்ட பாண்டிய மன்னனே இவ்வாறு குறுப்பிடப்படுகிறான். இரண்டாம் ஆதித்தனின் கல்வெட்டுகள் மிகக்குறைவே. தென்பகுதியில் மட்டுமே கிடைக்கும் இக்கல்வெட்டுகள். இவனுடைய 5-ம் ஆட்சி ஆண்டுமுதல் ஏற்பட்டன. பார்த்திவேந்திர வர்மனின் கல்வெட்டுகள் ஏராளமாகத் தொண்டை மண்டலத்தில் காணப்படுகின்றன. இவை 13-ம் ஆண்டு முதல் ஆனவை. பார்த்திவேந்திர ஆதித்த வர்மன், அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசனாக இருந்து, தொண்டை மண்டலத்தின் பிரதநிதியாக இருந்திருக்கக்கூடும். ஆதித்த கரிகாலனே உண்மையில் அரியணை ஏறியவனாக தோன்றுகிறது." பாண்டியன் தலைகொண்ட பரகேசரியின் கல்வெட்டுகள் மிகக்குறைவு என்று கூற முடியாது. அதோடு அவை தெற்கே மட்டுமே, அதாவது தொண்டை மண்டலத்திற்கு வெளியே தென்பகுதியில் மட்டுமின்றி, பிற பகுதிகளிலும் கிடைக்கின்றன. பார்த்திவேந்திர வர்மனின் கல்வெட்டுக்கள் ஆதித்தனின் கல்வெட்டுகளிலிருந்து, அவை கிடக்கும் இடங்களைப்பொறுத்து மட்டுமே வேறுபடுகின்றன. இவனது மூன்றாம் ஆண்டு கல்வெட்டில் பார்த்திவேந்திர ஆதித்த பருமர் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறான். இவனது பட்டத்தரசியார் உடையார் தேவியார் வில்லவன் மாதேவியார், பெருமானடிகள் தேவியார், தன்மப் பொன்னார் ஆகிய திரைலோக்கிய தேவியார் போன்ற பட்டங்களைப் பெற்றவராவார். கரிகாலக்கண்ணன் எனப் பெயருடையவன், இரண்டாம் ஆதித்தனின் மகனாய் இருக்கலாம், இராஜராஜனின் கல்வெட்டுக்கள் மூலம் அப்படியொருவன் இருந்ததாய் தெரிகிறது. எனவே இவன் சோழர் அதிகாரத்திற்கு உட்பட்ட மன்னனாக இராமல், இவனே ஒரு சோழ மன்னனாக இருத்தல் கூடும். ஆதித்தன் என்ற பெயரும் பரகேசரி என்ற விருதும் பெற்ற இம்மன்னனே, ஆதித்த கரிகால பரகேசரி என்பதைத் தெளிவாக்குகிறது. பார்த்திவேந்திர ஆதித்திய வர்மன் என்ற பட்டமும், சில சிறு மாற்றங்களுடன் இவனது கல்வெட்டுக்களில் காணப்படும் இவனது கல்வெட்டுக்களில் காணப்படும் பட்டமும், இவன் பார்த்திவேந்திரவர்மன் என்ற பட்டத்தை ஏற்றதைக்காட்டுகின்றன. சோழர்கள் புகழ்ச்சியான பட்டங்களை விரும்பி ஏற்றனர். மேலும் ஒவ்வொரு மன்னனும் பல பட்டங்களையும் சூடிக்கொண்டனர். இவனது கல்வெடுகள் 13ம் ஆண்டிலிருந்தே தொடங்குவதால் இவன் தந்தை சுந்தர சோழன் அரியணை ஏறியதும் இவன் இளவரசனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். சிறுவனாக இருந்தபோதே வெற்றியுடன், வீரபாண்டியனைத் தாக்கியவன் என்று லெய்டன் பட்டயம் புகழ்வதால், இது உண்மை என்று தெரிகிது இதற்குப்பின்னர், சோழ நாட்டின் வடபகுதியை ஆட்சி செய்யும் பொறுப்பை இவன் ஏற்றான். தந்தையின் வாழ்நாளிலேயே இவன் மரணமடையவே, இவனுக்கு பதிலாக பரகேசரி உத்தமசோழன் இளவரசன் ஆனான். சோழரைக் கருவறுத்த கொலைகாரப் பார்ப்பனர்கள் சுந்தர சோழனது ஆட்சியின் இறுதிக் காலத்தில் திடுக்கிடத்தக்க நிகழ்ச்சியொன்று நடைபெற்று, இவன் மனமுடைந்து இரண் டொரு திங்கள்களில் இறக்கும்படி செய்து விட்டது. அஃது இவன் முதல் மகனும், பெருவீரனுமாகிய ஆதித்தகரிகாலன் கி.பி.969ஆம் ஆண்டில் சோழ நாட்டில் சில வஞ்சகர்களால் கொல்லப்பட்ட மையேயாம். சிதம்பரந்தாலுகாவைச் சேர்ந்த காட்டுமன்னார் கோயிலுக் கணித்தாகவுள்ள உடையார் குடியில் காணப்படும் கல் வெட்டொன்று அவ்வரசு குமாரனைக் கொன்றவர் யார் என்பதைத் தெள்ளிதின் உணர்த்துகின்றது. அக்கொடுஞ்செயலைத் துணிந்து செய்து முடித்தோர், சோமன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாதி ராஜன், பரமேசுவரனான இருமுடிச் சோழ பிரமாதிராஜன், மலையனூரானான ரேவதாசக் கிரமவித்தன் என்போர். அந்நால்வரும் உடன்பிறந்தோர் என்பது அக்கல்வெட்டால் அறியக் கிடக்கின்றது. அவர்களும் இருவர், பஞ்சவன் பிரமாதிராஜன், இருமுடிச் சோழ பிரமாதி ராஜன் என்னும் உயர்ந்த பட்டங்கள் பெற்றவராக இருத்தலால் அவர்கள் அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்திருத்த அந்தணர் ஆவர். அவர்கள் அரசியல் அதிகாரிகளாயிருந்தும் தம் இளவரசனான ஆதித்தகரிகாலனை வஞ்சகமாகக் கொன்றமைக்குக் காரணம் புலப்படவில்லை. கண்டராதித்த சோழன் புதல்வாகிய உத்தம சோழன் என்பவன், தான் அரச கட்டில் ஏறும் பொருட்டு ஒரு சூழ்ச்சி செய்து அவனைக் கொல்வித்திருக்கக் கூடும் என்பது சிலர் கருத்து. அதனை ஆராய்ந்து முடிவு காண்பதும் ஈண்டு இன்றியமையாததேயாம். உத்தமசோழனுக்கு அக்கொடுஞ் செயலில் தொடர்பு இருந்திருப்பின், ஆதித்தகரிகாலன் தம்பியும் குடிகளால் அன்பு பாராட்டிப் போற்றப் பெற்றவனும் பெரிய வீரனுமாகிய முதல் ராசாராசசோழன் அரியணையைக் கைப்பற்றித் தானே ஆட்சி புரியத் தொடுங்குவானேயன்றி அதனை அவ்வுத்தமசோழன் பெற்று அரசாள உடன்பட்டுத் தான் ஒதுங்கிக் கொண்டிருக்க மாட்டான். இராசராச சோழன் தன் சிறிய தந்தையாகிய உத்தம சோழனுக்கு நாட்டை ஆட்சி புரிவதில் விருப்பமுள்ள வரையில் அதனை மனத்தால்கூட விரும்புவதில்லை என்று தன் குடிகளிடம் கூறினான் என்பது திருவாலங்காட்டுச் செப்பேடுகளால் அறியக்கிடக்கின்றது. உத்தம சோழன் சூட்சியானால் தன் தமையன் கொல்லப்பட்டிருந்தால் இராசராச சோழன் அவன்பால் அத்துணை அன்பும் மதிப்பும் வைத்து அவ்வாறு கூறியிருக்க மாட்டான் என்பது ஒருதலை உத்தமசோழன் இளவரசனாயிருந்தவனைக் கொல்லும்படி செய்து தான் பட்டம் பெற முயன்றிருந்தால் அவனுக்குக் குடிகள் ஆதரவும் அரசியல் அதிகாரிகள் கூட்டுறவும் என்றும் கிடைத்திருக்க மாட்டா. அதனால், உள் நாட்டில் அமைதியின்மையும், கலகமுமே, ஏற்பட்டிருக்கும் ஆனால் சோழ இராச்சியத்தில் எப்பகுதியிலும் குழப்பம் சிறிதுமின்றி உத்தமசோழன் ஆட்சி மிக அமைதியாக நடைபெற்றது என்பது பல கல்வெட்டுகளால் அறியப்படுகிறது. ஆகவே, எக்காரணம் பற்றியோ உட்பகை கொண்டிருந்த இரண்டு அரசியல் அதிகாரிகளும், அவர்கள் உடன் பிறந்தார் இருவரும் ஒருங்கு சேர்ந்து ஆதித்த கரிகாலனை வஞ்சகமாகக் கொன்று விட்டனர் என்பதும் இக்கொலை நிகழ்ச்சியில் உத்தம சோழனுக்குச் சிறிதும் தொடர்பில்லை என்பதும் நன்கு வெளியாதல் காண்க. நன்றி அறிஞர் டி.வி. சதாசிவ பண்டாரத்தார் பிற்காலச் சோழர் சரித்திரம் பகுதி பக்கம் 79-_80 சோழ மன்னர்கள் யாவருமே திருக்கோயில்களுக்குப் பொன்வேய்ந்திருக்கிறார்களே தவிர தமக்கென்று யாரும் பொன்மாளிகை கட்டிக் கொண்டதில்லை. முதல் பராந்தகன் தில்லைத் திருக்கோயிலுக்குப் பொன்வேய்ந்தான். முதலாம் இராசராசன் தன்னுடைய 29ம் ஆட்சியாண்டில் போர் வெற்றிகள் மூலம் கிடைத்த 41,500 கழஞ்சுப் பொன்னையும் 50,650 கழஞ்சு வெள்ளியையும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்குஅளித்தான். இரண்டாம் குலோத்துங்கன் தன்னுடைய முடிசூட்டு விழாவையே தில்லைத் திருக்கோயிலிலேயே நடத்தினான். இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழனின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் இளமைக் காலத்திலேயே வீரபாண்டியனை போரில் தோற்கடித்து வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி என்ற பெயர் பெற்றான். ஆதித்த கரிகாலனுக்கு கி.பி. 966ல் சுந்தரசோழன் இளவரசு பட்டம் கட்டுகிறான். ஆதித்த கரிகாலன் தன் அந்தஸ்துக்கு போதவில்லை என கருதி காஞ்சியில் பல்லவச் சக்கரவர்திகள் பல தலைமுறையாக வாழ்ந்து ராஜ்யபாரம் புரிந்த அரண்மனைகளை விட்டு பொன்னிழைத்த அரண்மனையை கட்டி வைடூரியங்களையும் இரத்தினங்களையும் சுவர்களில் பதிக்கிறான். கங்கபாடி, நுளம்பாடி, குடகு முதலிய நாடுகளில் கைபற்றிய பொருள்களில் ஒரு செப்புக்காசாவது தலை நகரிலுள்ள பொக்கிஷ்ட்திற்கு அனுப்பவிலை. தனக்கு பொன்னிழைத்த அரண்மனையை காஞ்சியில் கட்டியது அரச குலத்தில் புளுதியை கிளப்பியது. ஆதித்த கரிகாலனின் செய்கை பின்னால் வரும் மன்னர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்து விட்டால் என்ன செய்வது என்று அரச அதிகாரிகள் திகைத்தனர். இதுவே ஆதித்த கரிகாலன் கொலைக்கு காரனமாக அமைந்தது. சிதம்பரம் தாலுகா காட்டுமன்னார் கோயிலுக்கு அருகிலுள்ள உடையார்குடியில் காணப்படும் கல்வெட்டு ஒன்று கொலை செய்தவர்களின் பெயர்களை பட்டியல் இடுகிறது. 1. சோமன் 2. ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன் 3. பரமேசுவரனான இருமுடிச்சோழன் பிரமாதிராஜன் 4. ரேவதாசக் கிரமவிந்தன். இவர்கள் அனைவரும் சகோதரர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள், இக் கொலையின் மூலம் ஆட்சியும், சமய கோட்பாடுகளும் குலையுமே என கருதி இக் குற்றங்கள் மறைக்கப்பட்டு வெளிச்சத்திற்கு வரவில்லை. தன்னுடைய அருமந்த புத்திரன் ஆதித்த கரிகாலன் இறந்த சோகத்தில் சுந்தரசோழன் தன் மகன் கட்டிய காஞ்சி பொன்மாளிகையில் தனித்திருந்து உயிர் துறக்கிறான். இதனால் சுந்தரசோழனை பொன்மாளிகைத் துஞ்சின தேவர் இன கல்வெட்டு விளம்புகிறது. இக் கொலை சுந்தரசோழன் மற்றும் இராசராசசோழனுக்கும் தெரியாமல் நடந்திருக்கும் என்றும் இதனால் தான் உத்தமசோழன் முடி தரித்தான் என்றும் அறியப்படுகிறது. இதன் பின் அரியனை ஏறிய உத்தமசோழன் இக் கொலையாளிகளை தண்டிக்கவில்லை. இராசராசன் அரியனை ஏறிய இரண்டாம் ஆண்டில் உயிருடன் இருந்த இருவர் மட்டும் தண்டிக்கப்பட்டதாக உடையார்குடி கல்வெட்டால் அறியமுடிகிறது. உத்தம சோழன் கி.பி.970-985 Picture உத்தம சோழன் கி.பி.970-985 (மதுராந்தகன்) சோழ மன்னன் கண்டராதித்தனின் ஒரே புத்ல்வன் உத்தமசோழன். கண்டராதித்தன் இறக்கும் போது இவன் சிறுவனாய் இருந்தமையால் கண்டராதித்தனின் தம்பி அரிஞ்சிய சோழனுக்கு முடி சூட்டப்ப்ட்டது. அரிஞ்சிய சோழனுக்கு பிறகு அவனது மகன் சுந்தரசோழனுக்கு முடிசூட்டப்பட்டது. சுந்தரசோழனுக்கு பிறகு அவனது மகன் அருண்மொழித் தேவன் ஆட்சியேற வேண்டும் என்று குடிமக்கள் பெரிதும் விரும்பினாலும், தனது சிறிய தந்தையுடைய அரசாலும் உரிமையையும் விருப்பத்தையும் மதித்து அருண்மொழித் தேவன் விட்டுக்கொடுக்க உத்தமசோழன் அரியணையேறினான். இம்மன்னனது முடிசூட்டு விழாகி.பி. 968 டின் இறுதியிலோ அல்லது கி.பி. 970ன் தொடக்கத்திலோ நடை பெற்றிருக்கவேண்டும். உத்தமசோழன். பரகேசரி என்னும் பட்டம் கொண்டு ஆட்சிபுரிந்தான். இவனது ஆட்சிக்கால கல்வெட்டுக்கள் திருமுல்லை வாயில், காஞ்சிபுரம், திருவெற்றியூர், திருவடந்தை,மீஞ்சூர்,பழங்கோயில், திருமால்புரம், திருவதிகை, வீரட்டானத்திலும், காணப்படுகின்றமையால் அப்பகுதிகள் அடங்கிய திருமுனைப்பாடி நாடும், மற்றும்தொண்டை நாடும் இவ்வேந்தன் ஆட்சிக்குள்ளாகியிருந்தமையை அறியமுடிகிறது. இவ்வேந்தன் காலத்து கல்வெட்டுக்கள் சோழ ராஜ்ஜியத்தில் மிகுதியாக காணப்படுகின்றன. அவை இவ்வேந்தனும், இவனது தாய் செம்பியன் மாதேவியும் செய்த அறச்செயல்களைக் கூறுவனவாக உள்ளன. அவற்றால் அக்காலத்தில் மக்களின் நிலை, வாழ்க்கவொழுக்கங்கள், பொருளாதாரம் பற்றியறியவும் முடிகிறது. உத்தமசோழனின் பதினாறாமாண்டில் பதியப்பட்ட செப்பேடுகள் சென்னை பொருட்காட்சிச்சாலையில் இருக்கின்றன.அதன் மூலம் சோழரது ஆட்சிமுறையும் அக்கால செய்திகளையும் அறிந்துகொள்ளலாம். அக்கால 10ம் நூற்றாண்டின் தமிழ் எழுத்தின் வடிவங்களையும் அறிய முடிகிறது. உத்தமசோழனுக்கு பல மனைவிகள் இருந்தனர் என்பதை செம்பியன் மாதேவி என்னும் ஊரில் காணப்படும்கல்வெட்டுகளால் அறியமுடிகிறது.அவற்றுள் ஐவர் பெயர் ஒரே கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளன. இவ்வேந்தனின் பட்டத்தரசியாக விளங்கியவள் திருபுவனமாதேவியாவாள். ப்ட்டன்தானதுங்கி மழபாடித்தென்னவன் மாதேவி வானவன் மாதேவி கிழானடிகள் பழுவேட்டரையர் மகள் ஓரட்டணம் சொரப்பையார் (கன்னடப் பெயர்) அக்கரமாதேவியார் மூத்த நம்பிராட்டியார், ஆகியோர்களும் மனைவியாவர் இவ்வேந்தனின் புதல்வன் மதுராந்தக கண்டாராத்தித்த சோழன் ஆவான். இவவரசிளங்குமரன் ஐவரங்கிய ஒரு குழுவுடன் அறநிலைகளின் கணக்குகளை ஆராய்ந்து வந்ததை கல்வெட்டுகளால் அறியமுடிகிறது.இவவரசிளங்குமரன் இராசராச சோழனின் ஆட்சியில் கோயில் மற்றும் அறநிலையங்களும் நன்கு நடைபெறுமாறு கண்கானித்து வந்ததையும் அரியமுடிகிறது. இவ்வேந்தனின் ஆட்சிக்காலத்தில் சுந்தரசோழனின் மகன் அருண்மொழித் தேவன் என்ற இராசராசசோழன் இளவர்சுபட்டம் கட்டப்பெற்றான். நடுவில் புலியுருவம் பொறிக்கப்பட்டதாகவும் ஓரத்தில் உத்தமசோழன் என்று கிரந்த எழுத்துகளைத் தாங்கிய நாணயம் இவன் காலத்து வரலாற்றுச் சான்றாகும். உத்தமசோழன் என்று வடமொழியில் வரையப்பெற்ற பொற்காசு உத்தமசோழன் ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்டதாக சர் வால்டர் எலியட் என்னும் அறிஞர் தன்னுடைய "தென்னிந்திய நாணயங்கள்" என்ற நூலில் கூறியுள்ளார். இப்போது கிடைத்துள்ள சோழமன்னர்களின் நாணயங்களில் இதுவே பழமையானது என்பது வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும். இவன் காலத்தில் நாடு அமைதியுடன் இருந்தது. மக்கள் யாவரும் துன்பங்களின்றி இனிதே வாழ்ந்து வருமாறு நல்ஆட்சி செய்து வந்த உத்தமசோழன் கி.ப்.985ம் ஆண்டு மரணமடைந்தான் இவனைத் தொடர்ந்தே புகழ் பெற்ற சோழ அரசன் இராஜராஜ சோழன் அரியணை ஏறினான். கண்டராதித்த சோழனின் மனைவியும் உத்தமசோழனின் தாயும் ஆன செம்பியன் மாதேவி இவரிடம் தான் ராஜராஜன் வளர்ந்தார். இராசராச சோழன் கி.பி 985-1014 Picture இராசராச சோழன் கி.பி 985-1014 தஞ்சைக் கோயிலை கட்டியவன். தமக்கை குந்தவை நாச்சியார் ராசராசனின் பட்டத்தரசி உலகமாதேவியும் இல்லத்தரசி வானதி தேவியும் . இளங்குழவிகளாகிய ராசேந்திரன், குந்தவை. கி.பி 985 இல் உத்தம சோழன் இறந்தபின்னர், சுந்தர சோழனின் இரண்டாவது மகனான இராசராச சோழன் மன்னனானான். இவனுக்கு அருள்மொழிவர்மன், ரிசிவர்மன் என்று பெயர்கள் வழங்கப் பட்டதாக அழகர் கோவில் கல்வெட்டுகளில் இருந்து அறியப்படுகிறது. இவன் காலத்தில் சோழநாட்டின் வலிமை பெருகியது. நான்கு பக்கங்களிலும் சோழநாட்டின் எல்லைகள் விரிந்தன. காந்தளூர்ச் சாலை இவற்றுக்காக இராசராசன் நடத்திய போர்கள் பல. சேரர் , பாண்டியர் ,சிங்களவர், ஒன்று கூடி காந்தளூர்ச் சாலை என்ற இடத்தில் சோழரை எதிர்த்தனர். இப்போரில் சேர மன்னன் பாசுகர ரவிவர்மனைத் தோற்கடித்தான். சேர மன்னனுடைய கப்பற்படையை அழித்து உதகை , விழிஞம் ஆகிய பகுதிகளையும் வென்றான். இப்போரில், சேரருக்கு உதவுவதற்காகச் சென்ற பாண்டிய மன்னன் அமரபுயங்க பாண்டியனை வென்று, இவர்களுக்கு உதவிய இலங்கை மீதும் படைநடத்தி அதன் தலை நகரைக் கைப்பற்றினான். இலங்கைத் தீவின் வடபகுதி சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டது. கொல்லம் சென்று சேரனுடன் இரண்டாவது முறைப் போர் புரிந்து சேர நாட்டின் எஞ்சிய பகுதிகளையும் வென்றான். கங்கபாடி, நுளம்பாடி சோழ நாட்டுக்கு வடக்கிலும், கங்கர்களைத் தோற்கடித்து கங்கபாடியைக் ( மைசூரின்தென்பகுதியும் சேலம் மாவட்டத்தில் வட பகுதியும் அடங்கிய நாடு) கைப்பற்றினான். தலைக்காட்டைத் தலைநகராகக் கொண்டு கங்கர்கள் இந்நாட்டைஆண்டனர். மைசூர் நாட்டின் கீழ்ப்பகுதியும் பல்லாரி மாவட்டமும் கொண்ட நுளம்பாடியைப் பல்லவர்களின் வம்சத்தவராகிய நுளம்பர்களுடன் போரில் வென்று இப்பகுதியைக் கைப்பற்றினான். இப்போர்களில் தலைமை ஏற்று நடத்தியவன் இராசராசனின் மகனான முதலாம் இராசேந்திரன் ஆவான். சாளுக்கிய நாட்டின்மீதும் படையெடுத்து அதனைக் கைப்பற்றினான். துளுவர் , கொங்கணர் , தெலுங்கர் , இராட்டிரகூடர் ஆகியோரை வென்று வடக்கே வங்காளம் வரை இவனது படைகள் சென்று போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. ஈழத்துப் போர் இராசராசன் வலிமை மிக்கக் கடற்படையைக் கொண்டு இலங்கையை வென்றான் என திருவாலங்காட்டுச் செப்பேடுகள் புகழ்கின்றன. அப்போது ஐந்தாம் மகிந்தன் இலங்கை வேந்தனாக இருந்தான். சோழ நாட்டு மண்டலங்களில் ஒன்றாக மாறிய ஈழம் 'மும்முடிச் சோழ மண்டலம்' எனப் பெயர் பெற்றது. இலங்கையின் தலைநகராகத் திகழ்ந்தஅநுராதபுரம் போரில் அழிந்தது. 'சனநாத மங்கலம்' என்று புதிய பெயர் சூட்டப்பட்டு 'பொலன்னருவை' ஈழத்தின் புதிய தலைநகராயிற்று. இங்குள்ள ஒரு பௌத்த-விகாரையின் பெயர் ராசராச பெரும்பள்ளி . ராசராசசோழ மன்னனின் பெயரில் இது இருப்பது குறிப்பிடத் தக்கது. இதே பெயரில் தமிழ்நாட்டிலுள்ள நாகப்பட்டினத்தில் ஒரு புத்த விகாரை அக்காலத்தில் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. இராசேந்திரன் 'வானவன் மாதேச்சுரம்' என்ற பெயரில் இங்கு கற்றளி எடுத்தான். ஈழ மண்டலத்தில் உள்ள சில ஊர்களை தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்திற்கு நிவந்தமாக அளித்ததைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. சிறந்த கடற்படையைப் பெற்றிருந்த இராசராசன், தெற்கில் ஈழத்தின்மீது மட்டுமன்றி, இந்தியாவின் மேற்குக் கரைக்கு அப்பால், அரபிக்கடலிலுள்ள முந்நீர்ப் பழந்தீவு எனப்படும்இலட்சத்தீவு மீதும், கிழக்குப் பகுதியில் தென்கிழக்காசியப் பகுதியிலுள்ள கடாரத்தின் மீதும் படையெடுத்ததாக இவன் காலத்திய செப்பேடு ஒன்று தெரிவிக்கிறது. சோழ அரசர்களின் வயதுகளுக்கு குறிப்புகள் இல்லை. அவர்களின் மெய்கீர்த்தி ஆட்சி ஆண்டை தரும். ராஜ ராஜன் மற்றும் ராஜேந்திர சோழனின் முக்கிய ஆண்டுகள். 958 சுந்தர சோழர் அரியணை ஏறுகிறார். 959 சேவூர் போர் - ஆதித்ய கரிகாலன் சிங்கக்குட்டி போல பாண்டிய படைகளுடன் போரிட்டது 964 ராஜேந்திர சோழர் பிறந்த ஆண்டாக இருக்கலாம். 969 ஆதித்ய கரிகாலன் கொலை 970 உத்தம சோழர் அரியணை ஏறுவது 973 சுந்தர சோழர் மறைவு 985 அருள் மொழி வர்மர் அரியணை (உத்தம சோழருடன் மூன்று ஆண்டுகள் சேர்ந்து என்று ஒரு தகவல்)ராஜ ராஜர் என்ற பெயர் பெறுதல் 987 உத்தம சோழர் மறைவு / அல்லது பதவி நீத்தல் 993 ராஜ ராஜர் இலங்கை படை எடுப்பு 994 ராஜ ராஜர் சேர படை எடுப்பு (கண்டலூர் சாலை) மாலத்தீவு படை எடுப்பு. 999 கங்கபாடி , நுரம்பபாடி படை எடுப்பு ( தற்போதைய கர்நாடகம் ) 999 வெங்கி படைஎடுப்பு 1001 செம்பியன் மாதேவி மறைவு ( உத்தம சோழர் தாய் - பல கோவில்களை கற்றளியாக மாற்றிய அற்புத அம்மை ) 1003 சாளுக்ய ரட்டபாடி படை எடுப்பு ( ராஜேந்திரன் தலைமையில் ) 1007 ஹோட்டுர் படை எடுப்பு ( ஹோட்டுர் கல்வெட்டு - ராஜேந்திரனின் தலைமையில் - கொடூரமான காரியங்களை செய்ததாக கல்வெட்டு ) 1008 உதகை படை எடுப்பு ( சேர போர் ) 1010 பெரிய கோவில் பனி நிறைவு 1012 ராஜேந்திரர் அரியணை ஏறுவது - தன் தந்தையுடன் சேர்த்து ஆட்சி புரிதல். 1014 ராஜேந்திரர் அரசர் - ராஜ ராஜர் மறைவு ?( இருபத்தி ஒன்பது ஆட்சி ஆண்டுகள் ) 1015 முதல் சோழ பிரதிநிதி கூட்டம் சீன சங் அரசவைக்கு விஜயம். 1018 ராஜாதிராஜன் தன் தந்தையுடன் சேர்ந்து ஆட்சி புரிதல் , இலங்கை படை எடுப்பு. 1019 கங்கை நோக்கி. 1020 இலங்கை போரில் வெற்றி - பாண்டிய குல ஹாரம் மீட்பு, இலங்கை அரசன் மகிந்தன் மற்றும் அவன் மனைவி சிறை பிடிப்பு ( மதுரையில் பன்னிரண்டு ஆண்டுகள் சிறை வைப்பு ) 1021 மேலை சாளுக்ய படை எடுப்பு. 1025 ஸ்ரீ விஜயம், கடாரம் கடல் வழி படை எடுப்பு. 1031 மேலை சாளுக்ய போர் வெற்றி, வெங்கி , களிடண்டி போர். 1033 இரண்டாவது குழ சீன சென்றடைகிறது . இதனுடன் ராஜேந்திர சோழர் போர்கள் முடிவு - கங்கை கொண்ட சோழ புறத்தில் இருந்து செயல் படுத்தல். 1035 கங்கை கொண்ட சோழ புறம் கோவில் நிறைவு பெறுதல். 1044 ராஜேந்திர சோழர் மறைவு முதலாம் இராசேந்திர சோழன் கி.பி.1012-1044 Picture கங்கை கொண்ட சோழீச்சுரம் முதலாம் இராசேந்திர சோழன் (கி.பி.1012-1044) இராசராசன் காலத்தில் இளவரசனாகப் பட்டம் சூட்டப்பெற்றவன் இராசேந்திர சோழன் . இராசராசனின் மறைவுக்குப்பின், 1012-இல் அவனது மகனான இராசேந்திரன் சோழநாட்டின் மன்னனானான். ஏற்கனவே தந்தையோடு, போர் நடவடிக்கைகளிலும், நிர்வாகத்திலும் ஈடுபட்டு அனுபவமும் திறனும் பெற்றிருந்த இராசேந்திரன், ஆளுமை கொண்டவனாக விளங்கினான். இவனது ஆட்சியில் தற்போதைய தமிழ்நாடு, ஆந்திர , கேரள மாநிலங்களையும் மைசூர் நாட்டின் ஒரு பகுதியையும் ஈழ நாட்டையும் உள்ளடக்கியதாக இருந்த சோழநாடு மேலும் விரிவடைந்தது. சேர நாட்டின் மீது படையெடுத்து அதன் அரசனான பாசுகர ரவிவர்மனை அகற்றிவிட்டு, அந்நாட்டை சோழரின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான். ஈழநாட்டின் மீதும் படையெடுத்து முழு நாட்டையும் கைப்பற்றியதுடன், தப்பி ஓடிய பாண்டியன் இலங்கையில் மறைத்து வைத்திருந்த பாண்டி நாட்டு மணிமுடியையும், செங்கோலையும் மீட்டு வந்தான். வடக்கு எல்லையில், சாளுக்கியர்கள், கலிங்கர்களுடனும், ஒட்ட விசயர்களுடனும் சேர்ந்துகொண்டு சோழரை எதித்தனர். இதனால் சோழர் படைகள் வடநாடு நோக்கிச் சென்றன. சாளுக்கியர் , கலிங்கர், ஒட்ட விசயர் ஆகியவர்களையும், பல சிற்றரசர்களையும் வென்று, வங்காள நாட்டையும் சோழர்படை தோற்கடித்தது. சோழர் கைப்பற்றியிருந்த இடங்களில் அடிக்கடி கிளர்ச்சிகள் ஏற்பட்டதாலும், வடக்கு எல்லையில் சாளுக்கியரின் தொல்லைகள் தொடர்ந்து வந்ததாலும், இராசேந்திரனின் ஆட்சிக்காலம் முழுவதும் அமைதியற்ற காலப்பகுதியாகவே கழிந்தது. வடநாட்டை வென்று பெற்ற கஙகை நீரைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்ததன் நினைவாக கங்கை கொண்ட சோழீச்சுரம் என்னும் நகரை ஏற்படுத்தினான். இங்கு பெருவுடையார்க் கோவிலைப் போலவே கட்டப்பட்ட கோவில் சிற்பக்கலையின் பெருமிதத்தை விளக்குகிறது. தனது வெற்றியின் நினைவாக இங்கு 'சோழ கங்கை' என்ற பெரிய ஏரியினை வெட்டச் செய்தான் என்று செப்பேடுகள் கூறுகின்றன. இவன் காலத்தில் பாதுகாப்பு நோக்கங்களுக்காக நாட்டின் தலை நகரம், தஞ்சையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றப்பட்டது. தான் போரில் வென்ற நாடுகளுக்கு அரச குமாரர்களைத் தலைவர்களாக்கி ஆட்சியைத் திறம்படப் புரியும் முறையை முதலில் பின்பற்றியவன் இரசேந்திரனே ஆவான். பின்வந்த சோழ மன்னர்கள் முதலாம் இராசாதிராசன் இராசேந்திர சோழனுக்குப் பின் 1044 ஆம் ஆண்டில் அவனது மகன் முதலாம் இராசாதிராசன் அரசனானான். இவன் காலத்தில் சோழப் பேரரசின் தென் பகுதிகளான ஈழம் , பாண்டிநாடு, சேரநாடு ஆகிய இடங்களில் கிளர்ச்சிகள் தீவிரம் அடையத் தொடங்கின எனினும், அவற்றை அவன் அடக்கினான். சாளுக்கியர்களில் தொல்லைகளை அடக்குவதற்காக அங்கேயும் சென்று போர் புரிந்தான். சோழர்கள் இறுதி வெற்றியைப் பெற்றனராயினும் கொப்பம் என்னுமிடத்தில் நடைபெற்ற சண்டையொன்றில் இராசாதிராசன் இறந்துபோனான். இரண்டாம் இராசேந்திரன் இவனைத் தொடர்ந்து அவன் தம்பி 'இராசேந்திரன்' என்னும் அரியணைப் பெயருடன் முடி சூட்டிக்கொண்டான். இவன் இரண்டாம் இராசேந்திரன் எனப்படுகின்றான். கொப்பத்துப் போரில் தன் அண்ணன் மாண்டதும் படை நடத்திப் பகைவர்களை வென்றான். இவனது மகள் மதுராந்தகி பிற்காலத்தே குலோத்துங்கன் என்றழைக்கப்பட்ட இரசேந்திரனுக்கு மணம் முடித்து வைக்கப்பட்டாள். இவள் தஞ்சை பெரிய கோவிலில் இராசராசேச்சுவர நாடகம் நடத்த ஆண்டுக்கு 120 கலம் செல் நிவந்தமாக அளித்ததாகக் கல்வெட்டு கூறுகிறது. கங்கைகொண்டசோழேச்சரம் Picture பிற்காலச் சோழர்களில் விசயாலயன் காலம் முதல், முதலாம் இராஜராஜன் காலம் முடிய (கி.பி. 846-1014) பத்துத் தலைமுறைகளாகத் தஞ்சாவூர் சோழமன்னர்களின் தலைநகரமாய்த் திகழ்ந்திருந்தது. இத்தஞ்சாவூர் பாண்டி நாட்டின் எல்லைக்கு அருகில் இருந்தமையால், தலைநகரம் பாண்டியர்களால் அடிக்கடித் தாக்கப்படும் என்ற காரணம் பற்றியும், அக்காலம் மாதம் மும்மாரிபெய்து கொள்ளிடப்பேராறு வெள்ளப்பெருக்கெடுத்து ஓடினமையால் முதலாம் இராஜேந்திர சோழன், (முதல் இராஜராஜ மன்னனின் மகன்) தன் குல தெய்வமாகிய தில்லை நடராசப் பெருமானைத் தன் பரிவாரங்களோடு சென்று அடிக்கடி வழிபடுவதற்கு அக்கொள்ளிடப் பேராறு தடையாய் இருந்தமை பற்றியும், அக்காலம் கொள்ளிடப் பேராற்றுக்கு இக்காலம் போல் அணைக்கட்டு இல்லாமையாலும் சோழநாட்டின் நடுப் பகுதி யில் தலைநகரை அமைக்க வேண்டும் என்ற காரணம் பற்றியும், கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைநகராகக் கொண்டான். இங்கே தலை நகரை நிர்மாணம் பண்ணுவதற்கு வேண்டிய சுண்ணாம்பு, செங்கல் முதலியவைகள் தயாரித்த இடங்கள் எல்லாம் இக்காலம் அவ்வப் பெயர்களுடன் சுண்ணாம்புக்குழி முதலான சிற்றூர்களாகத் திகழ் கின்றன. கோட்டை இருந்த இடம் உள்கோட்டை (உக்கோட்டை) என்ற பெயருடனும், ஆயுத சாலைகள் இருந்த இடம் ஆயிரக்கலம் என்னும் பெயருடனும் இன்றும் நிலவுகின்றன. இங்ஙனம் புதிய நகரை நிர்மாணம் பண்ணின முதலாம் இராஜேந்திர சோழன், அதனைக் கங்கைநீரால் புனிதம் பண்ணவேண்டும் என்று எண்ணி, கங்கைநீர் கொணர, தன்படைத் தலைவனிடம் ஒரு பெரும்படையை அனுப்பினான். அப்படைத் தலைவனும் வடவர்களை வென்று கங்கை நீரைக் கைக்கொண்டு திரும்புகையில், இராஜேந்திரன் அப்படைத் தலைவனைக் கோதாவரி யாற்றங்கரையில் கண்டு பெருமகிழ்வுற்றுத் தன் நாட்டிற்குத் திரும்பினான். இதனால் இவனுக்குத் கங்கைகொண்ட சோழன் என்னும் பெயர் தோன்றலாயிற்று. கொணர்ந்த கங்கை நீரை, சோழகங்கம் என்னும் ஏரி ஒன்றை வெட்டி அதில் ஊற்றினான். அந்த ஏரி இக்காலம் பொன்னேரி என்ற பெயருடன் விளங்குகின்றது. புதிதாக நிர்மாணம் பண்ணின தலைநகரும் கங்கைகொண்ட சோழ புரம் என்னும் பெயர் பெற்றது. கங்கைமாநகர் என்று வீரராஜேந்திர சோழன் மெய்க்கீர்த்தியிலும், கங்காபுரி என்று கலிங்கத்துப் பரணி யிலும் இக்கங்கை கொண்ட சோழபுரம் குறிப்பிடப்பெற்றுள்ளது. இங்கே இவன் கட்டிய கோயிலும் கங்கைகொண்ட சோழேச்சரம் என்னும் பெயர் எய்திற்று. இச்சோழேச்சரம் உருவத்தில் தஞ்சை இராசராசேச்சரத்தை ஒத்தது. சிற்பத் திறன் வாய்ந்தது. இங்குள்ள சண்டேசுவர பிரசாத தேவரின் திருமேனி மிக்க வேலைப்பாடு உடை யது. கண்கவரும் வனப்புடையது. இந்தக் கங்கைகொண்ட சோழேச் சரத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமான் மீது கருவூர்த்தேவர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இந்தக் கங்கைகொண்ட சோழபுரம் எத்தனையோ வெற்றி விழாக்கள் நடந்த இடம். சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், சேக்கிழார் முதலான புலவர் பெருமக்கள் வாழ்ந்த இடம். கலிங்கப்போரில் வெற்றிப்பெற்றுத் திரும்பி. முதற்குலோத்துங்க சோழன், தன் அவைக் களப்புலவராகிய சயங்கொண்டாரைப் பார்த்து, யானும் சயங் கொண்டான் ஆயினேன் எனக்கூற, சயங்கொண்டானை (வெற்றி பெற்றவனைச்) சயங்கொண்டான் பாடுதல் பொருத்தமுடைத்து என்று கூறி, கலிங்கத்துப் பரணியைப் பாடிய இடம். விக்கிரமசோழனுலா, இரண்டாம் குலோத்துங்க சோழனுலா, இரண்டாம் இராசராசனுலா இவைகளெல்லாம் பாடப்பட்ட இடம். குலோத்துங்கன், சேக்கிழார் பெருமானைத் திருத்தொண்டர் புராணத்தைத் தில்லையில் பாடச் செய்து, நாள்தோறும் எவ்வளவு எவ்வளவு பாடல்கள் நிறைவேறின என ஆள் இட்டுக் கேட்டறிந்த இடம். கங்கைகொண்ட சோழன் முதல், மூன்றாம் இராஜேந்திர சோழன் காலம் முடிய உள்ள சோழ மன்னர்களுக்குத் தலைநகராய்த் திகழ்ந்திருந்த இடம். இத்துணைச் சிறப்பினைப் பெற்றிருந்த இடம், இதுபொழுது ஒரு சிற்றூராகக் காட்சியளிக்கிறது. எனினும் கங்கைகொண்ட சோழேச்சரம் என்னும் கோயிலே பண்டைப்பெருமை அனைத்தையும் விளக்கி நிலவுகின்றது. இக்கோயில், இந்நாளில் கும்பகோணத்திலிருந்து சென்னைக்குப் போகும் பெருவழியில் கொள்ளிடப் பேராற்றுக்குக் கட்டப்பட்டுள்ள கீழ் அணைக்கட்டுக்கு வடக்கேயுள்ள குறுக்குச்சாலை யிலிருந்து மேற்கே சுமார் ஐந்து கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. இக்காலப் பிரிவுப்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டம் உடையார் பாளையம் வட்டத்தில் அமைந்தது இவ்வூர். இக்கங்கைகொண்ட சோழேச்சரத்தில் உள்ள இறைவர்க்குப் பெரிய உடைய நாயனார் என்றும், அம்பிகைக்குப் பெரிய நாயகி என்றும் பெயர்கள் வழங்கி வருகின்றன. கல்வெட்டு. (1 See the Annual Reports on South Indian Epigraphy for the years 1892 Nos. 75-83, -1908 Nos. 29-34 and South Indian Inscriptions(Texts) Volume IV Nos. 522-530. ) இத் திருக்கோயிலில் சோழமன்னர்களில் விசயராஜேந்திரன் (கி.பி. 1051-1065) வீரராஜேந்திரன் (கி.பி. 1063-1070) முதற் குலோத்துங்கன் (கி.பி. 1070-1120) மூன்றாங் குலோத்துங்கன் இவர் கள் காலங்களிலும்; பாண்டிய மன்னர்களில் கோமாற பன்மரான திரி புவனச் சக்கரவர்த்தி குலசேகரதேவர், கோனேரின்மை கொண்டான் திரிபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டிய தேவர், திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் விக்கிரம பாண்டிய தேவர் இவர்கள் காலங்களிலும்; விசயநகர வேந்தர்களில் - மல்லிகார்ச்சுன தேவ மகாராயர் குமாரர் பிரபுட விரூபாக்ஷராயர் முதலானோர் காலங் களிலும் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன. கல்வெட்டுக்களினால் அறியப்படும் செய்திகள். மாறபன்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி குலசேகர தேவன், தேவணிபுத்தூர் என்னும் ஊரிலுள்ள நத்தம், மனைகள், நன்செய், புன் செய், தோப்புக்கள், ஊருணி, குளம் முதலியன உள்பட அனைத்தையும் விலைக்கு வாங்கி, அதனைத் திருநாமத்துக் காணியாக, உடையார் கங்கைகொண்ட சோழேச்சரமுடையார்க்குக் கொடுத்துள்ளான். விக்கிரமபாண்டியன் தன்பேரால் கட்டின இராசாக்கள் நாயன் சந்திக்கு அமுதுபடி சாத்துப்படி உள்ளிட்ட நித்த நிவந்தங்களுக்கு மூலதனமாக குலோத்துங்கசோழ நல்லூரிலும், இராஜேந்திர சோழநல்லூரிலும் இருபது வேலி நிலத்தையும்; சுந்தரபாண்டியன், தன்பேரால் நிறுவிய சுந்தரபாண்டியன் சந்திக்கு நிலமும் கொடுத்துள்ளனர். சோழ மன்னர்களில் விசயராஜேந்திரன் காலத்தில் அளிக்கப்பெற்ற நிலநிவந்தம் 216 வரிகளில் செதுக்கப்பட்டிருக்கின்றன. அவைகள் பல இடங்களில் சிதைந்துவிட்டன. இக் கல்வெட்டுக்களில் இவ்வூர் வடகரை விருதராச பயங்கர வளநாட்டு மேற்காநாட்டு மண்ணைகொண்ட சோழவளநாட்டு கங்கை கொண்ட சோழபுரம் எனக் குறிக்கப்பட்டிருக்கிறது. கொள்ளிடப் பேராற்றிலிருந்து வீரநாராயணன் ஏரிக்கு (வீராணத்தேரிக்கு) நீர் போகும் ஆறு, வடவாறு என்று இக்காலம் வழங்கப்பெறினும் அது மதுராந்தக வடவாறு என்று பெயர் பெற்றிருந்தது. மதுராந்தகன் என்பது கங்கைகொண்ட சோழனின் பெயர்களுள் ஒன்று. \"உடையார் திருப்புலீஸ்வரமுடையார் திருநாமத்துக் காணி குறுங்குடிக்கும், மன்னனார் திருவிடை யாட்டம் வீரநாராயண நல்லூர் திருவாழிக் கல்லுக்கும்\" என்னும் கல்வெட்டுத் தொடர் சிவ பெருமானுக்குக் கொடுக்கப்பட்ட நிலத்துக்குத் திருநாமத்துக் காணி என்றும், திருமால் கோயிலுக்கு விடப்பட்ட நிலத்துக்குத் திருவிடை யாட்டம் என்றும் வழங்கும் வழக்காறுகளைத் தெரிவிக்கின்றன. மன்னனார் என்பது திருமாலின் பெயர். அவர் எழுந்தருளிய காரணம்பற்றியே ஊர் மன்னார்குடி (காட்டுமன்னார்குடி) என்னும் பெயர்பெற்றது. அவ்வூரின் பழம்பெயர் வீரநாராயணநல்லூர் என்ப தாகும். இக்கங்கை கொண்ட சோழபுரத்துக் கல்வெட்டுக்களில் குறிக்கப் பட்ட குறுங்குடி, கண்ணமங்கலம், வீரராஜேந்திர சோழபுரம், மழவதரைய நல்லூர், கிழாய்மேடு, கொல்லாபுரம் முதலான ஊர்கள் இன்றும் அப்பெயர்களுடன் நிலவுகின்றன. முதலாம் ராஜாதிராஜ சோழன். கி.பி.1018-1054 Picture முதலாம் ராஜாதிராஜ சோழன். கி.பி.1018-1054 ராஜராஜசோழரின் மகன் முதலாம் ராஜேந்திர சோழர். அவருடைய மகன்களில் பட்டத்துக்கு வந்தவர்கள் மூவர்.ராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன், வீரராஜேந்திரன். இராசாதிராசன் பிறவியிலேயே பெருவீரமுடையவனாய் விளங்கியதால் இவனுக்கு கி.பி. 1018ல் இளவரசு பட்டம் கட்டி அரசியலில் ஈடுபடுத்தப்பட்டான். தனது தந்தையின் ஆட்சிக் காலத்திலேயே ஏறத்தாழ இருபத்தாறு ஆண்டுகள் இளவரசனாய் இருந்து அரசியலில் பயிற்சி பெற்றவன். இளவரசுக் காலத்திலேயே பாண்டியர், சேரர்,சிங்களர், மேலைச் சாளுக்கியர் என்பாரோடு பெரும்போர் புரிந்து வெற்றிமாலை சூடி புகழ் பெற்றான். தந்தை இறந்த பின் கி.பி.1044ல் முறைப்படி சோழநாட்டு சக்கரவர்த்தியாக "பரகேசரி" ன்னும் பட்டம் பூண்டு ஆட்சிபுரிந்தான். கோப்பரகேசரிவர்மன் ராஜாதிராஜ சோழன் எனும் பெயரோடு கூடிய இந்த சோழன், மிகப் புகழ்வாய்ந்த தனது தாத்தா ராஜராஜசோழன், தந்தை ராஜேந்திர சோழன் இவர்களுக்குப் பிறகு பட்டத்துக்கு வந்தவன். தந்தை காலத்திலேயே இவன் வட இந்திய படையெடுப்பின் போது பல நாடுகளைப் பிடித்து சோழ சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தியவன். இலங்கை, வடக்கே வேங்கி, கலிங்கம் ஆகியவை இவன் வெற்றி கொண்ட பிரதேசங்கள். கடல்கடந்த நாடுகள் பலவற்றை இவன் கைப்பற்றியிருந்த நிலையில் அங்கெல்லாம் புரட்சிகள் ஏற்பட்டபோதும் அவற்றை மிக சாமர்த்தியமாகச் சமாளித்த பெருமை இந்த ராஜாதிராஜனுக்கு உண்டு. இவனுடைய சோழ பெரும்படைகளுக்கு இவனே முன்னின்று தலைமை வகித்து போரில் தானே நேரில் பங்கு கொண்டு தன் வீரத்தை வரலாற்றில் பதிய வைத்த மாவீரன் இவன். இவனுடைய இளம் வயதிலேயே தன் தந்தைக்கு உதவியாக அவர் ஆண்ட காலத்திலேயே பொறுப்புகளைச் சுமந்தவன் இந்த ராஜாதிராஜன். தந்தையும், தனயனும் இணைந்து ஆட்சியைக் கவனித்துக் கொண்டனர். ராஜேந்திர சோழன் காலத்தில் முழு உரிமை பெற்ற ஒரு அரசனாகவே இவன் திகழ்ந்தான். தந்தை நாட்டை நடத்திச் செல்லும்போது இவன் போர்க்களத்தில் யுத்தங்களை நடத்திக் கொண்டிருந்தான். இராசாதிராசன், விசய ராசேந்திரன், சயங்கொண்ட சோழன்,ஆகவமல்ல குலாந்தகன், கல்யாணபுரம்கொண்ட சோழன், வீரராசாதிராசோழன் என்னும் பட்டங்களையும் கொண்டான். ப்ட்டத்தரசி திரைலோக்கியமுடையாள் ஆவாள், உலகுடைய பிராட்டி என்றொரு மனைவியுமிருந்தாள் என்று கன்னியாகுமரி கல்வெட்டொன்றினாலறிய முடிகிறது. கங்கைகொண்ட சோழபுரத்தை தனது தலைநகராக கொண்டு ஆட்சிபுரிந்து வந்தான். இவருக்கு நிறைய பிள்ளைகள். அசுவமேத யாகம் செய்த சோழன் என்ற பெயரும் இவனையே சாறும். இளவரசு காலமுதல் உயிர் துறக்கும் வரையில் தன் வாழ் நாளின் பெரும்பகுதியை போர்களத்தில் கழித்து, தனது தந்தை முதலாம் இராசேந்திர சோழன் அடைந்த பெரும் வெற்றிகளுக்கு காரணமாயிருந்த இவனது வாழ்க்கை வீரம் நிரம்பிய வாழ்க்கை எனலாம். இராசாதிராசன் சீவல்லபன் மதனராசன் என்ற சிங்கள மன்னனை கி.பி 1040ல் தோற்கடித்தான் என்று கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. இலங்கையில் போர். இலங்கை கி.பி. 993 முதல் 1077 வரையில் சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இலங்கையில் சோழர் ஆட்சி முழுமையாக இல்லாமல் ஒருசில பகுதிகளில் மட்டுமே இருந்தது. ஆகையால் இலங்கை சிங்கள அரசன் ஐந்தாம் மகிந்தன் என்பான் அடிக்கடி தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த காரணத்தால், ராஜேந்திர சோழன் அங்கு படையெடுத்துச் சென்று கி.பி. 1017இல் மகிந்தனைத் தோற்கடித்து சிங்கள நாட்டைக் கைப்பற்றியிருந்தான். மகிந்தன் அங்கு 12 ஆண்டுகள் வாழ்ந்த பின் இறந்து போனான். ஆனால் சோழர் ஆட்சிக்கு எதிராக சிங்களர்கள் அடிக்கடி கலகம் விளைத்துக் கொண்டு இருந்தனர். இந்த நிலைமையை மாற்ற எண்ணிய ராஜாதிராஜன் 95000 வீரர்களைக் கொண்ட சோழர் படையை அழைத்துச் சென்று கலகக்காரர்களை இலங்கையின் தெற்குப் பகுதியான ரோகணா வரை அடித்துத் துரத்திவிட்டார். பிறகு தான் பிடித்த இலங்கையின் சிங்களப் பகுதிகளுக்கு அரசரானார். சோழர்களுக்கு எதிரான போரில் ஈடுபட்டிருந்த சிங்களர்களுக்கு பாண்டியர்கள் உதவி புரிந்து வந்தனர். சிங்களருக்கும் பாண்டியருக்கும் சோழர்கள் பொது எதிரிகள் என்பதால் ஒன்று சேர்ந்து கொண்டனர். சிங்கள அரச குடும்பத்தாரோடு பாண்டியர்கள் திருமண உறவுகளும் வைத்துக் கொண்டிருந்தனர். ராஜாதிராஜ சோழன் காலத்தில் சிங்கள பாண்டிய உறவு உச்ச கட்டத்தில் இருந்தது, இலங்கை அரசன் விக்கிரமபாகு அங்கு இருந்த சோழ படைகளின் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடுத்தான். அவனுக்கு உறுதுணையாக இருந்தவன் பாண்டிய இளவரசன் விக்கிரம பாண்டியன். இவர்களோடு வடக்கே கன்னோஜியின் இளவரசன் ஒருவனும் துணைக்கு நின்றான். சோழர் படைகள் இந்த பொது எதிரிகளோடு தீரமாகப் போரிட்டு இந்த இளவரசர்களை இரக்கமின்று கொன்றார்கள். இவற்றையெல்லாம் சிங்கள பெளத்த நூலான மஹாவம்சம் தெளிவாக எடுத்துக் கூறுகிறது. இந்த மஹாவம்சம் பெளத்தர்களுக்காக பெளத்தர்களால் எழுதப்பட்டதானதால் இதன் கூற்று அன்றைய வரலாற்றுச் செய்திகளை அப்படியே எடுத்துரைக்கிறது. சோழர் படைகள் சற்றும் கருணை காட்டாமல் இந்தக் கொடிய எதிரிகளை இரக்கமின்றி அழித்தொழித்தார்கள் என்பது தெரிகிறது. சோழர்களின் இந்த மனப்பான்மையை, செயலை மஹாவம்சம் கண்டிக்கிறது. இதை மனிதாபிமானமற்ற செயலாக வர்ணிக்கிறது. இலங்கையில் சோழர்கள் ஆட்சிக்குட்பட்ட தமிழ்ப் பகுதிகள் தனியான தமிழ்ப் பிரதேசமாக நிர்வகிக்கப்பட்டன. தென்கோடி இலங்கை மட்டும் எப்போதும் சிங்களவர்களின் பிரதேசமாகத்தான் இருந்து வந்திருக்கிறது. சிங்கள அரசன் விக்கிரமபாகுவின் மகன் கிட்டி என்பவன் 1058இல் விஜயபாகு எனும் பெயரோடு சிங்களருக்குத் தலைமை ஏற்றான். சோழர் படைத் தளபதிகள் இந்த சிங்களர்களைப் பிடித்துத் தண்டித்து தமிழ்நாட்டு வணிகர்களைக் காப்பாற்றினர். சாளுக்கியர்களோடு போர். சாளுக்கியருடன் நடந்த போரில் கம்பிலி நகரத்திலிருந்த சாளுக்கியரது மாளிகை தகர்தெரியப்பட்டு இராசாதிராசனின் வெற்றித்தூன் நிறுவப்பட்டதாக கலிங்கத்துப்பரணியில் கூறப்பட்டுள்ளது. (கம்பிலி ஸ்யத்தம்பம் நட்டதும்) இப்பொர் இவனால் மேலைச் சாளுக்கியர் மீது நடத்தப்பட்ட இரண்டாவது போர் என்று தெரிகிறது. குந்தள இராச்சியம் மீது படை எடுத்து சென்ற இராசாதிராசன் கிருஸ்ணா ஆற்றுக்கரை ஓரத்தில் இருந்த பூண்டூரில் பெரும் போர் புரிந்து தெலுங்க விசையன், அதிராசன், அக்கப்பையன், கொண்டையராயன், முஞ்சன்,தண்டநாயகன், தணஞ்செயன், வீரமாணிக்கன் என்னும் சாளுக்கிய தலைவர்களை வென்று நகரை எரியூட்டி நகரில் புலி வடிவம் பொறிக்கப்பட்ட வெற்றித்தூன் ஒன்றையும் நாட்டினான். தனது பட்டத்து யானையை சிறுதுறை,பெருந்துறை,தெய்வவீமகேசி என்ற மூன்று துறைகளிலும் நீராட்டி வராகமுத்திரை பொறிக்கப்பட்ட வராகக் குன்றில் தன்னுடைய புலி முத்திரையை பொறிக்கச்செய்து வெற்றித்தூனையும் நிறுவியுள்ளான். இந்த அவமானத்தை தாங்கமுடியாத சாளுக்கிய மன்னன் ஆகவமல்லன் பெரும் படையுடன் வந்து இராசாதிரானுடன் மீண்டும் போர் தொடுத்தான்.இராசாதிராசன் இப்போரில் வெற்றி அடைந்து ஆகவமல்லனின்ன் தலை நகர் கல்யாணபுரத்தையும் கைப்பற்றி அங்கிருந்த அரண்மனையையும் இடித்து தன் வெற்றிக்கு அடையாளமாக அந்நகரில் வீரபிடேகம் செய்துகொண்டு விசயராசேந்திரன் என்னும் பட்டப்பெயரையும் புணைந்து கொண்டான். குந்தளநாட்டின் மேல் மும்முறை படை எடுத்துச்சென்று நிகழ்த்திய வெற்றிச்செயல்களை கலிங்கத்துப்பரணியில் சயங்கொண்டாரும், விக்கிரம சோழன் உலாவில் ஒட்டக்கூத்தரும் பாடியுள்ளனர். ராஜாதிராஜன் தென் கர்நாடகப் பிரதேசங்களின் மீது படையெடுத்து சாளுக்கியர்களின் பல பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டார். உச்சங்கி, நுளம்பவாடி, கடம்பலிங்கே, கோகாலி போன்ற இடங்கள் அவை. இந்த வெற்றிகள் சோமேஸ்வரனைக் கலங்க அடித்தது. அவன் தனக்குத் தானே "திரைலோக்கியமல்லன்" எனும் விருதினைக் கொடுத்துக் கொண்டிருந்தான். வேங்கியில் சோழர்களின் உறவினர்களான வேங்கி அரசர்களை வென்று அங்கு தன் சார்பில் ஒரு பொம்மை அரசனை நியமித்துவிட்டு வந்திருந்தான் சோமேஸ்வரன். தன் தலைநகரை நோக்கி சோழர்கள் வருவதறிந்து தன் நாட்டைக் காத்துக்கொள்ள அவசரமாக சாளுக்கிய நாட்டுக்குத் திரும்பினான் அவன். சாளுக்கிய படைகளும், மாபெரும் சோழர் படைகளும் கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்த கொப்பம் எனுமிடத்தில் சந்தித்தது. ராஜாதிராஜனின் இறுதி நாட்கள். வடக்கே சாளுக்கியர்களோடு கிருஷ்ணா நதிக்கரையில் நடந்த யுத்தத்தில் பல போர்க்களங்களையும், பல வெற்றிகளையும் பெற்ற ராஜாதிராஜன் கொப்பம் போரில் தன்னந்தனியாகப் போரிட்டு மாண்டுபோனான். இந்த யுத்தத்தில் இவர் தன்னுடைய யானையின் மீதிருந்து போரிடுகையில் வேல் பாய்ந்து மாய்ந்து போனதால் இவருக்கு "யானைமேல் துஞ்சிய தேவர்" எனும் பட்டப்பெயர் கிடைத்தது. சோழர் படைகள் தோல்வியடையும் போல் இருந்த சமயத்தில் இரண்டாம் ராஜேந்திரர் போர்க்களத்திலேயே முடிசூட்டிக் கொண்டு போரைத் தொடர்ந்து நடத்தினார். வெறித்தனமான போர் நடைபெற்றது. வெற்றி சோழர்களுக்கே தன் தந்தையார் ராஜேந்திரனுக்காக போர்க்களங்களைத் தன் இளம் வயதில் கண்ட ராஜாதிராஜன் கடைசியில் தன் உயிரை ஒரு போர்க்களத்திலேயே விட்டதன் மூலம் அவன் ஒரு போர்வீரனாகவே வாழ்ந்தான் வீழ்ந்தான் எனும் பெருமைக்கு உரியவனாகிறான். ராஜாதிராஜன் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற சில காலத்துக்குள் இரண்டாம் ராஜேந்திரனை இளவரசாக நியமித்து நிர்வாகத்திலும் போர்களிலும் தனக்கு உதவி செய்யும்படி நியமித்துக் கொண்டார். ராஜாதிராஜன் காலமானவுடன் இந்த இரண்டாம் ராஜேந்திரன் மன்னனாக முடிசூட்டிக் கொண்டு சோழ மண்டலத்தை ஆளத் தொடங்குகிறான். திருப்பைஞ்ஞீலி திருகோயில் இக்கோயிலில் ராஜேந்திரசோழன் ராஜாதிராஜன், ராஜராஜதேவன் கோனேரின்மை கொண்டான் ஆகிய சோழ மன்னர்கள் காலங்களில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளில் இத்தளம் இராஜேந்திர சிங்கவள நாட்டைச் சேர்ந்தது என்றும், இராஜத்திராஜா வளநாட்டுவடவழிநாட்டைச் சேர்ந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. இறைவனின் பெயர் திருப்பைஞ்ஞீலி மஹாதேவர் என்றும் கதலிவசந்தர் என்றும் கூறப்படுகிறது. கோனேரின்மை கொண்டான் இத்தலத்தில் ஏழுநிலை கோபுரத்தை கட்டத் தொடங்கினான் என்பதையும் பாண்டிய மன்னர்கள் செய்த திருப்பணிகளை இத்தல கோபுரவாயிலில் உள்ள கல்வெட்டுகளில் அறியலாம். பாண்டியர்கள் திருப்பணி மண்டபங்கள் முதலியவற்றில் பாண்டியரின் அச்சுக்களை பொருத்தியுள்ளார். இக்கோயில் புலிவரிக்கோடுடைய கற்களினால் கட்டப்பட்டுள்ளது. முதலாம் ராஜாதிராஜன் கால செப்பேடு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாம் ராஜாதிராஜன் கால செப்பேடு. நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையிலிருந்து ஆனதாண்டவபுரம் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில், திருஇந்தளூர் எனும் ஊர் உள்ளது. அந்த ஊரின் உட்கிராமமாக, கழுக்காணி முட்டம் என்ற பகுதி உள்ளது. கழுக்காணி முட்டத்தில், பிற்காலச் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கைலாசநாதர் கோவில் உள்ளது.கோவிலுக்கு முன், மண்டபம் கட்டும் பணிக்காக குழி தோண்டியபோது, பத்து அடி ஆழத்தில் 12 செப்புத் திருமேனிகள், பூஜைப் பொருட்கள், வாத்தியக் கருவிகள், சோழர் காலத்தைச் சேர்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செப்பேடுகள் கிடைத்துள்ளன.பொதுவாக, செப்பேட்டு முத்திரைகளில் உள்ள சின்னங்கள் புடைப்பாக அமைக்கப்பட்டிருக்கும். இந்தச் செப்பேட்டில் சின்னங்கள் பள்ளமாக பொறிக்கப்பட்டு உள்ளன. இந்தச் செப்பேடு, முதலாம் ராஜாதிராஜன், தனது 35வது ஆட்சி ஆண்டில் (கி.பி. 1053) அளித்த அறக்கொடையைக் குறித்து வெளியிடப்பட்டது.இவர், கங்கைகொண்ட சோழன் என வரலாற்றில் மிகப் புகழ் பெற்ற முதலாம் ராஜேந்திரச் சோழனின் மூத்த மகன். ஆம், ராஜராஜ சோழனின் பேரனே முதலாம் ராஜாதிராஜன். இவரோடு உடன் பிறந்த மற்ற சகோதரர்கள், இரண்டாம் ராஜேந்திரன், வீர ராஜேந்திரன் மற்றும் அதிராஜேந்திரன் ஆகிய மூவர்.முதலாம் ராஜாதிராஜனின் தந்தையான முதல் ராஜேந்திரச் சோழன், தன்னுடைய இறுதிக்காலத்தில், தன்னுடைய மக்கள் நால்வரையும் அழைத்து, எப்போதும் ஒற்றுமையோடு இருக்க வேண்டும் எனவும், நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதையே குறிக்கோளாகக் கொள்ள வேண்டுமெனவும் கூறி, அவர்களிடம் அதற்கான உறுதியைப் பெற்றுக்கொண்டான் என, இந்தச் செப்பேடுகளில் காணப்படுகிறது. முதலாம் ராஜாதிராஜனின் இறுதி ஆட்சி 36 ஆண்டுகள். மேலைச் சாளுக்கிய மன்னன் ஆகவமல்லன் சோமேஸ்வரனை எதிர்த்து, கொப்பத்தில் செய்த போரில், போர்க்களத்திலேயே யானையின் மீது அமர்ந்தவாறே உயிரை ஈந்தவன், இம்மன்னன்.ஏற்கனவே, அண்ணன் ராஜாதிராஜனால் இளவரசு பட்டம் சூட்டப் பெற்றிருந்த இரண்டாம் ராஜேந்திரன், அந்தப் போர்க்களத்திலேயே சோழ அரசனாக முடிசூட்டிக் கொண்டு, தலைமையின்றி சிதறிய சோழப்படையை ஒழுங்குபடுத்தி, தலைமையேற்று, ஆகவமல்லனின் தம்பி ஜெயசிம்மனைக் கொன்று, வெற்றிவாகை சூடி, கொல்லாபுரத்தில் தன் வெற்றித் தூணையும் நிறுவியவன். கொப்பத்துப் போருக்குச் செல்லும் முந்தைய ஆண்டில் (கி.பி., 1053), அண்ணனால் அளிக்கப்பட்ட இவ்வாணை, அவனது தனயன் இரண்டாம் ராஜேந்திர சோழனின் ஒன்பதாம் ஆட்சி ஆண்டில் (கி.பி., 1061) வரியிலிட்டுச் செப்பேடாக்கித் தரப்பட்டு உள்ளது. இரண்டாம் ராஜேந்திரச் சோழன், நாடு திரும்பிய பின், தன் அண்ணன் முதல் ராஜாதிராஜன் போருக்குச் செல்வதற்கு முன் வழங்கிய தானத்தை உறுதி செய்து வழங்கியதே, இப்போது கிடைக்கப் பெற்ற செப்பேடு. தமிழகத்தில், ஏன், இந்தியாவிலேயே கிடைத்துள்ள செப்பேடுகளில் பெரிய செப்பேட்டுத் தொகுதியாகக் கருதப்பட்ட முதலாம் ராஜேந்திரனின் 57 கரந்தைச் செப்பேட்டுத் தொகுதிகளை விட அளவிலும், எண்ணிக்கையிலும் பெரிதாக விளங்குவது இச்செப்பேடு.தமிழ்ச் சிங்கக் கூட்டமாம் நம்மை, தடம் மாற்றிப் போடுவதற்கு இந்தத் தரணியில் எவரும் இல்லை. பழம்பெரும் தஞ்சை மண்ணில் சோழ மன்னர் ராஜாதிராஜன் வழிவந்தோர் அன்றைக்கே திட்டமிட்டு, நமக்கென புதைத்து வைத்த 86 செப்பேடுகளும் அதைத் தான் உறுதிப்படுத்துகின்றன. (ஜூன் 18,2010.) இரண்டாம் ராஜேந்திர சோழன். கி.பி. 1054 1063 Picture சோழ ராஜகோவில். நாகர் கோவில் 11. ராஜேந்திர சோழதேவன் த/பெ. 1ம் ராஜேந்திரனின் 2வது மகன் 1051-1063 Draft இரண்டாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1054 முதல் 1063) ராஜாதிராஜ சோழன் பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம். அவனுக்குப் பிறகு சோழ மண்டலத்தின் மன்னனாக முடிசூட்டிக் கொண்டவன் இந்த 2ஆம் ராஜேந்திரன். ராஜாதிராஜன் போர்க்களத்தில் யானைமேல் துஞ்சிய தேவன் எனும் பெருமையோடு மாண்டுபோன பின்பு அவனுடைய தம்பியான இவன் "ராஜகேசரி" எனும் பட்டப்பெயருடன் பட்டத்துக்கு வந்தான். இவனது தந்தை ராஜேந்திரன், அண்ணன் ராஜாதிராஜன் ஆகியோர் ஆட்சி நடத்திய கங்கை கொண்ட சோழபுரம் தான் இந்த மன்னனுக்கும் தலைநகராக விளங்கியது. வழக்கம் போல எல்லா மன்னர்களையும் போல இவனுக்கும் பல மனைவியர் இருந்தனர். அவர்கள் ராஜராஜ அருள்மொழியார் எனும் தென்னவன் மாதேவியார், உருத்திரன் அருள்மொழி எனும் பிருதிமாதேவியார், கோகிலனடிகள் ஆகியோராவர். 2ஆம் ராஜேந்திர சோழன் தன்னுடைய மூத்த சகோதரனும் இவனுக்கு முந்திய சோழ அரசனாக இருந்தவனுமான ராஜாதிராஜனுக்குப் பிறகு பட்டத்துக்கு வந்தவன். இவனுடைய தமையனாரான ராஜாதிராஜன் கொப்பம் போர்க்களத்தில் யானைமேல் துஞ்சியபோது இவனும் அந்தப் போரில் ஈடுபட்டு வீரமாகப் போராடினான். இவனுடைய தீரமிக்க போரினால்தான் போரின் முடிவு சோழர்களுக்கு சாதகமாகவும் சாளுக்கியன் சோமேஸ்வரனுக்கு அழிவாகவும் முடிந்தது. சாளுக்கியன் சோமேஸ்வரனுக்கு எதிரான கொப்பம் யுத்தம். மேலைச் சாளுக்கிய மன்னர்களுக்கு எதிரான யுத்தம் சோழர்கள் நெடுநாட்களாக தொடர்ந்து வந்திருக்கின்றனர். முதலாம் ராஜேந்திர மன்னன் காலத்திலேயே சாளுக்கியன் சத்யாஸ்ரேயனுக்கு எதிராகப் போரிட்ட காலம் தொட்டு இந்த விரோதம் தொடர்ந்து வந்திருக்கிறது. அது தவிர ராஜராஜ சோழனுடைய மகளான குந்தவியை வேங்கிநாட்டு இளவரசனுக்குத் திருமணம் செய்து கொடுத்து உறவு கொண்டதும், அவன் மகனுக்கு முதலாம் ராஜேந்திர சோழன் தன் மகள் அம்மங்கையாரைத் திருமண உறவு வைத்துக் கொண்டதும் சாளுக்கியர்களின் எரிச்சலை அதிகப்படுத்தியிருந்ததை முன் பதிவுகளில் பார்த்தோம். ராஜேந்திர சோழனுக்குப் பிறகு அவன் மகன் ராஜாதிராஜன் காலத்தில் இந்த மேலைச் சாளுக்கியர்களோடு துங்கபத்திரை நதிக்கரையில் அமைந்த ஊரான கொப்பம் எனும் இடத்தில் 1053-54இல் உக்கிரமான போர் நடந்தது. ராஜாதிராஜனே இந்தப் போரில் சோழர் படையை தலைமை வகித்து வழிநடத்திச் சென்று போரிட்டான். யானை மேல் இருந்து போரிட்ட ராஜாதிராஜனை குறிவைத்து சாளுக்கியர்கள் வேல் வீசித் தாக்கி அவன் மரணத்துக்குக் காரணமானார்கள். அதே நேரத்தில் அவன் தம்பி 2ஆம் ராஜேந்திரன் மற்றொரு சோழர் படைக்குத் தலைமை தாங்கி போர்புரிந்து கொண்டிருந்தான். அண்ணன் யானை மேல் இருந்து கொல்லப்பட்டான் எனும் செய்தி அறிந்து ஓடோடி வந்தான் 2ஆம் ராஜேந்திரன். வீரமாகப் போரிடும் தம்பியைக் குறிவைத்து சாளுக்கியர்கள் தாக்கத் தொடங்கினார்கள். ஆனால் தந்தைக்குச் சமமான வீரத்தோடு போரிட்ட 2ஆம் ராஜேந்திரனை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. போர்க்களத்தில் ராஜாதிராஜன் மாண்ட செய்தி கேட்டு சோழர் படை மனம் தளர்ந்து பின்வாங்கிய நேரத்தில் தன்னை சோழ மன்னனாகப் பிரகடனப் படுத்திக் கொண்டு 2ஆம் ராஜேந்திரன் சோழர் படைக்கு தைரியக் கூறி அணிவகுத்து போரிடச் செய்தான். போர்க்களத்தில் நடந்த இந்த தீரமிக்க செயலால் சோழர் படை ஒன்று திரண்டு தங்கள் முழு பலத்தையும் பிரயோகித்து சாளுக்கியர்களைத் தாக்கித் துவம்சம் செய்யத் தொடங்கியது. ராஜராஜ சோழன் காலத்திலும் அவர் மகன் ராஜேந்திர சோழன் காலத்திலும் இருந்த பல சேனைத் தலைவர்கள் சோழர் படையில் இருந்ததாலும், தலைவன் மாண்டுபோன பின் அதே போர்க்களத்தில் அவன் தம்பி தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு இப்படியொரு தீரமான போரைச் செய்வான் என்று எதிர்பார்த்திராத சாளுக்கியர்கள் பயங்கரமான தோல்வியைச் சந்திந்தார்கள். ராஜாதிராஜன் கல்வெட்டுகளில் எல்லாம் அவன் போர்க்களத்தில் மாண்ட செய்தியையும், அவனோடு அவனது தம்பிகள் போரிட்டதையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்தப் போரில் 2ஆம் ராஜேந்திரனும் காயமடைந்த போதிலும், அதனால் சோர்வடையாமல் போரிட்டிருக்கிறான் என்பது தெரிகிறது. போரின் முடிவில் சாளுக்கியர்கள் பல படைத் தலைவர்களை களபலி கொடுத்து தோல்வியுற்றார்கள். இந்த யுத்தம் பற்றி கர்நாடக மாநிலம் கோலாரில் காணப்படும் ஒரு கல்வெட்டு கூறும் செய்தியின் சாரம் இது: "கோப்பரிகேசரிவர்மன் எனும் ராஜேந்திர தேவரின் 3ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில், இரட்டபாடி நாட்டை வென்றதைக் குறிக்கும் விதமாக கொல்லாபுரம் எனுமிடத்தில் எழுப்பப்பட்ட வெற்றித் தூணில் ஆதவமல்லனை புகழ்மிக்க ஆற்றங்கரையில் கொப்பம் எனுமிடத்தில் வீழ்த்தியதையும், அவனுடைய யானைகள், குதிரைகள் பலவற்றைக் கவர்ந்து கொண்டதையும், பெண்களையும் ஏராளமான செல்வங்களையும் அபகரித்துக் கொண்டதையும் அந்தப் போரில் மாபெரும் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதத்தில் வெற்றிச் சிம்மாதனத்தில் அமரவைத்து எழுதப்பட்டது." என்று போகிறது அந்தக் கல்வெட்டு. இந்த கொல்லாபுரம் எனும் இடம் கோலாப்பூர் எனத் தெரிகிறது. சோழர்கள் முன்பு பெற்ற வெற்றிக்கு ஒரு தூணும், இப்போது 2ஆம் ராஜேந்திரன் பெற்ற வெற்றியைக் குறிக்க மற்றொரு தூணும் நாட்டப்பட்டது என்பதாகத் தெரிகிறது. இந்த கொப்பம் யுத்தம் பற்றியும் சாளுக்கியர்களின் தோல்வி, சோழர்களின் வெற்றி பற்றியெல்லாம் சோழர் வரலாறுகள் தான் தெரிவிக்கின்றன. சாளுக்கிய வரலாற்றில் இவை பற்றிய குறிப்புகள் இல்லை. இவனுடைய அண்ணன் ராஜாதிராஜன் தனக்குப் பிள்ளைகள் இருந்த போதும், தனது தம்பியான இந்த இரண்டாம் ராஜேந்திரனைத்தான் போரிலும் துணையாக, தனக்குப் பின் ஆட்சிக்கும் வாரிசாக நியமித்தான். அவன் விருப்பப்படி போரில் அவன் மாண்டதும் தம்பி ராஜேந்திரன் அரசனாக அறிவித்துக் கொண்டு போரைத் தொடர்ந்து நடத்தி வெற்றியையும் பெற்றான். இந்தச் செய்திகளையும் சோழர்கள் கால கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன, சாளுக்கியர்கள் இதுகுறித்து எதுவும் சொல்லவில்லை. தமிழிலக்கியமான கலிங்கத்துப்பரணியிலும், விக்கிரமசோழன் உலாவிலும் இந்த குப்பம் யுத்தம் பற்றி சிறப்பாகப் பேசப்படுகிறது. ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திரனுக்குப் பிறகு அவனுடைய பிள்ளைகள் ராஜாதிராஜன் தொடங்கி வரிசையாக அவனது தம்பிமார்கள் அரசுக்கட்டிலில் ஏறிய செய்தி கவனிக்கத் தக்கது. கூடல் சங்கம யுத்தம். கி.பி. 1062இல் நடந்த இந்த யுத்தம் சோழர்களுக்குப் பெரும் வெற்றியை ஈட்டித் தந்த யுத்தம். சாளுக்கிய மன்னன் சோமேஸ்வரனுக்கும் இரண்டாம் ராஜேந்திரனுக்குமிடையே நடந்த மிகக் கடுமையான யுத்தம் இது. இங்கு கூடல் எனக் குறிப்பிடுவதிலிருந்து இரண்டு நதிகள் சங்கமிக்குமிடம் என்பது தெரிகிறது. ஆனால் அவை எந்தெந்த நதிகள். துங்கபத்திரையும் கிருஷ்ணா நதியும் சங்கமிக்கும் இடம் இது. கொப்பம் யுத்தத்தில் சாளுக்கியர்கள் சோழர்களிடம் தோற்று ஓடிப்போனார்கள். சோழ மன்னன் ராஜாதிராஜன் யானைமேல் துஞ்சிய போதும் அவன் இளையவனான 2ஆம் ராஜேந்திரன் போரைத் தொடர்ந்து நடத்தினான். ஓடிப்போன மேலைச் சாளுக்கியனை வலிந்து போருக்கு இழுத்து நடத்திய யுத்தம் இந்த கூடல் யுத்தம். இதில் சாளுக்கியர்களின் மன்னன் முதலாம் சோமேஸ்வரன் தன்னுடைய தளபதி தண்டநாத வாலதேவன் தலைமையில் ஒரு பெரும்படையுடன் யுத்தம் செய்தான். சோழர் படைக்கு 2ஆம் ராஜேந்திரன் தலைமை வகித்து நடத்தினான். நடந்த இடம் துங்கபத்ரா நதியும் கிருஷ்ணா நதியும் சங்கமிக்கும் இடம். சோழர்களுக்கு ராஜேந்திரன் (2)வின் தம்பி ராஜமமேந்திரனும் மற்றொரு தம்பியான வீரராஜேந்திரனும் துணையாக நின்றனர். போர் கடுமையாக நடந்தது. சோழர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சோமேஸ்வரனின் பிள்ளைகளான விக்கலன் என்பவனும் சிங்கணன் என்பவனும் தோற்று ஓடிப்போனார்கள். இந்தப் போர் சோழர்களின் பக்கம் சந்தேகத்துக்கு இடமின்றி வெற்றியாக முடிவடைந்தது. வீரராஜேந்திர சோழன் காலத்துக் கல்வெட்டு ஒன்று இந்தப் போரைப் பற்றி கூறுவதைப் பார்ப்போம். சாளுக்கிய மன்னன் கங்கபாடியிலிருந்து துங்கபத்திரைக் கரைக்கு ஓடினான். அவனோடு வில்வித்தையில் தேர்ந்த அவனுடைய தளபதிகளும் கையிலிருந்து ஆயுதங்களைப் போட்டது போட்டபடி ஓடினார்கள். ஓடியவர்களுக்குத் தலைமை வகித்து ஓடியவன் விக்கலன் எனும் சாளுக்கிய படைத் தளபதி. இந்தப் போரில் மண்டனநாயகன் சாமுண்டராஜன் எனும் தளபதியின் தலை வெட்டப்பட்டது. அவனுடைய அழகிய மகளான நாகலை என்பவள் முகத்தில் மூக்கு சேதப்படுத்தப்பட்டது. தோல்வியினால் ஏற்பட்ட கோபமும் ஆத்திரமுமாக சாளுக்கியர்கள் மூன்றாம் முறையாகவும் சோழர்களை எதிர்த்து வந்தார்கள். முந்தைய தோல்விகளுக்குப் பழிவாங்கிவிடத் துடித்தார்கள். ஆனால் அவர்களது வேகத்தை முறியடித்து சோழ இளவரசன் சாளுக்கிய ஆகவமல்லனின் இரண்டு மகன்களான விக்கலன், சிங்கணன் என்பவர்களைத் தோற்கடித்தான். கி.பி.1062இல் இந்தப் போர் நடைபெற்றது. மேலைச் சாளுக்கிய ராஜ்யம் வீழ்ந்த பின்னர் அவர்கள் வேங்கியை நோக்கிப் படைகொண்டு போனார்கள். அங்கும் சோழர்களிடம் பலத்த அடிவாங்கி ஓடினார்கள். 2ஆம் ராஜேந்திரன் தன் அண்ணன் ராஜாதிராஜனுக்கு உற்ற துணையாக இருந்து வந்தான். அண்ணன் போரில் ஈடுபட்ட காலங்களில் நாட்டு நிர்வாகத்தை இவன் தான் கவனித்து வந்தான். இவன் யுத்தத்திலும் நிர்வாகத்திலும் மட்டுமல்லாமல் கலை, இலக்கியம், நாட்டியம், நாடகம் என்று ஆர்வம் காட்டினான். தஞ்சை பிரஹதீஸ்வரர் கோயிலில் நடந்த ராஜராஜேஸ்வர நாடகத்தைப் பாராட்டி அதனை நடத்தியவர்களுக்க் அரிய பரிசுகளை வழங்கி கெளரவித்தான். அந்த நாட்டிய நாடகத்தை நடத்திய நடனக் கலைஞருக்கு 120 கலம் அதாவது 60 மூட்டை நெல் கொடுத்ததோடு, ஒவ்வோராண்டும் இதுபோன்ற நாடகங்களை நடத்தவும் ஆதரவு கொடுத்தான். இவனுடைய தம்பி வீரசோழன் என்பான் உறையூரில் இருந்து வந்தான். அவனுக்கு இந்த ராஜேந்திரன் 2 கரிகால சோழன் எனும் பட்டத்தை வழங்கி கெளரவித்தான். இவனுடைய மகனான கடாரங்கொண்ட சோழனுக்கு சோழஜனகராஜன் எனும் பட்டத்தை வழங்கினான். இவனுடைய இன்னொரு மகன் இரட்டைபாடி கொண்ட சோழனையும் கெளரவித்தான். இந்த இரண்டாம் ராஜேந்திரன் தன்னுடைய முன்னோர்களைப் போலவே பாண்டிய நாட்டையும் தன்னுடைய நாட்டோடு இணைத்து நிர்வகித்து வந்தான். சாளுக்கியர்களை வென்று, வேங்கியைப் பாதுகாத்து அதன் பிறகு இவன் கலிங்கத்தின் மீதும் படையெடுத்தான். கலிங்கம் என்பது இப்போதைய ஒடிஷா பகுதிகள். இலங்கையும் இவனது படையெடுப்புக்குத் தப்பவில்லை, அங்கு நிகழ்ந்த கலவரங்களை அடக்க அங்கும் சென்று வெற்றி பெற்றான். இந்த படையெடுப்புகளுக்குக் காரணமாக இருந்த நிகழ்ச்சிகள் கலிங்கத்து மன்னன் வீர சலமேகன் இலங்கை அரசன் மனபரணனுக்கு உதவியாக இருந்து கலகத்துக்குத் துணை நின்றதுதான். இலங்கை, சாளுக்கியம், கலிங்கம் தவிர வடக்கே அயோத்தி, கன்யாகுப்ஜம், ரெட்டபாடி, கடாரம் ஆகிய பகுதிகளும் இவனுடைய ஆளுகையின் கீழ் இருந்து வந்தது. கலிங்கத்துப் போரில் கலிங்க மன்னன் மனாபரணன் இறந்து போனான் அவன் இரண்டு மகன்கள் சிறைபிடிக்கப்பட்டனர். இப்படியொரு வீரமும், விவேகமும், நல்ல நிர்வாகமும், எதிரிகளை அடக்கி வைத்திருப்பதிலும் சிறந்து விளங்கிய 2ஆம் ராஜேந்திர சோழன் கி.பி. 1063இல் இறந்தான். இவனைத் தொடர்ந்து இவன் தம்பி வீரராஜேந்திரன் பட்டத்துக்கு வந்தான். வீரராஜேந்திர சோழன் கி.பி.1063- 1070 Picture வீரராஜேந்திர சோழன் த/பெ. ராஜேந்திர சோழதேவன் கி.பி.1063- 1070 வீரராஜேந்திரன்இரண்டாம் இராஜேந்திர சோழனைத் தொடர்ந்து சோழ நாட்டு ஆட்சிபீடம் ஏறியவன் வீரராஜேந்திர சோழன். இவன் இரண்டாம் இராஜேந்திரனின் தம்பி ஆவான். இவனுடைய காலம் சோழ நாட்டின் வரலாற்றில் பிரச்சினைகள் மிகுந்த காலமாயிருந்தது. தெற்கு, வடக்கு இரு புறங்களிலுமிருந்தும் போர்களையும், போட்டிகளையும் சந்திக்க வேண்டியிருந்தது. போர்கள் வீரராஜேந்திரன் சோழர்களின் பரம்பரை எதிரிகளான சாளுக்கியருடன் பல போர்களை நடத்த வேண்டியிருந்தது. கிழக்குச் சாளுக்கியப் பகுதியான வேங்கி மீது சோழருக்கு இருந்த ஈடுபாடே இப் போர்களுக்கு முக்கிய காரணம் எனலாம். அத்துடன், தெற்கில், பாண்டி நாட்டிலும், ஈழத்திலும் சோழரின் மேலாண்மையைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தொடர்ந்து போராட வேண்டியிருந்தது. சாளுக்கியப் போர்கள் வீரராஜேந்திரன் சாளுக்கியருடன் நடத்திய கடுமையான போர்கள் பற்றிய தகவல்களை அவன் காலத்திய கல்வெட்டுக்கள் எடுத்தியம்புகின்றன. சாளுக்கியரை முறியடித்துச் சோழர் படை பெருவெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அவமானமுற்ற சோமேஸ்வரன் மீண்டும் ஒரு போருக்கு அழைப்பு விடுத்தான். அவன் முன்னர் தோல்வியடைந்த அதே கூடல் சங்கமம் என்னும் இடத்தைப் போருக்கான இடமாகவும் குறித்திருந்தான். அழைப்பை ஏற்ற வீரராஜேந்திரன் படைகளுடன் குறிப்பிட்ட இடத்துக்கு அருகே முகாமிட்டுக் காத்திருந்தான். போருக்காகக் குறிக்கப்பட்ட தினமான அன்று சாளுக்கியப் படைகள் தென்படவில்லை. ஒரு மாதம் வரை காத்திருந்த வீரராஜேந்திரன் சுற்றியிருந்த சாளுக்கியப் பகுதிகளில் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, துங்கபத்ரா நதிக்கரையில் வெற்றிக்கம்பம் ஒன்றையும் நிறுவினான். தானே அழைப்பு விடுத்த போருக்குச் சோமேஸ்வரன் வராது விட்ட காரணம் தெரியவில்லை ஆனாலும், இந் நிகழ்வினால் முன்னரிலும் கூடிய அவமானப்பட்ட சோமேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகின்றது. கூடல் சங்கமத்தில் இருந்து கீழைச் சாளுக்கியர்களின் தலைநகரான வேங்கிக்குச் சென்ற வீரராஜேந்திரனின் படைகள் அங்கே சோழர் ஆதிக்கத்துக்கு எதிரான கிளர்ச்சிகளை முறியடித்தன. இப் போரில் வீரராஜேந்திரன், ஜனநாதன் என்பவன் தலைமையிலான மேலைச் சாளுக்கியப் படைகளைக் கிருஷ்ணா நதிக் கரையில் முறியடித்தான். வேங்கியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து கீழைச் சாளுக்கியர் பகுதி முழுவதையும் வீரராஜேந்திரன் அடிப்படுத்தினான். விஜயாதித்தன் என்னும் கீழைச் சாளுக்கிய இளவரசனை வேங்கியில் மன்னனாக்கினான். கலிங்கத்துப் போர் வடபகுதிப் போர்களில் கலிங்க நாடு, மேலைச் சாளுக்கியருக்கு உதவியாக இருந்தது. அத்துடன் மட்டும் இல்லாமல் சோழர்களின் வணிகச் சந்தைக்குப் பிரச்சனையாக முளைத்தது இந்த கலிங்க நாடு. சாளுகியர்களுக்கு உதவும் வண்ணம் கலிங்கர்கள் தமிழர்களை அடிமைப் படுத்த ஆரம்பித்தனர், இவர்களது இந்த செய்கை தமிழ் காவலர்களாகிய சோழர்களை இவர்கள் மீது படை எடுக்க செய்தது. இந்த போரின் தொடர்ச்சியே குலோத்துங்கனின் காலத்தில் நிகழ்ந்த கலிங்கத்துப் போரின் முக்கிய காரணமாகும். இதனால் கலிங்கத்தின் மீதும் படையெடுத்து வெற்றி பெற்றான். இலங்கைப் போர் சோழரின் ஆட்சியின் கீழ் இருந்த இலங்கைத் தீவின் தென் பகுதியில் தன்னை உறுதிப்படுத்தி வந்த விஜயபாகு என்ன்னும் சிங்கள அரசன், சோழர்களை இலங்கையில் இருந்து துரத்த எண்ணி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தான். வீரராஜேந்திரன் இவனை அடக்குவதற்காக இலங்கையில் இருந்த சோழர் படைகளை இலங்கையின் தென்பகுதியான ரோகனா பகுதிக்கு அனுப்பினான். விஜயபாகுவின் வேண்டுகோளுக்கு இணங்கி பர்மாவின் அரசன் அவனுக்குத் துணையாகக் கப்பல்களையும் படைகளையும் அனுப்பினான். இவற்றின் துணையுடன் இலங்கையின் சோழர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிளர்ச்சிகளை உருவாக்குவதில் விஜயபாகு வெற்றி பெற்றான். இலங்கையில் ஏற்கெனவேயிருந்த சோழர் படைகளுக்குத் துணையாகச் சோழநாட்டிலிருந்தும் படைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டன. இதன் மூலம் வீரபாண்டிய சோழன் கிளர்ச்சிகளை அடக்கினான் எனினும், உருகுணைப் பகுதியில் தனது பலத்தை, விஜயபாகு மேலும் அதிகரித்துக் கொண்டான். விஜயபாகுவின் நடவடிக்கைகள் பின் வந்த ஆண்டுகளிலும் தொடர்ந்தது. விஜயபாகு இலங்கை தேசத்தின் அடிமைத் தனத்தை களைந்து சுதந்திர தேசமாக்க பாடுப்பட்டான். அவனது வீரத்துக்கு பரிசாக இலங்கை தேசதினருக்கு சுதந்திர தாகமும் பிறந்ததால் சோழர்கள் பிற்காலத்தில் இலங்கையிலிருந்து பின் வாங்க வேண்டி இருந்தது. கடாரப் படையெடுப்பு வீரராஜேந்திரனின் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட சாசனம் ஒன்று, அவன், அரசன் ஒருவனின் வேண்டுகோளுக்கு இணங்கிக் கடாரத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்டதாகவும், அதனை அம்மன்னனுக்குக் கையளித்ததாகவும் கூறுகின்றது. உதவி கோரிய மன்னன் தொடர்பான தகவல்களோ, வேறு தகவல்களோ எதுவும் கிடைக்கவில்லை. போர் தினவு எடுத்த தோள்களுக்கு எங்கு போர் நடக்கும் என்றும் சிந்திக்க மட்டுமே தோன்றும் ஆனால் வீர ராஜேந்திரன் காலத்தே போர் தினவு எடுத்து அலைந்த இந்த இளவலுக்கு. இவன் தோள் தினவின் பொருட்டு பிறந்தது சக்கர கோட்டத்து போர். ஆம் அந்த இளவல் நம் வீர நாயகன் “அநபாயன்” என்று வளர்ந்த அம்மாங்க தேவியின் புதல்வன் “குலோத்துங்க சோழன்” தான். சக்கர கோட்டத்தில் போர் புரிந்துக் கொண்டிருந்த அநபாயனை வரவழைத்து கடாரத்திற்கு அனுப்பி வைத்தான் வீர ராஜேந்திரன். கடாரப் பயணத்திற்குப் பின் குலோத்துங்கன் சீன தேசம் சென்றதாக வரலாறு இயம்புகிறது. சாளுக்கியருடனான தொடர்பு முதலாம் சோமேஸ்வரனின் இறப்புக்குப் பின்னர், இரண்டாம் சோமேஸ்வரன் மேலைச் சாளுக்கிய ஆட்சிபீடம் ஏறினான். தொடர்ந்து இவனுக்கும், இவனது தம்பியான விக்கிரமாதித்தனுக்கும் இடையே நிகழ்ந்த அதிகாரப் போடியினால் உள்நாட்டுக் கலகம் தோன்றியது. சோமேஸ்வரன் நாட்டின் தென் பகுதியை விக்கிரமாதித்தனுக்கு விட்டுக் கொடுத்தான். நிலைமையைப் பயன்படுத்திக் கொண்ட வீரராஜேந்திரன், விக்கிரமாதித்தனுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டு தனது மகளையும் அவனுக்கு மணமுடித்து வைத்தான். வீர ராஜேந்திரன் மக்கள் வீர பாண்டிய சோழன், அதி ராஜேந்திர சோழன் என்று இரண்டு புதல்வர்களும் மதுராந்தகி என்று ஒரு மகளும் வீர ராஜேந்திரனுக்கு உண்டு. மதுராந்தகியை விக்கிரமாதிதன்னுக்கு திருமணம் முடித்து கொடுத்தான் சோழன். இதன் பொருட்டே விக்கிரமாதித்தன் வீர ராஜேந்திரனின் மரணிதிற்குப் பின்பு அதி ராஜேந்திர சோழனின் ஆட்சி காலத்தில் அரசியலில் ஈடுப்பட்டான். அவன் அதி ராஜேந்திரனுக்கு உதவி செய்ததாக பாணர் பாடியுள்ளார். 2nd Draft வீரராஜேந்திர சோழனைப் பற்றி சிறிது பார்ப்போம். இவனுக்கு "ராஜகேசரி" என்ற பட்டப்பெயர் உண்டு. கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் இவன். இவனது ராணியார் பெயர் அருள்மொழிமங்கை என்பதாகும். முதலாம் ராஜேந்திர சோழனின் மூன்றாவது மகன் இவன். மூத்தவன் பெயர் ராஜாதிராஜன், இரண்டாமவன் 2ஆம் ராஜேந்திரன், இந்த வீரராஜேந்திரன் மூன்றாவது மகன். இவனுடைய பிள்ளைகள் மதுராந்தகன், கங்கைகொண்ட சோழன், மகள் ராஜசுந்தரி. இவன் இறந்த ஆண்டு 1070. வரலாற்றில் அதிகம் இடம்பிடிக்காத ஒரு மன்னன் இந்த வீரராஜேந்திரன். காரணம் இவன் வாழ்க்கை முழுவதும் இவனுடைய அண்ணன்களான ராஜாதிராஜன், 2ஆம் ராஜேந்திரன் ஆகிய முந்தைய சோழ அரசர்களுக்கு உதவுவதிலேயே போய்விட்டதால் அதிகமாக இவன் சாதித்தவை எவை என்று கூறமுடியாத நிலை உள்ளது. இருந்தபோதிலும் தந்தை ராஜேந்திர சோழனுக்கோ, தன்னுடைய மற்ற சகோதரர்களுக்கோ எந்தவிதத்திலும் குறைவில்லாத வீரனாகவே இந்த வீரராஜேந்திர சோழன் இருந்திருக்கிறான். சோழமன்னர்கள் தங்களது மூத்த குமாரன் தான் பதவிக்கு வரவேண்டுமென்ற கண்டிப்பான வழக்கத்தைக் கடைப்பிடிக்காமல், பிள்ளைகளில் வீரமும், விவேகமும், நிர்வாகத் திறமையும் அனுபவமும் உள்ளவனையே தனக்குப் பின் மன்னனாக அங்கீகரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால் இவர்களில் யாரும் யாருக்கும் சோடை போகவில்லையாதலின் ராஜேந்திரனின் மூத்த மகன் ராஜாதிராஜன் பதவிக்கு வந்தான். அவனையடுத்து, அவனது அடுத்த தம்பி, அவனுக்குப் பின் அவன் தம்பி என்று வரிசைப்படி ஆட்சிக்கு வந்தனர். வீரராஜேந்திரன் தன் தந்தையார் காலத்திலும் சரி, தன்னுடைய அண்ணன்மார்கள் காலத்திலும் சரி பல்வேறு பணிகளில் இருந்து தன்னுடைய திறமையை வெளிக்கொணர்ந்திருக்கிறான். தொண்டைநாட்டிலும், பாண்டிய நாட்டிலும், வேங்கி நாட்டிலும் இவன் ராஜப்பிரதிநிதியாக இருந்து சோழர் ஆட்சிக்குத் துணை புரிந்திருக்கிறான். சோழர்களின் கடற்படை ராஜேந்திர சோழன் காலத்தில் மிகவும் வலிமை பொருந்தியாதாக இருந்திருக்கிறது. இந்தக் கடற்படைக்குத் தலைமையேற்று வீரராஜேந்திரன் இலங்கைத் தீவுக்கும், ஸ்ரீவிஜயம், கடாரம், காடகம், பர்மா, சம்பா என பல நாடுகளுக்குச் சென்று போரிட்டு வெற்றி பெற்றிருக்கிறான். விஜயாலயன் ஸ்தாபித்த கடைச்சோழ வம்சத்தில் வீரம் செறிந்த மன்னர்களாகத் திகழ்ந்த ஆதித்தன், பராந்தகன், சுந்தரசோழன், ராஜராஜன், ராஜேந்திரன் இவர்கள் வரிசையில் வைத்துப் பார்க்கப்பட வேண்டிய வீரனாகத்தான் வீரராஜேந்திரன் தன் பெயருக்கு ஏற்ப இருந்திருக்கிறான். ராஜேந்திரனின் மகன் ராஜமகேந்திரன் தன் தந்தைக்கு முன்னதாகவே காலமாகிவிட்டபடியால் இரண்டாம் ராஜேந்திரனுக்குப் பிறகு அவனது தம்பி வீரராஜேந்திரன் பட்டத்துக்கு வந்தான். இவனுடைய காலம் சோழ சாம்ராஜ்யம் பரந்து விரிந்து கடல்கடந்தும் பரவிக் கிடந்தமையால் அதனைக் காப்பாற்றும் பொறுப்பு இவனுக்கு இருந்தது. ராஜேந்திர சோழனின் புதல்வர்களான ராஜாதிராஜன், 2ஆம் ராஜேந்திரன், வீரராஜேந்திரன் ஆகியோர் மொத்தமாக 16 முதல் 20 ஆண்டுகள் வரை ஒருவர் பின் ஒருவராக ஆட்சி புரிந்திருக்கின்றனர். இப்படி இவர்களது ஆட்சி இடைவெளி அதிகமில்லாமல் ஒருவர் பின் ஒருவராக பதவி வகித்ததால் ராஜராஜன் போலவோ, ராஜேந்திரன் போலவோ ஒரு ஸ்திரத்தன்மையோ, அல்லது எதிர்கள் பய்ந்து ஒடுங்கிப் போயிருந்ததைப் போலவோ இல்லாமல், எதிரிகளுக்குக் குளிர் விட்டுப் போய், நேரம் வாய்த்தால் சோழர்கள் மீது போர்தொடுக்க ஆயத்தமாயிருந்தனர், குறிப்பாக சிங்களர்களும், சாளுக்கியர்களும், பாண்டியர்களும் ஓரளவுக்கு சேர மன்னர்களும் பரம்பரை எதிரிகளாகவே இருந்திருக்கின்றனர். வீரராஜேந்திரனின் போர்க்கள சாகசங்கள் மிக இளம் வயதிலேயே தொடங்கிவிட்டது. இலங்கை படையெடுப்பில் இவனுடைய பங்களிப்பு இருந்தது. இலங்கையின் வெற்றிக்குப் பிறகு அந்த நாட்டை ஆளும் ராஜப்பிரதிநிதியாக நியமிக்கப்பட்டான் வீரராஜேந்திரன். தொடர்ந்து உறையூரிலும் தனித்து இருந்து சோழ சாம்ராஜ்யப் பிரதிநிதியாகச் செயல்பட்டான். சாளுக்கியர்களுக்கு எதிராகத்தான் இவன் அதிகம் போரில் ஈடுபட்டான். காரணம் வேங்கி அரசர்கள் சோழர்கள் பெண் கொடுத்த சம்பந்திகள். அவர்களை மேலைச் சாளுக்கியர்களிடமிருந்து காக்கும் பொறுப்பு தஞ்சை சோழர்களுக்கு இருந்தது. தற்போது ஆந்திராவிலுள்ள விஜயவாடாவுக்கு அருகில் கிருஷ்ண நதிக்கரையில் சாளுக்கியர்களுடன் நடந்த யுத்தம் மிகப் பெரிய யுத்தம். அதில் வீரராஜேந்திரன் மாபெரும் வெற்றி பெற்றான். தொடக்கத்தில் இவன் சேரநாட்டில் போரிட்டு வெற்றிகளைப் பெற்றன், தொடர்ந்து பாண்டிய நாட்டையும் போரிட்டுப் பல பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். இப்படி இவன் சேர நாடு, பாண்டிய நாடு என்று போர் புரிந்து கொண்டிருந்த காரணத்தால் இவனைத் தோற்கடிக்க இதுவே சமயமென்று தனது முந்தைய தோல்விகளை மறந்து சாளுக்கியன் சோமேஸ்வரன் சோழ தேசத்தின் மீது படையெடுத்து வந்தான். வீரராஜேந்திரனின் அண்ணன்மார்களான 2ஆம் ராஜேந்திரன் அவன் அண்ணன் ராஜாதிராஜன் ஆகியோரிடம் இவன் அடைந்த தோல்விகளை மறந்தவனாக வீரராஜேந்திரன் மீது துணிச்சலுடன் படையெடுத்தான். சோமேஸ்வரனுடைய புதல்வனான விக்கலன் எனும் விக்கிரமாதித்தன் (VI) கங்கைகொண்ட சோழபுரத்தைத் தாக்கினான். அப்போதுதான் வீரராஜேந்திரன் பாண்டியனையும், இலங்கை மன்னனையும் தோற்கடித்துவிட்டு சோழ நாடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போதுதான் போர் செய்துவிட்டுத் திரும்பிய சூட்டோடு இங்கு இந்த சாளுக்கியன் சோழர் தலைநகரத்தையே தாக்கியதால் ஆத்திரமடைந்த வீரராஜேந்திரன் அந்த விக்கிரமாதித்தனை ஓடஓட விரட்டியடித்தான். அவர்களைப் பின் தொடர்ந்து தாக்கி கங்கபாடி நாட்டைப் பிடித்துக் கொண்டு சாளுக்கிய நாட்டிற்குள்ளும் நுழைந்தான். வீரராஜேந்திரன் காலத்திய பல கல்வெட்டுக்கள் அவனது வெற்றியைப் பற்றி குறிப்பிடுகின்றன. ராஜராஜ சோழன் காலத்திலிருந்தே மேலைச் சாளுக்கியர்கள் போர்க்களத்திலிருந்து ஓட்டம் பிடிப்பதில் வல்லவர்களாகத் தொடர்ந்து இருந்து வந்திருக்கின்றனர். சோழர்களின் வீரத்துக்கு முன்பாக அவர்களுடைய ஆட்டங்கள் எதுவும் செல்லுபடியாவதில்லை. ராஜராஜன் காலத்தில் களத்திலிருந்து ஓட்டம் பிடித்தவன் சத்யாஸ்ரயன். ராஜேந்திர சோழன் காலத்திலும் இதே சத்யாஸ்ரயன் ஓட்டம் பிடித்தவன் தான். அவனோடு இரண்டாம் ஜெயசிம்மாவும் ஓட்டம்பிடித்த சாளுக்கியன். 2ஆம் ராஜேந்திரன் காலத்தில் தோற்றோடிய சாளுக்கியன் த்ரைலோக்கியமல்லன் முதலாம் சோமேஸ்வரன். வீரராஜேந்திரனிடமும் தோற்றோடிய பெருமை இந்த த்ரைலோக்கியமல்லனுக்கு உண்டு. சாளுக்கியர்களுக்கு எதிரான சோழர்களின் போர் ஒன்றும் சாதாரணமானவை அல்ல. மிகக் கடுமையான போர். சோழர்கள் தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தி சாளுக்கியர்களை ஒழித்துவிட முயன்று போரிட்டும் அவர்கள் மிக சாமர்த்தியமாக ஒவ்வொரு முறையும் போர்க்களத்தைவிட்டு ஓடிப்போய் பிழைத்துக் கொண்டு வந்தார்கள். வீரராஜேந்திரன் தன் அண்ணன்மார்கள் காலத்திலேயே இந்த களம்விட்டு ஓடிடும் மாவீரர்களான சாளுக்கியர்களோடு போர் புரிந்திருக்கிறான். 2ஆம் சோமேஸ்வரன் தன்னுடைய தோல்விக்கு பழிவாங்கவும், களத்தை விட்டு ஓடிவிடாமலும் வெற்றி பெற்றுவிட வேண்டுமென்று தலைகீழாக முயன்றும் அவன் சாமர்த்தியம் எதுவும் வீரராஜேந்திரனின் முன் எடுபடவில்லை. சோமேஸ்வரனுடைய படைத் தளபதிகள் எல்லாம் பொலபொலவென்று சோழப் படைகளின் முன் வீழ்ந்தனர். சோழப் படைகளின் வீரத்துக்குத் தாக்குபிடிக்கமுடியாமல் சோமேஸ்வரன் மட்டுமல்லாமல் அவன் மகன் விக்கலன் எனும் 6ஆம் விக்கிரமாதித்தன் சிங்கணன் எனும் 3ஆம் ஜெயசிம்மா ஆகியோர் ஒட்டம்பிடித்த சாளுக்கியர்கள். தங்களது தொடர் தோல்விகளுக்கு ஒரு முடிவு கட்ட சாளுக்கியர்கள் ஒரு குறிப்பிட்ட நாளையும், இடத்தையும் சொல்லி அங்கு போருக்கு வரும்படி சோழர்களை அழைத்தனர். அதன்படி சோழர்படை 1067 செப்டம்பர் 10எல் அந்த இடத்துக்குச் சென்று சாளுக்கியர்களின் வருகைக்காகக் காத்திருந்தனர் என்கிறது மணிமங்கலம் கல்வெட்டுக்கள். சோழர்கள் ஒரு மாதகாலம் அங்கு காத்திருந்தும் சாளுக்கியப் படைகள் வந்து சேரவில்லை. கோபம் கொண்ட சோழர்கள் அந்தப் பகுதியில் சுற்றுவட்டாரங்களையெல்லாம் நாசம் செய்து ஆத்திரத்தைக் காட்டினர். பயந்து ஓடிய சாளுக்கியர்களின் கோழைத்தனத்தையும், தங்கள் வெற்றியையும் பறைசாற்றும் விதத்தில் சோழர்கள் துங்கபத்திரா நதிக்கரையில் ஒரு வெற்றித்தூணை நிறுவினர். இலங்கைப் போர். இலங்கையில் அப்போது அரசனாக இருந்தவன் விஜயபாகு என்பவன். இலங்கையின் தெற்குப் பகுதியில் ரோஹணா எனுமிடத்தையடுத்த சிறுபகுதியை இவன் ஆண்டுவந்தான். இவனுக்கு வட இலங்கையில் ஆக்கிரமித்திருந்த சோழர்களை விரட்டிவிடவேண்டுமென்கிற வேகம் இருந்தது. புத்த இலக்கியமான மஹாவம்சம் சொல்ல்கிறபடி சோழர் படைகள் ரோஹணா பகுதின் மீது படையெடுத்து விஜயபாகுவை அடக்கிவைக்க எண்ணியது. அச்சமடைந்த விஜயபாகு பர்மாவின் அரசனுக்கு உதவிகேட்டு ஆள் அனுப்பினான். அவனும் தன்னுடைய படைகளை கப்பலில் இலங்கைக்கு அனுப்பி வைத்தான். இந்த அன்னியப் படையின் உதவியோடு விஜயபாகு தமிழர் ஆக்கிரமித்திருந்த வடபகுதியில் கலகத்தை உருவாக்கினான். சோழர் படைகள் இந்த கலகத்தை அடக்கிவிட்டது. இருந்தாலும் விஜயபாகு தொடர்ந்து சில ஆண்டுகள் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தான். கடாரத்தின் மீது படையெடுப்பு. வீரராஜேந்திரனின் ஆட்சிப் பொறுப்பேற்ற ஏழாம் ஆண்டில் கடாரத்து அரசன் உதவி கேட்டு அனுப்ப அவனுக்கு உதவியாகச் சோழர் படையை அங்கு அனுப்பி வைத்தான். அங்கு புரட்சியாளர்களை அடக்கிவிட்டு மீண்டும் ராஜ்யத்தை அந்த அரசனிடமே கொடுத்துவிட்டான் வீரராஜேந்திரன். இதெல்லாம் 1068இல் நடந்ததாக வரலாறு கூறுகிறது. சோழக்ர்ள் இப்போதைய இந்தோனேஷியா மலேசியா ஆகிய பகுதிகளை சுமார் 20 ஆண்டுகள் வரை ஆட்சி புரிந்திருக்கின்றனர். இவன் காலத்தில் தூரக்கிழக்கு நாடுகளை வென்று அங்கெல்லாம் வாணிபம் செய்யச் சென்ற உறவு 1215 வரை தொடர்ந்து வந்திருக்கிறது. சாளுக்கிய விக்கிரமாதித்தனுடன் உறவு. சாளுக்கியன் சோமேஸ்வரன் (I) காலத்துக்குப் பிறகு அவனுடைய மகன் 2ஆம் சோமேஸ்வரன் 1068இல் ஆட்சிக்கு வந்தான். அவனுக்கும் அவனுடைய தம்பியான விக்கிரமாதித்தனுக்குமிடையே பூசல் எழுந்தது. இந்த 6ஆம் விக்கிரமாதித்தன் தன்னுடைய முன்னோர்கள் சோழர்களிடம் அடிவாங்கியதை நினைவில் வைத்துக் கொண்டு அவர்களோடு மோதுவதால் எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்தான். ஆகையால் அப்போது சாளுக்கியப் பிரதேசத்தில் எழுந்த தாயாதிச் சண்டையில் தன்னை ஆதரிக்க சோழன் வீரராஜேந்திரனிடம் வேண்டுகோள் விடுத்தான். அவனுடைய பரிதாப நிலையைக் கண்டு மனம் இரங்கிய வீரராஜேந்திரன் அவன் பக்கம் நின்று சாளுக்கிய நாட்டுக்கு அவனை அரசனாக்கியதோடு அவனுக்குத் தன் மகளையும் திருமணம் செய்து கொடுத்தான். வீரராஜேந்திரன் வாழ்க்கை. இவன் ராஜாதிராஜனுக்கும், 2ஆம் ராஜேந்திரனுக்கும் தம்பி என்பதை முன்பே பார்த்தோம். தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் கல்வெட்டு ஒன்றில் காணப்படும் செய்தியிலிருந்து இவனது மனைவியின் பெயர் அருள்மொழிநங்கை என்பது தெரிகிறது. இவனுடைய மகள் ராஜசுந்தரி என்பாளைத்தான் கீழைச் சாளுக்கிய மன்னருக்குத் திருமணம் செய்து கொடுத்தான். அந்த ராஜசுந்தரியின் மகன் அனந்தவர்மன் சோடகங்கதேவன் என்பான் கீழைச் சாளுக்கிய மன்னனாக இருந்தான். வீரராஜேந்திர சோழனுக்கு "சகலபுவனஸ்ரயா", ஸ்ரீமேதினிவல்லபா", "மகாராஜாதிராஜ சோழகுலசுந்தரா", "பாண்டியகுலாந்தகா", "ஆகவமல்லகுல கலா", "ஆகவமல்லனை மும்மாடி வெண் கண்ட ராஜ்ஸ்ரயா", "வீர சோழ" எனும் விருதுகள் இருந்தன. இவன் 1070இல் இறந்ததாகத் தெரிகிறது. இந்த அண்ணன் தம்பிகள் ஒருவருக்கொருவர் அதிகம் வயதி வித்தியாசமில்லாமல் இருந்திருக்கிறார்கள். வீரராஜேந்திரன் காலத்திலேயே தன்னுடைய மகனான மதுராந்தகனை காஞ்சியைத் தலைநகராகக் கொண்ட தொண்டை மண்டலாதிபதியாக நியமித்திருந்தான். அப்போது அவனுக்கு "சோழேந்திரன்" எனும் பட்டப்பெயரும் இருந்தது. இவனுடைய இன்னொரு மகனான கங்கைகொண்டசோழன் என்பவன் பாண்டிய நாட்டியத்தின் அதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தான். இவ்விருவரில் ஒருவர்தான் இவனுக்குப் பிறகு அதிராஜேந்திரன் எனும் பட்டப்பெயருடன் மன்னனாக முடிசூட்டிக் கொண்டான், ஆனால் அது இவ்விருவரில் யார் என்பது தெரியவில்லை. வீரராஜேந்திரன் தில்லையம்பலத்தான் நடராஜப் பெருமானுக்குத் தொண்டு புரிந்தவன். அந்த ஆடல்வல்லானுக்கு கழுத்துக்கு மிகுந்த விலை உயர்ந்த சிவப்புக் கற்கள் பதித்த மாலையொன்றை இவன் அளித்திருந்தான். இவன் சைவனாயினும் வைணவ ஆலயங்களையும் போற்றி வழிபட்டு பாதுகாத்து வந்தான். கி.பி. 1063 முதல் 1070 வரை ஆட்சிபுரிந்த வீரராஜேந்திரன் காலமான பின்னர் அவனது மகன் அதிராஜேந்திரன் என்பான் அரசு கட்டிலில் வீற்றிருந்தான் ஆதிராஜேந்திர சோழன்.கி.பி. 1067- 1070 Picture ஆதிராஜேந்திர சோழன். கி.பி. 1067- 1070 வீரராஜேந்திரன் காலமானதும் இவன் பட்டத்துக்கு வந்தான். அதற்கு முன்பே இவனுக்கு ஆட்சிப் பொறுப்பில் அனுபவம் இருந்தது, காரணம் வீரராஜேந்திரன் காலத்திலேயே அவன் தன் மக்களுக்கு தொண்டைமண்டலத்தையும், பாண்டிய மண்டலத்தையும் கவனித்துக் கொள்ள தன் மகன்களையே நியமித்திருந்தான் என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம். இந்த அதிராஜேந்திரனுக்கு "பரகேசரி" எனும் பட்டப்பெயரும் உண்டு. ஒவ்வொரு சோழனுக்கும் இதுபோன்ற பட்டப்பெயர்கள் இருப்பதை கவனித்திருக்கலாம். இவனும் கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகராகக் கொண்டுதான் ஆட்சிபுரிந்தான். இவன் திருமணமானவனா இல்லையா பிள்ளை குட்டிகள் இருந்தனரா இல்லையா என்பது ஒன்றும் தெரியவில்லை. இவன் தந்தை காலமான பின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த இவன் ஒருசில மாதங்களே ஆட்சி புரிந்தான். இவன் காலத்தில் நாட்டில் நடந்த குழப்பத்தினாலோ என்னவோ கிளர்ச்சியும் கலகமும் ஏற்பட்டது. இந்தப் பூசலில் இளம் மன்னனான அதிராஜேந்திரன் கொல்லப்பட்டான் என்கிறது வரலாறு. இவனை யடுத்து சோழர்களுடன் திருமண உறவு கொண்டிருந்த வேங்கிநாட்டைச் சேர்ந்த சோழ இளவரசன் ராஜிகா எனும் பெயருடையவன் முதலாம் குலோத்துங்கன் எனும் பெயருடன் சோழ மண்டல சக்கரவர்த்தியாக அமர்த்தப்பட்டான். சோழர்களுக்கும் கீழைச் சாளுக்கிய மன்னர்களான வேங்கி நாட்டவர்க்கும் நீண்ட நெடுங்காலமாகத் திருமண பந்தம் இருந்து வந்தது. ராஜராஜனின் மகள் குந்தவையை வேங்கி இளவரசன் விமலாதித்தனுக்குத் திருமணம் செய்து கொடுத்ததையும், அவர்களது மகனான ராஜராஜ நரேந்திரன் என்பானுக்கு முதலாம் ராஜேந்திரன் தன் மகளான அம்மங்காதேவியை மணம் முடித்துக் கொடுத்ததும், இப்படி அடுத்தடுத்து சோழர்களும் வேங்கி நாட்டாரும் திருமண பந்தம் கொண்டிருந்தனர். இதனால் வேங்கி நாட்டையாண்ட கீழைச் சாளுக்கியர்கள் பாதி சோழரும் பாதி சாளுக்கியருமாக இருந்திருக்கின்றனர். அந்த வழியில் வந்தவந்தான் முதலாம் குலோத்துங்கன். சாளுக்கிய வம்சம் சோழர்களுக்குப் பெரிய தலைவலியாகவே இருந்து வந்திருக்கின்றனர். மேலைச் சாளுக்கியர்கள் சத்யாஸ்ரயன் காலத்திலிருந்து கீழைச் சாளுக்கியர்களோடும் சோழர்களோடும் போரிட்டு வந்திருக்கிறார்கள். கீழைச் சாளுக்கியர்களான வேங்கி நாட்டாரும் தங்களுக்குள் தாயாதி சண்டையிட்டுக் கொண்டு ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டும், அதில் ஒரு பக்கம் மேலைச் சாளுக்கியரிடம் உதவி பெறுவதும், மற்ற பகுதியினருக்கு சோழர்கள் உதவி செய்வதும் தொடர் கதையாக இருந்திருக்கிறது. அதிராஜேந்திரனின் தந்தையான வீரராஜேந்திரன் வேங்கி விஷயத்தில் தலையிட்டு சோழர்களின் மாப்பிள்ளையான ராஜராஜ நரேந்திரன் சார்பில் போரிட்டிருக்கிறான். குந்தவையின் மகனான இந்த ராஜராஜ நரேந்திரன் 1061இல் இறந்து போகிறான். அதனால் அவனுக்குப் பின் வேங்கி நாட்டை 2ஆம் சக்திவர்மன் என்பவன் கிளர்ச்சி செய்து வேங்கியின் ஆட்சி சிம்மாசனத்தை அபகரித்துக் கொண்டான். இப்படி புரட்சியின் மூலம் ஆட்சிக்கு வந்தது சோழர்களுக்குப் பிடிக்கவில்லை. சோழ ரத்தம் ஓடும் வேங்கி ராஜவம்சத்தானை பதவியில் அமரவைக்க அவர்கள் பெரிதும் முயன்றார்கள். அந்தப் போராட்டத்தில் புரட்சியால் ஆட்சியைப் பிடித்த 2ஆம் சக்திவர்மன் என்பவன் கொல்லப்பட்டான். அப்படி அவன் இறந்ததும் அவனுடைய தந்தையான விஜயாதித்தன் என்பான் பதவியில் உட்கார்ந்து கொண்டு சோழர்களை எதிர்த்துப் போரிட்டான். எனினும் சோழர்களின் வல்லமையின் முன்னால் தனித்து நிற்கமுடியாது என்பதை உணர்ந்தோ என்னவோ அந்த விஜயாதித்தன் சோழர்களுக்குக் கட்டுப்பட்டு கப்பம் கட்டும் அரசனாக வேங்கியில் இருக்க ஒப்புக் கொண்டான். இப்படி சாளுக்கியர்களுள் இரு பக்கத்திலும் முழுமையாக சோழர்கள் ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருந்த காலத்தில் அதிராஜேந்திரனின் தந்தையும் இவனுக்கு முன்பு அரசனாக இருந்த சோழனுமான வீரராஜேந்திரன் சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தனுடைய பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். பெரும்பாலும் அந்தக் கால அரசர்கள் ராஜதந்திரத்துடன் எதிரி நாட்டிலும் திருமண உறவு வைத்துக் கொண்டு சாமர்த்தியமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். பல மன்னர்களுக்கு பலதாரம் இருப்பதன் காரணம் இதுதானோ என்னவோ? வரலாறு இவ்வாறு போய்க்கொண்டிருந்த நிலைமையில் குந்தவையின் பேரனும், ராஜராஜ நரேந்திரனின் மகனுமான ராஜேந்திர சாளுக்கியன் (பின்னாளில் முதலாம் குலோத்துங்கன்) வேங்கி தனக்குத்தான் உரிமை ஆனால் விஜயாதித்தன் எப்படியோ ஆட்சியைப் பிடித்து வைத்துக் கொண்டுவிட்டான் என்பதை உணர்ந்து வேங்கியைத் தன்னதாக ஆக்கிக் கொள்ள முனைந்தான். என்ன இருந்தாலும் விஜயாதித்தன் சோழர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தாலும், சோழ பரம்பரை வாரிசு அல்லவா ராஜேந்திர சாளுக்கியன் எனும் முதலாம் குலோத்துங்கன்? சோழர்கள் அவனைத்தான் ஆதரித்தார்கள். விஜயாதித்தான் வேறு யாரும் இல்லை. குலோத்துங்கனின் பெரியப்பாதான், அதாவது காலம் சென்ற ராஜராஜ நரேந்திரனின் அண்ணன். இதெல்லாம் தாயாதிச் சண்டைகள். விஜயாதித்தனுக்கும் வேங்கியின் மீது உரிமை இருக்கிறது அல்லவா ஆகையால் ராஜேந்திர சாளுக்கியன் (முதலாம் குலோத்துங்கன்) வேங்கிக்கு வடக்கே உள்ள இப்போதைய சட்டிஸ்கர் மாநிலத்திலுள்ள பஸ்தர் எனும் மலைப்பகுதியில் ஒரு ராஜாங்கத்தை அமைத்துக் கொண்டான். வீரராஜேந்திரன் காலமான பிறகு அதிராஜேந்திரனின் ஒருசில மாத ஆட்சிக்குப் பிறகு அவன் இறந்ததும் ராஜேந்திர சாளுக்கியன் சோழ அரசனாக முதலாம் குலோத்துங்கன் எனும் பெயரில் பதவியில் அமர்ந்தான். வீரராஜேந்திரனின் மகன் அதிராஜேந்திரனின் மரணம். சாளுக்கியர்கால பில்ஹணன் எனும் வரலாற்றாசிரியர் இந்த அதிராஜேந்திரனின் மரணம் பற்றிய குறிப்புகளைத் தருகிறார். வீரராஜேந்திரன் தன்னுடைய மகளை சாளுக்கியன் 4ஆம் விக்கிரமாதித்தனுக்குத் திருமணம் செய்து கொடுத்த சில காலத்திற்குள் இறந்து விடுகிறான். தன் மாமனார் இறந்து போன செய்தியும் மைத்துனன் அதிராஜேந்திரன் பதவிக்கு வந்தபின் உள்நாட்டுப் போர் மூண்டுவிட்ட செய்தியையும் கேட்ட 4ஆம் விக்கிரமாதித்தன் தன் படைகளுடன் கலகத்தை அடக்க காஞ்சிபுரம் வருகிறான். அங்கிருந்து சாளுக்கிய விக்கிரமாதித்தன் கங்கைகொண்ட சோழபுரத்துக்கும் வருகிறான். அங்கு கலகக்காரர்களை அடக்கிவிட்டு மைத்துனன் அதிராஜேந்திரனை அரியணையில் ஏற்றுகிறான். நாட்டில் அமைதி ஏற்பட்டு உரியவன் பட்டத்துக்கும் வந்தபின் சுமார் ஒரு மாதகாலம் விக்கிரமாதித்தன் கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்துவிட்டு இனி எல்லாம் சரியாகிவிட்டது என்று நினைத்து தன் நாடு திரும்புகிறான். அவன் சாளுக்கிய நாட்டுக்குத் திரும்பிய ஒரு சில நாட்களுக்குள் விக்கிரமாதித்தனுக்குத் தன் மைத்துனனும் சோழ அரசனுமான அதிராஜேந்திரன் கொல்லப்பட்டுவிட்டான் என்கிற செய்தி கிடைக்கிறது. அந்த செய்தி மேலும் சொல்கிறது ராஜேந்திர சாளுக்கியன் தன் படைகளுடன் வந்து சோழ அரசனாக முடிசூட்டிக் கொண்டுவிட்டான் என்றும் அவனது இப்போதைய பெயர் முதலாம் குலோத்துங்கன் என்றும் கேள்விப்பட்டான். இதனால் ஆத்திரமடைந்த 4ஆம் விக்கிரமாதித்தன் குலோத்துங்கனை எதிர்க்கத் தன் படைகளுடன் புறப்பட்டான். அவனுக்கு உதவியாக மேலைச் சாளுக்கிய அரசன் 2ஆம் சோமேஸ்வரனும் சேர்ந்து கொண்டான். வீரராஜேந்திரனுக்குப் பிறகு அவன் மகன் அதிராஜேந்திரன் வரையிலும் கடைச் சோழர்கள் வம்சம் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது, அதிராஜேந்திரனின் மறைவோடு அந்தப் பரம்பரை முடிவுக்கு வந்துவிட்டது குலோத்துங்கன் சோழர்களின் பெண்வழியில் வரும் வேங்கி வம்சத்துக்குப் போய்விட்டது. குலோத்துங்கனின் பங்களிப்பு. அதிராஜேந்திரனின் மரணத்துக்கு குலோத்துங்கன் காரணமா எனும் இந்த மில்லியன் டாலர் கேள்வி இன்னமும் தொக்கி நின்று கொண்டிருக்கிறது. அதிராஜேந்திரன் காலத்தில் காஞ்சிபுரத்துக் கலவரத்துக்கு யார் காரணம்? அந்த கலவரத்தை அடக்கத்தான் மேலைச் சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தன் காஞ்சிக்கு வந்து பிறகு கங்கைகொண்ட சோழபுரத்துக்கும் வந்து அமைதி நிலைநாட்டிவிட்டதாக நினைத்து ஊர் திரும்பினான். அப்படி விக்கிரமாதித்தன் காஞ்சிபுரத்துக்கும் கங்கைகொண்ட சோழபுரத்துக்கும் வந்து அதிராஜேந்திரனுக்கு எதிரானவர்களை அடக்கினானே, அந்த எதிரிகள் யார்? அது குறித்து அங்கு கலவரம் அல்லது கலகம் ஏற்பட்டது? போன்ற கேள்விகளுக்கு விடை இல்லை. அதிராஜேந்திரன் காலத்திய நிகழ்ச்சிகளை விவரிக்கக்கூடிய ஆதாரங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் குலோத்துங்கன் சோழ மன்னனாக முடிசூட்டிக்கொண்ட பிறகு விக்கிரமாதித்தன் தன் பெரும் படையோடு வந்து குலோத்துங்கனைத் தோற்கடித்து சிம்மாசனத்திலிருந்து இறக்கிவிட்ட செய்தி கிடைக்கிறது. இலக்கிய ஆதாரங்களைக் கொண்டு கவனிக்கும்போது வேங்கி நாட்டானான குலோத்துங்கன் சோழ அரசுக்கு ஆசைப்பட்டு இங்கே வந்து வீரராஜேந்திரனின் மகனான அதிராஜேந்திரனுக்கு எதிராக செயல்பட்டிருக்க வேண்டுமென நினைக்கத் தோன்றுகிறது. அப்படியானால் அவன் காலத்தில் தோன்றிய கலவரம் முன்பு சொன்னது போல உள்நாட்டு கலவரமாக இருக்க வாய்ப்பில்லை, வேங்கி நாட்டுப் படையெடுப்பே. சோழ தேசத்தில் நடந்த அந்த கலவரத்துக்கு மதச்சாயமும் பூசப்படுகிறது. அந்த காலகட்டத்தில் வைணவ ஆச்சார்யார் ஸ்ரீ ராமானுஜர் சோழ மன்னரால் துரத்தப்படுகிறார். இந்த காரணத்தினாலும் சோழ சாம்ராஜ்யத்தில் கலவரம் ஏற்பட்டிருக்கலாமோ எனும் எண்ணமும் சொல்லப்படுகிறது. ஆனால் வரலாற்றுப் பேராசிரியர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி இவை எதனையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் கூற்றுப்படி ராமானுஜர் வாழ்ந்தது 2ஆம் குலோத்துங்கன் காலத்தில். அவன் தான் ராமானுஜரை சோழநாட்டிலிருந்து விரட்டியனுப்புகிறார், அவரும் கர்நாடகத்திலுள்ள மேல்கோட்டையில் சென்று தஞ்சம் அடைகிறார். ஆகையால் அவர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளோடு அதிராஜேந்திரனின் மரணத்தை முடிச்சுப் போட முடியாது. இந்த காலகட்டத்தில் இரண்டாம் குலோத்துங்கன் காலம் வரை சோழ மன்னர்கள் அனைவருமே தீவிர சைவர்களாக இருந்து வந்திருக்கிறார்கள் என்பதும் வரலாற்று உண்மையே. வீரராஜேந்திரனுக்குப் பிறகு சில மாதங்கள் அரசனாக இருந்த அதிராஜேந்திரன் மரணமடைந்த பின் முதலாம் குலோத்துங்கன் வேங்கிநாட்டு சோழன் பதவிக்கு வருகிறான் என்கிறது வரலாறு. முதலாம் குலோத்துங்கன். கி.பி.1070 - 1120 Picture 1ம் குலோத்துங்க சோழன். ராஜேந்திர சோழன் மகளின் மகன் கி.பி. 1070-1120 சந்திர குலத்துதித்த சாளுக்கிய அரசனாகிய இராசாராசனுக்கு மனைவியும் சூரிய குலத்து அரசனாகிய முதல் இராசேந்திர சோழன் என்னும் கங்கைகொண்ட சோழனுடைய மகளும் ஆன திருமகள் போன்ற அம்மங்கா தேவியின் மகனாவான் இவன் இவனை இவனது பாட்டி பார்த்தாள் அரசர்களுக்கு எல்லாம் அரசனாகு விளங்கும் தகுதியை அறிந்தாள். என் மகள் பயிற்றுப் பிள்ளையாகிய இவன். எமக்குச் சுவீகார புத்திரனாகிச் சூரிய குலத்தை வளர்த்து விளக்க வல்லவன் ஆவான்' என்று கூறி அவனைச் சுவீகாரம் கொண்டாள். பன்னிரண்டாம் நூற்றாண்டில் செயங்கொண்டாரால் பாடப்பட்டது கலிங்கத்துப் பரணி. , கலிங்க நாட்டு அரசன் அனந்தவன்மனை வெற்றி கொண்ட போர்தான் கலிங்கப்போர். இன்றைய ஒரிஸ்ஸாவின் கீழ்ப்பகுதிதான் கலிங்க நாடாக விளங்கியது. பரணி என்றால் போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் பாடும் பாடல் என்று பொருள். கருணாகர தொண்டைமான் என்ற தளபதியைக் கொண்டு முதல் குலோத்துங்க சோழன் அனந்தவன்மனை வென்ற கலிங்கப் போரைப் பற்றியதே கலிங்கத்துப் பரணி. (இவனது காலத்தில் தான் துவாகுடி பெரியகுளத்தில் உள்ள நாட்டுக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது சிவன்கோவிலும் இவனது காலத்தில் தான் கட்டப்பட்டது இவன் மேல்கொண்டான் இவனது படைதளபதி கருணாகரத்தொண்டைமான்) 1st Draft இராசராசசோழனின் மகளான குந்தவையின் மகனுக்கும் முதலாம் இராசேந்திரனின் மகள் அம்மங்கா தேவிக்கும் பிறந்தவன் குலோத்துங்கன். மேலைச் சாளுக்கிய ஆதிக்க விரிவை எதிர்த்து வீரராசேந்திரன் போர் புரிந்த போதும் கடாரத்துக்குச் சோழப்படை சென்ற போதும் குலோத்துங்கன் அதில் பங்கு கொண்டிருந்தான். குழப்பம் மிகுந்து அரசனில்லாது சோழ நாடு தவித்தபோது அரசனாகி ஐம்பது ஆண்டுகள் சோழ நாடு சிதையாமல் காத்தவன் முதலாம் குலோத்துங்க சோழன். முதலாம் குலோத்துங்கனுடைய காலமும் பெரும் கிளர்ச்சிகளைக் கொண்ட காலப்பகுதியாகவே அமைந்தது. பாண்டிய நாட்டிலும், சேர நாட்டிலும் படை நடத்திக் கிளர்ச்சிகளை அடக்கவேண்டியிருந்தது. வட பகுதிகளிலும் போர் ஓய்ந்தபாடில்லை. எனினும் ஈழநாட்டில், விஜயபாகு என்பவன் சோழருடன் போரிட்டு ஈழத்திலிருந்து சோழர் ஆட்சியை அகற்றினான். ஈழத்தில், ஏறத்தாழ 70 ஆண்டுகள் நிலவிய சோழராட்சி அங்கிருந்து அகற்றப்பட்டது. சோழநாட்டின் பிற பகுதிகளில் நிலவிய நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, குலோத்துங்கன் ஈழநாட்டை மீட்கப் படைகளை அனுப்பவில்லை என்று கருதப்படுகின்றது 2nd Draft முதலாம் குலோத்துங்கன் (1070 முதல் 1120 வரை) கடந்த சில பதிவுகளில் ராஜேந்திர சோழன் தொடங்கி அதிராஜேந்திரன் வரையிலான சோழ மன்னர்களின் வரலாற்றுச் சுருக்கத்தைப் பார்த்தீர்கள். கடைச் சோழர்கள் எனப் பெயரிடப்பட்டுள்ள விஜயாலயன் பரம்பரை இந்த அதிராஜேந்திரனின் மரணத்தோடு முடிவடைந்து விடுகிறது. பின்னர் பதவிக்கு வந்த முதலாம் குலோத்துங்கன் சோழர்களின் பெண்வழி வாரிசாக வேங்கிநாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இனி இந்த முதலாம் குலோத்துங்கன் பற்றி பார்ப்போம். சென்ற பதிவில் அதிராஜேந்திரன் பதவிக்கு வந்து ஒருசில மாதங்களுக்குள் கொல்லப்படுகிறான் என்பதையும், அவனைத் தொடர்ந்து வேங்கிநாட்டுச் சாளுக்கிய இளவரசனும், சோழர்களின் பெண்வழி வாரிசுமான குலோத்துங்கன் பதவிக்கு வந்ததையும் பார்த்தோம். இறந்துபோன அதிராஜேந்திரனுக்கு ஆதரவாக மேலைச் சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தன் படையெடுத்து காஞ்சிபுரத்துக்கும், கங்கைகொண்ட சோழபுரத்துக்கும் வந்து அதிராஜேந்திரனுக்குத் துணை புரிந்த வரலாற்றையும் பார்த்தொம். இனி முதலாம் குலோத்துங்கன். இவனை "ராஜகேசரி" எனும் பட்டப்பெயரோடு அழைக்கிறார்கள். இந்த மன்னன் தன்னுடைய தலைநகரை திருவாரூருக்கு மாற்றிக் கொள்கிறான். கங்கைகொண்ட சோழபுரத்து சோழர்கள் அனைவரும் விஜயாலய பரம்பரையினர். கடைசி விஜயாலயன் பரம்பரை மன்னன் அதிராஜேந்திரனுக்கு ஆதரவாக வந்த விக்கிரமாதித்தன் குலோத்துங்கனோடு போரிட்டு கங்கைகொண்ட சோழபுரத்தை விட்டு விரட்டிவிட்ட பின்னர் இவன் திருவாரூரில் தன் தலைநகரை அமைத்துக் கொண்டிருக்கலாம். குலோத்துங்கனுடைய மனைவிமார்கள் மதுராந்தகி, தியாகவல்லி, ஏழிசைவல்லபி, சோழக்குலவல்லியார் ஆகியோராவர். மிக அற்புதமான பெயர்கள். இவனுடைய பிள்ளைகள் ராஜராஜ மும்முடிச் சோழன், ராஜராஜ சோடகங்கன், விக்கிரம சோழன், மேலும் நான்கு பேர். ராஜகேசரிவர்மன் அபய குலோத்துங்க சோழன் என்பது இவனது முழுப் பெயர். சோழ அரசர்களில் மிகவும் பிரபலமான அரசன் இந்த குலோத்துங்கன். குலத்தை முன்னிலைப் படுத்தியவன் எனும் பொருளில் இந்த குலோத்துங்கன் எனும் பெயர் அமைந்திருக்கிறது. இந்த குலோத்துங்க மன்னன் பற்றிய விவரங்கள் வரலாற்றில் சற்று குழப்பமாகவே கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் பல ஊர்களில் உள்ள கல்வெட்டுக்களில் காணப்படும் விவரங்களின்படி இந்த குலோத்துங்கன் பட்டத்துக்கு வந்தபோது சில நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. அதிராஜேந்திரன் வரலாற்றை எழுதும்போதுகூட அவன் மரணத்துக்குப் பின் நடந்த சில குழப்பங்கள் பற்றி கூறப்பட்டிருக்கிறது. அதிராஜேந்திரன் பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே கொல்லப்பட்டிருக்கிறான். அதையடுத்து இந்த குலோத்துங்கன் பதவிக்கு வருகிறான். இடையில் நடந்தவை என்ன? இந்த குலோத்துங்கன் யார்? எங்கிருந்து வந்தான் போன்ற கேள்விகள் எழத்தானே செய்கிறது. இவனைப் பற்றிய கல்வெட்டுக்களில் இவனை 'பரிதிகுலம்' அதாவது சூரிய வம்சம் என்கிறது. தமிழிலக்கியங்களிலும் இவனைப் பற்றி குறிப்பிடுகையில் அனபாயன் என்றும் முதலாம் குலோத்துங்கன் என்றும் கூறுகிறார்கள். சில கல்வெட்டுக்கள் கூறும் தகவல்களின்படி இந்த குலோத்துங்கனுக்கு பட்டம் சூட்டப்பட்டது தில்லை சிதம்பரத்தில் என்பது தெரிகிறது. எது எப்படியோ விஜயாலய வம்சத்து அதிராஜேந்திரனது மரணத்துக்குப் பிறகு இந்த குலோத்துங்கன் சோழ மன்னனாக முடிசூட்டிக் கொண்டு சிறப்பாக ஆட்சி புரிந்திருக்கிறான். வரலாற்றின் இந்தப் பகுதி குறித்து சரியான உண்மைகளை வெளிக் கொண்டு வரும்போது இவனுடைய பூர்வோத்திரம் பற்றி பார்க்கலாம். யூகங்களும் ஹேஷ்யங்களும் இந்த கேள்விகளுக்கு விடை தராது. குலோத்துங்கன் பதவிக்கு வந்த சூழ்நிலை குழப்பமான சூழ்நிலை. நாட்டில் கலவரம் நடந்து முடிந்திருந்தது. அவன் குழப்பத்தை அடக்கி தன் ராஜ்யாதிகாரத்தை உறுதி செய்து கொள்வதற்காக சில யுத்தங்களை செய்ய வேண்டியிருந்தது. உள்நாட்டில் அதிராஜேந்திரனின் மரணமும், அதையடுத்து நிகழ்ந்த கிளர்ச்சிகளும், அதே நேரத்தில் இலங்கையில் பிரச்சனை ஏற்பட்டு அதை அடக்க நேர்ந்த விதமும் அவனது முதல் சில ஆண்டுகள் போர்க்களமாகவே இருந்திருக்கிறது. சோழர்கள் ராஜராஜ சோழன் காலம் முதல் கீழைச் சாளுக்கியர்களுடன் திருமண உறவு வைத்துக் கொண்டு ராஜராஜனின் மகள் குந்தவையை விமலாதித்தனுக்கும், பின்னர் விமலாதித்தன் மகனான ராஜராஜ நரேந்திரனுக்கு ராஜேந்திர சோழன் தன் மகளான அம்மங்காதேவியை மணமுடித்தும் உறவினை பலப் படுத்திக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் மேலைச் சாளுக்கியர்களுடன் சோழர்கள் போரில் ஈடுபட்டனர். வேங்கியின் தாயதிப் போட்டியில் தம்பிக்கு சோழர்களும், அண்ணனுக்கு சாளுக்கியர்களும் உதவி செய்து போரைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் மேலைச் சாளுக்கியர்களுடன் சுமுக உறவு கொள்வதற்காக வீரராஜேந்திரன் தன் மகளை சாளுக்கியன் விக்கிரமாதித்தனுக்குத் திருமணம் செய்து கொண்ட பின்னர் அவர்களுடன் சோழர்களுக்கு நல்ல உறவு அமைந்தது. அதிராஜேந்திரன் இறந்தான் என்றதும் சாளுக்கிய விக்கிரமாதித்தன் படையெடுத்து வந்து காஞ்சியில் கலகத்தை அடக்கிவிட்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்து தங்கினான். அப்போது அங்கு வந்து சோழனாக முடிசூட்டிக் கொண்டிருந்த குலோத்துங்கனைப் போரிட்டு விரட்டிவிட அவன் தன் தலைநகரை திருவாரூருக்கு மாற்றிக் கொண்டான். அப்போதும் மேலைச் சாளுக்கிய விக்கிரமாதித்தனுக்கும் கீழைச் சாளுக்கிய வேங்கி இளவரசன் குலோத்துங்கனுக்கும் மோதல் இருந்து கொண்டுதான் இருந்தது. சாளுக்கிய (4ஆம்) விக்கிரமாதித்தனுடன் போர். மேலைச் சாளுக்கியர்களும் சோழ மன்னர்களும் ராஜராஜன், ராஜேந்திரன் காலத்திலிருந்து போரிட்டுக் கொண்டு இருந்திருக்கின்றனர். சாளுக்கிய மன்னர்கள் தைலபன், சத்தியாஸ்ரயன், ஜெயசிம்மா, சோமேஸ்வரா என்று அடுத்தடுத்து எல்லா சாளுக்கியர்களும் சோழர்களிடம் போரில் தோற்றுப் போயிருக்கின்றனர். வீரராஜேந்திர சோழன் காலத்தில் இந்தச் சாளுக்கியர்கள் பலமுறை தோற்று ஓடியிருக்கின்றனர். இவற்றில் பெரும்பாலான போர்களில் தோற்றதுமில்லாமல் சாளுக்கியர்கள் போர்க்களத்திலிருந்து விரைந்து ஓடவும், சோழர்கள் விரட்டிக் கொண்டு ஓடவுமாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் சோழர்கள் சாளுக்கிய தலைநகரைப் பிடித்து கொள்வதும், அவர்களைக் கப்பம் கட்ட வைப்பதும் வழக்கமாக இருந்து கொண்டிருந்தது. மேலைச் சாளுக்கியர்களான முதலாம் சோமேஸ்வரன் அவனுடைய பிள்ளைகள் ஆறாம் விக்கிரமாதித்தன் இரண்டாம் சோமேஸ்வரன் ஆகியோர் சாளுக்கியப் படைகளுக்குத் தலைமை தாங்கி குலோத்துங்கனுடன் போரிட்டனர். அந்தப் போரில் வென்ற குலோத்துங்கன் "விருதுராஜ பயங்கர" எனும் பட்டத்தைப் பெற்றான். இதன் பொருள் விருதுராஜன் எனப்படும் விக்கிரமாதித்தனை போரில் அச்சம்கொள்ளச் செய்தவன் என்பது. குலோத்துங்கன் காலத்தில் எல்லா போர்களிலுமே சோழர்கள் சாளுக்கியர்களை வென்றிருக்கிறார்கள். ஆனால் ஒரேயொரு முறை 1118இல் குலோத்துங்கன் உடல்நலம் குன்றியிருந்த நேரத்தில் வேங்கியை விக்கிரமாதித்தனிடம் தோற்றிருக்கிறான். உடல்நலம் சரியில்லாத குலோத்துங்கன் தன்னுடைய அபிமான மகனான விக்கிரம சோழனை அழைத்து சோழ சாம்ராஜ்யத்து மன்னனாக முடிசூட்டினான். தன்னுடைய முடிசூட்டு விழாவுக்காக விக்கிரம சோழன் தாய்நாடு திரும்பிய நேரத்தில் சாளுக்கியர்கள் வேங்கியைத் தாக்கிப் பிடித்துக் கொண்டனர். இப்படி இவர்கள் வேங்கியைத் தங்கள் வசம் நான்கு ஆண்டுகள் வைத்திருந்தனர். தன்னுடைய நிலைமையை வலுப்படுத்திக் கொண்ட விக்கிரம சோழன் 1125-26இல் அப்போது வயது முதிர்ந்திருந்த விக்கிரமாதித்தனைத் தோற்கடித்துவிட்டு மீண்டும் வேங்கியைப் பிடித்துக் கொண்டான். ஆக, குலோத்துங்கன் சோழநாட்டையும் வேங்கியையும் ஒருங்கிணைக்க செய்த முயற்சிகளுக்கு சாளுக்கியன் விக்கிரமாதித்தன் முட்டுக்கட்டையாக இருந்தான். குலோத்துங்கன் ராஜேந்திரன் வம்சத்தாரின் பெண்வழி வாரிசுகள் என்பதாலும், சோழநாட்டை இவர் அதிராஜேந்திரனுக்குப் பிறகு ஆளத் துவங்கியதாலும் இவ்விரு நாடுகளையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டான் குலோத்துங்கன். 1075இல் இதனை எதிர்த்து விக்கிரமாதித்தன் வேங்கியின் மீது படையெடுத்து வந்தான். சாளுக்கியப் படைகள் சோழ நாட்டினுள் புகுந்து அதன் படைகளை கோலாரில் எதிர்கொண்டது. அங்கு சாளுக்கியர்களை எதிர்த்துப் போர் புரிந்து சோழப் படைகள் அவர்களை துங்கபத்திரைக் கரைவரை ஓடஓட விரட்டியடித்து வெற்றி பெற்றது. ஈழத்தில் யுத்தம். குலோத்துங்கன் விக்கிரமாதித்தனுடன் போர் புரிந்து கொண்டிருந்த நேரத்தில் விஜயபாகு என்பவன் இலங்கை முழுவதுக்கும் தன்னை அரசனாகப் பிரகடனப் படுத்திக் கொண்டான். 1070இல் இலங்கையில் இருந்த சோழர் படைகளை இவன் ரோஹண எனுமிடத்தில் தாக்கி வெற்றி பெற்றான். இந்த வெற்றியை யடுத்து தைரியம் கொண்டு விஜயபாகு அனுராதபுரத்துக்கு அருகிலிருந்த பகுதிகளையும் பறித்துக் கொண்டான். குலோத்துங்கன் ஒரு பெரும் படையை இலங்கைக்கு அனுப்பு அங்கு குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்த விஜயபாகுவை ஒரு கடுமையான போரில் தோற்கடித்தான். இந்த இலங்கைப் போரின்போது நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம். சோழர்களின் எதிரிகளான சாளுக்கியர்களுக்கு உதவி செய்வதற்காக இலங்கையின் சிங்களப் படையொன்று ரகசியமாக சாளுக்கிய நாட்டுக்குச் சென்றது. அதை வழிமறித்த சோழப்படையினர் அவர்களைப் பிடித்து மொட்டையடித்து பெண்களுக்கான உடைகளை அணிவித்து அவமானப்படுத்தி ஊருக்குத் திரும்ப அனுப்பினர். சோழர்கள் ஏன் இப்படி செய்தார்கள் என்றால் அந்த சிங்கள ராணுவம் தமிழ் வணிகர்களின் கப்பலை வழிமறித்து கொள்ளையடித்ததற்கு பதிலாக இப்படிச் செய்தனுப்பினர். சிங்களர்கள் தமிழ்ப் பிரதேசங்களிலும் புகுந்து கொள்ளையடித்து சோழர்களுக்குச் சவால் விடுத்தனர். பாண்டியர்களுடனான யுத்தம். சாளுக்கிய விக்கிரமாதித்தனை போரில் தோற்கடித்த பின் குலோத்துங்கன் பாண்டியர்களின் பக்கம் திரும்பினான். சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் காலம் காலமாய் மோதல் இருந்து கொண்டிருந்தது. சோழ நாட்டில் அதிராஜேந்திரன் கொலையுண்ட பின்னர் குலோத்துங்கன் வேங்கியிலிருந்து இங்கு வந்து ஆட்சி அதிகாரத்தைப் பிடித்துக் கொண்டபோது சிறிது காலம் சோழநாடு குழப்பத்தில் இருந்தது. அந்த நேரம் பார்த்து பாண்டியர்கள் சோழர்களுக்கு எதிராகக் கலகம் செய்து தங்களது சுய உரிமையை மீட்டுக்கொள்ள போராடினர். இதனை குலோத்துங்கன் லேசாக எடுத்துக் கொள்ளவில்லை. பாண்டிய நாட்டை இழப்பது தனக்கு நல்லதல்ல என்றுணர்ந்த குலோத்துங்கன் கலகம் செய்யும் பாண்டியர்களையும், அதனையடுத்த சேரநாட்டு (கேரள) பிரதேசங்கள் மீதும் படையெடுத்துச் சென்று அவர்களை அடக்கினான். இது குறித்த செய்தியொன்று சொல்வதாவது: குலோத்துங்க மன்னன் தன்னுடைய வலுவான படைகளைக் கொண்டு சேரர்களையும் பாண்டியர்களையும் போரில் வென்று கொற்கை துறைமுகத்தையும் எரித்தான். இந்த வெற்றியைக் குறிக்க சஹாயகிரி எனுமிடத்தில் ஒரு வெற்றித்தூண் எழுப்பினான். வேங்கி நாடு. இப்படி குலோத்துங்கன் இலங்கையிலும், பாண்டிய சேர நாடுகளிலும் போரிட்டுக் கொண்டிருக்கும்போது யட்சகன்னரதேவன் எனும் திரிபுரா ராஜன் வேங்கியின் மீது படையெடுத்து வந்தான். இதை படையெடுப்பு என்று சொல்வதைக் காட்டிலும் கொள்ளையடிக்க வந்ததாகச் சொல்லலாம். விஜயதேவன் இந்த படையெடுப்பை முறியடித்தான். இப்படி வேங்கி நாடு சோழர்களின் நேரடி ஆதிக்கத்தில் விஜயதேவனால் நடத்தப்பட்டது. அவன் இறந்த பின்னர் குலோத்துங்கனின் மகன் ராஜராஜ மும்முடிச் சோழனே 1076இல் வேங்கியின் சோழப்பிரதிநிதியாக நியமிக்கப்பட்டான். ஆனால் அவன் ஓராண்டுக்கு மேல் அங்கு தாக்குப் பிடிக்கவில்லை. ஆகையால் அவன் தம்பியான வீரசோழன் என்பான் ராஜப்பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு அந்தப் பதவியில் 1084 வரை இருந்து வந்தான். இந்த வீரசோழனுக்குப் பிறகு அவனுடைய இன்னொரு தம்பி ராஜராஜ சோடகங்கா என்பவன் ஐந்தாண்டுகள் பதவி வகித்தான். அவனுக்குப் பின் விக்கிரம சோழனுக்கு இந்தப் பதவி கிடைத்தது. வெளிநாட்டுத் தொடர்புகள். குலோத்துங்க சோழன் சீன நாட்டுக்கு ஒரு தூதரை 1077இல் அனுப்பி வைத்தான். சீனாவுடனான இந்த அரசியல் உறவு சோழர்களுக்கு ஆதாயம் அளித்தது. சீன உறவு ஏராளமான செல்வத்தை சோழர்களுக்குக் கிடைக்கச் செய்தது. 1063இல் குலோத்துங்கனின் இளமைப் பருவத்தில் இப்போதைய மலேயா தீபகர்ப்பத்தை ஸ்ரீவிஜய நாடு என்றிருந்த இடத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தான். சோழர் படைகள் ஸ்ரீவிஜயத்திலும் காம்போஜிலும் தங்க வைக்கப்பட்டிருந்தது. குலோத்துங்கன் காலத்தில் சோழர்கள் காம்போஜம் என்கிற இப்போதைய கம்போடியாவோடு தொடர்பு வைத்துக் கொண்டிருந்தனர். பர்மிய மன்னர்களும் சோழர்களுடன் உறவு வைத்துக் கொண்டிருந்தனர். குலோத்துங்கனின் சோழ சாம்ராஜ்யம். குலோத்துங்கன் காலத்தில் சோழசாம்ராஜ்யம் கடல்கடந்தும், உள்நாட்டில் வடக்கே வேங்கி, கலிங்கம் உட்பட வெகு தூரமும் தெற்கே சேர, பாண்டிய நாடுகளை உள்ளடக்கியும் பெரிதாக விளங்கியது. சில வரலாற்று ஏடுகளின்படி குலோத்துங்கன் தன் இறுதிக் காலத்தில் கங்கவாடி நாட்டை ஹொய்சாள மன்னன் விஷ்ணுவர்த்தனனிடம் இழந்தான் எனத் தெரிகிறது. கால வெள்ளத்தில் வேங்கி நாட்டின் பல பகுதிகளையும் சிறுகச் சிறுக மேலைச் சாளுக்கியர்களிடம் இழந்தான். ஹொய்சாளர்கள் சோழர்களை வெற்றி கொண்டதால் தைரியமடைந்த விக்கிரமாதித்தன் வேங்கியின் மீது 1118இல் படையெடுத்தான். தனக்கு வயதாகி விட்ட காரணத்தால் குலோத்துங்கன் தனது மகனான விக்கிரம சோழனிடம் பொறுப்பைக் கொடுத்தான். அப்படியிருந்தும் வேங்கி விக்கிரமாதித்தன் வசம் போய்விட்டது. அதன் ஆட்சியும் அவன் இறக்கும் வரை அதாவது 1126 வரை அவன் வசம்தான் இருந்தது. சோழர்களின் இந்தப் பின்னடைவு தற்காலிகமானதுதான். விக்கிரமாதித்தனுடைய இறப்புக்குப் பிறகு மீண்டும் வேங்கியை விக்கிரம சோழன் பிடித்துக் கொண்டான். 1124-25இல் சாளுக்கியர்களுடன் நடந்த போரில் வெற்றி பெற்று வேங்கியை மீட்டபின் அது மூன்றாம் குலோத்துங்கன் காலமாகிய 1176-1218 வரை சோழர் வசம் இருந்திருக்கிறது. ஆக, குலோத்துங்கனின் சாம்ராஜ்யத்தின் எல்லை அவன் பதவியேற்ற காலத்தைவிட அவன் இறக்கும் சமயம் சற்று குறைந்துதான் போயிருந்தது. குலோத்துங்கனைப் பற்றி.... மாமன்னன் ராஜேந்திர சோழனின் மகளான மதுராந்தகி எனும் பெண்ணைத்தான் குலோத்துங்கன் திருமணம் செய்து கொண்டான். இந்த தம்பதியருக்கு ஏழு பிள்ளைகள், அவர்களில் விக்கிரம சோழன் என்பாந்தான் குலோத்துங்கனுக்குப் பிறகு அரசுரிமை பெற்றான். அவன் குலோத்துங்கனின் மூத்த மகன் அல்ல, நான்காவது மகன் என்பது கவனிக்கத் தக்கது. மதுராந்தகி 1110இல் இறந்து போனாள். பின்னர் தியாகவல்லி என்பவரைத் திருமணம் செய்து கொள்கிறான். கலிங்கத்துப்பரணி எனும் காப்பியம் இந்த தியாகவல்லியை ஏழிசைவல்லபி என குறிப்பிடுகிறது. அவளை "ஏழுலகுடையாள்" என்றும் சொல்கிறார்கள். இந்த தியாகவல்லி மன்னருக்கு இணையாக அதிகாரம் கொண்டவராக இருந்திருக்கிறார். இவர்களைத் தவிர சோழகுலவல்லி என ஒரு ராணியும் இருந்ததாகத் தெரிகிறது. இலங்கை மன்னனாகிய விக்கிரமபாகுவின் மகள் ஒருத்தியையும் குலோத்துங்கன் 1088இல் திருமணம் செய்து கொண்டார். இவைகள் எல்லாம் இரு நாட்டுக்குமிடையே ஒற்றுமையை நிலவச் செய்வதற்காகச் செய்து கொண்ட திருமணங்களாக இருத்தல் வேண்டும். இந்தத் திருமணத்தின் மூலம் சிங்கள அரசன் பாண்டியர்களுடன் சேர்ந்து கொண்டு சோழர்களை எதிர்ப்பது நின்று போனது. இலங்கை சிங்கள அரசனுக்கும் அச்சமின்றி அதிக அதிகாரத்தோடு ஆட்சி புரியவும் முடிந்தது. மத்திய இந்தியாவில் ஆண்ட மன்னர்களோடு குலோத்துங்கன் நல்ல உறவு வைத்திருந்தான். அவர்கள் அங்கு சூரியபகவானுக்கு எழுப்பியிருந்த கலைநயம் மிக்கப் பல கோயில்களைக் கண்ட குலோத்துங்கன் அதுபோல சோழ நாட்டிலும் பல ஆலயங்களை எழுப்பினான். சூரியனுக்கென்று தமிழகத்தில் கட்டப்பட்ட பல ஆலயங்கள் இவன் காலத்தில் கட்டப்பட்டவை. 1113இல் மேலக்கடம்பூரில் தன்னுடைய பட்டமேற்ற 43ஆம் ஆண்டில் அரிய பல சிற்ப வேலைகள் அமைந்த கோயிலை அமைத்தான். இந்தக் கோயிலின் மூலத்தானம் ஒரு தேரைப் போல அமைப்பில் கட்டப்பட்டது. இவை தவிர சோழ நாட்டில் பற்பல ஆலயங்களை எழுப்பி தன் பெயர் நிலைக்கும்படி செய்துவைத்தான் முதலாம் குலோத்துங்கன். விஜயாலயன் சோழ வம்சத்தில் தந்தை வழியில் அல்லாமல் பெண் வழியில் வந்த முதலாம் அரசன் குலோத்துங்கன். அதிராஜேந்திரனின் மரணத்துக்குப் பிறகு பதவியேற்ற குலோத்துங்கன் 1121 வரை சோழநாட்டை ஆண்டான். இவனைத் தொடர்ந்து இவனது நான்காவது மகன் விக்கிரம சோழன் பதவிக்கு வந்தான் தில்லைக் கோயில் இந்தக் கோயிலின் கட்டமைப்பை வைத்துச் சரித்திர ஆய்வாளர்கள் இது பத்தாம் நூற்றாண்டுக்கு முன்னர் கட்டப் பட்டிருக்கலாம் என்றும் சொல்கின்றனர். பொதுவாகவேச் சோழமன்னர்கள் அனைவருமே சிவபக்தியில் ஊறித் திளைத்தவர்கள் மட்டுமின்றித் தில்லைக் கோயிலில் பெரும் ஈடுபாடும் கொண்டவர்களாகவே இருந்து வந்தனர். சோழ அரசருக்கு முடி சூட்டும் உரிமையும் தில்லை வாழ் அந்தணர்களுக்குச் சொந்தமாக இருந்து வந்தது. மன்னன் ராஜ ராஜ சோழன் காலத்தில் தான் தில்லைப் பதியில் மறைந்திருந்த திருமறைகளை மன்னன் கண்டெடுத்து, நம்பியாண்டார் நம்பி மூலம் அவற்றைத் தமிழ் நாடெங்கும் ஓதுமாறு பணித்தான். இவனைத் தவிர, வீர ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன் என முறையே சோழ அரசர்கள் பலரும் இந்தக் கோயில் திருப்பணியில் பங்கு பெற்றிருக்கின்ரனர். முதலாம் பிரகாரத்தை ஏற்படுத்தியவன் குலோத்துங்க சோழன் என்பதால் அவன் பெயரால் அது "குலோத்துங்க சோழன் திருமாளிகை" எனவும், பின்னர் இரண்டாம் பிரகாரம் அவன் மகன் ஆன விக்கிரம சோழன் பெயரால், "விக்கிரம சோழன் திருமாளிகை" எனவும் அழைக்கப் பட்டு வந்தது. விக்கிர சோழன் இது தவிர, மேற்குக் கோபுர வாசல், கோயிலுக்கு எனத் தேர் எனஏற்படுத்தினான். ஒரு தெருவே அவன் பெயரில் விளங்கியது. அவனின் தளபதியான நரலோக வீரன் நூற்றுக் கால் மண்டபம், சிவகங்கைக் குளத்தின் படிக்கட்டுகள் ஒரு பிரகாரம், மண்டபம் ஒன்றும் மற்றும் சிவகாமி அம்மையின் வெளி மதில் சுவர் போன்றவற்றை எழுப்பினான். பின்னர் வந்த மூன்றாம் குலோத்துங்கன்சபாபதிக்கு முக மண்டபம், கோபுரம், சிவகாமி அம்மையின் கோயிலின் மதில் சுவரின் எஞ்சிய பாகம் போன்றவற்றை எழுப்பினான். பின்னர் வந்த மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் தான் முதன் முதலாக நடராஜருக்கு அன்னப் பாவாடை சாத்தும் வழக்கம் ஏற்பட்டதாய்த் தெரிய வருகிறது. சோழர்களுக்குச் சற்றும் குறைவில்லை என்பதை நிரூபிக்கும் வண்ணம் பிற்காலப் பாண்டியர்களும் சிதம்பரம் கோயிலின் பல கட்டுமானங்களிலும் ஈடுபட்டிருக்கின்றனர். இது தவிர, சோழ மன்னன் முதலாம் பராந்தகன் இந்தக் கோயிலின் கூரைக்குப் பொன் வேய்ந்ததாகவும் கேள்விப் படுகின்றோம். நூற்றுக் கால் மண்டபம் சோழத் தளபதியான நரலோகவீரனால் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப் பட்டதாயும் சொல்கின்றனர். விக்கிரம சோழன். கி.பி.1118 - 1135 Picture 15. விக்ரமசோழன் த/பெ. 1ம் குலோத்துங்க சோழன் 1118-1135 விக்கிரம சோழன். கி.பி. 1118 - 1135 முதலாம் குலோத்துங்கன் காலத்திலேயே அரசு அதிகாரங்களைப் பெற்றுக் கொண்டு ஆட்சி புரியத் தொடங்கியவன் அவனுடைய நான்காம் குமாரனாகிய விக்கிரம சோழன். இவனுக்குப் "பரகேசரி" எனும் பட்டம் உண்டு. குலோத்துங்கன் முதலில் விக்கிரமாதித்தன் வந்து போரிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தைப் பிடித்துக் கொண்டபோது திருவாரூர் போய் தங்கியிருந்து, பின்னர் விக்கிரமாதித்தன் சாளுக்கிய நாட்டுக்குத் திரும்பிய பின் மீண்டும் கங்கை கொண்ட சோழபுரம் போய்விடுகிறான். அதன் பின் சோழர்களின் தலைநகரமாக இந்த கங்கைகொண்ட சோழபுரமே இருந்து வந்தது. விக்கிரம சோழனுக்கு இரு மனைவியர்கள் முக்கோகிலனடிகள், தியாகபாதா என்பவர்கள். இவனுக்குப் பின் இவன் மகனான இரண்டாம் குலோத்துங்கன் பதவிக்கு வருகிறான். விக்கிரம சோழன் 1135இல் காலமானான். கோப்பரகேசரிவர்மன் விக்கிரம சோழன் எனும் பெயரோடு விளங்கிய இந்த மன்னன் 12ஆம் நூற்றாண்டில் சோழ தேசத்தை ஆண்ட மன்னர்களில் முதலாமவனும் சிறந்தவனுமாக இருந்தான். விக்கிரம சோழன் முன்பே குறிப்பிட்டபடி குலோத்துங்கனின் நான்காவது மகன். வீரசோழன் என்பவன் மூன்றாவது மகன். விக்கிரமன் சோழ மன்னனாக முடிசூட்டிக் கொள்வதற்கு முன்பாகவே வேங்கி நாட்டை ஆளும் பொறுப்பு 1089இல் கொடுக்கப்பட்டு அங்கு சென்றுவிட்டான். 1118இல் குலோத்துங்கன் தனக்கு வயது முதிர்ந்து விட்டது என்பதால் வேங்கியிலிருந்த விக்கிரமனை அழைத்து சோழ நாட்டில் பதவியில் அமர்ந்தினான். ராஜகேசரி என்றும் பரகேசரி என்றும் இவனுக்கு விருதுகள். 1118 முதல் 1122 வரை இவன் தன் தந்தை குலோத்துங்கணுடன் இணைந்து ஆண்டுவந்தான். விக்கிரமன் வேங்கியைவிட்டு சோழ தேசத்துக்குத் தன் தந்தைக்குத் துணையாக வந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு மேலைச் சாளுக்கியன் விக்கிரமாதித்தன் வேங்கியைத் தாக்கிப் பிடித்துக் கொண்டான். விக்கிரமன் ஆட்சிக்கு வருவதற்கு 12 வருஷங்கள் முன்பாகவே சோழ சக்கரவர்த்தி குலோத்துங்கன் சார்பில் கலிங்கத்தின் மீது 1110இல் படையெடுத்தான். இந்த படையெடுப்பு பற்றிய இலக்கியமொன்று இருக்கிறது விக்கிரம சோழன் உலா என்று. மேலைச் சாளுக்கியன் விக்கிரமாதித்தன் 1118இல் கிழக்கு சாளுக்கிய நாடான வேங்கியைப் பிடித்துக் கொண்டான் என்பதைப் பார்த்தோம். 1126இல் விக்கிரமாதித்தன் இறந்தவுடன் விக்கிரம சோழன் வேங்கியை மீண்டும் பிடித்துக் கொண்டான். இந்தப் போர் குறித்த அதிகப்படியான தகவல்கள் கிடைக்கவில்லை. நீண்ட காலம் சோழர்கள் ஆட்சியை நடத்தி வந்ததால் வேங்கி நாட்டவர் சோழர்களை சாளுக்கியர்களைக் காட்டிலும் அதிகம் விரும்பியிருக்கிறார்கள். அது போலவே அரச குடும்பத்தார் மீதும் மக்கள் அன்பு வைத்திருந்தனர். வேங்கி மக்களின் விருப்பத்துக்கிணங்க விக்கிரம சோழன் தன் குமாரன் இரண்டாம் குலோத்துங்கனை வேங்கி நாட்டிற்கு அனுப்பி வைத்தான். வேங்கியை முழுவதுமாக மீண்டும் தன்வசப் படுத்திக் கொண்ட பிறகு சோழர்கள் கலிங்கத்தின் மீதும் படையெடுத்துச் சென்றனர். சோழர்களிடமிருந்து ஹொய்சாளர்கள் கைப்பற்றிக் கொண்ட பிரதேசங்களை மீட்க விக்கிரமன் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. விக்கிரமன் கலம் அவன் தந்தையின் காலம்போல அதிகமான போர்களைக் கொண்டதல்ல. விக்கிரமன் சிறந்த சிவபக்தனாக விளங்கினான். பல சிவாலயங்களை இவன் பல ஊர்களிலும் கட்டி வைத்தது இன்றும் அவன் பெயரைத் தாங்கிக் கொண்டு இருக்கின்றன. சைவர்களுக்குக் கோயில் என்றால் சிதம்பரம். அந்த சிதம்பரத்துக்கு நிறைய கைங்கர்யங்களைச் செய்தான் விக்கிரம சோழன். 1128இல் சோழ சாம்ராஜ்யத்தின் வருமானம் முழுவதையும் சிதம்பரம் கோயில் கைங்கர்யத்துக்கும் விரிவாக்கத்துக்கும் கொடுத்து விட்டான். ஆலயத்தின் முக்கிய விமானம் மற்றும் நடைபாதை கூரைகளுக்குப் பொன் வேய்ந்தான். இவன் காலத்தில் மக்கள் ஆலயங்களின் அபிவிருத்திக்கு அதிக நன்கொடைகளைக் கொடுத்தனர். விக்கிரம சோழனை "தியாகசமுத்திரன்" என அன்போடு விருது கொடுத்து அழைத்தனர். இவனுக்குப் பிறகு இரண்டாம் குலோத்துங்கன் பதவிக்கு வந்தான். இரண்டாம் குலோத்துங்கன்.கி.பி. 1133 - 1150 Picture 16. 2ம் குலோத்துங்க சோழன் த/பெ. விக்ரமசோழன்1133-1150 சேக்கிழார்: இவர் சங்கநூற் பயிற்சியுடையவர். 63 நாயன்மார்களது வாழ்க்கை வரலாற்றைக் கூறும், பெரியபுராணம், (திருத்தொண்டர் புராணம்)என்னும் நூலை இயற்றியவர். இவ்வாறு தலைப்பட்டிருந்ததனால் இப்புராணம் சுந்தரமூர்த்தி நாயனாரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட ஒரு காப்பியம் எனச் சிலர் கூறுவர். இவர் இரண்டாம் குலோத்துங்கனுக்கு அமைச்சராய் விளங்கி யவர். அப்போது இவருடைய இயற்பெயர் ,அருண் மொழித்தேவர் 2nd Draft இரண்டாம் குலோத்துங்கன் (1133 முதல் 1150 வரை) விக்கிரம சோழனின் மகனான இந்த இரண்டாம் குலோத்துங்கனுக்கு "ராஜகேசரி" எனும் விருது உண்டு. கங்கைகொண்ட சோழபுரம் இவன் தலைநகரம். இவனது ராணிமார்கள் தியாகவல்லி, முக்கோகிலம். இந்த இரண்டாம் குலோத்துங்கன் காலம் சோழ நாட்டின் பொற்காலம் என்று தெரிகிறது. இவன் காலத்தில்தான் மக்கள் சுகபோகத்தில் இருந்து கொண்டு வீண் பொழுது போக்கிக்கொண்டு ஜீவகசிந்தாமணியைப் புலவர்களைக் கொண்டு படிக்க வைத்துப் பொற்காசுகளைக் கொடுத்து வாழ்க்கையை அனுபவித்தனர். இதனைக் கண்டு வருந்திய மன்னன் மக்களை நல்வழிப்படுத்த நல்லதொரு நூலை இயற்றித்தரவேண்டுமென்று தன் அமைச்சர் சேக்கிழார் பெருமானை வேண்ட, அவரும் பெரியபுராணம் செய்தார். இவனுடைய தந்தை இருந்த காலத்திலேயே இந்த இரண்டாம் குலோத்துங்கன் இளவரசாகப் பட்டம் சூட்டிக் கொண்டு ஆட்சியில் பங்குகொண்டான். 1135இல் விக்கிரமன் காலமானதும் இவன் முழுமையான மன்னனாக ஆனான். இவனுடைய ஆட்சிக் காலம் பொற்காலம் எனலாம். நாட்டில் அங்கும் அமைதி நிலவியது. இவனும் நல்லாட்சி வழங்கினான். கடவுள் பக்தி நிரம்பியவன் ஆதலாம் எங்கும், எவரிடமும் அன்போடு நடந்து கொண்டான். மக்கள் மதித்த நல்லதொரு ஆட்சியாளனாகத் திகழ்ந்தான் இரண்டாம் குலோத்துங்கன். இவன் காலத்தில் போர்கள் எதுவும் இல்லை. ஆனால் வேங்கியைக் காக்க இவன் சில போர்களை நடத்த வேண்டியிருந்தது. பெரிய புராணம் எனும் சேக்கிழார் சுவாமிகள் இயற்றிய இலக்கியம் இந்த பெருமகனாரின் புகழுக்கு ஒரு சாட்சி. இந்த குலோத்துங்கனுக்கு சிதம்பரம் என்றால் உயிர். இந்த சோழ மன்னர்கள் சிதம்பரத்திலும் ஒரு முறை முடிசூட்டிக் கொள்வது வழக்கம். அதுபோலவே இவனும் இங்கு முடிசூட்டிக் கொண்டான். சிதம்பரம் நடராஜப் பெருமான் மீது அளவிலா பக்தி கொண்டவன். இவன் காலத்தில் சிதம்பரம் ஆலயம் சீரமைக்கப்பட்டு குடமுழுக்கும் நடைபெற்றது. விக்கிரம சோழன் தொடங்கிய திருப்பணி இவன் காலத்தில் முடிந்து குடமுழுக்கு நடந்திருக்கலாம். இந்த இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் சைவ வைணவ பூசல் தமிழகத்தில் நடந்திருக்கிறது. சிதம்பரம் நடராசப் பெருமான் ஆலயத்தில் இருந்த கோவிந்தராஜ பெருமாள் சிலை இவன் காலத்தில் அகற்றப்பட்டது என்றொரு செய்தியும் இருக்கிறது. சிவாலயத்தில் எதற்காக பெருமாள் சிலை என்பது இவன் கருத்தாக இருந்திருக்கலாம்.* (*இது குறித்து ஒரு புராண செய்தி உண்டு. பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த மகாவிஷ்ணுவிடம் அவர் பள்ளிகொண்டிருந்த ஆதிசேஷன் போய் சிதம்பரத்தில் நடராஜப் பெருமான் ஆடுகின்ற ஆனந்தத் தாண்டவத்தைத் தான் பார்க்க விரும்புவதாகச் சொல்ல பெருமாள் அவரை அனுமதிக்கிறார். உடனே ஆதிசேஷன் பதஞ்சலி முனிவர் வடிவத்துடன் வியாக்கிரபாத முனிவரையும் அழைத்துக் கொண்டு சிதம்பரம் சென்று ஐயனின் ஆடலைக் காண்கிறார். அங்கு பாற்கடலில் மகாலக்ஷ்மி விஷ்ணுவிடம் ஆதிசேஷனும் போய்விட்டார் நாமும் போய் பார்த்தால் என்ன என்று சிதம்பரம் போய் கூட்டத்தோடு கூட்டமாய் நடராசரின் (சிவனின்) ஆட்டத்தைப் பார்த்தார்களாம். ஒருக்கால் இந்த நிகழ்ச்சியைக் காட்டும் விதத்தில் அங்கு ஒரு பெருமால் சந்நிதி இருந்ததோ என்னவோ?) எது எப்படியோ? இரண்டாம் குலோத்துங்கனுக்கு அவன் காலத்தில் வாழ்ந்து வைணவத்தைப் பரப்பிய இராமானுஜரைப் பிடிக்கவில்லை. இராமானுஜரின் பல சீடர்களை இவன் துன்புறுத்தியதாகத் தெரிகிறது. ஒரு வைணவரைக் குருடாக்கிவிட்டதாகவும் செய்தி இருக்கிறது. இராமானுஜருக்குச் செய்ய வேண்டிய இந்த கொடுமையை அவருக்கு நேராமல் தடுக்க நினைத்த கூரத்தாழ்வான் என்பவருக்கு நடந்துவிட்டது இது. ராஜாவாக கங்கைகொண்ட சோழபுரத்தில் வசிக்காமல் சிதம்பரத்திலேயே அதிகம் வாழ்ந்தான் இந்த இரண்டாம் குலோத்துங்கன். இவன் ராணி தியாகவில்லி. இன்னொரு மனைவி மலயமான் வம்சத்து ராணி. இந்த குலோத்துங்கனைத்தான் "அனபாய சோழன்" என்று அழைத்தனர். இந்தப் பெயர்தான் பல கல்வெட்டுகளிலும் புத்தகங்களிலும் குறிப்பிடப்படுகிறது. இந்த இரண்டாம் குலோத்துங்கனுக்குப் பிறகு இவனது மகன் இரண்டாம் ராஜராஜன் என்பவன் 1150இல் ஆட்சிக்கு வந்தான் இரண்டாம் ராஜராஜன். கி.பி.1146 - 1173 Picture 17. 2ம் ராஜராஜ சோழன் த/பெ. 2ம் குலோத்துங்க சோழன் 1146- 1163 இரண்டாம் ராஜராஜன். கி.பி. 1146 - 1173 இரண்டாம் குலோத்துங்கனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த சோழ மன்னன் இரண்டாம் ராஜராஜன் என்பான். இவனது தலைநகரமும் கங்கைகொண்ட சோழபுரம்தான். இவனுடைய ராணிகள் அவனிமுழுதுடையாள், புவனமுழுதுடையாள், உலகுடை முக்கோகிலம். இவன் இறந்த ஆண்டு 1173. இரண்டாம் ராஜராஜன் தன்னுடைய தந்தையார் இரண்டாம் குலோத்துங்கனின் மறைவுக்குப் பிறகு அரச பதவிக்கு வந்தான். அப்படி வந்த ஆண்டு 1150. ஆனால் 1146லேயே இவனை இளவரசாக ஆக்கி ஆட்சி பொறுப்புகளை இரண்டாம் குலோத்துங்கன் வழங்கியிருந்தான். ராஜராஜனும், ராஜேந்திரனும், குலோத்துங்கனும், விக்கிரம சோழனும் ஓஹோவென்று ஆண்ட அகண்டு விரிந்த சாம்ராஜ்யம் குறையத் தொடங்கியது இவன் காலத்தில்தான். இவன் பதவியேற்ற நேரத்தில் இருந்த சோழ நாட்டுப் பகுதிகள் வேங்கி உட்பட இவன் காலத்தில் இவன் ஆட்சிக்குட்பட்டுதான் இருந்தது. ஆனால் இவன் காலத்தில் சோழப் பேரரசின் ஆட்சி சாம்ராஜ்யம் முழுவதும் இவனுடைய முன்னோர்கள் காலத்தில் இருந்தது போல ஒரு கட்டுப்பாடான மத்திய ஆட்சியின் கீழ் இல்லாமல் போய்விட்டது. இருந்தாலும் சோழப் பேரரசுக்கின் கீழ்தான் வேங்கி, பாண்டிய, சேர நாடுகள் இருந்து வந்தன. இலங்கை மீதும் இவன் படையெடுத்த செய்தியும் நமக்குக் கிடைக்கிறது. இவனும் சரி இவனுடைய மகனான மூன்றாம் குலோத்துங்கனும் சரி "திரிபுவன சக்கரவர்த்தி" எனும் விருதினைப் பெற்றிருந்ததிலிருந்து இவர்கள் தங்கள் முன்னோர்களின் வழக்கப்படி ஒரு பேரரசனாகத்தான் இருந்திருக்கிறான் என்பது தெரிகிறது. பாண்டிய நாட்டு நிர்வாகம் சோழர் கையில்தான் இருந்ததென்றாலும், அங்கே பாண்டிய நாட்டின் உரிமை யாருக்கு என்பதில் அங்குள்ள பாண்டியர்களுக்குள் போட்டி இருந்து வந்தது. அதன் பலனாக சோழர்களின் பிடி பாண்டிய நாட்டின் மீது இவன் காலத்தில் சற்று பலவீனமடைந்து போயிற்று. விஜயாலயன் பரம்பரையில் முதலாம் ஆதித்தன் காலத்தில் தோற்கடிக்கப்பட்ட பாண்டியர்கள் அதுமுதல் வீரராஜேந்திரன் காலம் வரையில் சோழர்களுக்கு அடிமைப்பட்ட நாடாகத்தான் இருந்து வந்தது. ஆனாலும் அவர்கள் தங்களை சோழர்களின் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள எல்லா காலங்களிலும் முயன்று வந்திருக்கிறார்கள். அதற்காக ரகசியமான நடவடிக்கைகளிலும், சதியிலும்கூட ஈடுபட்டிருக்கிறார்கள். பாண்டியர்களின் இந்த விடுதலை உணர்வு மாறவர்மன் எனும் மாறவரம்பன் சுந்தர பாண்டியன், ஜடாவர்மன் வீர பாண்டியன், ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் ஆகியோர் காலத்தில் அதிகமாகிவிட்டது. பாண்டியர்கள் சோழர்களிடம் அடிமைப்பட்டுக் கிடப்பதை விரும்பவில்லை. தங்களைச் சுயேச்சையான மன்னர்களாக அறிவித்துக் கொள்ள காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதற்கான முயற்சிகளில் 13ஆம் நூற்றாண்டு முழுவதும் இவர்கள் பாடுபட்டு வந்தார்கள் என்பதை மறந்துவிட முடியாது. 2ஆம் ராஜராஜன் 1163இல் தன்னுடைய மகனான இரண்டாம் ராஜாதிராஜனை இளவரசனாக முடிசூட்டி ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்திருந்தான். அதன் பிறகு பத்து ஆண்டுகள் 2ஆம் ராஜராஜன் வாழ்ந்தான். 2ஆம் ராஜராஜன் மிகச் சிறிய வயதிலேயே இறந்து விட்டான், ஆகவே அவன் மகனும் மிக இளம் வயதில் ஆட்சிப் பொறுப்பை ஏற்க நேர்ந்தது. ஆகவே பல்லவராயரின் ஆதரவையும் பாதுகாப்பையும் இவர்கள் பெற்றிருந்தார்கள். பல்லவராயர் ஒரு வயதும், இரண்டு வயதும் ஆகியிருந்த இளம் சோழ ராஜகுமாரர்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர்களில் 3ஆம் குலோத்துங்கன் தான் சோழ மன்னர்களில் கடைசி மன்னனாகக் கருதப்படுகிறான். இவன் 2ஆம் ராஜராஜனின் மகன். 2ஆம் ராஜராஜ மன்னனின் காலம் அமைதியான காலம். இந்த அமைதியான காலத்தில்தான் இவன் தாராசுரத்திலுள்ள ஐராவதேஸ்வரர் கோயிலைக் கட்டினான். இந்த தாராசுரம் கோயில் சோழர்களின் மற்ற இரு கோயில்களான தஞ்சை பிரஹதீஸ்வரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் கோயில் இவற்றுக்கு இணையாகப் பெருமை மிக்கதாக விளங்குகிறது என்பது தெரியும். தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் கருங்கல் வேலைகள் மிகவும் சிறப்பானவை. இவனது மகன் 3ஆம் குலோத்துங்கன் கட்டிய திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோயிலும் அதற்கு இணையான அற்புத கலைப் படைப்புகளைக் கொண்ட கோயில். இந்த ஆலயத்தில் இராமாயணம், மகாபாரதம் ஆகிய புராணக் கதைகளின் சிற்பங்கள் ஏராளமாக உள்ளன. 2ஆம் ராஜராஜன் தஞ்சாவூர், சிதம்பரம், காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், ஆகிய கோயில்களுக்கு ஏராளமான நிவந்தங்களை வழங்கியிருக்கிறான். மதுரை ஆலயத்துக்கும் இவன் இவன் ஏராளமான செல்வங்களைத் தந்தான். சேர நாட்டுக் கோயில்களுக்கும் இவன் அடிக்கடி சென்று வந்ததும், அந்தக் கோயில்களுக்கு ஏராளமான நிதியளித்ததும் கூட வரலாற்றில் காணப்படுகிறது. மேலைக் கடற்கரையிலிருந்து கீழைக் கடல் வரையிலுமுள்ள பிரதேசங்களில் சோழர்களின் ஆதிக்கம் இவன் காலத்தில் உறுதியாக இருந்திருக்கிறது. இவன் இறந்த பிறகு 2ஆம் ராஜாதிராஜன் எனும் இவனது மகன் சோழ மன்னனாக முடிசூட்டிக் கொண்டான். இரண்டாம் ராஜாதிராஜ சோழன். கி.பி. 1163 - 1178 Picture 18. 2ம் ராஜேந்திர சோழன். 2ம் ராஜராஜனின் மைத்துனன் 1163-1178 இரண்டாம் ராஜாதிராஜ சோழன். கி.பி. 1163 - 1178 இரண்டாம் ராஜராஜனுக்குப் பிறகு "ராஜகேசரி" எனும் பட்டத்துடன் அரசப் பதவிக்கு வந்தவன் இந்த இரண்டாம் ராஜாதிராஜன். இவனுடைய தலைநகரமும் கங்கைகொண்ட சோழபுரம் தான். இவனும் விக்கிரம சோழனுடைய மகன் தான். இவன் இரண்டாம் ராஜராஜனுடைய மகன் அல்ல, அவனுடைய சகோதரியின் மகன். ராஜராஜன் II இவனைத் தன் வாரிசாக நியமித்ததற்கு ஒரு காரணம் உண்டு. அது ராஜராஜன் IIக்கு மகன் கிடையாது. இவன் பதவியேற்றுக் கொண்ட காலத்தில் பாண்டியர் தேசத்தில் வாரிசுரிமைப் போர் தொடங்கியது. இலங்கையிலும் கலகம் ஏற்பட்டதால் சோழர்களுக்கு ஒரு சோதனையான காலமாக இருந்தது. இதன் காரணமாக பாண்டியர்களின் கை ஓங்கி சோழர்கள் வலிமை இழக்கத் தொடங்கினர். முதலாம் குலோத்துங்கனின் பாண்டிய படையெடுப்புக்குப் பிறகு, பாண்டிய நாட்டை பாண்டியர்களே ஆளும்படியாக சோழர்கள் அனுமதித்திருந்தார்கள். சோழர்கள் மேம்போக்காக மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார்கள். சில பாண்டிய மன்னர்கள் சோழர்களுக்கு அணுக்கமாக இருந்திருக்கின்றனர். குறிப்பாக பராந்தக பாண்டியன் சோழர்களோடு சேர்ந்து கொண்டு கலிங்கத்தில் போர் புரிந்திருக்கிறான். முதலாம் குலோத்துங்கன் காலத்துக்குப் பிறகு பாண்டியர்கள் சோழர் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு சுயமாக நாட்டை ஆளமுற்பட்டனர். குலோத்துங்கன் காலத்துக்குப் பிறகு சோழர்கள் பற்றிய கல்வெட்டு எதுவும் பாண்டிய நாட்டில் இல்லை. கி.பி.1166இல் மதுரை பாண்டியர்களான பராக்கிரம பாண்டியனுக்கும் குலசேகரனுக்கும் வாரிசு உரிமைப் போர் உருவானது. குலசேகரன் மதுரையைத் தாக்கினான். உடனே பாண்டியன் இலங்கை அரசன் பராக்கிரமபாகுவின் உதவியை நாடினான். இலங்கையின் உதவி பாண்டியருக்குக் கிடைக்குமுன்பாகவே குலசேகரன் மதுரையைத் தாக்கி பராக்கிரம பாண்டியனையும் கொன்று, அவன் மனைவி குழந்தைகளில் சிலரையும் கொன்றுவிட்டான். இதையறிந்த இலங்கை அரசன் தன்னுடைய படைகளுக்கு மதுரையைப் பிடித்துக்கொண்டு பராக்கிரம பாண்டியனையும் அவன் குடும்பத்தாரையும் கொன்ற குலசேகரனைத் தோற்கடித்து இறந்து போன பராக்கிரம பாண்டியனுடைய ஒரு மகனை அரச பீடத்தில் அமர்த்த வேண்டுமென்று உத்தரவிட்டான். இலங்கை அரசனுடைய எதிர்ப்பை குலசேகரன் தீரத்துடன் எதிர் கொண்டான். பாண்டியனின் வீரமிகுந்த போராட்டத்தை சமாளிக்க பராக்கிரமபாகு இலங்கையிலிருந்து மேலும் படைகளை வரவழைத்தான். இலங்கையின் தாக்குதலை தாங்கமுடியாமல் குலசேகரன் சோழ மன்னன் இரண்டாம் ராஜாதிராஜனுக்கு படைகளை அனுப்பும்படி வேண்டுகோள் விடுத்தான். அவன் கோரிக்கையையேற்று சோழ மன்னனும் பெரும் படையொன்றை பாண்டிய நாட்டுக்கு அனுப்பி வைத்தான். இறுதியில் குலசேகரன் பலத்த எதிர்ப்புக்கிடையில் தோல்வியைச் சந்தித்தான். இலங்கைப் படைகள் பராக்கிரம பாண்டியனின் மகனான வீரபாண்டியன் என்பவனை அரச பதவியில் அமர்த்தினர். இருந்த போதிலும் இலங்கைப் படைகளுக்கும் சோழர் படைகளுக்கும் போர் தொடர்ந்து நடந்தது. இறுதியில் சோழர் படை வெற்றி பெற்று இலங்கை சிங்களப் படைகளை துரத்தியடித்துவிட்டது. மிகக் கடுமையாக நடந்த இந்த சிங்கள சோழர் போரில் சோழர் படைத் தளபதி அண்ணன் பல்லவராயன் என்பவன் இரண்டு சிங்கள படைத் தளபதிகளின் தலையை வெட்டி வீழ்த்தினான். அந்த சிங்களப் படைத் தளபதிகளின் பெயர்கள் லங்காபுரி தண்டநாயகன், ஜெகதிவச தண்டநாயகன் என்பது. இந்தப் போரின் இறுதியில் சோழர்கள் குலசேகரனைப் பாண்டிய மன்னனாக முடிசூட்டி வைத்தனர். அந்த சமயத்தில் சிங்கள தளபதிகள் இருவரின் தலைகளும் கோட்டையில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. மதுரையில் சோழர் படைகளிடம் தோற்ற சிங்களப் படைகளின் வெறி அடங்கவில்லை. இலங்கை சிங்கள அரசன் பராக்கிரமபாகு சோழ நாட்டின் மீது படையெடுத்து வந்தான். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சோழர்கள் இலங்கையில் இந்த பராக்கிரமபாகுவுக்கு எதிரியான ஸ்ரீவல்லபன் என்பவனை இலங்கை அரசுக்கு உரிமை கோரி போராடும்படி தூண்டினார்கள். அந்த ஸ்ரீவல்லபன் சோழர்களின் படை உதவியுடன் ஒரு மிகப் பெரிய கப்பற்படையோடு இலங்கை சென்றான். அங்கு சிங்களர்களின் பல இடங்களை ஸ்ரீவல்லபன் தலைமையிலான சோழர்படை தூள் தூளாக்கியது. பாண்டியர்களின் பிரச்சனையில் தலையிட்டதன் பலனாக தன் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பை நினைத்து வருந்திய இலங்கை அரசன் பராக்கிரமபாகு பாண்டிய நாட்டுக்கு குலசேகரனை அரசனாக ஒப்புக் கொண்டான். அது மட்டுமல்லாமல் சோழர்களுக்கு எதிராக குலசேகரனோடு ஒரு ஒப்பந்தமும் செய்து கொண்டான். தாங்கள் பார்த்து பாண்டிய நாட்டுக்கு அரசனாக குலசேகரனை உட்காரவைத்த நன்றியை மறந்து அந்த குலசேகரன் பராக்கிரமபாகுவுடன் தங்களுக்கு எதிராக ஒப்பந்தம் செய்து கொண்டது கண்டு சோழர்களுக்கு ஆத்திரம். இவனுக்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டுமென்கிற வேகத்துடன் பாண்டியன் குலசேகரன் மீது படையெடுத்துச் சென்று அவனைத் தோற்கடித்து விட்டு முன்பு இலங்கை படையினரால் முடிசூட்டப்பட்ட வீரபாண்டியனை மீண்டும் பாண்டிய அரசனாக உட்கார வைத்தார்கள். நன்றி மறந்த குலசேகரன் காட்டுக்குள் ஒடி ஒளிந்து கொண்டான். சோழ நாட்டில் வலுவான தலைமை முன்பு போல இல்லாமல் இருந்ததால் அவர்களுக்குக் கீழிருந்த சிற்றரசர்கள் சோழ நாட்டை பலவீனப்படுத்தினர். சிற்றரசர்கள் சோழப் பேரரசனுக்கு நெருக்கடி கொடுத்த வண்ணமிருந்தனர். தங்களுக்குக் கீழிருந்த சிற்றரசர்கள் ஒத்துழைப்பு இல்லாததால் சோழ மன்னன் நிர்வாகத்தை நடத்த திணரவேண்டியிருந்தது. இப்படி இந்த சிற்றரசர்களின் துரோகத்தின் பயனாக சோழப் பேரரசு தனது கம்பீரத்தை இழந்து கொண்டிருந்தது. நிர்வாகம் சீர்கேடடையத் தொடங்கியது. சோழப் பேரரசர் மீது நெருக்கடியைக் கொடுத்து சிற்றரசர்கள் தங்கள் கோரிக்கைகளை நிலைநாட்டத் தொடங்கி மொத்த சோழ சாம்ராஜ்யத்தையும் பலவீனப்படுத்தி விட்டனர். இந்த சோழ மன்னன் இரண்டாம் ராஜாதிராஜன் தன் காலத்திலேயே தனது மகனான மூன்றாம் குலோத்துங்கனை ராஜாங்க காரியங்களைக் கவனிக்க வைத்தான். தந்தை காலத்திலேயே ஆட்சியைப் பற்றி இந்த மூன்றாம் குலோத்துங்கன் கற்றுக் கொள்ள முடிந்தது. மகனிடம் பொறுப்பை ஒப்படைத்து ஓய்வில் இருந்த மன்னன் ராஜாதிராஜன் தோட்டக்கலையில் ஆர்வமுடையவனாக இருந்தான். தனது அரண்மனையில் அழகிய பூந்தோட்டங்களை அமைத்து அழகு பார்த்தான். 1182இல் அவன் காலமான பிறகு மூன்றாம் குலோத்துங்கன் அரச பதவியைத் தனித்து வகிக்கத் தொடங்கினான். மூன்றாம் குலோத்துங்கள். கி.பி.1178-1218 Picture மூன்றாம் குலோத்துங்க சோழன் கி.பி. 1178-1218 இரண்டாம் இராஜாதிராஜன் கல்வெட்டுகளில் கடைசியாகச் சொல்லப்பட்டிருக்கும் ஆட்சி ஆண்டு பதினாறு. எனவே அவனுடைய ஆட்சி ஆண்டு கி.பி 11ல் தொடங்கியிருப்பின் அது, 1179வரையில் நீடித்திருக வேண்டும். அவன் ஆட்சிக்கு வந்ததே கி.பி 1166ல் என்று வைத்துக் கொண்டால், 1182வரை ஆண்டிருக்க வேண்டும். மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டுக்களைப் பார்த்தால் கி.பி 1178ல் ஜூலை மாதம் 6 தேதிக்கும் 8 தேதிக்குமிடையே அவனுடைய ஆட்சி ஆரம்பமானதாகத் தெரிகிறது. எனவே அடுத்து பட்டத்திற்கு வந்து, ஆட்சி செய்யும் மன்னனாக மூன்றாம் குலோத்துங்கன் இராஜாதிராஜன் மரணத்திற்கு முன்னமே ஏற்றுக்கொள்ளப்பட்டான் என்று தெளிவாகத் தெரிகிறது. குழப்பம் இரண்டாம் இராஜராஜன் இறந்தபோது அவனுடைய பச்சிளம் பிள்ளைகளை பல்லவராயர் பாதுகாத்துவந்தார். அந்த பச்சிளம் பாலகர்களுள் ஒருவராகக் குலோத்துங்கன் இருந்திருக்க முடியாது என்பதும் வரலாற்றின் படி அறியக்கூடியதாயிருக்கிறது. குலோத்துங்கன் என்பதுவும் இரண்டாம் இராஜாதிராஜனின் கல்வெட்டுக்களில் சொல்லப்பட்டிருக்கும் குமார குலோத்துங்கன் என்பவனும் ஒருவனா என்ற குழப்பம் இருக்கிறது. ஒருவனே ஆயின் தன் முன்னவனைப் போல இவனும் சோழப் பேரரசர்களின் நேர் உரிமையாளன் அல்ல என்ற முடிவு ஏற்பட்டுவிடும். குமார குலோத்துங்கனின் வம்சாவழியை 'குலோத்துங்கன் கோவை' பின்வருமாறு தெரிவிக்கிறது. சங்கம ராஜா -- நல்லமன் & குமார குலோத்துங்கன் & சங்கரச் சோழன் 'சங்கரச் சோழன் உலா', சங்கரச் சோழனுடைய அண்ணனைக் குமாரம கீதரன் என்ற சற்று மாறுபட்ட பெயரில் சொல்லுகிறது. ஆனால் கோவையோ, உலாவோ மூன்றாம் குலோத்துங்கனுடைய கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்ட வரலாற்று நிகழ்ச்சிகளைச் சொல்லாததால், இந்த அரசன் தா இலக்கியங்களில் சொல்லப்பட்ட குமார குலோத்துங்கனா? என்ற ஐயம் ஏற்படுகிறது. சங்கமராஜா சோழவம்சத்திற்கு என்ன உறவு? என்ற உண்மையைத் தெரிந்து கொள்ள எந்தவிதமான ஆதாரங்களும் இப்போது கிடைக்கவில்லை. முதலாம் பாண்டியப் போர். ராஜாதி ராஜனின் துணையால் பாண்டிய நாட்டினை அடைந்த வீர பாண்டியன், சோழர்கள் செய்த உதவியை மறந்து சிங்களர்களுடன் இணைந்து சோழர்களை துன்புறுத்த ஆரம்பித்தான். குலசேகர பாண்டியனின் மைந்தன் விக்கிரம பாண்டியன் மூன்றாம் குலோதுங்கனிடம் சரண் அடைந்து, தனக்கு பாண்டிய தேசத்தை பெற்று தருமாறு கேட்டுக் கொண்டான். சோழர்களுக்கு தீமை செய்யும் வீர பாண்டியனை எதிர்க்க இன்னொரு காரணமும் கிடைக்க, போர் தினவேடுத்திருந்த குலோத்துங்கன் சோழப் படையை பாண்டிய தேசம் நோக்கி நகர்த்தினான். சோழர்கள் படையை இவனே தலைமை தாங்கி போர் நிலத்தில் வாளேந்தி நின்றான் அந்த வாலிப வீரன். எழகப் படை, மறவர் படை, ஈழப் படை ஆகியவை சோழனுக்கு ஈடுக் கொடுக்க முடியாமல் புறம் கண்டோடினர். போரினை வென்ற சோழன் தன் பால் அடைக்கலம் கண்ட விக்கிரம பாண்டியநிடத்தே பாண்டிய தேசத்தை ஒப்படைத்து கப்பம் கட்டுமாறு பணிவித்தான். இரண்டாம் பாண்டிய போர். போரினால் துவண்ட வீரப் பாண்டியன், சேர தேசத்தை அடைந்து வீர கேரளன் உதவியை கோரினான். சேரப் படையுடன் தனது படையையும் இணைத்து, சோழனை எதிர்த்தான் வீரப் பாண்டியன். தனது பாண்டிய தேசத்தை அடையும் பொருட்டு அவன் மதுரை மாநகர் நோக்கி தனது படையை நகர்த்தினான் வீர பாண்டியன். இதனை அறிந்த சோழன் மதுரைக்கு கிழகே உள்ள நெட்டூரில் பாண்டிய படைகளை சந்தித்தான். அங்கே ஏறுப் பெரும்படைகளுக்கும் நடுவே மிகப் பயங்கரப் போர் நிகழ்ந்ததாக அறியப் படுகின்றது. இந்தப் போரிலும் வீர பாண்டியன் தோல்வியையே சந்தித்தான். தோல்விக்கு பின் பாண்டியன் சேர தேசம் சென்று வீர கேரளனிடம் சரண் அடைந்தான். இரண்டாம் பாண்டிய போரில் குலோத்துங்கனின் ஆற்றலை அறிந்த வீர கேரளன், பாண்டியனிற்கு அடைக்கலம் கொடுத்தால் சோழன் தன்னையும் எதிர்த்து வருவான் என்பதை அறிந்து அவன் மேல் கொண்ட மதிப்பால் பாண்டியனை சோழனிடமே அடைக்கலம் அனுப்பி வைத்தான். அடைக்கலம் புகுந்த பாண்டியனை அனுசரனயுடன் அணைத்தான் சோழன். அவனுக்கு பாண்டிய தேசத்தின் ஒரு பகுதியை பிரித்து அரசாள கொடுத்தான். ஈழப் போர். சோழர்கள் சிறப்புற ஆட்சி புரிவதனை விரும்பாத சிங்களர்கள் எப்பொழுதுமே சோழர்களுக்கு தொந்தரவு கொடுத்த வண்ணம் இருந்தனர். அது மட்டும் இல்லாமல் பாண்டிய மன்னர்களை தூண்டி விட்டு சோழ தேசத்தில் குழப்பம் ஏற்ப்படுத்தி வந்தனர். இதனால் கடும் சினம் கொண்ட குலோத்துங்கன் தனது சோழப் படைதனை இலங்கை தேசம் நோக்கி அனுப்பி வைத்தான். இதனை அடுத்து சோழ தேசத்திற்கும் ஈழ தேசத்திற்கும் பெரும் போர் நிகழ்ந்தது. புலனருவா பகுதி, யாழ் ஆகிய இடங்களை சோழ தேசம் கவர்ந்தது. குலோத்துங்கன் காலத்தில் நிகழ்ந்த இந்தப் போர்கள் எந்த மன்னன் காலத்தில் நிகழ்ந்தது என்பது அறியப் படவில்லை. பராக்கிரம பாகு காலம் அல்லது அவனுக்கு அடுத்த மன்னன் காலத்திலோ சோழன் ஈழ தேசத்தில் பற்பல பகுதிகளை கவர்ந்து இருந்தான். கொங்கு நாட்டுப் போர். ஈழ தேசத்தில் போர் புரிந்த காலத்திலேயே சோழன் கொங்கு தேசத்திலும் போர் புரிந்ததாக அறியப் படுகின்றது. ராஜாதி ராஜன் காலத்தில் ஆட்சி புரிந்து வந்த கொங்கு மன்னர்கள், சோழர்களுக்கு கப்பம் செலுத்துவதை நிறுத்தி விட்டு சுயேச்சை மன்னர்களாக தங்களை அறிவித்துக் கொண்டனர். இதனால் வீறுக் கொண்டு எழுந்த குலோத்துங்கன், பாண்டிய தேசத்தினை கைப் பற்றியவுடன் தனது படைகளை சன்னத்தமாக வைத்திருந்து கொங்கு தேசம் மீது பாய்ந்தான். சோழர்களுக்கு ஈடு கொடுக்க இயலாத கொங்கு தேசத்தவர்கள் (இவர்கள் சேர மன்னர்கள் கிளை வம்சத்தவர்களாக அறியப் படுகின்றனர்) சோழர்களிடம் சரண் அடைந்தனர். இதனை அடுத்து தன்னிடம் அடைந்த கொங்கு மன்னனிர்கே அவனது தேசத்தினை அளித்து, தனக்கு அடங்கி கப்பம் கட்டுகின்ற ஒரு சிறிய அரசனாக அறிவித்தான். வடநாட்டுப் போர். காகதீயா அரசு தனது விச்தரிப்பினை ஆரம்பித்த காலம் மூன்றாம் குலோத்துங்கனின் காலம் தான். அது மட்டும் இல்லாமல் பாண்டியர்கள், ஹோய்சாளர்கள் தங்களது அரசுகளை விஸ்தரிக்கும் எண்ணங்களை தங்கள்ளுக்குள் விதைத்த காலமும் குலோத்துங்கனின் காலம் தான். பாண்டியர்களை நசுக்கி, ஹோய்சாளர்களை திருமண உறவின் மூலம் வலுப் படுத்தி சோழ அரசினை வியாபித்தான் சோழன். அப்போது காகதீய மன்னன் சோழனின் சிற்றரசர்களை தூண்டி விட்டு கலகம் செய்வித்தான். காஞ்சிபுரத்தினை ஆண்டு வந்த வீர நல்ல சித்தன்ன தேவ சோழன் என்கிற சிற்றரசன் குலோத்துங்கனுக்கு அடிபணியாமல் கப்பம் கட்டுவதை நிறுத்தினான். இவனுக்கு துணையாய் காகதீய மன்னன் இருந்தான். இதனால் வெகுண்ட சோழன், தனது படையுடன் சென்று சித்தன்ன தேவனை அடிப் பணிய வைத்து, காகதீய மன்னனை சோழ தேசம் பக்கம் நெருங்க விடாமல் செய்தான். மூன்றாம் பாண்டியப் போர். விக்கிரம பாண்டியனின் இயற்கையான மறைவுக்கு பிறகு குலசேகர பாண்டியன் என்பவன் அரியணை ஏறினான். இவன் குலோத்துங்கன் பாண்டியர்களுக்கு செய்த உதவியை மறந்து, ஈழ அரசுடன் உடன்படிக்கை செய்தான். சோழ அமைச்சர்களை நாடு கடத்தினான், இதன் பொருட்டு மூன்றாம் பாண்டியப் போர் நிகழ்ந்தது. குலசேகர பாண்டியன் தனது மரப் படையும் எழகப் படைதனையும் திரட்டிக் கொண்டு குலோத்துங்கனை எதிர்த்து காவிரி நதிக் கரை அருகே மட்டியூர் என்ற இடத்திற்கு அருகே சந்தித்தான். பாண்டியனுக்கும் சோழனுக்கும் நடந்த இப்போர் பல நாட்கள் நடந்ததாகவும் போருக்கு பின் மதுரை நகரினில் இருந்த பாண்டிய கொட்டைகளை தகர்த்தெறிந்தான். பாண்டியனோ போரினால் பின் வாங்கி தன் மக்களை காப்பாற்றிக் கொண்டு ஈழ தேசத்தில் அடைக்கலம் புகுந்தான். இந்த வெற்றிக்கு பின்பு சோழன் பாண்டிய தலைநகரத்தில் சோழ பாண்டியன் என்று வெற்றி மகுடம் புனைந்துக் கொண்டான். குலோத்துங்கனின் சிறப்பு பணிகள் மூன்றாம் குலோத்துங்கனின் காலத்தில் பற்பல சிறந்த பணிகள் தமிழகத்தே நிகழ்ந்தன. திருபுவனம் கோவில் மதுரை ஆலவாய் அழகனுக்கு பணிகள் நடந்தன திருவாரூர் அம்பலத்தானுக்கு பொன் வேய்ந்தான். ( 'நம் தோழர்' என்று குறிப்பிடப் படுகின்றான்) சேக்கிழாரின் திருத் தொண்டர் புராணம் நேமிநாதம், வச்சணந்தி மாலை, வெண்பாப் பாட்டியல் : இலக்கண நூல்கள் மல்லன் வத்சராசன் மாகபாரததினை தமிழில் மொழி பெயற்றியது பவனந்தியின் நன்னூல் களிப்பொருபது பலர் எழுதிய இந்நூல் மூன்றாம் குலோத்துங்கச் சோழனால் தொகுக்கப்பட்டது. மூன்றாம் இராசராச சோழன் கி.பி. 1216-1256 Picture மூன்றாம் இராசராச சோழன். கி.பி. 1216-1256 கி.பி 1216ல் சூன் 27க்கும் சூலை 10க்கும் இடையே மூன்றாம் இராசராசன் பட்டத்துக்கு வந்தான் என்று வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தச் செய்தி அவன் சொந்த உரிமையில் அரியணை ஏறியதைக் குறிப்பிடவில்லை. அடுத்து பட்டத்திற்கு வரவேண்டியவன் என்று முந்திய அரசனால் ஏற்று, அறிவிக்கப்பட்ட நாளே என்று கொள்ளலாம். சுந்தர பாண்டியன், சோழ நாட்டைப் படையெடுத்தது, சோழர்களுக்காக வீர நரசிம்மன் தலையிட்டது ஆகிய நிகழ்ச்சிகளுக்குப் பிறகு இவன் அரசனாகும் உரிமையுடையவன் என்று பிரகடனப்படுத்தப்பட்டிருக்கலாம். ஆட்சி. மூன்றாம் இராசராசனின் ஆட்சி துன்பங்களுடனும் துயரங்களுடனும் தொடங்கியது. தொடக்கத்தில் ஏற்பட்ட இன்னல்கள் பிற்காலத்தில் நேரவிருக்கும் பெருங்கேடிற்கு முன்னறிவிப்பாக இருந்தன. சோழரைக் காப்பாற்ற மீண்டும் கொய்சாளர் உதவிக்கு வர வேண்டியதாயிற்று. சுந்தர பாண்டியனின் படை எழுச்சி மாறவர்மன் சுந்தர பாண்டியன் பாண்டிய மன்னர்கள் வரிசையில் அறிவற்றாலும் வீரமும் கொண்ட சிறந்த மன்னனாக விளங்கினான். அடிமைப் பட்டுக் கிடந்த தனது மக்களை வீறு கொண்டு எழுப்பித்தவன் சுந்தர பாண்டியனே ஆவான். மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்திலேயே களங்கங்களை ஆரம்பித்தாலும், குலோத்துங்கனின் திறமைக்கு ஈடுக் கொடுக்கு முடியாமல் சிற்றரசனாகவே இருந்து வந்தான் ஆனால் குலோத்துங்கனின் மறைவுக்கு பின்பு ஆட்சிக்கு வந்த மூன்றாம் ராச ராசன், ஆட்சி புரியும் ஆற்றல் இல்லமால் இருப்பதை அறிந்த சுந்தர பாண்டியன் விடுதலை வேட்கை கொண்டு வீறு கொண்டு எழ வேண்டிய சமயம் இதுவே என்று சோழனை எதிர்த்து போர் களம் புகுந்தான் பாண்டியன். மூன்றாம் ராச ராசச் சோழன் சோழர் குலத்தில் வந்தவன் ஆனாலும் அவனுள் அறிவாற்றலும் வீரமும் இல்லாமல் இருந்தான். குலோத்துங்கனின் ஆற்றலின் நிழலில் இருந்த ராச ராசச் சோழன், குலோத்துங்கனின் மறைவுக்கு பின்பு ஆட்சி புரிவதற்கு சற்றும் திறம் படைத்தவனாக இருக்க வில்லை. இதனால் தொன்று தொட்டு வந்த சோழர்களின் சாம்ராஜ்யம் தொய்வடைந்தது. சந்தபத்திற்காகக் காத்திருந்த பாண்டியன், தக்கச் சமயத்தில் படை எடுத்து வந்து சோழப் பேரரசை அகப்படுத்திக் கொண்டான். தஞ்சை, தில்லை வரைப் படை எடுத்து வந்து சோழனைப் பழையாறைக்கே செல்ல வைத்தான். சுந்தர பாண்டியனிற்கு ஈடு கொடுக்க முடியாமல் சோழர்களின் பழையாறை நகருக்கே ராச ராசச் சோழன் தோற்றுத் திரும்பி வந்தான். பின்னர் பாண்டியனிடம் சமாதானம் கோரி பாண்டியனுக்கு அடங்கிய சிற்றரசனாக இருக்க ஒப்புக் கொண்டு தஞ்சை வரை ஆட்சி புரிந்தான் ராச ராசச் சோழன். கத்திய கர்நாமிதாம் - நூல் சித்தரிக்கும் உண்மை சுந்தர பாண்டியனுக்கு அடிப் பணிந்து ஆட்சி புரிந்து வந்த ராச ராசச் சோழன், போசள மன்னன் வீர நரசிம்மனின் உதவியைப் பெற்றான். இதனால் சோழ அரசு வலு அடைந்து விட்டது என்று எண்ணிய அவன், பாண்டியனுக்குக் கட்ட வேண்டியக் கப்பத்தினைக் கட்ட மறுத்தான். இதனால் பாண்டியனுக்கும் சோழனுக்கும் மீண்டும் போர் நிகழ்ந்தது . இந்த போரில் படு தோல்வி அடைந்த சோழன் எங்கே சென்றான் என்பதை வரலாற்றில் கண்டறிய முடியவில்லை. ஆனால் பாண்டியன் மகுடாபிஷேகம் செய்தமையை அவனது மெய் கீர்த்தி கூரூகின்றது. கோப்பெருஞ்சிங்கன் போரில் தோல்வியை தழுவியதை சோழனின் மெய்க் கீர்த்தியால் நாம் அறிய முடியாது, மேலும் தோல்விக்குப் பின்பு சோழனின் நிலையை பற்றி கத்திய கர்நாமிதம் என்னும் நூல் குறிக்கின்றது. இதன் மூலம் திருவயிந்திபுரம் கல்வெட்டின் குறிப்புகள் நமக்கு அறிவிக்கின்றது யாதெனில் சோழன் சிறையடைக்க பட்டதே ஆகும். வயலூர் கல்வெட்டின் மூலம் நாம் அறிவது கோப்பெருஞ்சிங்கன் என்னும் சிற்றரசன் ராச ராச சோழனுக்கு அடி பணியாமல் ராச ராசனை சிறை எடுத்தான். சோழனுக்கு அடி பணியாமல் ஆட்சி புரிந்து வந்த சிற்றரசன் கோப்பெருஞ்சிங்கன், தக்க சமையம் அறிந்து கப்பம் கட்டு வதை நிறுத்தினான். சோழனை சிறைப் படுத்தினான், சோழனின் செல்வங்களை கொள்ளை அடித்தான். இவனது அடாவடி செயல்களை அறிந்த போசள மன்னன், படை எடுத்து வந்தான். வீர நரசிம்மன் திருவயிந்திபுரம் வரைச் சென்று கோப்பெருஞ்சிங்கனின் செல்வங்களைக் கைப் பற்றினான், அவனது செல்வம், மக்கள், பெண்கள் ஆகியவற்றை அழித்து கைப் பற்றினான். வீர நரசிம்மனின் வருகையை அறிந்த கோப்பெருஞ்சிங்கன் ராச ராசச் சோழனைச் சிறையிலிருந்து விடுதலை செய்தான். அத்துடன் சோழன், போசலனுடன் சமாதானம் செய்துக் கொண்டான். ராச ராச சோழனை மீட்ட பின்புக் காவேரிக் கரை வரைச் சென்று பாண்டியர்களுடன் போர் புரிந்தான் வீர நரசிம்மன். காவேரிக் கரை வரை சோழர்களின் நிலப் பரப்பு அகன்றது. இவ்வாறு சோழர்கள் போசளர்களின் ஆளுகைக்குட்பட்டு, அவர்களது ஆட்சியைச் சார்ந்தே இருந்தனர். வீர நரசிம்மன். பாண்டியன் மீது படை எடுத்து வந்த போது அதிகமாக அக்கறைக் காட்டாத போசள மன்னன் வீர நரசிம்மன், சோழர்களைப் பழையாறை நகரம் வரை சுருக்கிய பாண்டியர்களுடன் அவன் சோழர்கள் மீது போர் புரிந்த போது சேர்ந்துக் கொண்டான். பாண்டியர்கள் சோழர்களை வென்று போசள தேசம் பக்கம் திரும்பக் கூடும் என்று சிந்தித்த வீர நரசிம்மன், இதற்கு மேலும் பாண்டியர்களை வளர விடுவது ஆபத்து என்ற காரணத்தாலும், பெண் உறவு பூண்டதாலும் சோழர்களுக்கு உதவுவதற்கு முன் வந்தான். மூன்றாம் ராசேந்திர சோழன். தோல்விகள் மீது தோல்வியை அடைந்த மூன்றாம் ராச ராசச் சோழன், தனது இயலாமையை உணர்ந்தே இருந்தான். தனது நாற்பதாம் வயதில் தனது மகன் மூன்றாம் ராசேந்திரச் சோழனை இளவரசனாக மகுடம் சூடி பின்பு தனது ஆட்சிக் காலத்திலேயே அவனை மன்னனாக அறிவித்தான் மூன்றாம் ராசேந்திரச் சோழன். கி.பி. 1246 - 1279 Picture மூன்றாம் இராசேந்திர சோழன். கி.பி. 1246-1279 மூன்றாம் இராஜேந்திர சோழன் பட்டத்திற்கு உரியவனாக, கி.பி 1246ல் ஏற்றுக் கொள்ளப்பட்டான். அவன் மூன்றாம் இராஜராஜ சோழனை விடவும் திறமைசாலி. இராஜராஜனின் திறமையின்மையாலும் வடிகட்டிய முட்டாள்த்தனத்தாலும் சோழப்பேரரசு இழந்துவிட்ட பழைய அதிகாரங்களையும் செல்வாக்கையும் ஒரு சிறிதளவாவது மீட்க மூன்றாம் இராஜேந்திரன் எடுத்துக் கொண்ட முயற்சிகளை அவனது கல்வெட்டுகளிலுள்ள சமஸ்கிருத மெய்க்கீர்த்தி சொல்லுகிறது அவனது பட்டத்து உரிமை ஏற்பட்ட பின் 14 ஆண்டுகளுக்கு இராஜராஜன் பெயரளவில் ஆண்டான். ஆனால் அதிகாரம், அவனை விடத் திறமை மிக்கவனான இராஜேந்திரனிடம் இருந்தது. மூன்றாம் இராஜராஜனின் ஆட்சியின் இறுதியில் முக்கியமாக 34ம் ஆட்சி ஆண்டிற்குப் பிறகு, வட ஆற்காடு நெல்லூர் மாவட்டங்களில் மட்டுமே அவனுடைய கல்வெட்டுக்கள் உள்ளன. மொத்தத்தில் அவனுடைய கல்வெட்டுகள் பரப்பிலும் எண்ணிக்கையிலும் சுருங்கின. அதே காலத்தில் இராஜேந்திரன் கல்வெட்டுகள் ஏராளமாகவும் சோழ நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவன் திருக்கொள்ளம் பூதூர் ஸ்ரீ சௌந்தராம்பிகை உடனுறை, ஸ்ரீ வில்வவனேசுரர் சுவாமி திருக்கோவிலுக்கு பணிவிடை செய்ததான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவெண்ணை நல்லூருக்கு பெருந்தொண்டு செய்ததாக கூறப்படுகிறது.இவன் இறக்கும் வரையில் ஓர்சிவபக்தனாகவே காணப்பட்டான். மூன்றாம் இராஜேந்திரனின் வெற்றி இராஜேந்திரனின் மெய்க்கீர்த்தி வரலாற்று நிகழ்ச்சிகளை அவை நடந்த வரிசைப்படி சொல்லுகிறதா என்பது ஐயப்பாட்டிற்குரியதாகும். மெய்க்கீர்த்தி இராஜேந்திரனின் 7ம் ஆண்டில் கி.பி 1253ல் ஏற்பட்டிருப்பதைக் கவனிக்க வேண்டும். அது மூன்றாம் இராஜராஜன் உயிரோடிருந்த காலம். பட்டத்திற்கு உரியவனாக ஏற்கப்பட்ட சில ஆண்டுகளில் இராஜேந்திரன் சில காரியங்களைச் சாதித்தான் என்று முடிவு செய்யலாம். ஹொய்சாளக் கல்வெட்டுகளை ஆதாரமாகக் கொண்டு இவன் கி.பி 1246லேயே சில சாதனைகளைச் செய்துவிட்டான் என்று நிலைநாட்டலாம். சோழ அரசுக்கு ஏற்பட்ட இழிவினை இராஜேந்திரன் நீக்கிவிட்டான் என்று மூன்றாம் ஆண்டுக் காலத்துக்கு இராஜராஜன் இரண்டு முடிகளைச் சூட்டிக் கொள்ளும் அளவுக்கு இராஜேந்திரன் தன்னுடைய ஆற்றலைக் காட்டினான் என்று மெய்க்கீர்த்தி சொல்கிறது. முடியோடு இருந்த பாண்டியனின் தலையை வெட்டுவதில் இராஜேந்திரன் வல்லவன் என்றும் அது குறிப்பிடுகிறது. திருப்புராந்தகம் கல்வெட்டு 15ம் ஆண்டில் இதை இன்னும் நிதானமாகச் சொல்கிறது 'இருவர் பாண்டியர் முடித்தலை கொண்டருளின' என்பது வாசகம். இராஜேந்திரன் பாண்டிய நாட்டைக் கொள்ளையடித்ததாயும் சொல்லப்பட்டிருக்கிறது. மூன்றாம் இராஜேந்திரன் சில வெற்றிகளை அடைந்தான் என்பது உண்மையே. சோழ மன்னனுக்கு அவன் அணிவித்த இரண்டாம் முடி பாண்டியனுடைய முடியே. பாண்டியர்கள் இருபதாண்டு காலத்தில் இரண்டு முறை சோழ நாட்டில் படையெடுத்தும் தீவைத்தும் உள்ளனர். கோப்பெருஞ்சிங்கன் கலகம் செய்து இராஜராஜனைச் சிறை வைத்ததற்கும் பாண்டியரே காரணம். எனில் மூன்றாம் இராஜேந்திரனிடம் தோற்ற பாண்டிய மன்னர்கள் யார் என்ற கேள்வி எழுகிறது. வல்லமை படைத்த முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனுக்கு எதிராக மூன்றாம் இராஜேந்திரன் எதையும் செய்துவிடவில்லை என்று தெரிகிறது. ஆனால் அவன் இறந்த பிறகும் கி.பி 1251ல் முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் பட்டத்திற்கு வரும் முன்னரும் பாண்டிய நாட்டில் சரியான அரசர்கள் இல்லை. எனவே சோழரின் மேலாதிக்கத்தைத் தற்காலிகமாக ஏற்ற அரசன் இரண்டாம் மாறவர்மன் சுந்தரப் பாண்டியன்(பட்டம் 1238) இருக்க வேண்டும். மூன்றாம் ராஜேந்திர சோழன் "இருவர் பாண்டியர் முடித்தலை கொண்டருளிய மகாராசதிராச நரபதி" என்று பாராட்டப்படும் மூன்றாம் ராஜேந்திர சோழன், சோழர்களுக்கே உடைய குணங்களுடன் சோழ சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்கும் திடமும் கொண்டிருந்தான். மூன்றாம் குலோத்துங்கனின் காலத்திருக்கு பின்பு ராஜ ராஜ சோழனின் காலத்தில் பெரிதும் நலிவடைந்தது சோழர் குலம், நலிவடைந்த தனது குலத்தின் பெருமையை நிலை நாட்டும் எண்ணமும், வீரமும் கொண்ட மன்னனாக விளங்கினான் மூன்றாம் ராஜேந்திர சோழன். முதலாம் பாண்டிய போர் தனது தந்தைக் காலத்தே சோழ தேசம் இழந்த மானத்தினை மீட்கும் பொருட்டு பெரும் படை ஒன்றினை திரட்டினான் குலோத்துங்கன் ராஜேந்திரன் என்று அழைக்கப் படும் மூன்றாம் ராஜேந்திரன். தனது பாட்டனின் செயர்குனங்கள் மனத்தினை கவர்ந்தாலும், அவரைப் போல் சோழ தேசத்தினை நிலை பெற செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டதாலும் தனது பாட்டின் பெயரினை தன் பெயருடன் இணைத்துக் கொண்டான் ராஜேந்திரன். தந்தையின் காலத்தில் நிகழ்ந்த அவக்கேடினை நீக்கும் பொருட்டு, தனது படையை தயார் செய்து பாண்டியர்களுடன் போர் புரிந்தான். முதல் மாரவர்மல் சுந்தரபாண்டியன் இயற்கை எய்தியதால் அவனக்கு பின் ஆட்சிக்கு வந்த ஏறண்டான் சடையவர்மன் குலசேகர பாண்டியன் என்பவன் பாண்டிய படையுடன் ராஜேந்திரனை எதிர்க்கொண்டான். ராஜேந்திரனின் வேட்கையும் அவனது ஆற்றலும் சோழ தேசத்தினை வெற்றி பெற செய்தது. இதனால பாண்டியன் சோழர்களுக்கு மீண்டும் கப்பம் கட்டும் படி ஆனான். ராஜேந்திர சோழன், சோழ தேசத்திற்கு நேர்ந்து துன்பங்களுக்கு பழி வாங்கும் எண்ணத்துடன் படை எடுத்து சென்றமையால், அங்கே இருந்த பாண்டிய தேச அரண்மனைகள் மாளிகைகள் நாசம் ஆயின, பயிர் நாசம், படை நாசம், செல்வம் என பாண்டியர்களின் வாசம் இருந்தவைகள் நாசம் ஆயின. போசள மன்னனின் சூழ்ச்சியும் பாண்டிய தேச இழப்பும் வீர நரசிம்மன், சோழர்களின் உற்ற துணைவனாக இருந்து எப்போதும் உதவி வந்தான். அவனது மரணத்திற்கு பின்பு அவனது மகன் வீர சொமேச்வரன் என்பான் அரச பதவியை அடைந்தான். போசள தேசம் சோழர்களுடன் பெண் உறவு கொண்டிருந்தது போலவே பாண்டியர்களுடனும் பெண் உறவு கொண்டிருந்தனர், ஆதலால் இரண்டு தேசங்களுக்கும் உதவி புரிந்து சமாளிக்க வேண்டி இருந்தது. ஆனால் ராஜ ராஜ சோழனுடன் கொண்டிருந்த உறவுக்கு பின்பு போசளர்கள் குலசேகர பாண்டியனுடன் உறவு கொண்டிருந்ததால் பாண்டியர்களுக்கு உதவ வேண்டி இருந்தது. குலசேகர பாண்டியன் சோழர்களிடம் தேசத்தினை இழந்த பின்பு சொமேஸ்வரனிடம் சரண் அடைந்தான். இதன் பொருட்டு சொமேச்வரன் போசள படைத்தனை சோழ தேசம் நோக்கி அனுப்பினான். பாண்டிய தேசத்தினை அப்போது தான் வென்றிருந்த சோழர்கள், தங்கள் தேசம் திரும்பும் போதே போசளர்கள் சோழர்களின் பின்னே வந்து ஆக்கிரமிப்பு இடங்களை கைப் பற்றி பாண்டியர்களுக்கு கொடுத்தனர். இவ்வாறு போசளர்கள் சோழர்கள் வாசம் இருந்த புதுகை, மதுரை வரையிலான இடங்களை பாண்டியர்களுக்கு மீது கொடுத்தனர். தெலுங்கு சோழர்களுடன் நட்பு மூன்றாம் ராஜ ராஜ சோழனின் காலத்திலேயே சோழர்களுடன் நெருங்கிய உறவுக் கொண்டிருந்தனர் தெலுகு சோழர்கள். இவர்கள் இரண்டாம் ராஜாதி ராஜ சோழனின் பரம்பரையாக இருக்கவும் வாய்ப்புகள் உண்டு, ஏனெனில் மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றப் பின்பு இரண்டாம் ராஜாதி ராஜன் தெலுங்கு தேசம் நகர்ந்தான் என்று சரித்திரக் குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் இவன் சோழரின் நேரடி வாரிசு அல்லாததால் தன் பரம்பரையை தெலுங்கு சோழர்கள் என்று விச்தரித்திருக்க வாய்ப்புகள் இருந்திருக்கலாம். தெலுகு சோழ மன்னனாகிய கோபாலன் என்பவன் மூன்றாம் ராஜேந்திர சோழநிடத்தே நெருகிய அன்புக் கொண்டு உற்ற தோழனாக இருந்து வந்தான். சோழனின் படை எடுப்புக்கு உதவி செய்தும், போரினால் பங்கு கொண்டும் பெரும்பணி செய்தான். இவ்வாறு தனக்கு உதவி செய்த நண்பனுக்கு பெருமை செய்யும் வண்ணம் காஞ்சி நகரினை ஆளும் பணியை ஒப்படைத்தான். ஆதலால் தெலுங்கு சோழர்கள் வடக்கே நெல்லூர் முதற் கொண்டு தெற்கே செங்கர்பட்டு ஜில்லா வரை ஆட்சி புரிந்தனர். போசளர்கள் சோழர்களுடன் நட்பு கொண்டமை குலசேகர பாண்டியனுக்கு பின்பு, இரண்டாம் மாரவர்ம் சுந்தர பாண்டியன் அரியணை ஏறினான். இவனும் சோழர்களுக்கு கப்பம் கட்டும் சிற்றரசனாகவும் பின்பு போசலனின் உதவியால் சுதந்திர அரசனாகவும் இருந்தான். அவனுக்கு பின்பு சடையவர்மன் சுந்தர பாண்டியன் என்பவன் அரச பதவியை அடைந்தான். இவன் பாண்டிய மன்னர்கள் பரம்பரையில் மிகவும் வலிமை வாய்ந்தவனாகவும், பெரும் ஆற்றல் கொண்ட வீரனாகவும் இருந்தான். இவனது எண்ணங்களை அறிந்த போசலன், இப்பாண்டியனை வளர விட்டால் தனது ஆட்சிக்கு வீம்பு நேரிடும் என்பதனை அறிந்து ராஜேந்திர சோழன் பக்கம் நட்புக் கரம் நீட்டினான். போசலனின் நட்பினை ஏற்றுக்கொண்ட சோழன், வீர நரசிம்மனின் மைந்தன் வீர ராமநாதன் என்பவனை சோழ தேசத்திலேயே இருந்து கண்ணனூர் என்ற இடத்தினை ஆட்சி புரியும்படி அழைத்தனன். இவ்வாறு சோழன் சொன்னமைக்கு காரணம், பாண்டியன் படை எடுக்க நேர்ந்தால் கண்ணனூர் கடந்தே சோழ தேசம் நுழைய வேண்டும், அவ்வாறு அவன் கண்ணனூர் நுழையும் நேரத்தே இதனைத் தடுக்க போசளர்கள் சோழர்களுடன் இணைந்து பாண்டியனை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தான். பாண்டியனின் எழுச்சயும் சோழனின் வீழ்ச்சியும் பெரும் ஆற்றல், படை ஆளும் திறம், ராஜ தந்திரம், வீரம், இவற்றை செவ்வண்ணம் தன்னகத்தே கொண்டிருந்தான் சடையவர்மன் சுந்தர பாண்டியன். பாண்டியர்களின் பறைதனை உலகுக்கு அறிவிக்க வழிக் கொண்டு எழுந்தவன் இப்பாண்டியன். ராஜேந்திர சோழனின் 37 ம ஆட்சி ஆண்டில், சோழர்கள் மீது படை எடுத்து வந்தான் சுந்தர பாண்டியன். இவனது ஆற்றலையும், வீரத்திற்கும் பணிந்தான் ராஜேந்திர சோழன். ஆகா, மூன்றாம் ராஜேந்திர சோழன் பாண்டிய மன்னனுக்கு கப்பம் கட்டும் சிற்றரசன் ஆனான். ராஜேந்திர மட்டும் அடக்கினால், இவன் மீண்டும் தன்னுடன் போர் புரிய வருவான் என்பதனை அறிந்த சுந்தர பாண்டியன், சோழர்களுக்கு உதவும் போசளர்களை, தெலுங்கு சோழர்களையும் வென்றான். வீர சொமேஸ்வரனைக் கொன்று, அவன புதல்வன் வீர ராமநாதனை விரட்டி, தெலுகு சோழர் மன்னன் கோபாலனை கொன்று தென்னகத்தே தனது வெற்றிக் கோடியை நாடினான் சடையவர்மன் சுந்தரபாண்டியன். பின்னர் கி.பி-1279- ல் சோழப் பேரரசு தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போனது !. வேதனையில் முடிந்த விசயலாயன் பரம்பரை. முதலாம் இராசேந்திரனுக்குப் பின் விசயலாயன் பரம்பரையில் வந்த ஐவர் சோழ அரியணை ஏறினர்.நால்வர் இராசேந்திரனின் மைந்தர்கள் ஆவர். ஐந்தாமானவன் வீரராசேந்திரனின் மகனாகிய அதிராசேந்திரன் ஆவான். இந்த ஐவரும் மொத்தம் இருபத்தாறு ஆண்டுகள் தான் ஆட்சி செய்தனர். முதலாம் இராசராசன் 29 ஆண்டுகளும், இராசேந்திரன் 30 ஆண்டுகளும் ஆட்சி செய்தனர் என்பதை ஒப்பிட்டு பார்க்கும் போது இந்த ஐவரின் ஆட்சிக்காலம் மிகக் குறுகியதாக இருந்துள்ளது. ஐவருள் முதலாவதாக அரியணை ஏறிய இராசாதிராசன் இராசகேசரி கி.பி. 1054 இல் கொப்பம் போர்களத்தில் எதிரிகளால் கொல்லப்பட்டான். இரண்டாவதாக அரியணை ஏறிய இராசாதிராசன் இராசகேசரியின் தம்பி இரண்டாம் இராசேந்திரன் கொப்பம் போர்களத்தில் முடிசூட்டிக்கொண்டான். இவன் காலியான கருவூலத்தையும் கடும் பஞ்சத்தையும் வெள்ளக்கொடுமையும் சந்திக்கவேண்டிருந்தது. மூன்றாம்மானவன் இராசமகேந்திரன் கங்கபாடியின் மீது படை எடுத்து சென்ற போது 1063 இல் முழுமையாக பட்டத்துக்கு வரும்முன்னரே போர்க்களத்தில் எதிரிகளால் கொலலப்பட்டான். நான்காமானவன் இராசகேசரி வீரராசேந்திர சோழன் 1964 இல் இரண்டாம் இர்ரசேந்திரன் இறந்த பின்னர் முடிசூட்டப்பெற்றான். தம் குலப் பகைவருடன் சாமாதானமும் செய்துகொண்டான். இறுதியில் வந்தவன் பரகேசரி 1070 இல் வீரராசேந்திர சோழன் இறந்ததும் முடிசூட்டப்பெற்றான்.அதிராசேந்திரன் சில மாதங்களே ஆட்சி செய்தபின் 1071 ஆம் ஆண்டு மேத்திங்களில் உயி நீத்தான். மொத்தத்தில் இந்த ஐவரின் ஆட்சிக்காலம் சோதனைகளும் வேதனைகளும் நிறைந்ததாகவே இருந்தது. மூத்தவனுக்கே அரசுரிமை. அரசன் இறந்த பின்னர் அவனுடைய மூத்த மகன் தான் அரியணை ஏறவேண்டும் என்ற நெறிமுறை பொதுவாக சங்ககாலம் முதல் தமிழர் பின்பற்றி வந்தனர். இது முறைமுதல் கட்டிலென்று அழைக்கப்பட்டது. விசையலாய சோழன் முதல் இராசாதிராசன் வரை இது பின்பற்றப்பட்டது. ஒழுங்கற்ற வாரிசு முறை. மூத்தவனுக்கே அரசுரிமை என்ற மரபு இராசாதிராச சோழனுக்கு பின் பின்பற்றப்படவில்லை. ஆற்றல் உள்ளவனுக்கே அரசுரிமை என்ற கொள்கையயை சோழர் ஏற்றுக்கொண்டனர். இராசாதிராச சோழன் தனக்கு மகன்கள் இருந்தும் தம்பி இர்ண்டாம் இராசேந்திரனுக்கும், இராசேந்திரனும் தனக்கு மகன்கள் இருந்தும் தம்பி வீரராசேந்திரனுக்கு மகுடம் சூட்டினான். இப்படி ஒழுங்கற்ற வாரிசு முறையை பின்பற்றியதின் விளைவு அதிராசேந்திரன் மறைவுக்கு பின் விசையலாய சோழன் பரம்பரையில் வந்த எவருமே அரியணை ஏற் முடியாமல் போனது. அதிராசேந்திரன் திடீர் என்று இறக்கவில்லை. நீண்ட நாட்கள் நோய்வாய்ப் பட்டுத்தான் இறந்தான். இவனுடைய மறைவு கங்கைகொண்ட சோழபுரத்தில் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.விசையலாய சோழன் பரம்பரையில் அதிராசேந்திரன் மறைவுக்கு பின்னர் யாரும் இருக்கவில்லை என்பது உண்மைக்கு மாறான கூற்றாகும் (பிற்கால சோழர் வரலாறு தி.வை சதாசிவ பண்டாரத்தார் பக்கம் 265 - 266) இராசாதிராசன் மகன்கள் இருந்துள்ளனர், இரண்டாம் இராசேந்திரன் மகன்களும் இருந்துள்ளனர், ஆட்சிப் பொறுப்பிலும் இருந்திருக்கின்றனர்.அதிராசேந்திரன் தம்பி முடி கொண்ட சோழனும் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கின்றான். இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்? அதிராசேந்திரன் இறந்த போது முதலாம் இராசேந்திரன் தம்பி மகன் ஆளவந்தான் பாண்டிய நாட்டில் சோழ அர்ச பிரதிநிதியாக ஆட்சி செய்து கொண்டிருந்தான்(சேதுராமன். சோழர்கள் பக்கம் 64 - 65) அதிராசேந்திரன் இறந்த போது விசையலாய சோழனின் வாரிசுகள் இருந்துள்ளனர் என்பதே உண்மை. ஆனால் வாசிசுகளுக்குள் மோதல் ஏற்பட்டு குழப்பம் நிலவியிருக்கலாம். இந்தக் குழம்பிய குட்டையில் மீன் பிடித்தவன் தான் குலோத்துங்கன் என்று பின்னர் அழைக்கப்பட்ட வேங்கிநாட்டு அரசனான விட்ணுவர்த்தனன். ஆற்றல் உள்ளவனுக்கே அரியணை என்ற கொள்கையும் குலோத்துங்கனுக்கு அரியணை ஏறுவதற்கு உதவியாக இருந்திருக்கலாம். உண்மையில் விசையலாய சோழனின் கடைசி வாரிசின் ஆட்சி முடிவடைந்ததும் சோழப்பேரரசின் முடிவும் தொடங்கிவிட்டது என்பதில் சந்தேகம் இல்லை. இராசராச சோழன் மிகுந்த ஆர்வத்துடன் உருவாக்கிய பேரரசு, அவன் மைந்தன் மிகுந்த ஆரவாரத்துடன் பெருமை சேர்த்த பேரரசு,அவன் மைந்தர்கள் மிகுந்த வீரத்துடன் கட்டிக்காத்த பேரரசு அவர்களுக்கு பின் சிதைந்து அழிவை நோக்கி பயணித்தது. மொத்தத்தில் குலோத்துங்கன் ஆட்சியில் சோழர் குலம் ஓங்கவுமில்லை,புதிதாக புகழ் சேர்க்கவும் இல்லை, உண்மையில் முந்தைய பெருமைகள்கூட சரிவரக் காப்பாற்றப் படவும் இல்லை. முதலாம்இராசராச சோழன், முதலாம் இராசேந்திர சோழன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒரு மாபெரும் சாம்ராஜியம் அவர்கள் பெயர் கொண்ட வர்களின் ஆட்சிக்காலமாகிய கி.பி. 1279 இல் மறைந்து போனது மிகவும் வேதனைக்குரியதாகும். முதற்சங்கம் தலைச்சங்கம் (முதற்சங்கம்) (கி.மு 7000) ஆண்டளவில் நடந்ததெனக் கருத இடம் தருமாறு இறையனார் அகப்பொருள் உரையில் சில கருத்துகள் உள்ளன. தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்தது அங்கு விரிசடைக் கடவுள் தலைச்சங்கத்திற்குத் தலைவனாகவிருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 4440 ஆண்டுகள் இச்சங்கம் நிலைத்திருந்ததாகவும், 4449 புலவர்கள் இருந்து தமிழாய்ந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. அகத்தியர் எழுதிய அகத்தியம் தலைச்சங்கத்தில் அரங்கேறியது என்பது பொதுவாக நிலவும் கருத்து. தென்மதுரையில் பாண்டியர்களின் ஆட்சி நிலவியிருந்தது அங்கு 89 அரசர்கள் தென்குமரியை ஆண்டார்கள். இக்காலத்து நூற்கள் முதுநாரை முதுகுருகு பரிபாடல் அகத்தியம் அழிவு பஃறுளி ஆறும் பன்மலை அடுக்கும் முதற் கடற்கோளால் அழிவுற்றன. கடல் கோள் (கிமு 2387) நிகழ்ந்தது என்பர். சான்றுகள் இக்கருத்துகளின் உண்மையை உறுதி செய்ய தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள ஒரு சில செய்திகளைத் தவிர்த்து வேறு தொல்லியல் உறுபகரும் சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை. சோழர் சோழர் என்பவர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இருவர் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். நெல் இயற்கையாகவோ, மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ நாடெனப்பட்டது. 'சோழ நாடு சோறுடைத்து என்பது பழமொழி'. எனவே சோறுடைத்த நாடு 'சோறநாடு' ஆகிப் பின் சோழ நாடாகியது என்பர். நெல்லின் மற்றொரு பெயரான சொல் எனும் பெயரே லகரம்-ழகரம் ஆகத் திரிந்து "சோழ" என்று வழங்கிற்று என்பார் தேவநேயப் பாவாணர். சேரர் , பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடி அல்லது குலத்தின் பெயராகும் என்பது பரிமேலழகர் கருத்து. சோழ மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர். சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது. கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கிய தாயினும், கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சோழ மன்னர்கள் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, உறையூர் , பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத்தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற் காலமாக விளங்கியது. கி.பி 13-ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது. கி.பி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என வரலாற்று ஆய்வாளர்களினால் குறிப்பிடப் படுகின்றனர். முற்காலச்சோழர்களில் கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினான். 9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். இவர்களில், முதலாம் இராசராச சோழனும் , அவனது மகனான முதலாம் இராசேந்திர சோழனும் , இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர். கி.பி.10-12-ஆம் நூற்றாண்டுகளில்,சோழர்கள் வலிமை பெற்று மிகவும் உயர் நிலையில் இருந்தனர். அக்காலத்தில் சோழ நாட்டையாண்ட மன்னர்களில், முதலாம் இராசராசனும், முதலாம் இராசேந்திரனும் முதன்மையானவர்கள். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா , சுமத்ரா , மலேசியா வரையும், தெற்கே மாலத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. இராசராசன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தான். இராசேந்திரன் காலத்தில் சோழர் படை வட இந்தியாவிலுள்ள கங்கைக் கரை வரை சென்று பாடலிபுத்திரத்தின் மன்னனான மகிபாலனைத் தோற்கடித்தது. அத்துடன் சோழரின் கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம், ஸ்ரீவிஜயம் மற்றும் சில நாடுகளையும் வென்றதாகத் தெரிய வருகிறது. இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர். சோழ மன்னர்கள் சிபி சக்ரவர்த்தி சூரவாதித்த சோழன் இராஜ கேசரி, பரகேசரி த/பெ. இராஜகேசரி கிள்ளி வளவன், கவேரன் (காவிரி நீரை கொண்டுவந்தவன்) மிருத்யுசித் சித்திரன் (வியாக்கிர கேது) சமுத்திரசித் (பூசந்தியை வெட்டி மேல் கடலையம் கீழ்க் கடலையம் இணைத்தவன்) பஞ்சபன் வாதராசனைப் பணி கொண்டவன் தூங்கெயில் எறிந்த சோழ மன்னன் உபரிசரன் (விமானத்தை வானில் பறக்கும் படி செய்தவன்) பாண்டவர் படைக்கு உதவியவன்(பெயர் தெரியவில்லை) கிள்ளி வளவன், கரிகால் பெருவளத்தான் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, பெருநற்கிள்ளி குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், குராப்பள்ளி துஞ்சிய கிள்ளிவளவன், கோப்பெருஞ் சோழர், c.375-345 B.C.E.) கோச்செங்கணான் கி.பி.175-200 அல்லது 450 , 500 திருமங்கையாழ்வார் கி.பி. 700 - 800 சங்ககாலம் கி.பி. 250 க்கு முன் சங்கம் மருவிய காலம் கி.பி. 250 - 600 பல்லவர் காலம் கி.பி. 600 , 850 சோழர் காலம் கி.பி. 850 , 1350 நாயக்கர் காலம் கி.பி.1350 , 1650 ஐரோப்பியர் காலம் கி.பி. 1650 , 1947 தோற்றமும் வரலாறும் சோழர்களின் தோற்றம் பற்றிய தெளிவான சான்றுகள் எதுவும் இல்லை. பொதுவாகத் தமிழ் நாட்டு அரச குடிகள் பற்றிய தகவல்களைப் பெற உதவும் மூலங்களான, சங்க இலக்கியங்கள் கிறித்து சகாப்தத்தின் தொடக்க காலத்தைச் சேர்ந்த சோழ மன்னர்கள் பற்றி ஓரளவு தகவல்களைப் பெற உதவினாலும், அவர்கள் வாழ்ந்த காலப் பகுதிகளை ஐயத்துக்கு இடமின்றி அறிந்து கொள்வதோ, அவர்கள் வரலாறுகளை முழுமையாக அறிந்து கொள்வதோ இயலவில்லை. இலங்கையின் பாளி மொழியில் எழுதப்பட்ட வரலாற்று நூலான மகாவம்சத்தில் தரப்படுகின்ற செய்திகள் சில சோழ மன்னருடைய காலங்களைத் தீர்மானிப்பதற்குப் பயனுள்ளவையாக அமைகின்றன. இவற்றைவிட, சோழ நாடு மற்றும் அங்கிருந்த நகரங்கள் பற்றிய சில தகவல்களைப் பெறுவதற்கு, கிறித்து சகாப்தத்தின் முதலாவது நூற்றாண்டில், அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த வணிகன் ஒருவன் எழுதிய எரித்ரேயன் கடலின் வழிகாட்டி நூல்(Periplus of the Erythraean Sea), அதன் பின் அரை நூற்றாண்டு கழித்து தொலெமி (Ptolemy) என்னும் புவியியலாளரால் எழுதப்பட்ட நூல் என்பவை ஓரளவுக்கு உதவுகின்றன. இவற்றுடன் கல்வெட்டுகள் , செப்புப் பட்டயங்கள் என்பனவும் சோழர் பற்றிய தகவல்களைத் தருகின்றன. முற்காலச் சோழர்கள் இன்றைய தஞ்சை, திருச்சி உள்ளிட்ட காவிரி பாயும் மாவட்டங்கள் தன்னகத்தே கொண்டது சோழ நாடு. இந்நாடு எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்க நூல்களிலும் சங்க காலத்திற்குப் பின் தோன்றிய பல இலக்கியங்களிலும் போற்றப்படுகிறது. சங்க இலக்கியங்களில் காணப்படும் காலத்தால் முந்திய சோழ மன்னன், வேல் பல் தடக்கைப் பெருவிறல்கிள்ளி என்பவனாவான். இவனை பரணர் , கழாத்தலையார் ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர். மற்றொரு சோழன் உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி என்னும் பெயர் கொண்டவன். இவன் மௌரியரும், கோசரும் சேர்ந்த படையைத் தோற்கடித்தவன் என்று அகநானூற்றுப் பாடலொன்றில் புகழப்படுகின்றான். இவனே முதலாம் கரிகால் சோழனின் தந்தையாவான். புறநானூற்றில் இவனைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. முதலாம் கரிகாலன் முதன்மைக் கட்டுரை: கரிகால் சோழன் கரிகால சோழன் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான். கரிகாலன் முற்காலச் சோழர்களில் மிகப் புகழ் பெற்றவன் இவனே. இவன்இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான்.கரிகால சோழனுக்கு திருமாவளவன்,மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு. முதலாம் கரிகாலன் தாய் வயிற்றில் இருந்தபோதே அவன் தந்தையான இளஞ்சேட்சென்னி இறக்கவே,தாய் வயிற்றிலிருந்தபடியே அரச பதவி பெற்றான்.கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள்.இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று.ஆனால் பிற்காலத்தில் வடமொழி செல்வாக்குப்பெற்ற போது(எதிரிகளின்)யானைகளின் யமன் என்று இப் பெயருக்கு விளக்கம் தரப்பட்டது. கரிகாலன் சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்கால வரலாற்றில் இவனது வெற்றிகளும் சாதனைகளும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டன. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான அரச பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதை வருணித்துள்ளனர். கரிகாலன் சிறையில் சிறைக்காவலரரைக்கொன்று தப்பித்தான்,பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையையும் அடைந்தான். கரிகால் சோழன், சேர மன்னன் பெருஞ்சேரலாதனுடன் போரிட்டான்.வெண்ணி என்ற இடத்தில் நடைபெற்றபோரில் கரிகாலனுடைய அம்பு சேரமன்னன் பெருஞ்சேரலாதனின் முதுகில் பாய்ந்ததால் அதை அவமானமாகக் கருதிய சேரன் வடக்கிருந்து உயிர் விட்டது பற்றிச் சங்க இலக்கியப் பாடலொன்று கூறுகிறது. பாண்டிய மன்னர்களையும் பதினோரு வேளிரையும் வெற்றிகொண்ட கரிகாலனுடைய ஆட்சி நீண்ட காலம் நடைபெற்றது. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப் பட்டுள்ள கல்லணை இவனது காலத்தது ஆகும். உலகின் மிகப் பழமையான அணைக் கட்டாக "கல்லணை விளங்குகிறது. இவன் இமயம் வரை சென்று பல அரசர்களை வென்று இமயத்தில் புலிக்கொடியை நாட்டித் திரும்பினான் என்று கூறப்படுகிறது. இவன் காலத்துக்குப் பின் ஆண்ட சோழ மன்னர்களில் இராசசூய யாகம் வேட்ட பெருநற்கிள்ளி , போர்வைக் கோப்பெருநற்கிள்ளி, பாண்டிய நாட்டுப் புலவர் பிசிராந்தையாரோடு நட்பு பூண்ட கோப்பெருஞ்சோழன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ,இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நலங்கிள்ளி, குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன் போன்ற பலரின்பெயர்கள் சங்க இலக்கியங்களில் இடம்பெறுகின்றன. இவர்களுள் போர் அவைக்கோப்பெருநற்கிள்ளி என்பவனே பிற்காலத்தில் இராசசூயம் வேட்டபெருநற்கிள்ளி என அழைக்கப்பட்டான் என ஆய்வாளர் சிலர் கருதுகிறார்கள். மேலும் நல்லுருத்திரன்,கணைக்கால் இரும்பொறையை வென்று சிறைப்படுத்திய கோச்செங்கணான் ஆகிய மன்னர்களின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் காணப் படுகின்றன. முற்காலச் சோழர்களின் வீழ்ச்சி கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின் சோழரிடையே அதிகாரப் போட்டிகள் வலுப்பெற்றதால் அவர்கள் வலுவிழந்த நிலையில் இருந்தனர். இவ்வாறு சோழர் வலுவிழந்ததைப் பயன்படுத்தி 'களப்பாளர்' அல்லது களப்பிரர் எனப்படும் ஒரு குலத்தவர் தமிழ் நாட்டுக்கு வடக்கிலிருந்து வந்து சோழநாட்டின் பல பகுதிகளைப் படிப்படியாகக் கைப்பற்றிக் கொண்டனர். கி.பி இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் காஞ்சியை மையமாகக் கொண்டிருந்த சோழநாட்டின் பகுதி களப்பிரர்களிடம் வீழ்ச்சியடைந்தது. சோழர்கள் பல இடங்களுக்கும் சிதறினர். கி.பி நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில், அச்சுத களப்பாளன் என்னும் களப்பிர மன்னன் காவிரிக் கரையிலிருந்த உக்கிரபுரத்தில் இருந்து ஆட்சி செய்து வந்ததாகத் தெரிகிறது. எனினும் இக்காலப்பகுதியில் சோழநாட்டின் ஆதிக்கத்துக்காகப் பல்லவர்களுக்கும் களப்பிரருக்கும் இடையில் போட்டி இருந்து வந்துள்ளது. ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் பல்லவ மன்னன் சிம்மவிட்டுணு களப்பிரர்களிடமிருந்து இப்பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். பல்லவர்களுடைய ஆட்சிக்காலத்திலும் சோழர்கள் சிற்றரசர்களாக ஆங்காங்கே ஆட்சி செய்து வந்தனர். எனினும், பண்டைய சோழநாட்டின் பெரும்பகுதி, பல்லவர்களுக்கு அடங்கிய முத்தரையர்களினால் ஆளப்பட்டு வந்தது. களப்பிரர்கள் நாட்டில் தெளிவற்ற பல அரசியல் மாறுதல்களுக்குக் காரணமாக இருந்தவர்கள் களப்பிரர்கள். களப்பிரர்களைப் பற்றிப் பாண்டியர்களின் வேள்விக்குடிப்பட்டயமும், பல்லவர்களின் சில பட்டயங்களும் கூறுகின்றன. பாண்டியர்களும் பல்லவர்களும் தம் ஆட்சியை நிலைநாட்ட வேண்டி ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் இக்குலத்தை அடியோடு முறியடித்தமை அவர்கள் மேற்கொண்ட முதல் நடவடிக்கையாகும். இவர்களில் குறிப்பிடத்தக்க ஒரு மன்னன், அச்சுதவிக்கந்தன். இம்மன்னனே சேர சோழ பாண்டிய மன்னர்களைச் சிறையெடுத்தான் என்று இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்படும் அச்சுதன் ஆவான். கி.பி.பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த யாப்பருங்கலக் காரிகையின் ஆசிரியரான அமிர்தசாகர் இவனைப்பற்றிய சில பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளார். இவன் பௌத்த மதத்தைச் சேர்ந்தவனாய் இருக்கக்கூடும். ரேனாண்டு சோழர்கள் களப்பிரர் ஆட்சி காரணமாக சோழர்கள் தமிழகத்தில் செல்வாக்கிழந்த நிலையில், சோழ இளவரசர்கள் சிலர் தமிழகத்தை விட்டு வெளியேறித் தெலுங்கு, கன்னட நாடுகளுக்குச் சென்று குடியேறி ஆட்சியை நிறுவினார்கள்.இவர்கள் ரேநாட்டுச் சோழர்கள் என்றும் அழைக்கப் படுகிறார்கள்.இவ்வாறு சென்ற சோழர்கள் கடப்பை, கர்நூல், அனந்தப்பூர் மாவட்டங்களில் குடியேறி 'ரேனாண்டு சோழர்கள்' என்று சிறப்புப் பெற்று விளங்கினர். இவர்கள் தாங்கள் கரிகாலன் வழியினர் என்று உரிமை கொண்டாடினர். மைசூர் தலைக்காடு பகுதியை ஆண்ட கங்கர்கள் தம்மை விருத்தராஜா முத்தரைசர் என்று அழைத்துக் கொண்டார்கள். இவர்கள் தமிழ் முதுகுடிமக்கள் எனக்குறிப்பதற்கே தம்மை முதுஅரசர்- முத்தரசர் என்று கூறிக்கொண்டனர் எனக் கண்டோம் .கங்க அரசர்களில் கி.பி. 550லிருந்து 600க்குள் ஆண்ட துர்விநீதன் என்ற சிறந்த மன்னனின் தேவி ஒரு சோழ இளவரசியாவாள் அவள் "உரகபுரத்தை ஆண்ட கரிகால சோழனின் வழிவந்தவனும் பரம க்ஷத்திரியனுமான சோழ அரசனின் பெண்" என்று குறிக்கப்பெறுகிறாள். அதைக் குறிக்கும் செப்பேடு "உரகபுராதிப பரம க்ஷத்திரிய சோழகுலதிலக ஸ்ரீதக்தசரண சந்தான", தக்தசரண என்றால் தீயால் கருகிய காலை உடையவன். அவனது சந்தானம் வழித் தோன்றிய என்று பொருள். 'யுவான் சுவாங்' என்ற சீனப் பயணி இவர்கள் நாட்டை' சூளியே' என்றும் அவர்கள் தம்மைச் சோழன் கரிகாலன் பரம்பரையினரைச் சேர்ந்ததாகக் கூறிக்கொண்டனர் என்றும் குறிப்பிடுகிறார். இச்சோழப் பேரரசர்களின் சோழநாட்டு எல்லை,தான்ய கடகத்திற்கு தென்மேற்கே 200 கல் தொலைவில் அமைந்திருந்ததாகவும் அது 480 கல் சுற்றளவு கொண்டதாகவும் தலைநகரம் 2 கல் சுற்றளவு கொண்டதாகவும் அச்சீனப்பயணி தன் பயணக்குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார். தமிழகச் சோழர்கள் சங்க கால மன்னனான திருமாவளவன்(கரிகால்பெருவளத்தான்) ஆட்சிக்குப் பின் சோழ நாடு களப்பிரர் படையெடுப்பால் வீழ்ச்சியடைந்தது. அச்சுத விக்கிராந்தகன் என்னும் களப்பிர மன்னன் சோழநாட்டை ஆண்டான். அச்சுதனின் ஆட்சிக்காலத்திற்குப் பிறகு களப்பிரர்களை முறியடித்த பல்லவர்களும் , பாண்டியர்களும் தங்கள் ஆட்சியினை நிலைநாட்டினர், தம் சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்ட இயலாத சோழ மன்னர்கள், காவிரிக்கரைப்பகுதிகளில் குறிப்பாக உறையூர் , பழையாறை போன்ற பகுதிகளில் ஏறத்தாழ நூறாண்டுகள் புகழ் மங்கிய நிலையில் வாழ்ந்து வந்தனர். இக் காலத்தில் வாழ்ந்த சோழ மன்னர்களைப்ற்றி அறிய முடியவில்லை, இக்காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்களும் இலக்கியமும் இச்சோழ மன்னர்களைப்பற்றி மேலெழுந்த வாரியாக கூறும்போது, காவிரிக்கரையில் இவர்கள் தொடர்ந்து வாழந்தனர் என்று கூறுகின்றனவே தவிர, வரலாற்றுச் செய்திகளைத் தரவில்லை. இதன் காரணமாக கி.பி. 3-ம் அல்லது 4-ம் நூற்றாண்டு முதல் 9-ம் நூற்றாண்டு வரை சோழர்களைப் பற்றிய செய்திகள் கிடைக்கப் பெறவில்லை. தமிழகத்தில் இருந்த சிற்றரசர்களான சோழர்கள் தம் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்த தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்தனர். வடக்கிலும் தெற்கிலும் புதிதாக ஏற்பட்ட அரசுகள் சோழ மன்னர்களை ஓரளவு புறக்கணித்தாலும் இவர்களது பழம் புகழை மதிக்கின்ற வகையில், சோழர்குல மகளிரை மணந்ததோடு, தம்மிடம் பணியாற்ற விரும்பிய சோழ இளவரசர்களுக்குப் பதவிகளையும் அளித்தனர்.பல குறுநில மன்னர்களோடு திருமணத் தொடர்பு கொண்டு இழந்த செல்வாக்கை சோழர்கள் மீட்க முயன்றனர். இறுதியில் உறையூரை ஆண்ட சிற்றரசனான விசயால சோழன், களப்பிர மன்னர் குலத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும் முத்தரையர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றிப் பிற்காலச் சோழர் பரம்பரையைத் தோற்றுவித்தான். பிற்காலச் சோழர்கள் பிற்காலச் சோழர்களின் வரலாற்றை அறிய வெங்கையா,உல்ச், கிருட்டிணசாத்திரி ஆகியோர் தொகுத்த கல்வெட்டுகளும் மன்னர்கள் வெளியிட்ட செப்பேடுகளும் வழி செய்கின்றன. அன்பில் பட்டயங்கள், திருவாலங்காட்டுச் செப்பேடுகள், கரந்தைச் செப்பேடுகள், ஆனைமங்கலம் செப்பேடுகள், லெடன் செப்பேடுகள் ஆகியவை அவற்றுள் சில. இவை தவிர இலக்கிய, இலக்கணங்களும் கலிங்கத்துப்பரணி , மூவருலா , பெரியபுராணம், பன்னிரு திருமுறைகள், திவ்யசூரிசரிதம், வீர சோழியம், தண்டியலங்காரம் போன்ற நூல்களும் இக்காலத்தை அறிய உதவும் சன்றுகளாக உள்ளன. பிற மன்னர்கள் இவனுக்குப் பின்னர் இவன் தம்பி வீரராசேந்திரனும், பின்னர் அவன் மகனான அதிராசேந்திரனும் வரிசையாகப் பதவிக்கு வந்தனர். அதிராசேந்திரன் அரசனான சிலமாதங்களிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதாகச் சொல்லப்படுகின்றது. சந்ததி இல்லாமலேயே அதிராசேந்திரன் இறந்து போனதால், தந்தை வழிசாளுக்கிய - தாய்வழியில் சோழர் மரபில் வந்த இளவரசன் ஒருவன் குலோத்துங்கன் என்னும் பெயருடன் சோழப் பேரரசின் மன்னனானான். இது, பிற்காலச் சோழர் மரபுவழியை நிறுவிய விசயாலய சோழனின் நேரடி வாரிசுகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. சாளுக்கிய சோழர்கள் முதலாம் குலோத்துங்கன் கி.பி.1070-1120 இராசராசசோழனின் மகளான குந்தவையின் மகனுக்கும் முதலாம் இராசேந்திரனின் மகள் அம்மங்கா தேவிக்கும் பிறந்தவன் குலோத்துங்கன். மேலைச்சாளுக்கிய ஆதிக்க விரிவை எதிர்த்து வீரராசேந்திரன் போர் புரிந்த போதும் கடாரத்துக்குச் சோழப்படை சென்ற போதும் குலோத்துங்கன் அதில் பங்கு கொண்டிருந்தான். குழப்பம் மிகுந்து அரசனில்லாது சோழ நாடு தவித்தபோது அரசனாகி ஐம்பது ஆண்டுகள் சோழ நாடு சிதையாமல் காத்தவன் முதலாம் குலோத்துங்க சோழன். முதலாம் குலோத்துங்கனுடைய காலமும் பெரும் கிளர்ச்சிகளைக் கொண்ட காலப்பகுதியாகவே அமைந்தது. பாண்டிய நாட்டிலும், சேர நாட்டிலும் படை நடத்திக் கிளர்ச்சிகளை அடக்கவேண்டியிருந்தது. வட பகுதிகளிலும் போர் ஓய்ந்தபாடில்லை. எனினும் ஈழநாட்டில், விஜயபாகு என்பவன் சோழருடன் போரிட்டு ஈழத்திலிருந்து சோழர் ஆட்சியை அகற்றினான். ஈழத்தில், ஏறத்தாழ 70 ஆண்டுகள் நிலவிய சோழராட்சி அங்கிருந்து அகற்றப்பட்டது. சோழநாட்டின் பிற பகுதிகளில் நிலவிய நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, குலோத்துங்கன் ஈழநாட்டை மீட்கப் படைகளை அனுப்பவில்லை என்று கருதப்படுகின்றது. குலோத்துங்கன் இயன்ற வரை பயனற்ற போரை ஒதுக்கினான். இராசராச சோழன் கைப்பற்றிய நாடுகள் அந்நாட்டு மன்னர்களின் முயற்சியாலும் குலோத்துங்கனின் அமைதிக் கொள்கையாலும் சோழர் கையை விட்டு நழுவின. குலோத்துங்கனின் இறுதிக் காலத்தில் தெற்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் பிரச்சினைகள் உருவாயின. சோழப் பேரரசு ஆட்டம் காணும் நிலை ஏற்பட்டது. வடக்கிலிருந்து வந்த படையெடுப்புகள் சோழநாட்டுக்குப் பெரும் சேதத்தை விளைவித்தன. வெளிநாட்டுத் தொடர்புகள் முதலாம் இராசராசன்மற்றும் முதலாம் இராசேந்திரன் காலங்களிலேயே சீன நாட்டுடன் சோழ நாட்டிற்குத் தொடர்பு இருந்து வந்தது. குலோத்துங்கனும் தன் ஆட்சிக் காலத்தில் வாணிகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள 72 பேர்களடங்கிய ஒரு தூதுக் குழுவை சீனத்திற்கு அனுப்பிவைத்தான். மேலும் கடாரம், சுமத்திரா போன்ற தீவுகளுடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தான். ஆட்சிப் பணிகள் குலோத்துங்க சோழனின் ஆட்சியின் போது வரியை நீக்கினான். எனவே சுங்கம் தவிர்த்த சோழன் என அழக்கப்பட்டான். .இராசராசனின் ஆட்சிக்குப்பின் இவனது ஆட்சிக் காலத்தில் சோழ நாடு முழுவதையும் அளக்கும் பணி தொடங்கி இரு ஆண்டுகளில் முடிவுற்றது. நிலமளந்த செயல் இவனது ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த மற்றொரு சிறப்பான செயலாகும். இவன் சைவ சமயத்தைச் சேர்ந்தவனாக் இருந்த போதும் வைணவ, சமண, பௌத்த சமயங்களையும் ஆதரித்ததாகக் கல்வெட்டு கூறுகின்றது. குலோத்துங்கனது அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர் செயங்கொண்டார் . இவர் குலோத்துங்கனின் கலிங்க வெற்றியைப் புகழ்ந்து கலிங்கத்துப் பரணி இயற்றினார். சோழப் பேரரசின் வீழ்ச்சி முதலாம் குலோத்துங்கனுக்குப் பின்னர் அவனது மகனான விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன், இரண்டாம் இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் வரிசையாகச் சோழ நாட்டை ஆண்டனர். இக்காலத்தில் சோழர் தொடர்ந்து வலிமையிழந்து வந்தனர். நாட்டின் வடக்கில் ஒய்சாளர்களின் செல்வாக்கு உயர்ந்தது. குறுநில மன்னர்களும் ஆதிக்கம் பெற நேரம் பார்த்திருந்தனர். தெற்கே பாண்டியர்கள் வலிமை பெறலாயினர். உள்நாட்டுக் குழப்பங்களும் விளைந்தன. 1216 இல் ஆட்சிக்கு வந்த மூன்றாம் இராசராசன் காலத்தில் மாறவர்மன்சுந்தர பாண்டியன் தலைமையில் பாண்டியர்கள் கங்கைகொண்ட சோழபுரம் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும், சோழர்களுக்கு ஆதரவாகப் போசள மன்னனான இரண்டாம் நரசிம்மன் சோழநாட்டில் புகுந்து பாண்டியர்களைத் தோற்கடித்து மன்னனைக் காப்பாற்றினான். மூன்றாம் இராசராசனுக்குப் பின்னர் கி.பி 1246 இல் மூன்றாம் இராசேந்திரன் மன்னனானான். இவன் காலத்தில் வலிமை பெற்ற பாண்டியர்கள் சோழர்களை வென்று அவர்களைச் சிற்றரசர்கள் நிலைக்குத் தாழ்த்தினர். மூன்றாம் இராசராசனுடன் பிற்காலச் சோழரின் பெருமை மங்கிப்போயிற்று. தமிழ் மரபுகளின்படி பண்டைய சோழ நாடு தற்காலத் தமிழ் நாட்டின் திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை உள்ளடக்கியிருந்தது. சோழநாடு, கடலை நோக்கிச் சரிந்து செல்கின்ற ஆனால் பொதுவாக, மட்டமான நில அமைப்பைக் கொண்டது. காவிரி ஆறும், அதன் கிளை ஆறுகளுமே சோழ நாட்டின் நிலத் தோற்றத்தின் முக்கியமான அம்சங்கள். பொன்னி என்றும் அழைக்கப்படுகின்ற காவிரி ஆற்றுக்குச் சோழநாட்டின் பண்பாட்டில் சிறப்பான இடம்இருந்தது. ஆண்டுதோறும் பொய்க்காது பெருகும் காவிரி வெள்ளம் சோழ நாட்டு மக்களுக்கு ஒரு விழாவுக்கான ஏதுக்களில் ஒன்றாக இருந்தது. ஆண்டு தோறும் கொண்டாடப்பட்ட ஆடிப்பெருக்கு விழாவில் அரசர்கள், ஆண்டிகள் எல்லோருமே பங்கு பெற்றனர். உறையூர் கி.பி 200 ஆம் ஆண்டுக்கு முன் சோழரின் தலை நகரமாக விளங்கியது. அகழிகளாலும், மதிலாலும் சூழப்பட்ட பாதுகாப்பான நகரமாக இது விளங்கியது. காவேரிப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்ட காவிரிப்பூம்பட்டினம் காவிரிக் கழிமுகத்துக்கு அண்மையில் அமைந்திருந்த ஒரு துறைமுக நகராகும். தொலமியின் காலத்திலேயே காவிரிப்பூம் பட்டினமும், நாகபட்டினமும் சோழநாட்டின் முக்கிய துறைமுக நகரங்களாகப் பெயர் பெற்றிருந்தன. இந்நகரங்களில் பல இன மக்கள் வாழ்ந்தனர். இவை வணிக மையங்களாக விளங்கிப் பல மதத்தவரையும் கவரும் இடங்களாக இருந்தன. பண்டைய ரோமர்களின் கப்பல்களும் இந்தத் துறைமுகங்களுக்கு வந்தன. கிறித்து சகாப்தத்தின் தொடக்க காலங்களைச் சேர்ந்த ரோமானிய நாணயங்கள் பல காவிரியின் கழிமுகப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சோழ நாட்டின் இன்னொரு முக்கிய நகரம் தஞ்சாவூர் ஒன்பதிலிருந்து பதினொன்றாம் நூற்றாண்டு வரை சோழப்பேரரசின் தலைநகரமாக விளங்கியது. விசயாலய சோழன் தஞ்சையைத் தன் தலைநகரமாகத் தேர்ந்தெடுத்து வெற்றிகள் பல பெற்றான். பல்லவ நாட்டைக் கைப்பற்றிய பிறகு காஞ்சியை இரண்டாம் தலைநகரமாகக் கொண்டு அவ்வப்போது சோழ அரசர்கள் அங்கிருந்தும் ஆட்சிப்பொறுப்பை கவனித்துவந்தனர். எனினும் தஞ்சையே முக்கிய நகரமாக விளங்கியது. சிறிது காலத்திற்குப் பின் தஞ்சை அதன் முதன்மை இடத்தை இழந்தது. இராசராசனின் மகன் முதலாம் இராசேந்திரன் கங்காபுரி என்ற புதியதோர் நகரை உருவாக்கி அதைத் தன் தலை நகராகக் கொண்டான். பின்னர் பதினொன்று முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை கங்கைகொண்ட சோழபுரம் தலைநகரமாக இருந்தது. 'சோழ கங்கம்' என்ற அழகிய பெரிய ஏரியைக் கொண்ட இந்நகர் பல நூற்றாண்டுகளாய் இராசேந்திரனின் பெருநோக்குக்கும் பெருமைக்கும் சின்னமாய் விளங்கி இருந்தது. கும்பகோணத்தை அடுத்துள்ள பழையாறையில் ஒரு அரண்மைனையும், முதலாம் இராசராசனுடைய பெயரிலேயே "அருள்மொழி தேவேச்சுரம்" என்ற கோவிலும் இருந்தது. இந்த அரண்மனையில் இராசராசனின் தமக்கை குந்தவை பல காலம் விரும்பித் தங்கியிருந்தாள் என்றும் இராசராசனும் சிலகாலம்தங்கியிருந்ததாகவும் கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகின்றன. முதலாம் இராசேந்திரன் மதுரையில் மிகப் பெரியதோர் அரண்மனை கட்டியதும் தவிர உத்திரமேரூர் போன்ற இடங்களிலும் சோழர் அரண்மனைகள் இருந்ததாக கல்வெட்டுக்களில் இருந்து அறிகிறோம். சாளுக்கிய சோழர்களின் காலத்தில், சிதம்பரம், மதுரை, காஞ்சிபுரம் ஆகியவையும் மண்டலத் தலை நகரங்களாக விளங்கின. முத்தொள்ளாயிரத்தில் வரும் ஒரு பாடல் சோழரின் ஆட்சிப் பரப்பை கூறுகிறது. "கச்சி ஒரு கால்மிதியா ஒரு காலால் தத்து நீர்த் தண்ணுஞ்சை தான் மிதியா பிற்றையும் ஈழம் மிதியா வருமே எம் கோழியர் கோக்கிள்ளிக் களிறு" சோழர் ஆட்சி சோழர் ஆட்சியில் ஆட்சிமுறை,கட்டிடக் கலை, இலக்கியம், இசை, சிற்பம் . நாடகம், ஊராட்சி ஆகியவை சிறந்த நிலையில் இருந்தது. நிர்வாக மற்றும் செயலாக்க நடவடிக்கைகளில் அரசனுக்கு உதவுவதற்காக வலுவான அதிகார அமைப்பு இருந்தது. நிர்வாகம், நீதி வழங்கல், வரி விதித்தல், பாதுகாப்புப் போன்றவற்றில் ஆலோசனைகள் கூற அமைச்சர்கள் இருந்தனர். தற்காலத்தில் இருப்பது போல சட்டசபையோ, சட்டவாக்க முறைமையோ இல்லாதிருந்ததால், அரசன் நீதியாகச் செயற்படுவது, தனிப்பட்ட அரசர்களின் நற்குணங்களிலும், அறவழிகளின்மீது அவனுக்கிருக்கக்கூடிய நம்பிக்கையிலுமே தங்கியிருந்தது. ஆட்சிப் பிரிவுகள் சோழ அரசு ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. சோழ அரசின் சிறிய பிரிவு கிராமம். இது ஊர் எனப்பட்டது.கிராமங்கள் பல கொண்டது நாடு. இது கோட்டம் அல்லது கூற்றம் எனப்படும். நாடுகள் பல கொண்டது வளநாடு. வளநாடுகள் பல கொண்டது ஒரு மண்டலம் ஆகும். ஒவ்வொரு மண்டலமும் ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. படைகள் கடல் கடந்த நாடுகளையும் கைப்பற்றியவர்கள் சோழர்கள். எனவே சோழப்பேரரசில் ஆற்றல் மிக்க தரைப்படை, யானைப்படை, குதிரைப்படைகளுடன், கப்பற்படையும் இருந்தன. படையின் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனிப் பெயர்கள் இருந்தன. முதலாம் இராசராசன் , முதலாம் இராசேந்திரன் காலத்தில் 'மூன்றுகை மகாசேனை' என்ற ஒரு சிறப்புப் படையும் இருந்தது. இதுவே பல உள்நாட்டு வெளிநாட்டு வெற்றிகளை ஈட்டியது. சமூகநிலை சோழரும் சாதியமும் சோழர்கள் சாதிய அடுக்கமைவையும் அமைப்பையும் ஏற்று, அதற்கு கட்டுப்பட்டு ஆட்சிபுரிந்தார்கள். இவர்கள் காலத்துக்கு முன்னரேயே தீட்டுக் கோட்பாடு தமிழ்ச் சமூகத்தில் வழங்கியதானாலும், இதை அமுல்படுத்துவதில் சோழரின் பங்கும் குறிப்பிடத்தக்கது. "முதலாம் இராசராசனுடைய கல்வெட்டொன்று 'தீண்டாச்சேரி' என ஒரு ஊர்ப் பகுதியைச் சுட்டுகிறது என்றும், பாகூரில் உள்ள திருமூலநாதர் திருக்கோவில் கல்வெட்டொன்று (முதலாம் இராசராசன் காலத்தைச் சேர்ந்தது - கி.பி. 10 ஆம் நூற்றாண்டு) ஓர் ஊரில் வாழ்ந்த ஒரு மக்கள் பிரிவினரைத் 'தீண்டாதார்' எனக் குறிப்பிடுகின்றது என்றும் பேராசிரியர் கோ. விசயவேணுகோபால் விளக்குகிறார். மேலும் சோழர் காலத்தில்தான் இந்தத் தீண்டத்தகாதவர் 'சேரிகள்', அரசாணையின்படி அமைக்கப்பட்டுள்ளன. மேடான இடத்தில் மேல் சாதியினரும் பள்ளமான இடத்தில் கீழ்ச் சாதியினரும் குடியிருக்க வேண்டும். அப்பொழுதுதான் முற்றத்தில் வரும் மழைத்தண்ணீர் கூடத் தீட்டுப்படாததாய் இருக்கும். மேலும் குனிந்து போகும்படியாகத்தான் குடிசை கட்ட வேண்டும். ஜன்னல் வைத்துக் கட்டக் கூடாது. சுவருக்கு வெள்ளையடிக்க கூடாது. பிணத்தைச் சும்மாதான் எடுக்க வேண்டும். பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது. என்றெல்லாம் ஆணை போட்டு" அமுல்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. இந்த ஆணைகள் அக்காலத்தில் நிலவிய அடக்குமுறைகளை எடுத்துக்காட்டுவதாக ஆய்வாளர் கூறுகிறார்கள். பிராமணர்களே சோழ நிர்வாகத்தின் முக்கியமான பதவிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். மற்றவர்கள் அவர்களுக்கு வேலை செய்தார்கள். பிராமணர்கள் அல்லாதோர் ஒன்றாக செயல்படுவதை தடுப்பதற்கு சாதிச் சார்பையும், சாதி ஒற்றுமையையும், சாதி சமூகங்களையும் பிராமணர்கள் ஊக்குவித்தார்கள். பெண்டிர் சமூக வாழ்வில் முழுப்பங்கும் ஏற்க பெண்களுக்கு எவ்விதத் தடையும் இல்லை. ஆனால் அடக்கமே, பெண்களின் தலைசிறந்த அணிகலனாகக் கருதப்பட்டது. பொதுவாக சொத்து வைத்துக் கொள்வதற்கும் அந்தத் சொத்துக்களைத் தாங்கள் விரும்பியபடி அனுபவித்து வரவும் அவர்களுக்கு உரிமை இருந்துவந்தது. அரசர்கள் மீது அரச குடும்பத்துப் பெண்களுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அரசர்களும் செல்வந்தர்களும் பல மனைவியரைத் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் பொதுவாக ஓர் ஆடவனுக்கு ஒரு மனைவி என்ற நியதியே பெருவாரியாக நடைமுறையில் இருந்து வந்தது. சிறந்த பயிற்சி தேவைப்படாத வேலைகளில் பெண்கள் அமர்த்தப்பட்டனர். உடன்கட்டை ஏறுதல் கணவரை இழந்த பெண் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறுவதைப் பற்றி சில கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சோழநாட்டில் இத்தகைய நிகழ்ச்சிகள் மிகக் குறைவாகவே நடந்தன. இது பரவலான வழக்கமாக இல்லை. முதலாம் பராந்தகன் ஆட்சிக் காலத்தில், வீரச் சோழ இளங்கோவேள் என்ற கொடும்பாளூர்ச் சிற்றரசனின் மனைவி கங்கா தேவியார் என்பவள் தீக்குளிக்குமுன் ஒரு கோயிலில் நந்தா விளக்கேற்ற நிவந்தங்கள் கொடுத்தாள் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இராசராச பேரரசனின் தாயாரும் சுந்தர சோழனின் மனைவியுமான வானவன் மாதேவியார் உடன்கட்டை ஏறிய செய்தி திருவாலங்காட்டுச் செப்பேட்டில் குறிக்கப்பட்டிருக்கிறது. வீரமிக்க இந்தச் செயலுக்காக, மக்கள் வானவன் மாதேவியாரைப் போற்றி வழிபட்டார்கள் என்றாலும் பின்பற்றவில்லை என்றே தெரியவருகிறது. வேறு எந்த சோழ அரசியும் உடன்கட்டை ஏறவில்லை. பொதுவாகப் பெண்கள் உடன்கட்டை ஏறும் முறைக்கு மக்களிடையே ஆதரவு இல்லாமல் இருந்தது அந்தக் காலத்தில் உடன் கட்டை ஏறத் துணிந்தவர்களை தடுத்தவர்களைப் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. ஆடல் வல்லார் சோழர் காலத்தில் ஆடலும் பாடலும் ஓங்கியிருந்தன.ஆடல் மகளிர் பிறரைக் கவரும் வகையில் திகழ்ந்தனர். பரதத்திலும் இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்று, திருக்கோயில்களில் தொண்டு புரிந்தாள். தான் விரும்பியவரை மணம் புரிந்து கொண்டாள். இவ்ர்களுக்குச் சமூகத்தில் மிகவும் மரியாதையும் சிறப்பும் வழங்கப்பட்டது. கோவில் நடனமாடும் கலை வளர்ச்சிக்கு தங்கள் உயிர்களை அர்ப்பணித்த அக்காலத்திய தேவரடியார்கள், கிரேக்க நாட்டு ஆடற் பெண்டிர் போன்ற பண்புநலன் உள்ளவர்களாயும் கலையுணர்வு உடையவர்களாயும் திகழ்ந்தனர். கலை நுணுக்கங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு கண்ணுக்கும் செவிக்கும் நல் விருந்தளித்தனர். திருக்கோயில்களில் இறைத் தொண்டிற்காகவே பலர், தங்கள் வாழ்நாளையெல்லாம் அர்ப்பணித்துக் கொண்டனர். அவர்களது வருவாயில் பெரும்பங்கு கோயில் வழிபாடு முதலிவற்றிற்காகவே செலவிடப்பட்டது என்று பின்னே வந்த முகமதிய எழுத்தாளர்கள் வியப்புடன் தெரிவிப்பதில் அறியலாம். சோழர் காலத்தில் தேவரடியார்கள் மதிப்பான இடம் பெற்றிருந்தனர் என்பது, சோழர் அவர்களுக்கு வழங்கியுள்ள ஏராளமான கொடைகளைப் பற்றிய கல்வெட்டுக்களைப் பார்த்தால் விளங்கும். இவர்கள் மணவாழ்க்கையிலும் ஈடுபட்டிருந்தனர். சதுரன் சதுரி என்னும் ஒரு தேவரடியாள் நாகன் பெருங்காடான் என்பவரின் மனைவி (அகமுடையாள்) என்று திருவொற்றியூர்க் கல்வெட்டு, கி.பி. 1049-ம் ஆண்டில் கூறுகிறது. அவ்வாறே தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் பணிபுரிந்த தேவரடியாள் மணமானவள் என்பதை மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டு தெரிவிக்கிறது. அடிமைகள் சோழர்காலத்தில் அடிமை முறை வழக்கத்தில் இருந்தது. அடிமைகளாகவே சிலர் வாழ்ந்துள்ளனர். சிலர் வரிகட்ட முடியாமல் தங்களைத் தாங்களே விற்றுக் கொண்டனர். தலைமுறை தலைமுறையாகப் பணி செய்யவும் சிலர் விற்கப்பட்டனர். போரில் சிறைபிடிக்கப்பட ஆன்களும் பெண்களுமே பெரும்பாலும் பணியாளர்களாக அமர்த்தப்பட்டனர். போரிட்டு வென்ற வேற்று நாட்டிலிருந்து கொணர்ந்த பெண்கள் வேளம் என்ற மாளிகையில் குடியமர்த்தப்பட்டனர். சோழர்கள் வேளத்தில் (palace establishments) நூற்றுக்கணக்கான பெண்கள் அரசனினின் பாலியல் மற்றும் களியூட்டல் பயன்பாட்டுக்காக இருந்தார்கள். இங்கு ஆண் அடிமைகளும் வேலை செய்தார்கள். இதை பேராசிரியர் தாவுத் அலி அவர்கள் தனது "சோழர் காலக் கல்வெட்டுக்களில் வேழம் என்னும் சொல் பற்றிய ஆய்வு" என்ற ஆய்வுக்கட்டுரையில் விளக்கியுள்ளார். ரொமிலா தபார் (Romila Thapar) என்று வரலாற்று அறிஞர் இந்தியாவின் வரலாறு (A History of India ) என்ற தனது நூலில் சோழர்கள் அடிமைகள் வைத்திருந்ததைக் குறிப்பிட்டுள்ளார். அடிமைகள் தாமாகவோ அல்லது பிறராலோ அடிமைத்தனத்துக்கு விற்கப்பட்டார்கள். கோயில்களுக்கும் அடிமைகள் விற்கப்பட்டனர். பட்டினிக் காலத்தில் இது பெருமளவில் இருந்தது என்றும் குறிப்பிடுகின்றார். அடிமைகளின் எண்ணிக்கை சிறியது என்றும், பாரிய உற்பத்திகளுக்கு அடிமைகள் பயன்படுத்தப்பட்டதாக தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிடுகின்றார். சோழரின் வாணிகம் சோழர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகத்தில் சிறந்து விளங்கினர். சீனாவின் சோங் (Song) வம்சத்தின் குறிப்பொன்று, சோழ வணிகக் குழுவொன்று, கி.பி 1077 ஆம் ஆண்டில், சீன அரசவைக்குச் சென்றது பற்றிக் கூறுகின்றது. சுமத்ராத் தீவில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் சாசனப் பகுதியொன்று, சோழநாட்டு வணிகக் கணங்களில் ஒன்றாகிய நானாதேச திசையாயிரத்து ஐந்நூற்றுவர் பற்றிக் குறிப்பிடுகின்றது. இது 1088 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும். இச் சாசனத்தின் கண்டுபிடிப்பு, சோழர் காலக் கடல்கடந்த வணிக முயற்சிகளுக்குச் சான்றாக அமைகின்றது. சோழர்காலப் பண்பாட்டு அம்சங்கள் சோழர் காலத்தில் கலை, இலக்கியம், சமயம் முதலிய துறைகளில் பெரு வளர்ச்சி காணப்பட்டது. இத்துறைகள் எல்லாவற்றிலுமே பல்லவர் காலத்தில் தொடங்கப்பட்ட போக்குகளின் உச்ச நிலையாகச் சோழர் காலம் அமைந்தது எனலாம். சோழர் காலத்தை தமிழரின் செவ்வியல் காலம் (classical age) என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. எனினும் சங்க காலமே தமிழரின் செவ்வியல் காலம் என்ற கருத்தும் இருக்கின்றது. பாரிய கோயில் கட்டிடங்களும், கற் சிற்பங்களும், வெண்கலச் சிலைகளும், இந்தியாவில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு நுண்கலைத் திறன் வாய்ந்தவையாக அமைந்தன. சோழருடைய கடல் வலிமையும், வணிகமும், அவர்களுடைய பண்பாட்டுத் தாக்கங்களை பல நாடுகளிலும் உண்டாக்கக் காரணமாயிற்று. தற்காலத்தில் தென்கிழக்காசியாவின் பல பகுதிகளிலும் எஞ்சியுள்ள இந்துப் பண்பாட்டுச் செல்வாக்குக்கான எடுத்துக்காட்டுகளில் பல சோழர்விட்டுச் சென்றவையே. கலைகள் சோழர்காலத்தில் கட்டிடக் கலை சிறப்புற்றிருந்தது. சோழர்களின் நகரம், உள்ளாலை, புறம்பாடி என்ற இரு பிரிவாக இருந்தது. நகரங்கள் மிகப்பெரியவை. பல மாடிவீடுகள் கொண்டவை. இன்ன இடத்தில் இன்ன வகையான வீடுகள் தான் கட்டலாம் என்றும், இன்னவர்கள் இத்தனை மாடிகளுடன்தான் வீடுகள் கட்ட வேண்டும் என்றும் விதிகள் இருந்தன. பல அங்காடிகள் இருந்தன. இவர்களின் கட்டடக்கலை உன்னதத்தை விளக்குவன சோழர் அமைத்த கோவில்களே ஆகும். சோழர்காலக் கட்டிடக்கலை, பல்லவர்கள் தொடக்கிவைத்த பாணியின் தொடர்ச்சியே ஆகும். விசயாலயன் காலத்திலிருந்தே சோழர்கள் பல கோயில்களைக் கட்டினார்கள் ஆனால், முதலாம் இராசராசனுக்கு முந்திய சோழர் காலக் கட்டிடங்கள் பெரியவையாக அமையவில்லை. பேரரசின் விரிவாக்கம் சோழநாட்டின் நிதி நிலைமையிலும், ஏனைய வளங்கள் தொடர்பிலும் வளர்ச்சியை ஏற்படுத்தியதால், இராசராசன் காலத்திலும் அவன் மகனான இராசேந்திர சோழன் காலத்திலும், தஞ்சைப் பெரிய கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் போன்ற, அளவிற் பெரிய கோயில்களைக் கட்ட முடிந்தது. கி.பி 1009 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில், சோழர்கள் காலத்தில் அடைந்த பொருளியல் மேம்பாட்டுக்கான பொருத்தமான நினைவுச் சின்னமாகும். சோழர் காலம், கல்லாலும் வெண்கலத்தாலும் ஆக்கப்பட்டச் சிலைகளுக்குப் பெயர் பெற்றது. இக் காலத்துக்குரிய, சிவனின் பல்வேறு தோற்றங்கள், விஷ்ணு , மற்றும் பல கடவுட் சிலைகள் தென்னிந்தியக் கோயில்களிலும், பலநாட்டு அரும்பொருட் காட்சியகங்களிலும் காணக்கிடைக்கிறது. இச்சிலைகள் பழங்காலச் சிற்பநூல்கள்களிலும், ஆகமங்களிலும் சொல்லப்பட்டுள்ள விதிப்படியே வார்க்கப்பட்டுள்ளன ஆயினும், 11 ஆம் 12 ஆன் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சிற்பிகள் இவற்றைச் சிறந்த கலை நுணுக்கத்துடனும், கம்பீரத்துடனும் உருவாக்குவதில் தங்கள் சுதந்திரமான கைத்திறனையும் காட்டியுள்ளார்கள். இத்தகைய சிலைகளுள், ஆடல் கடவுளான நடராசப் பெருமானின் சிலைகள் குறிப்பிடத் தகுந்தவை ஆகும். கல்வி சோழர் காலத்தில் கல்வி சமஸ்கிருத மொழியில் பிராமணர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. கோயில்களுடன் இணைந்திருந்த கல்விக்கூடங்களில் மிகவும் ஒழுங்கான முறையில் இந்தக் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. இப்படி கல்வி பயின்றவர்களே சோழ அரசின் நிர்வாகத்துறையிலும் கோயில்களிலும் உள்வாங்கப்பட்டார்கள். இன்று போல் பொதுமக்களுக்கான கல்வி என்று எதுவும் இருக்கவில்லை. ஆனால், சமூகம் அல்லது சாதி சார்ந்த தொழில்துறைகளில், தொழில் பயிலுனர் (apprenticeship) முறைப்படி அறிவூட்டப்பட்டது. மொழி சோழர் காலத்தில் தமிழ் சிறப்புற்று இருந்தது. நிர்வாகம், வணிகம் , இலக்கியம், சமயம் என்று பல தளங்களில் தமிழ் பயன்படுத்தப்பட்டது. சோழர்களின் கல்வெட்டுக்களும் பட்டயங்களும் பல தமிழிலேயே அமைந்துள்ளன. இருப்பினும் "அவற்றின் மெய்கீர்த்திகளில் சமற்கிருத ஆட்சியே மேலோங்கி நின்றது". இலக்கியம் சோழர் காலம், தமிழ் இலக்கியத்திற்குச் சிறப்பானதொரு காலமாகும்.இக்காலத்தில் இலக்கிய வளர்ச்சி மிகுந்திருந்தது. ஆனால் சோழர்களால் தமிழ், உயர் கல்வி கூடங்களில் ஊக்குவிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சோழர் காலக் கல்வெட்டுக்களில் பல இலக்கியங்கள் குறிப்பிடப் பட்டுள்ளனவாயினும், அவற்றுட் பல தற்காலம் வரை நிலைத்திருக்கவில்லை. இந்து சமய மறுமலர்ச்சியும், ஏராளமான கோயில்களின் உருவாக்கமும், இருந்த இந்துசமய நூல்களைத் தொகுப்பதற்கும், புதியவற்றை ஆக்குவதற்கும் உந்துதலாக இருந்தன. இராசராச சோழன் காலத்தில்தேவாரம் முதலிய நூல்கள் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. சமண, பௌத்த நூல்களும் இயற்றப்பட்டன. ஆயினும் அவை சோழருக்கு முற்பட்ட காலத்தை விடக் குறைவாகவே இருந்தன. திருத்தக்க தேவர் என்பவரால் இயற்றப்பட்ட சீவகசிந்தாமணியும் , தோலாமொழித் தேவரால் இயற்றப்பட்ட சூளாமணியும் , இந்து சமயம் சாராத முக்கியமான சோழர்கால இலக்கியங்களாகும். மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் வாழ்ந்த கம்பர் தமிழில் மிகச் சிறந்த இலக்கியமாகக் கருதப்படும் கம்பராமாயணத்தை எழுதினார். வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவி இது எழுதப்பட்டதாக இருந்தாலும், கம்பர் இதைத் தமிழ் நாட்டுப் பண்பாட்டுக்கு ஏற்ப ஆக்கியுள்ளார். செயங்கொண்டாரரின் கலிங்கத்துப்பரணியும் இன்னொரு சிறந்த இலக்கியம். இரண்டாம் குலோத்துங்க சோழன் பெற்ற கலிங்கத்து வெற்றியை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது இந்நூல். இதே அரசனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு ஒட்டக்கூத்தர் என்னும் புலவர் குலோத்துங்க சோழன் உலா என்னும் நூலையும் தக்கயாகப் பரணி, [மூவருலா என்ற நூல்களையும் இயற்றியுள்ளார். மேலும் சேக்கிழாரின் பெரிய புராணமும் இக்காலத்ததே. சோழ்ர் காலத்தில்தான் திருப்பாவை, திருவெம்பாவை போன்றவை சோழ நாடெங்கும் ஓதப்பட்டன. சோழர்காலத்தில் இலக்கிய வளர்ச்சி உச்சத்தை எட்டியது. சைவ சித்தாந்த நூல்களும் இக்காலத்தே மலர்ந்தன. மெய்கண்டார் சிவஞானபோதம் என்ற நூலை இயற்றினார். வாகீச முனிவரின் ஞானாமிர்தம், திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் எழுதிய திருவுந்தீயார், அருள்நந்தி சிவாச்சாரியார் எழுதிய சிவஞான சித்தியார், உமாபதிசிவாச்சாரியாரின் எட்டு நூல்கள் என சைவ சித்தாந்த அறிவு சோழர் காலத்தில் உருவாகி முறையான வடிவம் பெற்றது.

சமயம் சோழர் இந்து சமயத்தை, சிறப்பாக சைவ சமயத்தைச் சார்ந்தவர்களாவர். எனினும் பிற மதங்களையும் ஆதரித்தனர். சைவம், வைணவம் என்ற இரு மதங்களும் சோழர் காலத்தில் சிறந்திருந்தது. ஏராளமான சைவ, வைணவ மடங்களும் கோவில்களும் அமைக்கப்பட்டன. அவற்றிற்கு சாற்று முறை செய்ய வரியில்லா நிலங்கள், பணியாளர்கள் எனப்பெரும் பொருள் செலவிடப்பட்டது. இம்மடங்களில் உணவிடுதல்,வழிப்போக்கருக்கு உப்பு, விளக்கெண்ணெய் வழங்குவது, நோய்க்கு மருத்துவம் செய்வது ஆகியன் மேற்கொள்ளப்பட்டன. மக்களின் சிந்தனை பக்திநெறியில் செல்ல இவை வழிவகுத்தன. சாளுக்கிய சோழர்கள் சிலர் வைணவர் பால், சிறப்பாக இராமானுசர் தொடர்பில் எதிர்ப்புப் போக்கைக் கடைப்பிடித்ததாகத் தெரிகிறது. இது தொடர்பிலேயே அதிராசேந்திர சோழன் மரணம் அடைந்ததாகச் சிலர் கூறுகிறார்கள்.


சோழர் கால இலக்கிய படைப்புகள். பட்டினைப்பாலை, பெரும்பாணாற்றுப்படை ஆகிய சங்க இலக்கியங்களை இயற்றிய புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணார்க்கு கரிகால் சோழன் (கி.மு.60முதல் கி.மு.10 வரை) பதினாறு நூறாயிரம் பொன்னை பரிசாக அளித்தான்.இதுவே புலவர்களுக்கு அளித்த மிக பெரிய பரிசாகும்.

கி.பி.898 ல் உத்தரபுராணம் குணபத்ரா என்பவரால் இயற்றப்பட்டது.

கி.பி.10ம் நூற்றாண்டில் வளையாபதி, குண்டலகேசி படைக்கப்பட்டன.

கல்லாடம் என்னும்னூலை கல்லாண்டார் படைத்துள்ளார்

முதலாம்குலோத்துங்கன் காலத்தில் குலோத்துங்கசோழசரிதை என்னும் நூலை திருநாரயணப்பட்டர் படைத்துள்ளார்

முதலாம்குலோத்துங்கன் காலத்தில் கலிங்கத்துப்பரணி எனும் சிறந்த இயலக்கியத்தை படைத்தார்.

விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கசோழன் மற்றும் இரண்டாம் இராசராசன் காலத்தில் வாழ்ந்த ஒட்டக்கூத்தர் விக்கிரம சோழனுலா, தக்கயாகப்பரணி, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், குலோத்துங்கச் சோழனுலா, இராசராச சோழனுலா, சரசுவதி அந்தாதி, அரும்பைத்தொள்ளாயிரம் முதலிய நூல்களை படைத்துள்ளார்.

சோழப்பேரரசின் கால கம்பர் இராமாயணம் எனும் ஒப்பற்ற காவியத்தையும், சடகோபர் அந்தாதி, மும்மணிக்கோவை மற்றும் திருக்கைவழக்கம் முதலிய நூல்களை படைத்துள்ளார்.

நளவெண்பா புலவர் புகழேந்தி படைத்த சிறந்த இலக்கியமாகும்.

அறுபத்து மூன்று சைவ நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் பெரியபுராணம் சேக்கிழார் படைத்த சிறந்த இலக்கியமாகும்.

கருவூர்ப்புராணம் கருவூர்த்தேவரால் எழுதப்பட்டது.

பதின்மூன்றாம் நூற்றாண்டில் முற்பகுதியில் மெய்கண்டர் சிவஞானபோதம், அருணந்தி சிவஞான சித்தியார் மற்றும் இருபாவிருபது எனும் நூல்களை படைத்தார் பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியுலும் பதின்னான்காம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சைவ சித்தாந்தத்தின் தத்துவத்தை விளக்கும் வண்னம் எட்டு நூல்கள் உமாபதி சைவாச்சாரியார் என்பவரால் எழுதப்பட்டது.

புத்தரிமித்திரன் வீரசோழியம், தண்டியாசிரியரின் தண்டியலங்காரம், குணவீரர் எழுதிய நேமிநாதம், பவணந்தி முனிவரின் நன்னூல், மண்டல புருஷர் எழுதிய சூடாமணி நிகண்டு ஆகியவை குறிப்படத்தக்க மொழியியல் நூல்களாகும்.

சோழர் காலத்தில் வைணவ இலக்கியமும் தழைத்தது, முகை பிரான் என்பவர் நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு விளக்கவுரை எழுதினார்.

திருவரங்கத்து அமுதனார் என்பார் இராமானுஜர் நூற்றந்தாதி எனும் நூலைப் படைத்தார். மேலும் யமுனாச்சாரியார், யாதவப் பிரகாசர், இரரமானுஜர் போன்றோர் பல் வேறு இலக்கியங்களையும் படைத்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Rasa_Dhuriyan&oldid=1819066" இலிருந்து மீள்விக்கப்பட்டது