Rbguru
Joined 21 சனவரி 2015
மணக்கால் அய்யம்பேட்டை
தொகுதமிழ்நாடு, திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்தில் உள்ளது "மணக்கால் அய்யம்பேட்டை என்ற அழகிய கிராமம். இதன் வரலாற்று பெயர் திருப்பெருவேளுர் என்பதாகும். கோவில் இல்லாத இடத்தில் குடியிருக்க வேண்டாம் என்ற வாக்கிற்கிணங்க. இவ்வூரில் 18 கோவில்களும், 18 குளங்களும் இருப்பது மிகவும் சிறப்பாகும்.
ஊரின் அமைப்பு
தொகுதெற்கில் வெட்டாற்றையும், வடக்கில் கடகுட்டி ஆற்றினையும் எல்லையாக கொண்டுள்ளது. இவ்வூரின் நான்கு எல்லைகளிலும் ஐயனார் என்னும் காவல் தெய்வங்கள் உள்ளனா். இவ்வூரின் செல்ல இந்த காவல் தெய்வங்களை தாண்டி தான் செல்ல வேண்டும். பிள்ளையாா் பிடிக்க குரங்காய் போனது என்பது போல கல்யாண விநாயகர் கோவிலில் ஆரம்பித்து ஆஞ்சிநேயர் கோவிலில் முடிந்துள்ளது.