Srigayu1996
விதை சுத்திகரிப்பு
தொகுமுக்கியத்துவம்
விதை சேமிப்பு கிடங்குகளின் உள்ள விதைக் குவியல்களை சந்தைப்படுத்த தயார் செய்வதே விதை சுத்திகரிப்பு ஆகும். விதையின் விலை மற்றும் தரம் விதை சேமிப்புடன் நேர்மாறு தொடர்புடையதாகவும், விதைச் சான்றளிப்பிற்கு அனுமதியளிக்கப்பட்ட அதிகபட்ச அளவிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.சுத்திகரிப்பு செய்யப்படுவதால் விதைக் குவியலின் வேறுபாடுகள் குறுகிவிடும். விதைக் குவியலில் உள்ள வேறுபாடுகளின் கீழ்க்கண்ட காரணிகள்.
மண்ணின் வளம் மற்றும் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் தன்மையின் வேறுபாடுகள். பயிர் மேலாண்மை செயல்பாடுகளில் உள்ள வேறுபாடுகள் (நீர் நிர்வாகம், உர மேலாண்மை போன்றவை) நாற்றுக்களின் இடு பொருட்களை உபயோகப்படுத்தும் திறன் நோய் மற்றும் பூச்சி தாக்குதலில் வேறுபாடுகள் செடியில் காய் அல்லது கனி இருக்கும் பகுதி அல்லது காயினுள் விதை இருக்கும் பகுதி. விதை சுத்திகரிப்பு பணியின் தேவைகள்
முழுமையான பிரித்தல் இருக்கவேண்டும். குறைந்த விதை இழப்பு எந்த ஒரு இரகத்தின் விதையும் தரம் உயர்த்துதல் அதிகத் திறன் இருக்கவேண்டும். குறைவான தேவை இருக்கவேண்டும்.
விதைச் சுத்திகரிப்பு தளங்கள்
தொகுஅங்கீகாரம் பெறும் வழிமுறைகள்
விதைச் சுத்திகரிப்பானது விதையின் புற அமைப்புக்களான, விதை அளவு, நீளம், எடை, வடிவம், மேற்புற நய அமைப்பு, நிறம், திரவ ஒட்டும் தன்மை மற்றும் மின் கடத்தும் திறன் போன்றவற்றைக் கொண்டு செயல்படுகின்றது. சுத்திகரிப்பின் முதல் நிலையில், மேல் தோல் நீக்குதல், முடி நீக்குதல், உமி நீக்குதல், ஓடு நீக்குதல் போன்ற பணிகளின் பின்னர் தரம் பிரித்தல் மற்றும் தூய்மைப்படுத்துதல் போன்றவை செய்யப்படும். (நிலைப்படுத்துதல் மற்றும் முன் தூய்மைப்படுத்துதல்)
இரண்டாம் நிலையில் தேவையற்ற பொருட்கள், களை விதைகள், பிறப் பயிர் மற்றும் உடைந்த விதைகள், பயிர் விதைகளை விடப் பெரியதாகவோ, சிறியதாகவோ உள்ளவை போன்றவை பிரித்தெடுக்கப்படும்.
இறுதி நிலையில் (பிரித்தல் மற்றும் தரம் மேம்படுத்துதல்) தேவையற்ற பொருட்கள் விதையிலிருந்து பிரிக்கப்படும்.
சுத்திகரிப்பு சாதனங்கள்
சில சுத்திகரிப்பு சாதனங்களின் வடிவமைப்புகளும் அவற்றின் திறன்களும்
1. என்ஸ்கோ சூப்பர - 300கிலோ / 1 மணி நேரம் 2. கிரிபென் வடிவமை - 250-300 கிலோ / 1 மணி நேரம் 3. ஜீனியர் பெட்கஸ் - 500 கிலோ / 1 மணி நேரம் 4. ஜெயின்டு பெட்கஸ் - 1000-1200கிலோ / 1 மணி நேரம் 5. தெர்மேக்ஸ் - 1000கிலோ / 1 மணி நேரம் 6. ஓசா - 800 கிலோ / 1 மணி நேரம் 7. அக்ரோசா - 500 கிலோ / 1 மணி நேரம் 8. டூகாஸ் - 300 கிலோ / 1 மணி நேரம் சுத்திகரிப்பு நிலையங்கள் அங்கீகாரம்
கீழ்க்கண்ட ஐந்து வகையாக சுத்திகரிப்பு நிலையங்களுக்கு விதைச்சான்றிதழ் இயக்குநரால் சான்றிதழ் பணிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது
விதைச் சுத்திகரிப்பு மற்றும் சான்றட்டை நிலையம் அரைவை நிலையம் அரைவை, சுத்திகரிப்பு மற்றும் சான்றட்டை நிலையம் பஞ்சு நீக்கும் நிலையம் தூய்மைப்படுத்தும் மற்றும் சான்றட்டை நிலையம்
விதை சுத்திகரிப்பு பணியின் செயல் வரிசை
தொகுபணியின் செயல்வரிசை விதையின் தன்மைகளான அளவு, வடிவம், எடை, நீளம், மேல் அமைப்பு, நிறம் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை கொண்டே அமைகிறது. விதைகளின் அமைப்பை கொண்டே சுத்திகரிப்பு பணியின் செயல்திட்டம் வகுக்கப்படும். அதற்கேற்றாற் போல் கருவிகளும் கையாளப்படும். அப்பணியின் நிலைகள்.
உலர வைத்தல் பெறுதல் முன் தூய்மை செய்தல் நிலைப்படுத்துதல் தூய்மைப்படுத்துதல் பிரித்தல் (அ) தரம் ஏற்றுதல் நேர்த்தி (உலர்தல்) எடையிடுதல் பையிலிடுதல் சேமித்தல் (அ) கப்பலேற்றுதல் பெறுதல் விதைகள் வயல்களில் பணி முடிந்த பின் சுத்திகரிப்பு தளங்களுக்கு வந்து சேரும்.
விதை மாதிரி எடுத்தல்
தொகுவிதை மாதிரி எடுத்தல்
விதை மாதிரி எடுத்தல் முறைகளும், வகைகளும் மாதிரி எடுத்தல் இடைவெளி மாதிரி எடுத்தல் அளவு மற்றும் அனுப்புதல் நோக்கம்
ஒரு விதைக்குவியலிலிருந்து தேர்வு செய்து எடுக்கப்பட்ட ஒன்றுபட்ட விதைகளே விதை மாதிரியாகும். விதைக் குவியலை ஒப்பிடும்பொழுது மாதிரியின் அளவு மிகச்சிறியதாக இருக்கும் என்பதால், மாதிரியை தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் வேண்டும். விதை மாதிரிகளை தயார் செய்யும் பொழுது அவை ஐஎஸ்டிஏ விதிகளுக்கு உட்பட்டவையாகவும் அந்த விதைக்குவியலின் வகைக்குரியதாகவும் (Representative sample) இருப்பது அவசியமாகும். விதை மாதிரியின் வடித்தம்
பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பப்படும் அனைத்து இரக மாதிரிகளுக்கும் ஒரு துணைப் பதிவு எண் (Accession No) கொடுக்கப்படும். இந்த எண்ணை எதிர்கால குறிப்புகளுக்கு வைத்துக் கொள்ளலாம்.
விதைக் குவியல்
விதைக் குவியல் என்பது ஒரு பயிரிடப்பட்டஇரகத்தின் குறிப்பிட்ட விதை அளவு ஆகும். அந்த விதையின் வெளிப்புற அடையாளம் கண்டு அந்த இரகத்தினை கண்டுகொள்ள ஏதுவாக இருக்கவேண்டும்.
விதைச் சுத்திகரிப்பு நிலைய உரிமம் புதுப்பித்தல்
தொகுஉரிமம் பெற்ற விதைச் சுத்திகரிப்பு நிலைய உரிமையாளர் அக்காலக்கெடு முடியம் முன் உரிமம் புதுப்பிக்கத் தேவையான விண்ணப்பம் (இணைப்பு XXV) மூன்று பிரதிகளுடன் தகுந்த கட்டணத்தை விதைச் சான்றிதழ் பிரதிப் பணிப்பாளரிடம் செலுத்த வேண்டும். உரிமம் புதுப்பிக்கும்்காலக்கெடு முடிந்த தேதியில் இருந்து ஒரு மாதத்திற்கு தாமத கட்டணத்துடன் உரிமம் புதுப்பிக்கப்படும். ஒரு மாதம் முடிந்த நிலையில் உரிமத்தை புதுப்பிக்க இயலாது. எனவே விதைச் சுத்திகரிப்பு நிலைய உரிமையாளர் புதிய உரிமம் பெற வேண்டும்.