ஒரு கிராமம் அல்லது ஒரு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூட்டு முயற்சியாக அப்பகுதிக்கு தேவையான நல்விளைச்சல் கொடுக்கக்கூடிய குறிப்பிட்ட பயிரின் உயர்விளைச்சல் இரகங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை ஒரே பருவத்தில் உற்பத்தி செய்து நல்விதை மகசூலைப் பெருக்கி தனக்கும் மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் சமுதாயச் சிந்தனையுடன் வழிநடத்துதல் ஆகும்.

விதை கிராமத்தின் பயன்கள் • விவசாயிகளிடையே ஒற்றுமை வளரும். • விவசாயிகள் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள முடியும். • ஒரு குறிப்பிட்ட இரகத்தினை மட்டும் விதை உற்பத்திக்கு எடுத்துக் கொள்வதால், விதை உற்பத்தி தொழில் நுட்பங்களை கையாள்வது சுலபமாவதுடன் இரகத்தின் இனத்தூய்மை பராமரிப்பு எளிதாக்கப்படுகின்றது. பயிர் விலகு தூரத்தை கைபிடிப்பதில் சிரமங்கள் ஏற்படாது. • ஒருமித்த கிராம வளர்ச்சிக்கும், அதன் முன்னேற்றதிற்கும் வழிவகுக்கும். • விவசாயப் பெருமக்களின் வாழ்க்கைத்தரம் உயர வழிவகுக்கும்

Start a discussion with Sukunavk2000

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sukunavk2000&oldid=2276061" இலிருந்து மீள்விக்கப்பட்டது