Syednazeem18
திருகுரானும், நவீன அறிவியலும்...
தொகுஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரக்காத்துஹூ...
சில வருடங்களுக்கு முன் நான் படித்த ஒரு புத்தகத்தின் செய்தியை உங்களுடன் சேர் செய்ய விரும்புகிறேன். இதோ...
காலம் செல்ல செல்ல மனிதனும் அதகேற்ப புதிய நவீன கண்டுபிடிப்புடன் தன் காலடியை பதிக்கிறான். அதில் சிலவை போலியாகவும், சிலவை அவனின் முயற்சியின் கனியாகவும் அமைகிறது.
1993 - Times of Mumbai, இந்தியாவில் ஒரு கட்டுரை பதியப்பட்டது. ஒரு சன்னியாசி 3 நாள், 3 இரவு தொடர்ச்சியாக நீரில் மூழ்கி சாதனை செய்தார் என்று. சில பத்திரிக்கையாளர்கள் அவர் மூழ்கிய தண்ணீரின் அடியில் என்ன இருக்கிறதென்று தெரிய முயன்றனர். ஆனால் அந்த சன்னியாசியை சார்ந்த மடம் அவர்களை தண்ணீர்க்கு உள்ளே போக அனுமதிக்கவில்லை. இன்றைய மக்களுக்கு இது புதிர் அல்ல, போலி என்று நன்றாக விளங்கும்.
இப்படிபட்ட காலத்தில் இறைவனின் கொள்கை உண்மை என்று நம்பி நம் முஸ்லிம்களால் பேணப்படுவது அல்லாஹ்வின் குர்ஆன். இது அன்றும் இன்றும் என்றும் மாறாத தன்மை கொண்டது. ஏனென்றால் இது இறைவனின் வாக்கு.
நாம் வாழும் உலகம் அறிவியலை நம்புகிறது. ஆல்பர் எடிசன் சொன்னார் , " அறிவியல் இல்லாத மதம் ஊனம் போன்றது. மதம் இல்லாத அறிவியல் குருடன் போன்றதென்று....
குர் ஆன் வெறும் கவிதையும் செய்யுள் நடையும் கொண்டதல்ல, அதில் இறைவனின் வாக்கு (ஆயத்) கொண்டது. அத்தகைய குர்ஆன் கூறும் செய்தியும் அது உண்மை என்று இன்றைய கண்டுபிடிப்புகளும் பற்றிய ஒரு காட்சி..... ______
வானசாஸ்திரம் (ASTRONOMY)
அ) பிரபஞ்சம் எவ்வாறு உருவானது ((Big Bang Kolkai) ?? வான் அறிவியலாளர்கள் கூறுவது, ஆரம்ப காலத்தில் ஒரு பெரிய அடர்த்தியான பொருளாக இருந்தது நாளடைவில் விரிவடைந்து வெடித்து, விண்மீன் திரல்கள் (கேலக்ஸி) ஆகவும். அதன் பின் விண்மீன்கள், கிரகங்கள், சூரியன், சந்திரன் ஆக கொண்டது.
1400 வருடங்களுக்கு முன் அரேபிய பாலைவனத்தில் அகில உலக முஸ்லிம்களின் தூதர் பெருமனார் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறைவன் கொடுத்த குர் ஆன் கூறுகிறது...
Al-Quran 21: 30 நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?
Al-Quran 41:11 பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: “நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்” என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் “நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்” என்று கூறின.
இப்பொழுது மனிதனின் மூளை ஏற்றுக்கொள்கிறதா?
ஆ) பூமியின் வடிவம் கோளம் (Spherical) : ஆரம்ப காலத்தில் பூமி தட்டையானது என நினைத்தனர். ஆனால் 1597 ஆம் ஆண்டு Sir. Francis Drake என்பவர் பூமி கோள வடிவம் என்று நிரூபித்தார் (அவர் கடல் வழியாக பயணம் செய்து)
Al-Quran 31:29 “நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான்; இன்னும் சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தினான்” என்பதை நீர் பார்க்கவில்லையா? ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை செல்கின்றன; அன்றியும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன்.
Al-Quran 39:5 அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான்; அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான்; இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான்; சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான், இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப் பிரகாரம் நடக்கின்றது; (நபியே!) அறிந்து கொள்வீராக! அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
இறைவன், இரவு மெதுவாக பகல் நிலைக்கு மாறுகிறது என்று கூறுகிறான். இதனால் பூமி ப்ளாட் ஆக இருக்க முடியாது. அவ்வாறு இருப்பின் இரவு உடனடியாக பகலாக மாறும்.
இ) Moon Light -- Reflected Light
ஆரம்பத்தில், நிலவுக்கு சொந்தமாக ஒலி வீசும் தன்மை உண்டு என்று கூறினர். பின்னர் அறீவியல் இல்லை என்றும் அது எதிர் ஒலி என்றும் கூறியது.
Al-Quran 25:61 வான (மண்டல)த்தில் கோளங்கள் சுழன்று வரும் பாதைகளை உண்டாக்கி, அவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும்; ஒளிவான சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன்.
Al-Quran 10:5 அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.
Al-Quran 71:16 “இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான்.
Al-Quran 21:33 இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன. Al-Quran 36:40 சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.
ஈ ) சூரியன் அணையும் (கெடும்- ஒலி இல்லாமல் போகும்) அறிவியல் ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர்- சூரியனின் மேல் பரப்பில் வேதிவினையின் காரணமாக (கெமிக்கல் ரியாக்ஷன்) தான் வெளிச்சம் ஏற்படுகிறது. அது வெகு விரைவில் நின்றுவிடும். சூரியன் இருள் அடைந்து விடும்"
Al-Quran 36:38 இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும்.
உ) விண்மீன்களீன் விஷயம் (Interstellar Matter) விண்மீன்களுக்கு இடையில் வெற்றிடம் இருப்பதாகவும் அதற்கு பின் electron மற்றும் +ve இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
Al-Quran 25:59 அவனே வானங்களையும், பூமியையும், அவற்றிற்கிடையிலுள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர் அவன் அர்ஷின் மீது அமைந்தான்; (அவன் தான் அருள் மிக்க) அர்ரஹ்மான்; ஆகவே, அறிந்தவர்களிடம் அவனைப் பற்றிக் கேட்பீராக.
ஊ) பிரபஞ்சம் விரிவடைகிறது
அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்- விண்மீன்கள் ஒரு இடத்தில் இருந்து மறு இடம் நகர்வதால் பிரபஞ்சம் விரிவடைகிறது என்று தெரிவித்தனர்.
Al-Quran 51:47 மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம். ___________
2. இயற்பியல் (PHYSICS)
A) அணுக்களை பிரிக்க முடியும் (Atoms Can Be Divided)
ஆரம்ப காலத்தில் Democratisன் கொள்கை பின்பற்றி அணூக்களை பிரிக்க முடியாது என்று கூறிவந்தனர். பின்னர் நவீனர்கள் ஆராய்ந்து பிரிக்க முடியும் என்றனர்.
இதனை குர் ஆன் 1400 வருடங்களுக்கு முன் கூறியதை யாரும் பொருட்படுத்தவில்லை. அணூக்களை விடவும் சிறியது உண்டு என்று நமக்கு புரிய வைக்கின்றது அல்குர் ஆன்
Al-Quran 34: 3 எனினும் நிராகரிப்பவர்கள்: “(நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளை நமக்கு வராது” என்று கூறுகிறார்கள்; அப்படியல்ல! என் இறைவன் மீது சத்தியமாக, நிச்சயமாக (அது) உங்களிடம் வந்தே தீரும்; அவன் மறைவான(யா)வற்றையும் அறிந்தவன்; வானங்களிலோ, பூமியிலோ ஓர் அணுவளவும் அவனை விட்டு மறையாது; இன்னும், அதைவிடச் சிறியதோ, இன்னும் பெரியதோ ஆயினும் தெளிவான (லவ்ஹுல் மஹ்ஃபூல்) ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை என்று கூறுவீராக.
___________
3. நீர் வள இயல் (HYDROLOGY)
A) தண்ணீரின் சுழற்சி (The Water Cycle) 1850 Bernard Palissy தான் முதன் முதலில் இன்று நாம் எடுத்துக்கொள்ளும் தண்ணீரின் சுழற்சியை விவரித்தார். கடல் தண்ணீர் ஆவியாகி குளிர்ந்து மேகமாகவும், அது காற்றின் வேகத்தில் நகர்ந்து மழையாகவும் பொழிகிறது.
மேலும் மழை தண்ணீர் நில வெடிப்புகள் வழியாக பூமிக்குள் சென்று தான் நிலத்தடி நீர் ஆகின்றது என்றும் ஆராய்ந்து கூறினார்.
Al-Quran 39:21 நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் - நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது.
Al-Quran 30: 24 அச்சமும், ஆசையும் ஏற்படும்படி அவன் உங்களுக்கு மின்னலைக் காட்டுவதும்; பிறகு வானத்திலிருந்து மழை பொழியச் செய்து, அதைக் கொண்டு பூமியை - அது (வரண்டு) இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன; நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
Al-Quran 23: 18 மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம்; நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்
Al-Quran 24: 43 (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடர்த்தியாக்குகிறான்; அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்; இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேகக் கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்; அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் - தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் - அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது.
Al-Quran 30: 48 அல்லாஹ்தான், காற்றுகளை அனுப்பி, (அவற்றால்) மேகத்தை ஓட்டி, பிறகு அதைத் தான் நாடியபடி, வானத்தில் பரத்தி, பல துண்டங்களாகவும் ஆக்கி விடுகிறான்; அதன் மத்தியிலிருந்து மழை வெளியாவதை நீர் பார்க்கிறீர்; பிறகு, அவன் அதைத் தன் அடியார்களில், தான் நாடியவர் மீது வந்தடையச் செய்யும் போது, அவர்கள் மகிழ்வடைகிறார்கள்.
வேறு எவ்விடத்திலும் இவ்வாறு அழகாக தண்ணீரின் சுழற்சியை பற்றி விவரித்தது இல்லை. இதுவே குர்ஆனின் உண்மைத்தனம்.
___________
4. நில பண்பியல் (GEOLOGY)
A) மலைகள் கூடாரத்தின் முறுக்காணிகளை போன்றது (Mountains are like Tent Pegs):
நாம் வாழும் பூமியின் நில அடர்த்தி 2-35km தான். பூமியின் நடுபகுதி கொதிக்கும் நெருப்பு குழம்பு. நில அடர்த்தியை மென்படுத்துவது இந்த மலைகளின் மடிப்புகள் (mountain folding) என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
Al-Quran 78:6-7 நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?, இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?
Al-Quran 21: 31 இன்னும்: இப்பூமி (மனிதர்களுடன்) ஆடி சாயாமலிருக்கும் பொருட்டு, நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம்; அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு, நாம் விசாலமான பாதைகளையும் அமைத்தோம்.
5. கடல் மற்றும் கடல் சார்ந்தது (OCEANOLOGY) :
A) குடிநீர் மட்டும் கடல் நீரின் தடுப்பு (Barrier between Sweet & Salt Waters): அறிவியல் அறிஞர்கள் , இரு கடல் சங்கமிக்கும் இடத்தில் அதற்கான தடுப்பு இருக்கிறது என்று இப்பொழுது கண்டுபிடித்துள்ளனர். அவ்வாறு சங்கமிக்கும் கடல்கள் அதற்கான வெப்பம், அடர்த்தியில் மாறுபடுவதில்லை.
எகா: ஜிப்ரால்டரில் மத்திய தரைகடல் மறும் அட்லான்டிக் பெருங்கடல்களுக்கிடையே ஒரு தடுப்பு இருக்கிறது. அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் இந்திய பெருங்கடல்களுக்கிடையில் உள்ள தடுப்பு cape point, cape peninsula, then Africa போன்ற இடங்களில் உண்டு.
Al-Quran 55: 19-20 அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான்.; (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா.
Al-Quran 27: 61 இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர்.
Al-Quran 25: 53 அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்.
இருள் மயமான பெருங்கடலின் ஆழப்பகுதி (Darkness in Depth of Ocean): Prof. Durga Rao (Marine Geologist) அவர்களின் கூற்றுப்படி, இந்த நூற்றாண்டில் தான், ஆழமான கடல் பகுதிகளில் மனிதர்கள் நீச்சல் செய்ய இயலாது என்றும் அப்பகுதிகளில் இருள் சூழ்ந்திருக்கிறது என்றும் கண்டறிந்தனர்.
Al-Quran 24: 40 அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை; அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள். சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதைப் பார்க்க முடியாது; எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை.
மேலும் துர்கா ராவ் தனது தீர்மானத்தில் கூறியது "1400 ஆண்டுகளுக்கு முன் ஒரு சாதாரண மனிதனால் இதை கூற முடியாது. கண்டிப்பாக ஒரு தெய்வீகமான சக்தி இருந்திருக்க வேண்டும்" என்றார். ____________
6. தாவரவியல் (BOTANY)
A) தாவரங்களின் ஆண் மற்றும் பெண் இனம் உண்டு (Plants have male & female):
Al-Quran 20: 53 “(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்; இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்; மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான்; இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவரவர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்” (என்று இறைவன் கூறுகிறான்).
Al-Quran 13: 3 மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Al-Quran 51: 49 நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம்.
___________
7. விலங்கியல் (ZOOLOGY)
A) விலங்குகளூம் பறவைகளும் சமூகமாக வாழும் ( (Animals & Plants live in communities)
Al-Quran 6: 38 பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை; (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை; இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும்
B. பறவைகள் பறக்கும் தன்மை கொண்டது (Flight of the Birds) Al-Quran 16: 79 வான(மண்டல)த்தின் (காற்று) வெளியில் (இறை கட்டளைக்குக்) கட்டுப்பட்டு பறக்கும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (ஆகாயத்தில்) தாங்கி நிற்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை; நிச்சயமாக இதில் ஈமான் கொண்ட மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.
Al-Quran 67: 19 இறக்கைகளை விரித்துக் கொண்டும், சேர்த்துக் கொண்டும், இவர்களுக்கு மேல் (வானில் பறக்கும்) பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அர்ரஹ்மானைத் தவிர (வேறு யாரும் கீழே விழாது) அவற்றைத் தடுத்துக் கொண்டிருக்கவில்லை - நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளையும் நோட்டமிடுபவன்.
C) தேனீக்களின் ஆற்றல் (Bee & its Skill) : Von Freisch என்பவர் 1973 ல் தன்னுடைய "தேனீக்களும் அதன் தகவல் தொடர்பியலும்" என்ற புத்தகத்திற்காக நோபல் பரிசு பெற்றார்.
தேனீக்கள் உணவு எடுப்பதும், ஒரு இடத்தில் உணவு கண்டால் அது எப்படி மற்ற தேனீக்களுக்கு அந்த தகவல்களை பரிமாறுகிறது என்ற ஆராய்ச்சி செய்தார். இதனை 1400 வருடங்களுக்கு முன்பே இறைவன் கூறியதை செவிடர்கள் அறியமாட்டார்கள்.
Al-Quran 16: 68-69 உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), “பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
D) சிலந்தியின் வலை, மிகவும் மெலிசானது, உடையும் தன்மை கொண்டது (Spider’s Web, The Fragile Home)
இது அறிவியல் கூறும் விந்தை, அதை இறைவன் கூறியுள்ளான். சிந்திக்க மாட்டார்களா? !!
Al-Quran 29: 41 அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது; அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது; ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் - இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலஹீனத்தை அறிவார்கள்).
E. எறும்பு வாழ்க்கைமுறை (Lifestyle -- ANTS):
நவீன ஆராய்ச்சியாளர்கள் கூறுவது: எறூம்புகள் தங்களுக்கிடையில் பேசும். மனிதனை போலவே இன்றைய எறும்புகள் அடக்கம் செய்யபடுகின்றத. வேலைகளை பிரித்து செய்யும் தன்மை கொண்டது. தானியங்களை சேமிக்கவும், கெட்டு போனதை தவிர்த்தும், அதன் வேர் பகுதியை தனியாக பிரிக்கும் தன்மையும் கொண்டது.
இன்று அறிவியல் கூறும் விந்தை , இதையே இறைவன் கூறியுள்ளான். சிந்திக்க மாட்டார்களா?!!
Al-Quran 27: 18 இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி:) “எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)“ என்று கூறிற்று.
___________
8. மருந்து (Medicine)
இங்கிலாந்தில் சகோதரி Carole ஒரு மாதத்தில் தேனீக்களின் உதவி கொண்டு கிட்டத்தட்ட 22 மனிதர்களின் நோய்களை கண்டுபிடித்தார். (நோய்கள்: Azheimer நோயும் இருதய நோயே). அதுமட்டுமல்லாமல் தேனின் அடர்த்தி , காயத்தில் பேக்டீரியா மற்றும் fungus ஐ நெருங்க விடாது. தேன் - Fructose மற்றும் விட்டமின் கே உள்ளது. தேன் - சிறு பொருட்களின் கூர் உணர்வு கொள்ளுதலில் இருந்து தடுக்கும் (அல்லர்ஜி)
Al-Quran 16: 69 “பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
____________
9. உடலியல் (Physiology)
A)இரத்த ஓட்டம் மற்றும் பால் (Blood Circulation & Milk)
Al-Quran 16: 66 நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது; அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம்.
Al-Quran 23: 21 நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்கு புகட்டுகிறோம்; இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன; அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள்.
___________
10. கருவியல் ஆய்வு (Embryology) Sheik Abdul majid Azzindaani (Yemen pandthar) கீழே உள்ள Quraan ஆயத்களை Canada – University of Toronto இல் உள்ள Prof. (Dr.) Keith Moore அவர்களிடம் கொடுத்தார். . அதனை ஆராய்ந்த Dr. Moore ஒரு வார்த்தை கூட பேசாமல் ஒப்புக்கொண்டார். .சில கருத்துக்கள் , அறிவியலின் ஆய்விற்கே எட்டாக்கனி என்றும் கூறினார்.
Dr. Moore -வின் “The Developing Human” என்ற புத்தகம் இன்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு துணையாக. வழிகாட்டலாக உதவுகிறது.குர் ஆனில் 1981 அன்று தமாம்மில் நடந்த மாநாட்டில் ஒப்புக்கொன்டார். இது இறைவனின் கூட்டு என்றும் அறிவித்தார்.. இதையே Dr. Joe Simpson – USA, Baylor College of medicine, Department of Gynaecology யும் ஒப்புக்கொண்டார் . 1400 வருடங்களுக்கு முன் Mohammed (PBUH) இவ்வாறு சொன்னார் என்றால் அது அவருடைய வாக்கு இல்லை... அது கடவுளின் வாக்கு...
Al-Quran 96: 1-2 (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக. “அலக்” (இரத்தக்கட்டி) என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
A) துளி இடையிலான உமிழப்படும் முதுகெலும்பு மற்றும் விலா (DROP EMITTED FROM BETWEEN THE BACK BONE AND THE RIBS)
கரு நிலையில் ஆண் மற்றும் பெண் இனபெருக்க உருப்புகள் - சிறுநீரகம் அருகே வளர்ச்சி துடங்கும். அதாவது முள்ளந்தண்டு மற்றும் பதினோராம் மற்றும் பன்னிரண்டாம் விலா அருகில்
Al-Quran 86: 5-7 மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும். குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான். முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது. Al-Quran 22: 5
மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்): மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.
Al-Quran 23: 13
பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.
Al-Quran 32: 8
பிறகு (நழுவும்) அற்பத் துளியாகிய (இந்திரிய) சத்திலிருந்து, அவனுடைய சந்ததியை உண்டாக்கினான்.
Al-Quran 76: 2
(பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.
Al-Quran 75: 37-39 (கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா? பின்னர் அவன் “அலக்” என்ற நிலையில் இருந்தான்; அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான். பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான்.
b) கருவில் மூன்று இருள் திரையால் பாதுகாக்கப்படுகிறது (FOETUS PROTECTED BY THREE VEILS OF DARKNESS) :
Dr. Moore தனது புத்தகத்தில் , கருவை சுற்று 3 திரை இருக்கிறது என்று கூறினார்.
1) முன்புற அடிவயிற்று சுவர் 2) கற்பப்பை சுவர் 3) amnio chronic சவ்வு
Al-Quran 39: 6 அவன் உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான்; பிறகு, அவரிலிருந்து அவருடைய மனைவியை ஆக்கினான்; அவன் உங்களுக்காக கால் நடைகளிலிருந்து எட்டு (வகைகளை) ஜோடி ஜோடியாக படைத்தான்! உங்கள் தாய்மார்களின் வயிறுகளில், ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களை படைக்கிறான்; அவனே அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அவனுக்கே ஆட்சியதிகாரம் (முழுவதும் உரித்தாகும்), அவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவ்வாறிருக்க, (அவனை விட்டும்) நீஙகள் எப்படி திருப்பப்படுகிறீர்கள்
C) கேட்கும் திறனும் பார்வை புலனும் (Sense of Hearing & Sight) : கரு உருவாகி 24 ஆவது வாரம் கேட்கும் திறனும் 28வது வாரம் பார்வை புலனும் உருவாகிறது. இதனையே குர்ஆனும் கூறுகிறது.
Al-Quran 32: 9 பிறகு அவன் அதைச் சரி செய்து, அதனுள்ளே தன் ரூஹிலிருந்தும் ஊதினான் - இன்னும் உங்களுக்கு அவன் செவிப்புலனையும், பார்வைப் புலன்களையும், இருதயங்களையும் அமைத்தான்; (இருப்பினும்) நீங்கள் நன்றி செலுத்துவது மிகச் சொற்பமேயாகும்.
Al-Quran 76: 2 (பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.
_____________
11. பொது அறிவு (General Science)
A) கைரேகை (Finger Print) 1880, Sir Francis Golt கைரேகையை புலனாய்வு துறையில் அறிமுகப்படுத்தினார் . அவரின் அறிக்கையில் உலகத்தில் எந்த ஒரு 2 மனிதனுக்கும் ஒரே மாதிரியான கைரேகை அமையாது என்று கூறினார்
Al-Quran 75: 3-4 (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? அன்று; அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.
தோலில் வலிவாங்கிகள் (Pain receptors in Skin)
Al-Quran 4: 56 மனிதன் யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.
Prof. Tagatat Tajasan, Chiang Mai University – Thailand , 8 aavathu Saudi medical conference – Riyadh ல், எல்லாருக்கும் முன்பாக கூறிய வார்த்தைகள் “لا اله الا الله محمد رسول الل” குர் ஆன் இறைவாக்கு என்று ஒத்துக்கொண்டார். இஸ்லாத்திலும் இணைந்தார்.
_____________------------
12. தீர்மானம் (Conclusion) :
எந்த ஒரு மனிதனாலும் 1400 வருடங்களுக்கு முன் இவ்வளவு அறிவியல் ஆதரத்துடன் இயற்ற முடியாது. அது இறைவனின் கூற்றாகவெ அமையும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெள்ள தெளிவாக புரிகிறது.
Quraan – ஒரு அறீவியல் புத்தகம் அல்ல. அடையாளங்களின் புத்தகம். அது மனிதனை சிந்ஹிக்க வைக்கிறது. அது இறைவனின் வார்த்தைகள். எல்லா நம்பிக்கைகளும் ஒரே தூதுவத்தை தான் கொண்டு வந்தார்கள் (ஆதம், மூஸா, ஈஸா மற்றும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம்.) இந்த கட்டுரையில் நாம் கண்டது குர் ஆனின் சில ஆயத்துகளே. Prof tejasen கு ஒரு ஆயது போதுமானதாக இருந்தது இஸ்லாத்தில் நுழைய. சிலருக்கோ 10 ஆயத்துகள் தேவைப்படும், மற்ற சிலருக்கோ 100 ஆயத்கள் தேவைப்படும். சிலருக்கோ 1000 ஆயத்துகள் எடுத்து வைத்தாலும் தான் பிடித்த முயலுக்கு 5 கால் என்றே கூறுவர்.
இஸ்லாம் சிந்திப்போர்க்கு அழகிய முன்மாதிரி. அல்லாஹ் நம்மை சரியான பாதையில் வழிநடத்துவானாக ஆமீன்.
Al-Quran 41: 53 நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம்; (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா?
ஆதாரங்கள்
தொகு