பயன்முறை இயற்பியல்
பயன்முறை இயற்பியல் (Applied physics) என்பது ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்ப அல்லது நடைமுறை பயன்பாட்டுக்கு பயன்படும் இயற்பியல் என்று பொருள்படும்[1] . பொதுவாக ஒரு பொறியியல் அல்லது இயற்பியல் பின்னணியில் இருந்துதான் ஒரு பயன்முறை இயற்பியலாளர் வருகிறார். இயற்பியலாளர் என்று பெயரிடப்பட்டவர்கள் எல்லாம் இயற்பியலாளர் எனப் பெயரிடப்பட்ட செயல்களை செய்வது அசாதாரணமாகும். ஆனால் இயற்பியல் அரங்கில் அத்தகைய செயல்களைச் செய்ய வல்லவர்கள் பயன்முறை இயற்பியலாளர்கள் என்பதே உண்மை.
ஊக்குவிப்பு , ஆராய்ச்சியாளர்கள் அணுகுமுறை மற்றும் தொழில்நுட்பம் அல்லது அறிவியலுடனான உறவு போன்ற நுட்பமான காரணிகள் ஆகியவற்றினால் " பயன்முறை " என்பது தூய்மை என்ற பொருளில் இருந்து வேறுபடுகிறது[2]. இது பொதுவாக பொறியியலில் இருந்து வேறுபடும் துறையாகும். ஒரு பயன்முறை இயற்பியலாளர் குறிப்பாக ஏதாவதொன்றை வடிவமைப்பவராக இல்லாமல் இருக்கலாம், மாறாக அவர், இயற்பியலைப் பயன்படுத்தி அல்லது இயற்பியலில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு ஒரு புதிய தொழில்நுட்பம் உருவாக்குதல் அல்லது ஒரு பொறியியல் பிரச்சினையை தீர்க்கும் நோக்கம் கொண்டவராக இருக்கலாம். இந்த அணுகுமுறையே பயன்முறை கணிதத்திலும் பின்பற்றப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பயன்முறை இயற்பியல் என்பது பெளதீக அறிவியலின் அடிப்படை உண்மைகள் மற்றும் அறிவியலின் அடிப்படை கோட்பாடுகளில் வேரூன்றி உள்ளது. ஆனால் நடைமுறை சாதனங்கள் மற்றும் அமைப்புகளில் இத்தகைய அறிவியல் கோட்பாடுகளைப் பயன்படுத்துவதாக உள்ளது[3]
பயன்முறை இயற்பியலாளர்கள் அறிவியல் ஆராய்ச்சிக்கு இயற்பியலைப் பயன்படுத்த ஆர்வம் உள்ளவர்களாக இருக்க முடியும். உதாரணமாக, முடுக்கு இயற்பியல் துறை உயர் ஆற்றல் மோதிகள் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் உதவுவதன் மூலம் கோட்பாட்டு இயற்பியல் ஆராய்ச்சிக்குப் பங்களிக்க முடியும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Applied Physics". ArticleWorld. Archived from the original on 1 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 10 September 2011.
- ↑ "General Information on Applied Physics". Stanford Department of Applied Physics. Archived from the original on 7 மார்ச் 2007. பார்க்கப்பட்ட நாள் 15 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archivedate=
(help) - ↑ "Department of Applied Physics / Major in Pure and Applied Physics". Waseda University. பார்க்கப்பட்ட நாள் 10 September 2011.