பயிர்நோய்க் கோலுயிரி உட்செலுத்தல்

பயிர்நோய்க் கோலுயிரி உட்செலுத்தம் (அக்ரோ- செலுத்துதல்) (Agroinfiltartion) என்னும் நுட்பம் பயிர்களில் புரதங்களைத் தற்காலிக வெளிப்பாட்டுக்குப்(transient expression) பயன்படும் ஒரு முறையாகும். இவ்விடத்தில் பயிர்நோய்க் கோலுயிரி (Agrobacterium) என்பது மாற்றப்பட்ட அக்ரோபக்டேரியம் (Agrobacteriam) என்பதை குறிக்கும். இவை பயிர்களில் புற்று கட்டிகளை (tumor) உருவாக்கும் தன்மை உடையவை. பயிர்நோய்க் கோலுயிரில் உள்ள பிளாசுமிட் (plasmid, கணிமி) சில பகுதிகள் பயிர்களின் நிறப்புரியில் இணையும் தன்மையைக் கொண்டுள்ளது. பின் இவை பயிர்களின் சுரப்பிகளின் (hormone) செயலாக்கத்தை ஊக்கப்படுத்தி, உயிரணுக்களின் பிரிகையைப் புற்றீசல் போல மிகையாக்கி புற்று கட்டிகளை உருவாக்குகின்றன. ஆய்வாளர்கள் சுரப்பிகளை தூண்டும் பகுதிகளை வெட்டி, அவ்விடத்தில் நாம் விரும்பும் மரபணுவை வெளிப்படுத்தும் தன்மையை உண்டாக்கி உள்ளனர். மேலும் பயிர்நோய்க் கோலுயிரி (அக்ரோபக்டேரியத்தின்) மரபணுக்கள் சில குறிபிட்ட வரிசைகளில் இணைந்து, அவற்றை வெட்டி நிறப்புரியில் எவ்விடத்திலும் (random location) இணைக்கும் தன்மை கொண்டுள்ளது. இவ்வரிசைக்களுக்கு வலது முனை வரிசை(Right border sequence) மற்றும் இடது முனை வரிசை (left border sequence) எனப்பெயர்.

பயிர்நோய்க் கோலுயிரியால் வேர்களில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகள் (Galls)

முதலில் நாம் வெளிப்படுத்த விரும்பும் மரபணுவை பயிர்நோய்க் கோலுயிரி பரப்பிகளில் (vector) பக்டிரியல் படிவாக்கம் செய்ய வேண்டும். பின் இப்பரப்பியைப் பயிர்நோய்க் கோலுயிரியத்தில் உட்செலுத்த வேண்டும். இதற்கு மூன்று-பெற்றோர் கலவி (tri-parental mating)என்ற முறையும் அல்லது பயிர்நோய்க் கோலுயிரி (அக்ரோபக்டேரியம்) உருமாற்றம் (Agrobacterium transformation) என்ற முறையும் பயன்படுத்தப்படும். பின் இவற்றைத் தேர்ந்தெடுக்கும் முகவர் மூலமும் பாலிமரேசு தொடர் வினை (பி.சி.ஆர்) மூலமும், நாம் படிவாக்கம் செய்த பரப்பி உள்ளதா, இல்லையா என்பதை உறுதி படுத்தி கொள்ள வேண்டும்.

பின் இவற்றை நீர்ம (liquid) வளருணவுகளில் (media, YEP or AB) வளர்ந்து ஒரு இடைமத்தோடு (Buffer), நமது உடலில் மருந்து செலுத்த பயன்படும் ஊசிகளில் (இவ்விடத்தில் ஊசிகள் இல்லமால், வெறும் உறிஞ்சி மட்டும்) சிறு அளவு எடுத்து பயிரின் இலைகளில் பயிர்நோய்க் கோலுயிரி உட்செலுத்த வேண்டும். இரண்டு நாள் கழிந்து நாம் விரும்பும் மரபணு வெளிபடுதலைக் காணாலம்.

பயன்கள்

தொகு
  • ஒரு மரபணுவானது மரபணு ஓடுத்தலின் ஒடுக்கியாக (suppressors of post-transcriptional gene silencing) செயல்படுகிறதா என அறியலாம்.
  • மிகையான புரத வெளிப்பாட்டுக்கு (protein expression) இந் நுட்பத்தைப் பயன்படுத்தலாம். ஒரு புரதத்தை நிலைகருவற்ற உயிர்களில் வெளிப்படுத்தும் போது பல சிக்கல்களை ஆய்வாளர்கள் எதிர் கொள்வார்கள். பயிர்களில் புரத மடங்குதல் மற்றும் அதனின் அமைப்புகளில் (புரதச் சேர்மத்தின் மடிப்பு முதலியன, protein folding and conformational changes) ஏற்படும் மாற்றங்கள் மாந்தரை போல் இருக்கும் என்பதால், பயிர்களில் இம்முறையைப் பயன்படுத்திப் புரத-மிகைபடுத்தலாம். மேலும் புரத மிகைபடுத்த விரும்பும் மரபணுவோடு ஒரு மரபணு ஓடுத்தலின் ஒடுக்கியாக (suppressors of post-transcriptional gene silencing) செயல்படும் புரதத்தோடு உட்செலுத்தினால் மிகையான வெளிபாடு இருக்கும். ஏனெனில் இவை பயிரின் பாதுகாப்பு அரணை உடைத்து புரத வெளிப்பாட்டை பல நாட்களுக்கு நிலை நிறுத்தும் (sustained expression).

இவற்றையும் பார்க்க

தொகு

தற்காலிக மரபணு வெளிப்படுதல்.

மேற்கோள்கள்:

தொகு

Gopal et al (2007) Differential roles of C4 and βC1 in mediating suppression of post-transcriptional gene silencing: Evidence for transactivation by the C2 of Bhendi yellow vein mosaic virus, a monopartite begomovirus. Virus Research,Volume 123, Issue 1, January 2007, Pages 9–18 .