பய்சுன்னிசா சவுதுராணி

நவாப் பேகம் பய்சுன்னிசா சவுதுராணி (Nawab Begum Faizunnesa Choudhurani) (1834–1903) ஓம்னாபாத் பச்சிம்காவோன் பகுதியின் நிலக்கிழார் ஆவார். இது இன்றைய வங்கதேசத்தில் காமில்லா மாவட்டத்தில் உள்ளது.[2] இவர் பெண்கல்வி, சமூகச் சிக்கல்களின் பரப்புரைகளுக்காகப் பெயர்பெற்றவர். இவரது சமூகப் பணிகளுக்காக, 1889 இல் அரசி விக்டோரியா பய்சுன்னிசாவுக்கு நவாப் பட்டத்தை வழங்கினார். தெற்காசியாவில் முதலில் நவாப் பட்டம் பெற்ற முதல் பெண்மணி இவரேயாவார்.[3][4][5][6]

பய்சுன்னிசா
Faizunnesa
நவாப்
ஓம்னாபாத் பச்சிம்காவோன் நிலக்கிழார்
ஆட்சிக்காலம்1883–1903
முன்னையவர்சாசாதா மிர்சா அவுரங்கசீப்
பின்னையவர்உரிமை நீக்கப்பட்டது
பிறப்பு1834
பச்சிம்காவோன்னோம்னாபாத் பர்கானா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா, (இப்போது இலக்சம், வங்கதேசம்)
இறப்பு1903 (அகவை 68–69)
பச்சிம்காவோன்னோம்னாபாத் பர்கானா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
புதைத்த இடம்
இலக்சம், வங்கதேசம்
துணைவர்முகம்மது காசி
குழந்தைகளின்
பெயர்கள்
அர்சத் உன்னிசா சவுதுராணி
பாதிர் உன்னிசா சவுதுராணி
பெயர்கள்
பேகம் பெய்சுன்னிசா சவுதுராணி
மரபுதிமூர் இல்லம் (பிறப்பால்)[1]
தந்தைஅகமது அலி சவுத்ரி alias சாசாதா மிர்சா அவுரங்கசீப்
தாய்பேகன் அராப் உன்னிசா சவுதுராணி
நவாப் பய்சுன்னிசா ஓவியம்

இவரது கல்வி, இலக்கியப் பணிகள் 1857 படைவீர்ர் (சிப்பாய்) கிளர்ச்சிக்குப் பிந்தைய காலத்தவையாகும். அப்போது இந்திய முசுலீம் மக்கள் முழுமையாக குடியேற்ற அரசான பிரித்தானியரின் கொடுமைக்குள்ளாகி அடிமைபட்டு உழன்றனர். பிறரிடம் இருந்து பெரிதும் பாகுபடுத்தப்பட்டனர். இந்தப் பண்பாட்டுச் சூழலில் பய்சுன்னிசா பல பெண்களுக்கான பள்ளிகளை நிறுவினார். குறிப்பாக, இவர் தனது நூலாகிய ரூப்ஜாலால் காப்பியத்தில் ஒரு முசுலீம் தலைவனைப் படைத்து எதிர்காலத்துக்கான நம்பிக்கையையும் தன்னம்பிக்கையும் ஊட்டி முசுலீம் சமுதாயத்தை துன்பத்தில் இருந்தும் அறியாமை வலையில் இருந்தும் மீட்டெடுத்தார் எனலாம்.[7]

இவர் பெண்கல்விப் போராளி; கொடையாளர்; முனைவுமிக்க சமூகப் பணியாளர்.

இளமையும் பின்னணியும் தொகு

 
குர்செது மஞ்சில், பச்சிம்காவோன் நவாப் குடும்ப அரண்மனை

சவுதுராணி காமில்லா மாவட்ட இலக்சம் சேர்ந்த பச்சிம்காவொனில் பிறந்தார். இது இன்றைய வங்கதேசத்தில் உள்ளது.[3] இவரது தந்தையார் ரகமது அலி சவுதுரி; இவர் சாசாதா மிர்சா அவுரங்கசீப் எனவும் அழைக்கப்பட்டார்.இவர் கான் பகதூரின் நவாப் ஆவார். இவர் மொகலாயப் பேர்ரசர்களின் கால்வழியினர்; ஓம்னாபாத் பச்சிம்காவோன் பகுதி நிலக்கிழார் ஆவார்.[1] பய்சுன்னிசா முகத்திரையணிந்த மரபுவழி முசுலீம் குடும்பத்தில் பிறந்தவர்ரிவர் முறைசார் கல்வி பயிலவில்லை; ஆனால் ஓய்வு நேரத்தில் தனது நூலகத்தில் தானே கல்வி கற்றார். இவர் அரபு, பாரசீகம், சமற்கிருதம், வங்கமொழி ஆகியற்றில் சிறந்த புலமை பெற்றார். இவர் 1860 இல் அருகாமையில் நிலக்கிழாராக இருந்து தூரத்து உறவினரான மகம்மது காசியை இரண்டாம் மனைவியானார். ஆனால் இவர் இருபெண்களுக்குத் தாயாகிய பிறகு, இருவரும் மணவிலக்கு பெற்றதால் இவர் மீண்டும் தன் பெற்றோரின் குடும்பத்தில் வாழலானார்.[5]

வாழ்க்கைப்பணியும் கொடையும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 https://en.wikisource.org/wiki/Page:The_Indian_Biographical_Dictionary.djvu/48
  2. Prof. Sirajul Islam. "Choudhurani, (Nawab) Faizunnesa". Banglapedia.org. பார்க்கப்பட்ட நாள் 4 September 2013.
  3. 3.0 3.1 Saydul Karim. "Nawab Faizunnessa Chowdhurani History". Nawab Faizunnessa Government College. Archived from the original on 4 October 2013. பார்க்கப்பட்ட நாள் 4 October 2013.
  4. "Famous Bengali: Nawab Faizunnesa Chowdhurani ... | Bangladesh". Mybangladesh.tumblr.com. 12 June 2012. பார்க்கப்பட்ட நாள் 4 September 2013.
  5. 5.0 5.1 "বাংলা সাহিত্যে মুসলমান নারী". Daily Sangram இம் மூலத்தில் இருந்து 4 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131004215844/http://www.dailysangram.com/news_details.php?news_id=75678. பார்த்த நாள்: 3 September 2013. 
  6. "নারী মহীয়সী". Jaijaidin. http://www.jjdin.com/print_news.php?path=data_files/502&cat_id=3&menu_id=81&news_type_id=1&news_id=70119. பார்த்த நாள்: 3 September 2013. 
  7. Hasan, Md. Mahmudul (Winter, 2010) Review of Nawab Faizunnesa's Rupjalal. The Muslim World Book Review. Vol. 30, Issue. 2. Available at http://irep.iium.edu.my/30644/3/N._Faizunnesa.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=பய்சுன்னிசா_சவுதுராணி&oldid=3759718" இலிருந்து மீள்விக்கப்பட்டது