பரங்கிமலை (மலையாள திரைப்படம்)

பரங்கிமலை (Parankimala) இந்திய நாட்டின் மலையாள மொழியில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு திரைப்படமாகும். இப்படத்தை பரதன் என்பவர் இயக்க எம்.ஓ. சோசப் தயாரித்தார். இத்திரைப்படத்தில் சுகுமாரி, நெடுமுடி வேணு, அச்சங்குஞ்சு மற்றும் பகதூர் ஆகியோர் நடித்திருந்தனர். படத்திற்கு ஜி. தேவராசன் இசையமைத்தார்.[1][2][3] இப்படம் மலையாள திரையுலகின் சிறந்த செந்தரம் வாய்ந்த படங்களில் ஒன்றாக கருதப்பட்டது. 2014 ஆம் ஆண்டு அதே பெயரில் மறு ஆக்கமும் செய்யப்பட்டது.

பரங்கிமலை
Parankimala
இயக்கம்பரதன்
தயாரிப்புஎம்.ஓ. சோசப்
கதைகாக்கநாடன்
திரைக்கதைகாக்கநாடன்
இசைஜி. தேவராசன்
நடிப்புசுகுமாரி
நெடுமுடி வேணு
சூரியா
அச்சங்குஞ்சு
பகதூர்
ஒளிப்பதிவுவிபின் தாசு
படத்தொகுப்புஎன்.பி.சுரேசு
கலையகம்மஞ்சிலாசு
விநியோகம்சலசித்ரா
வெளியீடு10-சூலை-1981
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

தங்கமும் அப்புவும் காதலிக்கிறார்கள். ஆனால் அப்புவின் குடும்பத்தினர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

நடிகர்கள்

தொகு
  • தங்கமாக சூர்யா (குரலுக்கு கேபிஏசி லலிதா டப்பிங் செய்தார்)
  • அப்புவாக பென்னி
  • அப்புவின் அம்மாவாக சுகுமாரி
  • வேலு அண்ணனாக/கொட்டுவாடியாக நெடுமுடி வேணு
  • தங்கத்தின் தந்தையாக அச்சங்குஞ்சு
  • தங்கத்தின் அம்மாவாக குட்டியேதத்தி விலாசினி
  • கோவிந்த கணியனாக, நாணியம்மாவின் கணவர் பகதூர்
  • சந்திரனாக, அப்புவின் மைத்துனர் குந்தரா ஜானி
  • ஸ்ரீதேவியாக ராணி பத்மினி
  • குஞ்சிபாலு ,லாரி டிரைவராக டி. ஜி. ரவி
  • நாணியம்மாவாக லலிதாசிறீ
  • தங்கத்தின் தம்பியாக குரு கிசோர் குமார்

ஒலிப்பதிவு

தொகு

ஜி. தேவராசன் இசையில், பாடல் வரிகளை பி. பாசுகரன் எழுதியிருந்தார்.

எண் பாடல் பாடகர்கள் பாடல் வரிகள் நீளம் (m:ss)
1 "எலாம் எலாம்" பி. மாதுரி, ஸ்ரீகாந்த் பி. பாசுகரன்
2 "ஜலலீலா ஜலலீலா" கே.சே. யேசுதாஸ், பி. மாதுரி பி. பாசுகரன்

மேற்கோள்கள்

தொகு
  1. "Parankimala". www.malayalachalachithram.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-17.
  2. "Parankimala". malayalasangeetham.info. பார்க்கப்பட்ட நாள் 2014-10-17.
  3. "Parankimala". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-17.

வெளி இணைப்புகள்

தொகு