இராணி பத்மினி (நடிகை)

இந்திய நடிகை

ராணி பத்மினி (Rani Padmini) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 1980 களில் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு படங்களில் ஒரு முன்னணி நடிகையாக இருந்தார். இவர் தனது கவர்ச்சியான பாத்திரங்களுக்காக நன்கு அறியப்பட்டார். இவர் சங்கர்ஷதம் என்ற மலையாளப் படத்தின் மூலமாக இந்தத் துறைக்குள் நுழைந்தார். மேலும் பரங்கிமலா, சங்கர்ஷனம், ஷரம், பந்தனம், கில்லிகான்சல் ஆகிய படங்களில் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்தார்.

இராணி பத்மினி
இறப்பு15 அக்டோபர் 1986
இறப்பிற்கான
காரணம்
படுகொலை
தேசியம் இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1981–1986
பெற்றோர்சௌத்ரி
இந்திராணி

இவர் 1985 அக்டோபர் 15 அன்று இவரது வீட்டில், இவரையும் இவரது தாயாரையும் இவரது மூன்று ஊழியர்களால் கொலை செய்யப்பட்டார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

இவர் தமிழ்நாட்டின், சென்னை அண்ணா நகரில் சவுத்ரி மற்றும் இந்திரகுமாரிக்கு ஒரே மகாளக பிறந்தார்.[1]

இறப்பு

தொகு

1986 அக்டோபர் 15 அன்று காலை, ராணி பத்மினியின் ஓட்டுநர் ஜெபராஜ், காவலாளி குட்டி எனப்படும் லட்சுமி நரசிம்மன், சமையல்காரர், விநாயகர் ஆகியோர் இவரது தாயார் இந்திரகுமாரியைத் தாக்கி கொலை செய்தார். தாயின் அலறல் சத்தம் கேட்டு, பார்க்க வந்த ராணி பத்மினியும், அவர்களால் வெட்டி கொல்லப்பட்டார். அந்த மூவரும் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டனர். ராணி பத்மினியின் கொலையானது தமிழ்நாடு மற்றும் கேரளம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், ராணி பத்மினியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஒரு பெரிய மனிதரைப் பாதுகாப்பதற்காக இந்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.[2]

திரைப்படவியல்

தொகு

தமிழ்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. https://www.mangalam.com/news/detail/343727-mangalam-special-death-aniversari-rani-padmini.html
  2. "State Of Tamil Nadu vs Kutty @ Lakshmi Narasimhan on 10 August, 2001". Malayalam Movie Database. பார்க்கப்பட்ட நாள் 11 March 2011.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராணி_பத்மினி_(நடிகை)&oldid=4114583" இலிருந்து மீள்விக்கப்பட்டது