பரஞ்சேர்வழி மத்யபுரீசுவரர் கோயில்
தற்பொழுது திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது
பரஞ்சேர்வழி மத்யபுரீசுவரர் கோயில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
தொகுதிருப்பூர் மாவட்டம் காங்கேயம்-சென்னிமலை/பெருந்துறை சாலையில் 8 கிமீ தொலைவில் உள்ள நால்ரோடு அருகே நத்தக்காடையூர் 10 கிமீ என்ற வழிகாட்டியுள்ள திசையில் வலப்புறத்தில் 3 கிமீ தொலைவில் உள்ளது.
இறைவன்,இறைவி
தொகுஇக்கோயிலில் உள்ள இறைவன் மத்யுபுரீசுவரர் என்றும் நட்டூர்நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி சுகந்த குந்தளாம்பிகை என்றும், நட்டுவார் குழலியம்மை என்றும் அழைக்கப்படுகிறார். [1]
திருச்சுற்று
தொகுதிருச்சுற்றில் கணபதி, பைரவர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் உள்ளனர். [1]