பரப்பு விடுகை

பரப்பு விடுகை (Desorption) என்பது ஒரு புறப்பரப்புப் பண்பாகும். இந்நிகழ்வில் ஒரு பொருளானது பரப்பிலிருந்தோ பரப்பின் வழியாகவோ விடுவிக்கப்படுகிறது. இச்செயல்முறையானது பரப்புக் கவர்ச்சிக்கும் உறிஞ்சுதலுக்கும் நேரெதிர்ச் செயல்முறையாகும். பரப்புக் கவரப்படும் பொருளுக்கும் (வாயு அல்லது திரவம்) பரப்புக் கவரும் பொருளுக்கும் (திண்மம் அல்லது இரு திரவங்களைப் பிரிக்கும் எல்லை) இடையே சமநிலை உள்ள அமைப்பில் இது நிகழ்கிறது.

பரப்புக் கவர்ச்சிக்குப் பின் பரப்புக் கவரப்பட்ட பொருளானது வெப்பநிலை மாறாத வரை தொடர்ந்து பரப்புக் கவரும் பொருளின் பரப்பிலேயே இருக்கிறது. ஆனால் வெப்பநிலை உயரும்போது பரப்புக் கவரப்பட்ட பொருளானது பரப்பிலிருந்து விடுபடுதல் நிகழ்கிறது. பரப்பு விடுகையின் வேகத்திற்கான பொதுவான சமன்பாடு ஆனது பின்வருமாறு.

இங்கு என்பது பரப்பு விடுகை வேகம், என்பது பரப்புக் கவரப்பட்ட பொருளின் செறிவு, என்பது பரப்பு விடுகையின் வேகப்படி (Kinetic order).

பொதுவாக விடுகையின் வேகப்படியானது அவ்விடுகையில் உள்ள முதன்மைப் படிகளைச் சார்ந்தது.

அணு அல்லது எளிய மூலக்கூறு பரப்பு விடுகையானது முதல் படி செயல்பாடாகும். (அ.து. பரப்பு கவரப்பட்ட எளிய மூலக்கூறு வாயு நிலைமையில் விடுகையடைகிறது)

மீளத்தக்க மூலக்கூறுகளின் பரப்பு விடுகையானது பொதுவாக இரண்டாம் படி செயல்பாடாகும். (அ.து. பரப்பிலுள்ள இரு ஐட்ரசன் அணுக்கள் விடுகையடைந்து வாயு நிலைமையிலுள்ள H2 மூலக்கூறைத் தருகின்றன)

பரப்பு விடுகை மாறிலி -ஐப் பின்வருமாறு வரையறுக்கலாம்.

இங்கு என்பது முற்படுகை அதிர்வெண், இது பரப்புக் கவரப்பட்ட மூலக்கூறு தனது மின்னழுத்த அரணைக் கடந்து பரப்பு விடுகை அடைவதற்குத் தேவையான வாய்ப்பாகும். என்பது கிளர்வுறு ஆற்றல் ஆகும். என்பது போல்ட்ஸ்மேன் மாறிலி, என்பது வெப்பநிலை ஆகும்.

இதனையும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரப்பு_விடுகை&oldid=3219825" இலிருந்து மீள்விக்கப்பட்டது