பரமஹம்ச ஓம்கார சுவாமிகள்

பரமஹம்ச ஓம்கார சுவாமிகள் என்பவர் சென்னை மாவட்டம் கோடம்பாக்கத்தில் ஜீவ சமாதியடைந்துள்ள சித்தராவார்.[1]

வாழ்க்கை வரலாறு தொகு

1921ம் ஆண்டு ஜூன் மாதம் 10ம் நாள் வெங்கடராஜூ - அஸ்தி சுப்பம்மா தம்பதியினருக்கு இரண்டாம் மகனாகப் பிறந்தார்.[1] இவர் திருத்தணிக்கு அருகே தும்மலசருவு கண்டிரிகா என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் செல்லராஜூ என்பதாகும். 1940களில் மாநில அரசுப் பணி மற்றும் மத்திய அரசுப் பணியில் இருந்தார். அப்போது ஞானோதயம் என்ற வார்த்தை குருவைத் தேடி ஞானம் பெற தூண்டியது.[1]

சண்முகாநந்தா எனும் குருவை கண்டு அவரிடம் சீடராக இருந்தார். குருவிடம் பிரணவ மந்திர உபதேசம் பெற்றார். 1949ம் ஆண்டு ஞானோதய மன்றத்தைத் தொடங்கினார்.[1] ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு, தமிழ் ஆகியவற்றில் தேர்ச்சிப் பெற்றவர், இந்த மொழிகளில் தன்னுடைய அனுபவங்களையும் உபதேசங்களையும் நூல்களாக வெளியிட்டார். ஜீவ சமாதியடையும் நாளை மூன்று ஆண்டுகள் முன்பே அறிவித்தார். ஜீவ சமாதியடைய தமிழ அரசின் அனுமதியையும் பெற்றார். பின்பு அறிவித்தபடி 1967ம் ஆண்டு ஜனவரி மாதம் 11ம் நாள் அமாவாசையன்று அதிகாலை மூன்று மணிக்கு சமாதியடைந்தார்.

சித்தர் ஜீவ சமாதி தொகு

இவரது சமாதி கோடம்பாக்கத்தில் சாமியார் மடம் பேருந்து நிறுத்தத்தின் அருகே டாக்டர் சுப்பராயன் நகரில் முதல் தெருவில் உள்ளது. இதனை ஞானோதய ஆலயம் என்று அழைக்கின்றனர்.[1]

ஆதாரங்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 சித்தர்கள் அறிவோம்: ஞானம் என்னும் ஜோதி- பரமஹம்ச ஓம்கார சுவாமிகள் எஸ்.ஆர். விவேகானந்தம் தி இந்து