பரமேசுவரி லால் வர்மா

இந்திய கட்டடப் பொறியாளர்

பரமேசுவரி லால் வர்மா (Parmeshwari Lal Varma) என்பவர் ஓர் இந்திய கட்டடப் பொறியாளர் ஆவார். 1920 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 6 அன்று லால் வர்மா பிறந்தார். பஞ்சாப் மாநிலத்தின் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றியுள்ளார். [1] சண்டிகர் நகரத்தை வடிவமைத்த சுவிட்சர்லாந்திய - பிரெஞ்சு கட்டடக் கலைஞரான லெ கொபூசியேவுடன் சேர்ந்து கூட்டாகவும் பணியாற்றினார். [2][3] சேவையில் இருந்து ஓய்வு பெற்றதற்கு முன்பே வர்மா தனக்கு உதவ வேண்டும் என்று லீ கார்பூசியர் விரும்பியதாக செய்திகள் உள்ளன. அதற்காகவே அப்போதைய இந்தியாவின் பிரதமராக இருந்த சவகர்லால் நேரு வர்மாவின் சேவையை மேலும் நீட்டிக்குமாறு பஞ்சாப் அரசிடம் கோரவில்லை. [4] சண்டிகர் மற்றும் அதற்கும் அப்பால் லீ கார்பூசியர் மறு கண்டுபிடிப்பு என்ற புத்தகத்தில் சண்டிகரை உருவாக்குதலில் லால் வர்மாவின் ஈடுபாடு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் இவர் ஒரு சிறப்பு கட்டுரையை எழுதியுள்ளார். [5] இந்திய அரசு லால் வர்மாவுக்கு 1971 ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகனான பத்ம பூசண் விருதை வழங்கியது. [6]

பரமேசுவரி லால் வர்மா
Parmeshwari Lal Varma
லெ கொபூசியே மற்றும் பியரி இழீனெரட்டுடன் லால் வர்மா (இடது)
பிறப்பு(1920-12-06)திசம்பர் 6, 1920
பஞ்சாப், இந்தியா
பணிகட்டடப் பொறியாளர்
அறியப்படுவதுசண்டிகர்
விருதுகள்

மேற்கோள்கள்

தொகு
  1. "Chandigarh History". Phantom Hands (in ஆங்கிலம்). 2018-05-28. Archived from the original on 2018-05-28. பார்க்கப்பட்ட நாள் 2018-05-28.
  2. "Photographs of Pierre Jeanneret and others at Chandigarh, India". www.cca.qc.ca (in ஆங்கிலம்). 2018-05-28. பார்க்கப்பட்ட நாள் 2018-05-28.
  3. "P.L. Varma, Le Corbusier and Pierre Jeanneret". www.cca.qc.ca (in ஆங்கிலம்). 2018-05-28. பார்க்கப்பட்ட நாள் 2018-05-28.
  4. "How Modi Can Win Friends and Influence People". The Wire. December 4, 2015. https://thewire.in/politics/how-modi-can-win-friends-and-influence-people. 
  5. "Architects of change". The Tribune. December 7, 2017. http://www.tribuneindia.com/news/life-style/architects-of-change/509155.html. 
  6. "Padma Awards". Padma Awards. Government of India. 2018-05-17. Archived from the original on 2018-10-15. பார்க்கப்பட்ட நாள் 2018-05-17.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரமேசுவரி_லால்_வர்மா&oldid=3562682" இலிருந்து மீள்விக்கப்பட்டது