பரம்சித் கவுர் குல்சன்

இந்திய அரசியல்வாதி

பரம்சித் கவுர் குல்சன் (Paramjit Kaur Gulshan)(பிறப்பு: ஜனவரி 4, 1949) என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் பரிதாகோட்டை மக்களவைத் தொகுதியினை பிரதிநிதித்துவப்படுத்தியவர் ஆவார். சிரோமணி அகாலிதளத்தின் (சன்யுக்த்) உறுப்பினர் குலசன் பதினான்காவது மக்களவையில் பதிண்டா மக்களவைத் தொகுதி உறுப்பினராகப் பணியாற்றினார். பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1]

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

குல்சன் பட்டிண்டா மாவட்டத்தில் உள்ள அகாலி ஜலாலில் தன்னா சிங் குல்சன் மற்றும் பசந்த் குல்சன் ஆகியோருக்கு மகளாக 1949-ல் பிறந்தார். மேலும் நிர்மல் சிங்கை மணந்தார் (இவர் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் பாசி பதானா சட்டமன்ற உறுப்பினராக 1978-ல் பணியாற்றினார்)[1] பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் இளங்கலை கல்வியியல் பட்டத்தினை குருநானக் தேவ் பல்கலைக்கழகத்திலிலிருது பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Detailed Profile". Government of India. Retrieved 2011-01-11. http://india.gov.in/govt/loksabhampbiodata.php?mpcode=4131

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரம்சித்_கவுர்_குல்சன்&oldid=3686566" இலிருந்து மீள்விக்கப்பட்டது