பரம திமிர பானு
பரம திமிர பானு [1] என்னும் நூல் தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மறைஞான சம்பந்தர் இயற்றிய நூல்களில் ஒன்று. இதன் காலம் 16 ஆம் நூற்றாண்டு. இந்த நூல் இன்று கிடைக்கவில்லை. நூலாசிரியரான மறைஞான தேசிகர் எழுதிய சிவஞான சித்தியார் உரையில் இதன் பாடல்கள் மேற்கோள்களாகத் தரப்பட்டுள்ளன.
பரம திமிர பானு என்னும் தொடர் பரமனைக் காட்டும் கதிரொளி என்னும் பொருளைத் தரும். இது சைவ சித்தாந்தம் அல்லாத பர-சமயக் கருத்துக்களை மறுத்துரைக்கின்றன.
இது குறள் வெண்பாவால் ஆன நூல்.
அடிக்குறிப்பு
தொகு- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 180.
{{cite book}}
: Check date values in:|year=
(help)