மறைஞான தேசிகர்

16ஆம் நூற்றாண்டு சைவசித்தாந்தி

மறைஞான தேசிகர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவசித்தாந்தப் பெரியார். இவர் குகை மறைஞான தேசிகன் என இவரது நூல் ஒன்றில் குறிப்பிடப்படுகிறார். சிதம்பரம் கண்கட்டி மறைஞான பண்டாரம் இவரது ஆசிரியர். அந்தப் பண்டாரம் இருந்த மடத்தின் தலைவராகச் சிலகாலம் இருந்தவர்.

சிவஞான சித்தியார் சுபபக்க உரை, தம்மாசிரியர் செய்த சிவதருமோத்தர உரை, பதிபசுபாசத் தொகை உரை [1] என்னும் மூன்று உரை நூல்களைச் செய்தவர். சிவபுண்ணியத் தெளிவு என்னும் நூலும் இவர் செய்தாகத் தெரிகிறது.

  • இவர் சீர்காழி அந்தணர். ஆளவந்த வள்ளல் [2] சந்தானத்தைச் சேர்ந்தவர்.[3]

கருவிநூல்

தொகு
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு

தொகு
  1. எமது பதிபசுபாசப் பனுவல் காண்டிகை உரையில் கூறினாம் என்று இவர் தம் சித்தியார் சுபபக்க உரையில் குறிப்பிடுகிறார். பதிபசுப்பாசப் பனுவல் என்னும் நூல் உள்ளது, அதற்கு இவர் எழுதிய உரை கிடைக்கவில்லை.
  2. திருஞான சம்பந்தரின் அடியவர்கள் வள்ளல் எனப் போற்றப்படுவர். இத்தகைய 64 வள்ளல்களில் ஆளவந்த வள்ளல் என்பவரும் ஒருவர்.
  3. சித்தியார் அறுவர் உரை நூலை அச்சிட்ட கொன்றைமாநகரம் சண்முகசுந்தர முதலியார் குறிப்பு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மறைஞான_தேசிகர்&oldid=2718279" இலிருந்து மீள்விக்கப்பட்டது