பரராசசேகரம்

பரராசசேகரம் என்பது யாழ்ப்பாண பரராசசேகரன் மன்னனால் 12 மருத்துவர்களைக் கொண்டு இயற்றப்பட்ட மருத்துவத் தமிழ் நூல் ஆகும். பரராசசேகரன் என்ற பட்டப் பெயருடன் பல அரசர்கள் இருந்தமையால் இந்த நூல் 14 - 16 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியை சேர்ந்தது. இதன் முதல் நூல் 12000 செய்யுள்களால் அமைந்தது என்று கூறப்படினும் 8000 செய்யுள்களே அச்சில் வந்துள்ளன. இந்த நூல் அகத்திய வைத்திய சிந்தாமணி, தந்வந்திரி வைத்திய சிந்தாமணி ஆகியவற்றைத் தழுவியே எழுந்தது என்பர்.[1]

மேற்கோள்கள்Edit

  1. மனோன்மணி சண்முகதாஸ். (2012). இலங்கைத் தமிழியல். கொழும்பு: குமரன் பதிப்பகம்

வெளி இணைப்புகள்Edit