பராந்தக சோழன் (கதைமாந்தர்)
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
பராந்தக சோழர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற சோழப் பேரரசர் ஆவார். வரலாற்றில் இடம்பெற்ற முதலாம் பராந்தக சோழரைச் சற்று புனைவுடன் இணைத்து கதாப்பாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி.
பராந்தக சோழன் | |
---|---|
பொன்னியின் செல்வனின் கதை மாந்தர் | |
உருவாக்கியவர் | கல்கி |
வரைந்தவர்(கள்) | மணியம், வினு, மணியம் செல்வன் |
தகவல் | |
பிற பெயர் | மதுரை கொண்ட பராந்தகன், பொற்கூரை வேய்ந்தவன் |
தொழில் | சோழப் பேரரசர் |
பிள்ளைகள் | இராசாதித்தன் கண்டராதித்த சோழன் அரிஞ்சய சோழன் |
மதம் | சைவம் |
தேசிய இனம் | சோழ நாடு |
பொன்னியின் செல்வனில்
தொகுபராந்தக சோழ சக்ரவர்த்திக்கு இராசாதித்தன், கண்டராதித்த சோழன் மற்றும் அரிஞ்சய சோழன் என மூன்று மகன்கள் இருந்தார்கள். இராசாதித்த சோழன் தக்கோலப் போரில் இறந்துவிடுகிறான். அரிஞ்சய சோழன் ஈழத்தில் போர் செய்து காயமடைகிறான். அதனால் சிவபக்திமானான கண்டராதித்தர் சோழ பேரரசர் ஆகிறார். அரிஞ்சய சோழனின் மகன் சுந்தர சோழனும் ஈழத்தில் நடைபெற்ற போரில் பங்கேற்கிறான். அதனால் கண்டராதித்தருக்குப் பிறகு அரிஞ்சய சோழரும், அவர் புதல்வர்களும் சோழ நாட்டினை ஆள வேண்டும் என்று பராந்தக சோழன் விரும்புகிறார்.
பராந்தக சோழனுக்குத் துணையாக இருந்தவர்களில் பழுவூரை ஆண்ட பழுவேட்டரையர்களும், கொடும்பாளூரை ஆண்ட வேளார்களும் முக்கியமானவர்கள். பராந்தக சோழனின் நாடகத்தில் இவர்கள் இருவரும் சமமானவர்களாக காட்டுப்படுகிறார்கள். பராந்தக சோழன் சிவபக்தி மிகுந்தவனாக தில்லை நடராசர் கோவில் பொற்கூரை அமைக்கிறான்.