கண்டராதித்தர் (கதைமாந்தர்)
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
கண்டராதித்தர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற சோழ மன்னனும், செம்பியன் மாதேவியின் கணவரும் ஆவார். வரலாற்றில் இடம்பெற்ற கண்டராதித்தரைச் சற்றுப் புனைவுடன் இணைத்து கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி.
கண்டராதித்தர் | |
---|---|
பொன்னியின் செல்வனின் கதை மாந்தர் | |
உருவாக்கியவர் | கல்கி |
வரைந்தவர்(கள்) | மணியம், வினு, மணியம் செல்வன் |
தகவல் | |
தொழில் | சோழ அரசர் மற்றும் சிவ கைங்கரியம் |
குடும்பம் | சேந்தன் அமுதன் செம்பியன் மாதேவி |
மதம் | சைவம் |
தேசிய இனம் | சோழ நாடு |
கதைமாந்தர் இயல்பு
தொகுசோழப் பேரரசின் மன்னராக இருந்தாலும், அரசாங்க காரியங்களில் விருப்பமின்றி, சிவ பக்தியில் திளைக்கும் மனம் படைத்தவர் கண்டராதித்தர். சிவ பக்தியால் சிவஞான கண்டராதித்தர் சோழர் என்று புகழப்படுபவர். செம்பியன் மாதேவி சிவபக்திமான் என்பதை அறிந்து அவரைத் திருமணம் செய்து கொண்டவர்.
பொன்னியின் செல்வனில்
தொகுபராந்தக சோழரின் ஆட்சிக்குப் பிறகு, அவருடைய மகன்களான இராசாத்திதரும், அரிஞ்சைய சோழரும் போருக்கு செல்கிறார்கள். அங்கே இராசாதித்தர் மறைந்துவிட, அரிஞ்சய சோழரும் பெரும்காயமடைகிறார். அந்நேரத்தில் ஈழப் போருக்குச் சென்ற சுந்தர சோழரும் கிடைக்காததால் கண்டராதித்தர் சோழ மன்னராகிறார். போர், ஆயுதம், அரசியல் இவற்றில் விருப்பம் கொள்ளாமல் சிவ வழிபாட்டிலேயே காலம் கழிக்கின்றார். ஓர் நாள் மழவரையருடன் வரும் போது சிவாலயத்தில் தவத்தில் மூழ்கியிருக்கும் செம்பியன் மாதேவியைப் பார்க்கின்றார். மழவரையர் முதலியோருடன் அவள் அருகில் சென்று யார் இந்த பெண்ணென வினவுகிறார். தவம் கலைந்து எழுந்திருக்கும் செம்பியன் மாதேவி சிவனே காட்சிதருவதாக எண்ணி மனமுருகி வணங்கி, கண்களில் நீர் கோர்க்க நிற்கின்றாள். பின்பு தன் முன்னே இருப்பது சிவனல்ல, அரசன் என்பதை அறிந்து ஓடிவிடுகிறாள். தன்னைப்போலவே சிவசிந்தனையில் இருக்கும் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள கண்டராதித்தர் விரும்புகிறார். செம்பியன் மாதேவியும் சிவபக்தரான கண்டராதித்தரை ஏற்றுக் கொள்கிறாள்.
நீண்ட காலம் மகவு ஆசையின்றி இருந்தார்கள். ஆனால் செம்பியன் மாதேவி பிற பெண்கள் குழந்தைகளுடன் இருப்பதைக் கண்டு தாய்மையடைய விருப்பம் கொள்கிறார். அவருக்கு பிறக்கும் குழந்தை இறந்தே பிறக்கிறது. அதனால் அரண்மனையில் மந்தாகினி பெற்றெடுத்த ஒரு பிள்ளையைச் செம்பியன் மாதேவி வளர்க்கிறார். சோழ குலத்தில் பிறக்காத குழந்தை சோழ மன்னராக வருவது, சோழ குலத்திற்குச் செய்யும் பாவச் செயல் என்று கண்டராதித்தர் நினைக்கிறார். எக்காரணம் கொண்டும் செம்பியன் மாதேவி வளர்க்கும் குழந்தை சோழ மன்னராகக் கூடாதென செம்பியன் மாதேவியிடம் கூறுகிறார். அதனை ஏற்றுத் தன் பிள்ளையென வளர்க்கும் மதுராந்தகனைச் சிவ பக்திமானாக மாற்றுகிறார் செம்பியன் மாதேவி.
நூல்கள்
தொகுகண்டராதித்தரைக் கதைபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.