பரிசோதனை உயிரியல்

உயிரியல் பிரிவு

பரிசோதனை உயிரியல் (Experimental biology) என்பது உயிரியல் நிகழ்வுகளை ஆராய்ந்து புரிந்துகொள்வதற்கான சோதனைகளை நடத்துவது தொடர்பான உயிரியல் துறையில் மேர்கொள்ளப்படும் அணுகுமுறைகளின் தொகுப்பாகும். பரிசோதனை உயிரியல் கோட்பாட்டு உயிரியலுக்கு எதிரானதாகும். உயிரியல் அமைப்புகளின் கணித படிமமாக்கம் மற்றும் உயிரியல் அமைப்புகளின் சுருக்கங்களுடன் இது தொடர்பு கொண்டுள்ளது. ஆய்வு செய்யப்பட்ட அமைப்புகளின் சிக்கலான தன்மை காரணமாக, உயிரியல் முதன்மையான ஒரு பரிசோதனை அறிவியலாக கருதப்படுகிறது.[1] இருப்பினும், கணக்கீட்டு சக்தியின் நவீன அதிகரிப்பின் விளைவாக, தோராயமான தீர்வுகளைக் கண்டறிவது மற்றும் சிக்கலான உயிரினங்களின் கணித படிமங்களை சரிபார்ப்பது இப்போது மிகவும் சாத்தியமானதாகி வருகிறது. [2]

பரிசோதனை உயிரியலில் பயன்படுத்தப்படும் முறைகள் மூலக்கூறு, உயிர்வேதியியல், உயிர் இயற்பியல், நுண்ணிய மற்றும் நுண்ணுயிரியல் உள்ளிட்ட பல்வேறு இயல்புடையவைகளாகும். உயிரியல் பரிசோதனை நுட்பங்களின் பட்டியலை பொதுவாக ஆய்வக நுட்பங்கள் என்ற பகுப்பிலும் காணமுடியும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Craig, Nancy (2014). Molecular Biology, Principles of Genome Function. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199658572.
  2. Mosconi, Francesco; Julou, Thomas; Desprat, Nicolas; Sinha, Deepak Kumar; Allemand, Jean-François; Vincent Croquette; Bensimon, David (2008). "Some nonlinear challenges in biology" (in en). Nonlinearity 21 (8): T131. doi:10.1088/0951-7715/21/8/T03. பன்னாட்டுத் தர தொடர் எண்:0951-7715. http://stacks.iop.org/0951-7715/21/i=8/a=T03. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிசோதனை_உயிரியல்&oldid=3319434" இலிருந்து மீள்விக்கப்பட்டது