பரிதா சித்திக்

முனைவர் பரிதா அகமது சித்திகி (Farida Ahmed Siddiqui) (பிறப்பு: 1937கள், மீரட் - இறப்பு: 2013 ஆகத்து, கராச்சி ) பாக்கித்தானைச் சேர்ந்த மத அறிஞரான இவர் பாக்கித்தான் தேசிய சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

பின்னணி தொகு

இவர் இந்தியாவின் மீரட்டில் பிறந்தார். 1958 இல் கராச்சி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். இவர் பாக்கித்தானின் இஸ்லாமிய அறிஞரும், தீவிர பழமைவாத அரசியல்வாதியுமான மௌலானா ஷா அகமது நூரானியின் தங்கையாவார்.[1]

தொழில் தொகு

இவர் பெண்கள் இசுலாமித் திட்டத்தின் நிறுவனர் தலைவராகவும், அஞ்சுமான்-இ-தபலே-இ-இசுலாம் மற்றும் இசுலாமிய நலன் திட்ட உறுப்பினராகவும் இருந்தார். இவர், பல மத புத்தகங்களை எழுதியுள்ளார். [1][2] பாக்கித்தானின் தேசிய சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினராக இருந்தார். மேலும் தான் இறப்பதற்கு முன் இசுலாமிய கருத்தியல் அமைப்பின் பணியாற்றிய ஒரே பெண்மணியாக இருந்தார். [3]

இறப்பு தொகு

நீண்ட உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர் ஆகத்து 2013 இல் [1] இவருக்கு இரண்டு மகன்ளும் ஒரு மகளும் இருக்கின்றனர். [1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 Newspaper, From the (2013-08-08). "Noorani's sister dies". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-07.
  2. "Sister of Maulana Noorani dies – Business Recorder" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-07.
  3. "The Council in question | Special Report | thenews.com.pk". www.thenews.com.pk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிதா_சித்திக்&oldid=3113107" இலிருந்து மீள்விக்கப்பட்டது