பருத்தித்துறை சமர் (2006)

இலங்கையில் நடந்த சமர்

பருத்தித்துறை சமர் (Battle of Point Pedro (2006)) என்பது 2006, மே, 12 அன்று இலங்கையின் யாழ்ப்பாணம், பருத்தித்துறைக்கு [2] அருகில் நடந்த ஒரு கடற்படைச் சமர் ஆகும். இதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் படகுகளால் இலங்கைக் கடற்படை தாக்கப்பட்டது. அதற்கு முன் ஆறு ஆண்டுகளாக முற்றுகைக்கு உள்ளாகியிருந்த யாழ்ப்பாண நகரத்திற்கு 710 படையினரை ஏற்றிச் சென்ற எம்.வி. பேர்ல் குரூஸ் II என்ற துருப்புப் போக்குவரத்து கப்பலுக்கு இலங்கை தாக்குதல் படகுகள் குழு ஒன்று துணையாக சென்றது.

பருத்தித்துறை சமர் (2006)
ஈழப் போர் பகுதி

எம்.வி பேர்ல் குரூஸ் II கப்பல் 2006 மே இல் இலங்கை கடற்படை மற்றும் கடற்புலிகளுக்கு இடையே நடந்த கடல் போரின் மையமாக இருந்தது.
நாள் 12, மே, 2006
இடம் off பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
இலங்கை கடற்படை வெற்றி
பிரிவினர்
இலங்கைக் கடற்படை கடற்புலிகள்
பலம்
பல துப்பாக்கி படகுகள்,
ஒரு துருப்பு போக்குவரத்து கப்பல்
15 படகுகள்
இழப்புகள்
17 பேர் கொல்லப்பட்டனர், 1 படகு மூழ்கியது[1] 54 பேர் கொல்லப்பட்டனர், 5 படகுகள் மூழ்கின[1]

தற்கொலைப் படகுகள் உள்ளிட்ட சுமார் 15 கடற்புலி படகுகள் இச்சமரில் ஈடுபட்டன. இதில் ஒரு கடற்படை ரோந்து படகு பி -148 மற்றும் ஐந்து புலிகளின் படகுகள் மூழ்கின. லெப்டினன்ட் கமாண்டர் லலித் எதிரிசிங்கவின் கட்டளைத் தலைமையின் கீழ் வந்த பி-148, படகு உள்நோக்கி வரும் கிளர்ச்சியாளர்களைக் கண்டறிந்தது மேலும் தற்கொலைப் படகுகளைத் தாக்கும் வகையில் அவரது குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டிருந்த இடங்களை அடையாளம் கண்டனர். படகுகளைத் தடுக்க வேறு வழியில்லாததைக் கண்ட எடிரிசிங்க, விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படகுகளை நோக்கி வேகமாகச் சென்று அதை மோதவிட்டு, இரண்டு படகுகளையும் அழித்து, இராணுவப் போக்குவரத்துக் கப்பலைப் பாதுகாத்தார்.[3] லெப்டினன்ட் கமாண்டர் எடிரிசிங்க உட்பட 16 மாலுமிகள் இந்த நடவடிக்கையில் கொல்லப்பட்டனர், அதே நேரத்தில் புலிகள் தாங்கள் 54 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்திருந்தனர். வெடிப்புத் திட்டம் தோல்வியுற்றதைத் தொடர்ந்து, புலிகளின் படகுகள் தாக்குதலை முறியடித்து பின்வாங்கின.[4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Jamaica Gleaner News - SRI LANKA: 50 REBELS KILLED, 17 SAILORS MISSING - A nation on brink of war - Friday | May 12, 2006 பரணிடப்பட்டது நவம்பர் 14, 2007 at the வந்தவழி இயந்திரம்
  2. CNN.com - Tamil rebels warn truce monitors - May 12, 2006 பரணிடப்பட்டது ஆகத்து 18, 2007 at the வந்தவழி இயந்திரம்
  3. "'Lest we forget...'". Daily News. பார்க்கப்பட்ட நாள் 18 December 2021.
  4. "Naval Battles of the Sri Lanka Civil War". Soviet-Empire. பார்க்கப்பட்ட நாள் 8 May 2020.
  5. Joseph, Dishan. "Cruising on the waves of victory". Daily News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பருத்தித்துறை_சமர்_(2006)&oldid=4015455" இலிருந்து மீள்விக்கப்பட்டது