பருத்தித்துறை சமர் (2007)

2007 கடற் சமர்

பருத்தித்துறை சமர் 2007 (Battle of Point Pedro (2007)) என்பது இலங்கையின், யாழ்ப்பாணம், பருத்தித்துறை,[1] அருகே 2007 சூன், 19 அன்று நடந்த ஒரு கடற்படைப் போர் ஆகும். இலங்கைக் கடற்படை ரோந்து படகுகள் பருத்தித்துறை கடற்கரையில் விடுதலைப் புலிகளின் ரோந்து படகுகளால் தாக்கபட்டபோது இந்த சமர் நிகழ்ந்தது.

பருத்தித்துறை சமர் (2007)
ஈழப் போர் பகுதி
நாள் 19, சூன், 2007
இடம் பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
இலங்கை கடற்படை வெற்றி
பிரிவினர்
பலம்
பல ரோந்து படகுகள் மற்றும் பீரங்கி உலங்குவானூர்தி
  • 24 ரோந்து படகுகள்
இழப்புகள்
none
  • 40 பேர் இறந்ததாக கருதப்படுகிறது
  • 9 ரோந்து படகுகள் மூழ்கின

முன்னுரை

தொகு

கடற்புலிகள் என்பவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவாகும். அவர்கள் 2009 வரை தங்கள் மக்களின் விடுதலைக்காக இலங்கை கடற்படைக்கு எதிராக போராடினர். போர்க் காலப்பகுதியில் இருதரப்பினரும் பல திறந்தவெளி, கடற் பகுதிகளில் மோதல்களில் ஈடுப்பட்டனர். இதில் மிகவும் குறிப்பிடத்தக்க மோதல்கள் பருத்தித்துறை (யாழ்ப்பாணம்) மற்றும் திருக்கோணமலை நகரத்திற்கு இடையே நீர்வழிப்பாதையில் நடைபெற்றன. போரின் ஒரு காலக் கட்டத்தில் புலிகள் நகரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அதனால் அந்த கடற்பாதையில் அடிக்கடி சென்று வந்ததால் பல மோதல்கள் நடந்தன. அப்போது எஸ்எல்என்எஸ் சூரயா மற்றும் எஸ்எல்என்எஸ் ரணசுரு போன்ற கடற்படை இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தினர்.[2]

இதற்கு முன்பு 2006 ஆம் ஆண்டு பருத்தித்துறை சமர் நடந்தது. அப்போது 700 பேர் கொண்ட கடற்படை துருப்புப் போக்குவரத்துக் கப்பலுக்குத் துணையாக ரோந்துப் படகுகள் சென்றன. அப்போது கடற்புலிகளின் ரோந்துப் படகுகள் கடற்படையின் போக்குவரத்துக் கப்பலை மூழ்கடிக்கும் நோக்கில் தற்கொலைத் தாக்குதல் நடத்த முயன்றபோது ஒரு சமர் நடந்தது. இறுதியில் லெப்டினன்ட் கமாண்டர் எதிரிசிங்க தனது ரோந்துப் படகுடன் தற்கொலைப் படகை மோதச் செய்ததன் மூலம் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டது. இதனால் தற்கொலைப் படகில் வெடிப்பு ஏற்பட்டது. பின்னர் புலிகளின் எஞ்சிய படகுகள் பின்வாங்கின.[3]

தாக்குதல்

தொகு

புலி கட்டுப்பாட்டுக் கடற்பரப்பில் சென்ற தங்கள் ரோந்துப் படகை மீட்க இலங்கை கடற்படை முயற்சித்தபோது சமர் தொடங்கியது.[4] கடற்புலிகளின் 24 ரோந்துப் படகுகள் அரசுப் படைகளின் படகைத் தாக்கச் சென்றபோது பதுங்கியிருந்த அரசு படைகள் போரிட்டன. அப்போது மில் எம்.ஐ.-24 உலங்குவானூர்தி பீரங்கிக் கப்பல்கள் மற்றும் ரோந்து படகுகள் மூலம் கடற்புலிகளின் தாக்குதல் முறியடிக்கபட்டது. போராளிகள் 40 பேர் கொல்லப்பட்டதாகவும், ஒன்பது ரோந்து படகுகள் அழிக்கப்பட்டதாகவும் இலங்கை அரசாங்கம் மதிப்பிட்டது.[5]

2008 இல் பின்விளைவு

தொகு

அடுத்த ஆண்டு 2008 நவம்பரில், பருத்தித்துறை கடற்கரையில் கடற்படைக் கப்பல்கள் குழுவிற்கு அருகாமையில், வெடிக்க முயன்ற தற்கொலைப் படகு மீது சீப் பெட்டி ஆபிசர் கே.ஜி. சாந்தா, தனது ரோந்துப் படகை மோதியதில், அவர் இறந்தார்.[6] இந்த தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதால் சாந்தாவுக்கு இலங்கை இராணுவத்தின் உயரிய விருதான பரம வீர விபூஷணாய விருது வழங்கப்பட்டது. எவ்வாறாயினும், இரண்டு கடற்படைக் கப்பல்களை வெற்றிகரமாக மூழ்கடித்ததாக விடுதலைப் புலிகள் கூறிய நிலையில் இந்த தகவல் சர்ச்சைக்குரியது.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "Sri Lankan navy in 'Tiger clash'". BBC News. பார்க்கப்பட்ட நாள் 17 December 2021.
  2. Cruez, Dexter. "Explosions Hit Naval Ships as Truce Apparently Broken". அசோசியேட்டட் பிரெசு. பார்க்கப்பட்ட நாள் 21 December 2021.
  3. "'Lest we forget...'". Daily News. பார்க்கப்பட்ட நாள் 18 December 2021.
  4. "Sri Lanka navy destroys Tiger boats". Al Jazeera. பார்க்கப்பட்ட நாள் 17 December 2021.
  5. "Sri Lanka says kills dozens of rebels in sea battle". ABC. பார்க்கப்பட்ட நாள் 17 December 2021.
  6. Blacker, David (4 June 2012). "Parama Weera: What it takes, and what it means". The Nation இம் மூலத்தில் இருந்து 6 September 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120906065112/http://www.nation.lk/edition/special/item/6825-parama-weera-what-it-takes-and-what-it-means.html. பார்த்த நாள்: 18 December 2021. 
  7. Reddy, Muralidhar (2 November 2008). "Fierce battle between Sri Lanka Navy, LTTE". தி இந்து இம் மூலத்தில் இருந்து 13 April 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090413045535/http://www.hindu.com/2008/11/02/stories/2008110255470900.htm. பார்த்த நாள்: 18 December 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பருத்தித்துறை_சமர்_(2007)&oldid=4016106" இலிருந்து மீள்விக்கப்பட்டது