பருத்திப்பட்டு ஏரி
பருத்திப்பட்டு ஏரி (Paruthipattu Lake) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சென்னையில் உள்ள ஓர் ஏரியாகும். இது சென்னையின் ஆவடி வட்டாரத்தில் அமைந்துள்ளது. சேத்துப்பட்டு ஏரிக்குப் பிறகு நகரத்தின் இரண்டாவது சுற்றுச்சூழல் பூங்கா இதுவாகும்.[2] 87.06 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ள பருத்திப்பட்டு ஏரி பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.[3] [4][5]
பருத்திப்பட்டு ஏரி Paruthipattu lake | |
---|---|
அமைவிடம் | ஆவடி, சென்னை, இந்தியா |
ஆள்கூறுகள் | 13°06′29″N 80°06′18″E / 13.108°N 80.105°E |
வகை | குளம் |
வடிநில நாடுகள் | இந்தியா |
மேற்பரப்பளவு | 22 எக்டேர்கள் (54 ஏக்கர்கள்)[1] |
சராசரி ஆழம் | 12 அடி (3.7 m) |
குடியேற்றங்கள் | சென்னை |
வரலாறு
தொகுபருத்திப்பட்டு ஏரி நீண்ட காலமாக மேற்கு புறநகர் பகுதிகளில் புறக்கணிக்கப்பட்ட நீர்நிலைகளில் ஒன்றாக இருந்தது. 2018 ஆம் ஆண்டில், நீர்வளத் துறையானது ₹ 280 மில்லியன் செலவில் ஏரியை மீட்டு, சுற்றுச்சூழல் சுற்றுலாத் தளமாக ஏரியை மேம்படுத்தியது. 2019 ஆம் ஆண்டு சூன் மாதம் 21 அன்று ஏரி சூழல்-பூங்கா பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது. [6] புனரமைப்புக்காக இத்திட்டம் சுமார் 500 நபர்களை இடமாற்றம் செய்தது. [7]
ஏரி
தொகுகூவம் ஆற்றின் மாசுபடாத பகுதியிலிருந்து வரும் உபரி நீரால் இந்த ஏரிக்கு நீர் கிடைக்கிறது. [1] பருத்திப்பட்டு ஏரியானது ஆதிபராசக்தி நகர் மற்றும் கோவர்த்தனகிரி போன்ற அண்டை பகுதிகளில் நிலத்தடி நீரை மேம்படுத்த ஆதாரமாக உள்ளது. [8] ஏரியின் சராசரி ஆழம் 12 அடியாகும். [7]
ஏரியைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் 3 கிமீ நீள நடைபாதை, குழந்தைகள் விளையாடும் இடம், புத்துணர்வூட்டும் தொகுதி, பொது மக்கள் கூடும் மைய பிளாசா, மூன்று தரையிறங்கும் பகுதிகளைக் கொண்ட படகு தளம்,[9] பறவைகள் கூடு கட்ட இரண்டு தீவுகள், திறந்தவெளி அரங்கம் ஆகியவை உள்ளன. இவை தவிர நிர்வாக அலுவலக கட்டிடம் மற்றும் வாகன நிறுத்துமிடம். [1] [8] போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன. ஏரியைச் சுற்றி சுமார் 35 வகையான செடிகள் நடப்பட்டுள்ளன.
ஆவடி நகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்க ₹ 350 மில்லியன் செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த வசதி 10 மில்லியன் லிட்டர் மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை ஏரிக்கு அனுப்பும். தவிர தொழிற்சாலை பயன்பாட்டிற்கு இதற்குச் சமமான தண்ணீரை விற்கவும் செய்கிறது. [7]
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Lakshmi, K. (13 April 2018). "Ecotourism spot to come up near Avadi by year-end". The Hindu (Chennai: Kasturi & Sons). https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/ecotourism-spot-to-come-up-near-avadi-by-year-end/article23520160.ece. பார்த்த நாள்: 20 October 2018.Lakshmi, K. (13 April 2018). "Ecotourism spot to come up near Avadi by year-end". The Hindu. Chennai: Kasturi & Sons. Retrieved 20 October 2018.
- ↑ Lakshmi, K. (14 March 2019). "Eco-park at Paruthipattu lake to be ready by month-end". The Hindu (Chennai: Kasturi & Sons): pp. 3. https://www.thehindu.com/news/cities/chennai/eco-park-at-paruthipattu-lake-to-be-ready-by-month-end/article26525987.ece. பார்த்த நாள்: 1 May 2019.
- ↑ "ஆவடி - பருத்திப்பட்டு ஏரியில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பூங்காவில் களைகட்டும் படகு சவாரி- 25 நாட்களில் 6,600 பேர் படகு பயணம்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-11-20.
- ↑ "பருத்திப்பட்டு ஏரியில் 2 டன் மீன்கள் செத்து மிதப்பு: குப்பை கிடங்கில் குழிதோண்டி புதைப்பு". www.dinakaran.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-20.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Western suburbs get a new recreational space". The Hindu (Chennai: Kasturi & Sons): pp. 2. 22 June 2019. https://www.thehindu.com/news/cities/chennai/western-suburbs-get-a-new-recreational-space/article28103880.ece. பார்த்த நாள்: 22 June 2019.
- ↑ 7.0 7.1 7.2 Stalin, J. Sam Daniel (27 June 2019). "After Rs. 28 Crore-Project, Chennai Lake Offers Parched City Hope". NDTV (Chennai: NDTV.com). https://www.ndtv.com/cities/chennai-water-crisis-paruthapattu-lake-in-avadi-cleaned-after-rs-28-crore-project-offers-parched-cit-2059903. பார்த்த நாள்: 8 July 2019.
- ↑ 8.0 8.1 Lakshmi, K. (8 November 2018). "Paruthipattu lake on city outskirts to get eco-park on lines of Chetpet". The Hindu (Chennai: Kasturi & Sons). https://www.thehindu.com/news/cities/chennai/paruthipattu-lake-on-city-outskirts-to-get-eco-park-on-lines-of-chetpet/article25440136.ece. பார்த்த நாள்: 10 November 2018.Lakshmi, K. (8 November 2018). "Paruthipattu lake on city outskirts to get eco-park on lines of Chetpet". The Hindu. Chennai: Kasturi & Sons. Retrieved 10 November 2018.
- ↑ "பருத்திப்பட்டு ஏரியில் படகு சவாரி தொடங்கியது - அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்பு". Dailythanthi.com. 2019-12-26. பார்க்கப்பட்ட நாள் 2021-11-20.