பர்கத்துல்லா கான்

இந்திய அரசியல்வாதிகள்

பர்கத்துல்லா கான்(Barkatullah Khan 25 அக்டோபர் 1920 - 11 அக்டோபர் 1973) இந்திய மாநிலமான ராஜஸ்தானின் அரசியல்வாதி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவார். அவர் 1972 ஆண்டில் திஜாரா சட்டமன்ற தொகுதியிலிருந்து ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கல்வி

தொகு

லக்னோ பல்கலைகழகத்தில் சட்டம் பயின்றார், அப்போது பெரோஸ் காந்தியைச் சந்தித்தார்; இதுவே பின்னர் காங்கிரஸில் சேர காரணமாயிற்று.

மாநிலங்களவை உறுப்பினர்

தொகு

03-04-1952 முதல் 02-04-1954 வரை மற்றும் 03-04-1954 முதல் 21-03-1957 வரை, என இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்.[1]

ராஜஸ்தானின் முதலமைச்சராக 9 ஜூலை 1971 முதல் 11 அக்டோபர் 1973 வரை பதவி வகித்தார், பதவிக்காலத்திலேயே தனது 53 வயதில் மாரடைப்பால் இறப்பெய்தினார். இராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்த ஒரே முஸ்லிம் இவர் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.[2]

நினைவு மைதானம்

தொகு

இவர் நினைவாக 1986 ஆம் ஆண்டு பர்கத்துல்லா கான் விளையாட்டு மைதானம் உருவாக்கப்பட்டது.[3]

குடும்பம்

தொகு

வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான உசி கானைத் திருமணம் செய்தார்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்கத்துல்லா_கான்&oldid=4044563" இலிருந்து மீள்விக்கப்பட்டது