பர்சப்பாரா அரங்கம்

துடுப்பாட்ட அரங்கம்

பர்சப்பரா துடுப்பாட்ட அரங்கம் (Barsapara cricket stadium), அலுவல்முறையாக டாக்டர். பூபன் ஹசாரிகா துடுப்பாட்ட அரங்கம் என்றும் சுருக்கமாக அசாம் துடுப்பாட்டக் கூட்டமைப்பு அரங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் அசாம், குவாகாத்தி, பார்சபராவில் உள்ள ஒரு துடுப்பாட்ட மைதானமாகும்.[1] முழு அரங்கத் திட்டத்தின் விலை மதிப்பு ரூ .2300 கோடியாகும். இதை 10 அக்டோபர் 2017 அன்று அசாம் முதல்வர் சர்பானந்த சோனாவால் திறந்து வைத்தார். பார்சபரா கிரிக்கெட் மைதானம் இந்தியாவின் 49ஆவது பன்னாட்டுத் துடுப்பாட்ட நிகழ்விடமாகும்.[2] இங்கு நடைபெற்ற முதல் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடந்த இ20ப போட்டியாகும். இது உள்நாட்டு மற்றும் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளை நடத்துகிறது.[3]

டாக்டர். பூபன் ஹசாரிகா துடுப்பாட்ட அரங்கம்
பர்சப்பாரா அரங்கம்,
அசாம் துடுப்பாட்டக் கூட்டமைப்பு அரங்கம்
ஒளிவெள்ளத்தில் பர்சப்பாரா அரங்கம்
அரங்கத் தகவல்
அமைவிடம்பர்சப்பாரா, குவாகாத்தி, அசாம்
ஆள்கூறுகள்26°08′42″N 91°44′11″E / 26.145092°N 91.736512°E / 26.145092; 91.736512
உருவாக்கம்2012
இருக்கைகள்40,000
உரிமையாளர்அசாம் துடுப்பாட்டக் கூட்டமைப்பு
இயக்குநர்அசாம் துடுப்பாட்டக் கூட்டமைப்பு
குத்தகையாளர்அசாம் துடுப்பாட்ட அணி
இந்தியத் துடுப்பாட்ட அணி
முடிவுகளின் பெயர்கள்
மீடியா முனை
பெவிலியன் முனை
பன்னாட்டுத் தகவல்
ஒரே ஒநாப21 அக்டோபர் 2018:
 இந்தியா மேற்கிந்தியத் தீவுகள்
முதல் இ20ப10 அக்டோபர் 2017:
 இந்தியா ஆத்திரேலியா
கடைசி இ20ப5 சனவரி 2020:
 இந்தியா v  இலங்கை
முதல் மஇ20ப4 மார்ச் 2019:
 இந்தியா இங்கிலாந்து
கடைசி மஇ20ப9 March 2019:
 இந்தியா இங்கிலாந்து
அணித் தகவல்
அசாம் துடுப்பாட்ட அணி (2013 – தற்போது)
இந்தியத் துடுப்பாட்ட அணி (2017 - தற்போது)
5 சனவரி 2020 இல் உள்ள தரவு
மூலம்: Barsapara Cricket Stadium, Cricinfo

2010 ஆம் ஆண்டில், அசாம் துடுப்பாட்டக் கூட்டமைப்பானது, மறைந்த டாக்டர். பூபன் ஹசாரிகாவின் நினைவாக அரங்கத்தின் பெயரை மாற்றியது.[4] வடகிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு அரங்கம் பார்சபரா அரங்கமாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "New guwahati station".
  2. "International cricket venues in India".
  3. "Barsapara Cricket Stadium, Guwahati". cricketarchive.com. பார்க்கப்பட்ட நாள் 2013-02-03.
  4. https://thenortheasttoday.com/facts-about-barsapara-cricket-stadium-in-guwahati-the-host-for-india-australia-t20/[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்சப்பாரா_அரங்கம்&oldid=3826611" இலிருந்து மீள்விக்கப்பட்டது