பர்சானா பாரி
பர்சானா பாரி ( Farzana Bari உருது : فرزانہ باری, பிறப்பு: மார்ச் 7, 1957-) ஒரு பாக்கித்தான் பெண்ணியவாதி, மனித உரிமை ஆர்வலர் மற்றும் கல்வியாளர் ஆவார், இவர் இஸ்லாமாபாத் பாக்கித்தானின் குயிட்-இ-ஆஸம் பல்கலைக்கழகத்தில் பாலின ஆய்வுத் துறையின் இயக்குநராக பணியாற்றினார். [1][2][3]
தொழில் வாழ்க்கை
தொகுபாரி பாக்கித்தானில் பெண்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளில் போராடுபவர்களில் முக்கிய நபராக உள்ளார், பாலின படிப்பு துறையில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலான கல்வி மற்றும் தொழில்முறை அனுபவத்தினையும் இவர் கொண்டுள்ளார். இவள் யுனைடெட் கிங்டமின் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் பட்டத்தில் , "குடும்பத்திற்குள் பெண்களின் நிலைமையில் வேலைவாய்ப்பின் விளைவுகள்" என்ற ஆய்வினை சர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார். சமுதாயத்தில் பெண்களின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக அதிகாரமளித்தல் குறித்த கொள்கை ஆலோசனை மற்றும் வாதத்திலும் இவர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இவர் "பாக்கித்தான் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம்" பற்றிய ஆராய்ச்சியையும் செய்தார். [4] இதன் மூலம் பாக்கித்தானில் அனைத்துக் கால பல்கலைகலைக்கழக ஆய்வுகள் வரலாற்றில் முதல் பாலின ஆய்வுத் துறையின் நிறுவனர் எனும் பெருமை பெற்றுள்ளார்.
பெண்ணியம்/மனித உரிமை செயற்பாடு
தொகுபாக்கித்தானில் நீதி மற்றும் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் மனித உரிமை ஆர்வலர் ஃபர்சானா பாரி ஆவார் [5] இவர் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஜிர்கா [6] மற்றும் பாக்கித்தானில் பெண்களின் உரிமைகள் தொடர்பான இஸ்லாமிய விதிகளுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறிவருகிறார். [7] [8]
2013 ஆம் ஆண்டில், பாரி குறைந்தது பதினோரு மில்லியன் பெண்கள் வாக்களிக்க தகுதியற்றவர்கள் என்று மதிப்பிட்டார், ஏனெனில் அதிகாரிகள் இவர்களுக்கு தேசிய அடையாள அட்டை எண்களை வழங்கவில்லை என்று இவர் குற்றம் சாட்டினார். [9] 2014 ஆம் ஆண்டில் ஜனவரியில் கோஹிஸ்தான் நடன நிகழ்பட வழக்கை மீண்டும் நீதிமன்றத்தில் தொடுத்து வழக்காடுவதற்காக இவர் போராடினார், அதில் திருமணத்தில் நடனமாடிய பிறகு நிகழ்படத்தில் தோன்றும் பெண்கள் கொல்லப்பட்டதாகக் கூறினார். [10] [11] [12] [13] [14] ஆகஸ்ட் 2015 இல், ஹுசைன் கான் வாலா கிராமத்தில் ( காசு ) 2006 முதல் 2014 வரை பாலியல் நிகழ்படங்களில் நடிப்பதற்காக சுமார் 300 பெண் சிறுமிகள் கட்டாயப்படுத்தப்பட்டதாக இவர் குற்றம் சாட்டினார்.[15] மே 2016 இல், இஸ்லாமிய ஆணையத்தின் முடிவை இவர் கடுமையாக எதிர்த்தார். [16]அந்த ஆணையம் 'சீர்கேடுற்றவர் என கருதப்படும் மனைவிகளை ஆண்கள் 'ஓரளவு' தாக்கலாம்' எனக் கூறியது.
பாக்கித்தானில் பெண்களின் ஆணவக் கொலைகளுக்கு எதிராக பாரி குரல் எழுப்பினார். [17] [18] அக்டோபர் 2016 இல், பாக்கித்தானின் தேசிய சட்டமன்றம் ஆணவக் கொலையை சட்டவிரோதமாக அறிவித்ததால், ஒரு கொலை உண்மையில் ஆணவக் கொலையா அல்லது இல்லையா என்பதை ஒரு நீதிபதியே முதலில் தீர்மானிக்க வேண்டும் என்பதால் இந்த சட்டத்தை புறக்கணிக்க முடியும் என்று ஃபர்சானா பாரி எச்சரித்தார். [19] [20] [21]
பெண்கள் ஜனநாயக முன்னணி
பாரி ஒரு சோசலிச ஜனநாயக பெண்கள் அமைப்பான பெண்கள் ஜனநாயக முன்னணியில் (WDF) உறுப்பினராக உள்ளார். [22] இவர் 2018, 2019 மற்றும் 2020 இல் ஜனநாயக முண்னனி உறுப்பினர்களுடன் அவுரத் அணிவகுப்பிற்கு ஏற்பாடு செய்தார்.
அரசியல்
தொகுபாரி, இவாமி தொழிலாளர் கட்சியின் (AWP) மூத்த தலைவராகவும் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். 2012 இல் உருவாக்கப்பட்டது முதல் இவர் இந்தக் கட்சியில் சேர்ந்தார். [23][24][25]
சான்றுகள்
தொகு- ↑ Dawn.com, Naveed Siddiqui (21 October 2016). "Kohistan video case: Girls declared alive by SC had actually been killed, says Bari" (in en). DAWN.COM. https://www.dawn.com/news/1291398.
- ↑ "Discrimination: For women in rural areas, healthcare not a basic right" (in en). The Express Tribune. 7 July 2013. https://tribune.com.pk/story/573754/discrimination-for-women-in-rural-areas-healthcare-not-a-basic-right.
- ↑ Welle (www.dw.com), Deutsche. "Young Pakistani girls learn to speak up for their rights | DW | 09.11.2011". DW.COM. https://www.dw.com/en/young-pakistani-girls-learn-to-speak-up-for-their-rights/a-6656122.
- ↑ "Democracy, the Political and Social Movements in Europe and South Asia: An Intercontextual Dialogue" (PDF). German Academic Exchange Service (DAAD).
- ↑ "WDF pays tribute to women who stood up against dictatorship" (in en). The Nation. 16 February 2020. https://nation.com.pk/16-Feb-2020/wdf-pays-tribute-to-women-who-stood-up-against-dictatorship.
- ↑ Blind justice: Reforms can make jirgas more representative, Tribune.com.pk, 27 February 2014
- ↑ Pakistan clerics say women don't need to cover up, Enca.com, 20 October 2015
- ↑ "Decree controversy: Civil society activists seek abolition of CII" (in en). The Express Tribune. 14 March 2014. https://tribune.com.pk/story/683038/decree-controversy-civil-society-activists-seek-abolition-of-cii.
- ↑ "Taliban, taboos bar millions of women from Pakistan vote" (in en). DAWN.COM. 25 April 2013. https://www.dawn.com/news/794234/taliban-taboos-bar-millions-of-women-from-pakistan-vote.
- ↑ Rights activist Farzana Bari for reopening of Kohistan video case, Geo.tv, 29 January 2014
- ↑ "SC asks Nadra to verify Kohistan girls’ identity" (in en). DAWN.COM. 7 April 2017. https://www.dawn.com/news/1325385.
- ↑ "Dr. Farzana Bari accuses ANP leaders and KP police for protecting the people behind Kohistan killings". Daily Times. 2 April 2019. https://dailytimes.com.pk/372348/dr-farzana-bari-accuses-anp-leaders-and-kp-police-for-protecting-the-people-behind-kohistan-killings/.
- ↑ "Girls in 2011 Kohistan video were killed, Supreme Court told" (in en). DAWN.COM. 2 January 2019. https://www.dawn.com/news/1455038.
- ↑ "Three Sentenced for Years-old ‘Honor’ Killings". Newsweek Pakistan. September 6, 2019 இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 23, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201023052126/https://www.newsweekpakistan.com/three-sentenced-for-years-old-honor-killings/.
- ↑ Luavut Zaid, INTERVIEW: ‘This has gone on for a long, long time’ –Dr Farzana Bari, Pakistantoday.com, 15 August 2015
- ↑ Tim Craig, Pakistani husbands can ‘lightly beat’ their wives, Islamic council says, Washingtonpost.com, 27 May 2016
- ↑ "Pakistani woman’s body found by roadside after marriage deal goes awry" (in en). South China Morning Post. 16 July 2020. https://www.scmp.com/week-asia/lifestyle-culture/article/3093398/justiceforwaziran-killing-pakistani-woman-after-watta.
- ↑ "Pakistan PM: honor killing of pregnant woman was ‘unacceptable’" (in en). Reuters. 29 May 2014. https://www.reuters.com/article/us-pakistan-honourkillings-idUSKBN0E90RE20140529.
- ↑ Pakistan unanimously passes legislation to try to stop 'honor killings', Pri.org, 6 October 2016
- ↑ "Afzal Kohistani: 'Honour killing' whistleblower shot dead". BBC News. 7 March 2019. https://www.bbc.com/news/world-asia-47480597.
- ↑ "Brother found guilty of murdering Pakistani model in 'honor killing'" (in en). NBC News. https://www.nbcnews.com/news/world/brother-found-guilty-murdering-pakistani-model-qandeel-baloch-honor-killing-n1059431.
- ↑ "WDF holds two-day political school". Women Democratic Front. 23 June 2019.
- ↑ "The Left way: AWP vows to struggle for ‘real’ change, egalitarian society" (in en). The Express Tribune. 28 September 2014. https://tribune.com.pk/story/768562/the-left-way-awp-vows-to-struggle-for-real-change-egalitarian-society.
- ↑ "Legitimising Misogyny" (in en). Newsline. https://newslinemagazine.com/magazine/legitimising-misogyny/.
- ↑ "Court upholds life sentence for Baba Jan". The Friday Times. 17 June 2016. https://www.thefridaytimes.com/court-upholds-life-sentence-for-baba-jan/.