பர்த்தலமேயு (திருத்தூதர்)

யோவான் நற்செய்தியின் முதல் அதிகாரத்தில் இவர் நத்தனியேல் என அழைக்கப்படுகிறார். அந்நற்செய்தியில் நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, 'இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்' என்று இவரைக் குறித்துக் கூறினார்[1]. மேலும் மத்தேயு மாற்கு லூக்கா நற்செய்திகளில் திருத்தூதர்கள் பட்டியலில் இவர் இடம் பெறுகிறார். திருத்தூதர் பணிகள் நூலில் இயேசுவின் விண்ணேற்பைக் கண்டவர்களுள் இவரும் ஒருவர்.[2]

திருத்தூதர்
புனித பர்த்தலமேயு
Saint Bartholomew (Apostle)
புனித பர்த்தலமேயுவும் (வலப்புறம்) புனித யோவானும்
திருத்தூதர், இரத்த சாட்சி
பிறப்பு~ கிபி 1 (முற்பகுதி)
யூதேயா, கலிலேயா, உரோமைப் பேரரசு
இறப்பு~ கிபி 1 (பிற்பகுதி)
ஆர்மீனியாவில் தோல் உரிக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார்
ஏற்கும் சபை/சமயங்கள்எல்லா கிறித்தவப் பிரிவுகளும்
முக்கிய திருத்தலங்கள்புனித பர்த்தலமேயு மடம், ஆர்மீனியா
திருவிழாஆகஸ்டு 24
சித்தரிக்கப்படும் வகைகத்தி, அவரது உரிக்கப்பட்ட தோல்
பாதுகாவல்இறைச்சி வெட்டுநர், நூற்கட்டுநர், மால்ட்டா, ஆர்மீனியா, நரம்பியல் நோய்கள், செருப்பு தைப்பவர்
புனித பர்த்தலமேயு மடம், ஆர்மீனியா. இங்கே தான் இவர் இரத்த சாட்சியாக உயிர் நீத்தார்.

தூய ஆவியின் வருகைக்குப் பிறகு ஆர்மீனியா, இந்தியா[3] மற்றும் பல இடங்களில் மறைபணி புரிந்தார் என்பது மரபுச் செய்தி. பாரம்பரியத்தின்படி இவர் ஆர்மீனியாவில் உயிரோடு தோல் உரிக்கப்பட்டு, தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார். இவ்விடத்தில் இப்போது புனித பர்த்தலமேயு மடம் உள்ளது.

உசாத்துணை

தொகு
  1. யோவான் 1:47
  2. திருத்தூதர் பணிகள் 1:4,12,13
  3.    "Bartholomew, Saint". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 3. (1911). Cambridge University Press.