பர்புடா (Barbuda) கிழக்கு கரிபியன் பகுதியில் அமைந்துள்ள ஓர் தீவாகும். அன்டிகுவா பர்புடா நாட்டின் அங்கமாகும். அண்டிக்குவாவிற்கு வடக்கே, வளிமறைவுத் தீவுகளின் மத்தியில் பர்புடா அமைந்துள்ளது. இதன் தெற்கே மொன்செராட், குவாதலூப்பே தீவுகளும் வடக்கு மற்றும் மேற்கில் நெவிசு, செயிண்ட் கிட்சு, சென். பார்ட்சு, செயிண்ட் மார்ட்டின் தீவுகளும் உள்ளன. இங்குள்ள மக்கள் தொகை 1,638 ஆகும்; இவர்களில் பெரும்பாலோர் கொட்ரிங்டன் ஊரில் வசிக்கின்றனர்.

பர்புடா
புவியியல்
அமைவிடம்கரிபியக் கடல்
ஆள்கூறுகள்17°37′N 61°48′W / 17.617°N 61.800°W / 17.617; -61.800
தீவுக்கூட்டம்லீவர்டு தீவுகள், சிறிய அண்டிலிசு
பரப்பளவு160.56 km2 (61.99 sq mi)
உயர்ந்த ஏற்றம்38 m (125 ft)
உயர்ந்த புள்ளிஐலாண்ட்சு
நிர்வாகம்
அன்டிகுவா பர்புடா
பெரிய குடியிருப்புகொட்ரிங்டன் (மக். 1,252)
மக்கள்
மக்கள்தொகை1,638 (2011)
அடர்த்தி10.2 /km2 (26.4 /sq mi)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்புடா&oldid=1988045" இலிருந்து மீள்விக்கப்பட்டது